Skip to main content

Posts

Showing posts from 2021

Solution to Krypton 304

Today's clue: Effective leader with no first and no last hero is the first option (6) I meant to type the clue as " Effective leader with no first and no last, no last hero is the first option (6)" The "no last" which should have appeared one last time was lost. I was trying too clever a wordplay to get it right and failed. No wonder this caused many confusions. Solution: EITHER E = Effective leader IT= with, no first and no last HER = No last hero EITHER= the first option in an "either... or ..." construction See this page for the list of submitted solutions.

விடை 4168

இன்று காலை வெளியான வெடி: மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6) அதற்கான விடை: சித்தகத்தி = சித்தி + (பு) த்தக (ம்) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4168

உதிரிவெடி 4168 (டிசம்பர் 26, 2021) வாஞ்சிநாதன் ************************* மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6) Loading…

Solution to Krypton 303

Today's clue: Aim to be not influenced by personal feelings (9) Its Solution: OBJECTIVE Objective = AIM (as a noun) Objective = impartial, not affected by personal feelings (as an adjective) See this page for the list of submitted solutions.

விடை 4167

இன்று காலை வெளியான வெடி: தமிழ் சுரத்துடன் சுரமில்லாக்கனி ஒன்றைக் கொணர்ந்தவன் வியர்வை சிந்துபவன் (5) அதற்கான விடை: உழைப்பாளி = உழை + பப்பாளி - ப உழை = இசையில் மத்யம சுரத்திற்கு தமிழில் முன்பு வழங்கப்பட்ட பெயர். பப்பாளி = ஒரு கனி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4167

உதிரிவெடி 4167 (டிசம்பர் 19, 2021) வாஞ்சிநாதன் ************************* தமிழ் சுரத்துடன் சுரமில்லாக்கனி ஒன்றைக் கொணர்ந்தவன் வியர்வை சிந்துபவன் (5) Loading…

Solution to Krypton 302

Today's clue: Public opinion prevailing upset leaders into a situation (8) Its Solution: POPULACE = PLACE + O + P + U O,P, U = starting letters Opinion, Prevailing, Upset PLACE = situation POPULACE = public (people) See this page for the list of submitted solutions.

விடை 4166

இன்று காலை வெளியான வெடி: மார்க்கண்டேயனிடம் தோற்றவன் சொன்னது அவன் தலையை வெட்ட (5) அதற்கான விடை: கூற்றுவன் = கூற்று + அவன் - அ கூற்று = சொன்னது இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4166

உதிரிவெடி 4166 (டிசம்பர் 12, 2021) வாஞ்சிநாதன் ************************* மார்க்கண்டேயனிடம் தோற்றவன் சொன்னது அவன் தலையை வெட்ட (5) Loading…

Solution to Krypton 301

Today's clue: Nothing loses nothing about starting pummelling harsh yearly wind (6) Its Solution: ZEPHYR + ZERO - O + PHY P,H,Y = starting letters of Pummelling, Harsh, Yearly ZEPHYR = a gentle breeze (not a harsh one!) See this page for the list of submitted solutions.

விடை 4165

இன்று காலை வெளியான வெடி: பிற விஷயங்களில் ஒரு ஸ்வரம் மாற்றிப் படித்தது (4) அதற்கான விடை: கற்றவை = மற்றவை - ம + க மற்றவை = பிற விஷயங்கள் ம, க = ஸ்வரங்கள் (படித்தது என்று இருப்பதால் "கற்றது" என்ற விடையும் பொருந்துகிறது) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4165

உதிரிவெடி 4165 (டிசம்பர் 5, 2021) வாஞ்சிநாதன் ************************* பிற விஷயங்களில் ஒரு ஸ்வரம் மாற்றிப் படித்தது (4) Loading…

விடை 4164

இன்று காலை வெளியான வெடி: வெள்ளம் இறுதியாகக் குழப்பி உயர நிலவா முழுக நேரிடும் ? (5) அதற்கான விடை: பிரவாகம் புதிர்ச் சொற்களின் கடைசி எழுத்துகளைப் பிணைத்தது இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 300

Today's clue: Marked by fluctuating fortunes in a financial instrument? It indicates danger (9) Its Solution: CHEQUERED = Cheque + Red CHEQUE = a financial instrument RED = it indicated danger See this page for the list of submitted solutions.

உதிரிவெடி 4164

உதிரிவெடி 4164 (நவம்பர் 28, 2021) வாஞ்சிநாதன் ************************* வெள்ளம் இறுதியாகக் குழப்பி உயர நிலவா முழுக நேரிடும் ? (5) Loading…

விடை 4163

இன்று காலை வெளியான வெடி: சீவி ஆயுதத்தை உடன் வைப்பது பயனில்லாக் காரியம் (5) அதற்கான விடை: வெட்டிவேலை வெட்டி = சீவி வேலை = வேல் எனும் ஆயுதத்தை இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 299

The clue published today morning: Celebrated the French girl initially to finish with a rhapsody heartlessly (9) Its Solution: LEGENDARY = LE + G + END + A + RY LE = "the" in French G = Girl initially END = finish RY = "heartless" rhapsody See this page for the list of submitted solutions.

உதிரிவெடி 4163

உதிரிவெடி 4163 (நவம்பர் 21, 2021) வாஞ்சிநாதன் ************************* திரைப்படம் தொடர்பான சொற்களை மட்டுமே வைத்து இப்போது நூறு புதிர்களை அமைத்த ராமராவ் அவர்களுக்குப் பாராட்டுகள் சீவி ஆயுதத்தை உடன் வைப்பது பயனில்லாக் காரியம் (5) Loading…

Solution to Krypton 298

The clue published today morning: Part of a computer terminal chip worker is out of control (7) Its Solution: RAMPANT = RAM + P + ANT RAM = part of a computer P = 'terminal' CHIP ANT = worker rampant = out of control See this page for the list of submitted solutions.

விடை 4162

இன்று காலை வெளியான வெடி: பிரித்துக் கொடுத்து உறவினர்க்குள்ளே கடைசியாகப் பகையாகி இறந்தார் (5) அதற்கான விடை: பகிர்ந்து = பந்து + கி + ர் பந்து = உறவினர் கி, ர் = பகையாக, இறந்தார் என்பதன் கடைசி எழுத்துகள் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4162

உதிரிவெடி 4162 (நவம்பர் 14, 2021) வாஞ்சிநாதன் ************************* பிரித்துக் கொடுத்து உறவினர்க்குள்ளே கடைசியாகப் பகையாகி இறந்தார் (5) Loading…

Solution to Krypton 297

The clue published today morning: Artificial rain entered rusted rivets uprooting headers out (8) Its Solution: STRAINED = RUSTED - RU + RAIN R,U = first letters of Rusted, & Uprooted STRAINED = artificial See the page for the list of submitted solutions.

விடை 4161

இன்று காலை வெளியான வெடி: நுரை கடைசியாக தோன்றுவதற்கு குடுமி மழி (3) அதற்கான விடை: குமிழி "தோன்றுவதற்கு குடுமி மழி", இவ்வார்த்தைகளின் கடைசி எழுத்துகள், கு, மி, ழி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4160

இன்று காலை வெளியான வெடி: இடை செருக செருக அலற ஒரு ஸ்வரத்துடன் உண்டாகு (5) அதற்கான விடை: கருத்தரி கத்த + ரு + ரி கத்த = அலற ரு = இடை செருக ரி = ஒரு ஸ்வரம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 296

The clue published today morning: Headers of standardized uniform binary message is compliant (10) Its Solution: SUBMISSIVE = SUB + MISSIVE SUB = [Headers]: S (tandardized) U (niform) B (inary) MISSIVE = message See the page for the list of submitted solutions.

உதிரிவெடி 4160

உதிரிவெடி 4160 (அக்டோபர் 31, 2021) வாஞ்சிநாதன் ************************* இடை செருக செருக அலற ஒரு ஸ்வரத்துடன் உண்டாகு (5) Loading…

விடை 4159

இன்று காலை வெளியான வெடி: முனை கிள்ளிய தாயத்து வலிமையுடன் கட்ட நெருடியது (6) அதற்கான விடை: உறுத்தியது = உறுதி + யத்து உறுதி = வலிமை யத்து = முனை கிள்ளிய தாயத்து இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4159

உதிரிவெடி 4159 ( அக்டோபர் 24, 2021) வாஞ்சிநாதன் ************************* முனை கிள்ளிய தாயத்து வலிமையுடன் கட்ட நெருடியது (6) Loading…

Solution to Krypton 294

The clue published today morning: He provides security to a vast multitude of heads of ambitious global enterprises (7) Its Solution: HOSTAGE HOST + AGE Host, as in "a host of golden daffodils" AGE = "heads" of Ambitious Global Enterprises HOSTAGE = A person given as a pledge or security for the performance of the conditions of a treaty or stipulations of any kind, on the performance of which the person is to be released. (from www.dict.org) See the page for the list of submitted solutions.

விடை 4158

இன்று காலை வெளியான வெடி: ஒரு குறிஞ்சி நகர் ஏற்றது பாதி முல்லைப் பகுதி (4) அதற்கான விடை: ஏற்காடு = ஏற் + காடு ஏற் = பாதி "ஏற்றது" காடு = முல்லை நிலப்பகுதி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4158

உதிரிவெடி 4158 ( அக்டோபர் 20, 2021) வாஞ்சிநாதன் ************************* ஞாயிற்றுக் கிழமை வரவேண்டிய புதிரை தாமதமாக புதன் கிழமை இடுகிறேன். பொறுத்திருந்ததற்கு நன்றி. ஒரு குறிஞ்சி நகர் ஏற்றது பாதி முல்லைப் பகுதி (4) Loading…

விடை 4157

இன்று காலை வெளியான வெடி: காலைச் சுற்றியிருக்கும் மறைப்பு மூடிய இடை கண்டது (5) அதற்கான விடை: தண்டட்டி = தட்டி + ண்ட தட்டி = மறைப்பு ண்ட = இடை கண்டது தண்டட்டி என்றால் காதணியா, இல்லை காலில் அணியப்படுவதா? கருவேலம்பூ காட்டுவழி கணக்கெழுத போறவரே கருவேலம்பூ வாசத்திலே கணக்க நீயும் மறந்திடாதே என்று ஒரு பெண்பாட அதற்கு எசப்பாட்டாக ஆண் தண்டட்டி போட்ட புள்ள தானாக வந்த புள்ள என்று செல்லும் ஒரு நாட்டுப்புறப்பாடலை எப்போதோ படித்திருக்கிறேன். (சுஜாதா கணையாழியின் கடைசிப்பக்கங்களில்? அல்லது நா. வானமமலையின் தொகுப்பில்??) அப்போது தண்டட்டி என்றால் காலில் அணியப்படும் தண்டை என்பதன் கிராமிய மரூஉ என்று நினைத்திருந்தேன். அதையே க்ரியாவின் அகராதியிலும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அகராதியிலும் காண்கிறேன். ஆனால் இன்று விடையளித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டவுடன் வலையில் தேடினேன். பல வலைப் பக்கங்கள் படங்களுடன் காதில் அணியப்படுவது என்கின்றன! குழப்பம்தான். இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 293

The clue published today morning: Harm is a result of blow with timer exploding (9) Its Solution: DETRIMMENT DENT + TIMER DENT = result of a blow TRIME = Timer exploding DETERIMENT = DE-TRIME-NT See the page for the list of submitted solutions.

உதிரிவெடி 4157

உதிரிவெடி 4157 ( அக்டோபர் 10, 2021) வாஞ்சிநாதன் ************************* காலைச் சுற்றியிருக்கும் மறைப்பு மூடிய இடை கண்டது (5) Loading…

விடை 4156

இன்று காலை வெளியான வெடி: முன் புத்தி இருந்தாலும் பெண் முன்னே வந்தால் மண்ணுக்குள்தான் காணலாம் (4) அதற்கான விடை: புதையல் = பு + தையல் பு = முன் புத்தி தையல் = பெண் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4156

உதிரிவெடி 4156 ( அக்டோபர் 3, 2021) வாஞ்சிநாதன் ************************* முன் புத்தி இருந்தாலும் பெண் முன்னே வந்தால் மண்ணுக்குள்தான் காணலாம் (4) Loading…

விடை 4155

இன்று காலை வெளியான வெடி: அடுக்கடுக்காக யாகம் முடியும் முன்பே சாய், ரமாவைத் தழுவினான் (6) அதற்கான விடை: சரமாரியாக = சரி + ரமா + சாய் = சரி (சரித்துவிடு, வினைச்சொல்) டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வர், உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 291

Today's clue: Neighbour, according to Jesus in a nod to Rig/Sama interpretation (4,9) Solution: GOOD SAMARITAN anagram of "a nod to Rig Sama" For his advice "to love thy neighbours", Jesus was asked who one's neighbours were. As a respose he told the the parable of a Good Samaritan who helped an injured man while others walked away. The list of submitted solutions is given in this the page.

உதிரிவெடி 4155

உதிரிவெடி 4155 ( செப்டம்பர் 26, 2021) வாஞ்சிநாதன் ************************* அடுக்கடுக்காக யாகம் முடியும் முன்பே சாய், ரமாவைத் தழுவினான் (6) Loading…

விடை 4154

இன்று காலை வெளியான வெடி: தலை அறுவை சிகிச்சை மயக்கத்தில் துன்புறுத்தும் (5) அதற்கான விடை: வருத்தும் = மருத்துவம்- ம இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4154

உதிரிவெடி 4154 ( செப்டம்பர் 19, 2021) வாஞ்சிநாதன் ************************* தலை அறுவை சிகிச்சை மயக்கத்தில் துன்புறுத்தும் (5) Loading…

விடை 4153

இன்று காலை வெளியான வெடி: உரிய காலம் நிலையான ஸ்வரம் மாறி வரும் (4) அதற்கான விடை: பருவம் = ப + ருவம் (வரும்) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4153

உதிரிவெடி 4153 (செப்டம்பர் 12, 2021) வாஞ்சிநாதன் ************************* இன்றைய புதிருக்கான விடை, நாளை (திங்கட்கிழமை) இரவில் வெளிவரும் உரிய காலம் நிலையான ஸ்வரம் மாறி வரும் (4) Loading…

Krypton 289

Krypton 289 (12th September, 2021) Vanchinathan ****************** NOTE: Solution will be delayed, and will appear on Monday night. Show a wicked person, good man, traitor running after me (13) Loading...

விடை 4152

இன்று காலை வெளியான வெடி: இறந்து நடு, காம்போடு சிறைப்பட்ட பறவையொன்று (5) அதற்கான விடை: செம்போத்து = செத்து + ம்போ செத்து = இறந்து ம்போ = நடு காம்போடு செம்போத்து = Crow pheasant இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4152

உதிரிவெடி 4152 ( செப்டம்பர் 5, 2021) வாஞ்சிநாதன் ************************* இறந்து நடு, காம்போடு சிறைப்பட்ட பறவையொன்று (5) Loading…

விடை 4151

இன்று காலை வெளியான வெடி: பெருமாள் கையேந்தியது இல்லாதவள் கழுத்தில் இருக்கும் (4) அதற்கான விடை: சங்கிலி = சங்கு + இலி சங்கு = மஹாவிஷ்ணு கையில் ஏந்தியிருப்பது அந்த மழைப் பாடலை வெளியிட்ட பின் புதிர் என்ன செய்யலாம் என்று தீர்மானித்திருந்தேன். அப்பாடலில் "அதிலூருஞ் சங்கினங்கள் . . ." என்று வந்ததைக் கண்டவுடன் சங்கைப் பிடித்துக் கொண்டேன். எப்போதோ தென்றலில் சங்கு + இலி என்று இதையே கையாண்டிருக்கிறேன். ஆனால் இன்று விஷ்ணுகையைப் பிடித்தது புதிய உத்தி. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4151

உதிரிவெடி 4151 (ஆகஸ்டு 29 2021) வாஞ்சிநாதன் ************************* பெருமழை பெய்த ஒரு நாளில் சுஜாதா சொல்வது போல் சற்று அஜாக்கிரதையாக இருந்த தருணத்தில் கவிதை புனைய முயன்றதன் விளைவைக் காண இங்கே செல்லுங்கள். பெருமாள் கையேந்தியது இல்லாதவள் கழுத்தில் இருக்கும் (4) Loading…

மழை

ஒவ்வொரு வருடமும் திடீரென்று சில சமயம் முன்னறிவிப்பின்றி பெரிய மழை என்று வருவது நடப்பதுதான். ஆனால் 2003ஆம் ஆண்டில் முதன்முதலாக குளிரூட்டிய அறையில் வெளியில் நடப்பது தெரியாமல் பணி புரியும் போது மழை வந்து ஓய்ந்த பிறகே தெரிய வந்தது. அப்படிப்பட்ட தருணத்தில் குற்றாலக் குறவஞ்சியில் கவித்துவம் நிறைந்த "முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்/ முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்" போன்ற வரிகள் நினைவுக்கு வந்தன. நானும் அதுபோல் எழுதிப்பார்க்கலாமா என்று முயன்றேன். நேற்று மீண்டும் அதுபோல் நெட்பிளிக்ஸ் படம் ஒன்றைப் பார்த்து முடித்தபிறகுதான் பெரிதாக மழை வந்ததை கவனித்தேன். உடனே அன்று எழுதிய விருத்தப்பாவைத் தேடியெடுத்து இப்போது இங்கே: இலைக்குடையை விரித்துயர்ந்த பூவாகை மரத்தின் இடுக்குவழிப் பொழிந்தமழை தெருவிலாறா யோடும் அலையெழுந்து கடல்வீட்டின் மணல்வாசல் தெளிக்கும் அதிலூருஞ் சங்கினங்கள் இழைத்தகோலம் அழிக்கும் வலைவீசுஞ் செம்படவர் சென்றதோணி கவிழும் வஞ்சிரமும் வவ்வாலும் உயிர்பிழைத்துத் துள்ளும் குலைகனக்க வாழையதும் பேய்க்காற்றால் வீழும் க...

விடை 4150

இன்று காலை வெளியான வெடி: வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5) அதற்கான விடை: வளர்ச்சி = கிளர்ச்சி - கி + வ கிளர்ச்சி = போராட்டம் கி , வ = வஞ்சகி தலைகால் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4150

உதிரிவெடி 4150 (ஆகஸ்டு 22, 2021) வாஞ்சிநாதன் ************************* உதிரிவெடியில் பழைய வெடிகள் மீண்டும் கருத்துரைப் பகுதியில் வெளிவருவதைப் படித்த போது "கல்யாணி" ராகம் பற்றிய புதிருக்கு ராமகிருஷ்ண ஈஸ்வரன் "கல்யாணியின் ஜீவனே அதன் பிரதி மத்யமம் தான். கல்யாணியில் சுத்த மத்யமம் கிடையாது. ஆகவே, சுத்தமாக மத்யமம் இன்றி கணினியால் அமைக்கப்பட்ட சம்பூரண ராகம்! (4) என்று இருந்தால் இன்னமும் மெருகூட்டியிருக்குமே என்கிறார். நிச்சயம். இதற்கு இசை பற்றிய என்னுடைய "அறிவில்" உள்ள ஓட்டைதான் காரணம். புத்தகத்தைப் படித்து, கராத்தேயும் நீச்சலும் கற்றுக் கொள்ள முடியுமா? அப்படி முடியும் என்று இசையை நினைத்ததால் வந்த வினை இது. பாட்டைக் கேட்டும், பாடிப் பழகியும் இசையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். கேட்டால் புரிந்தால்தானே ...: இன்றைய வெடிக்கு வருகிறேன்: வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5) Loading…

Solution to Krypton 285

Today's clue: Reading it comes with a price that a lawyer is expected to accept (7) Solution: BARCODE Human beings can only SEE the barcode, when machines read it the price is shown. A lawyer, in to be a registered professional has to acccept the code as set by the bar. An attempt at "siledai". The list of submitted received is given in this the page.

விடை 4149

இன்று காலை வெளியான வெடி: இடையொடிய சுமை கொண்டு முதியவள் ஆடிக் குடத்தடைய வைப்பவள் (5) அதற்கான விடை: பாம்பாட்டி = பாம் + பாட்டி பாம் = பாரம் - ர காளமேகம் எள்ளுக்கும் பாம்புக்கும் பொருந்துமாறு எழுதிய சிலேடை: ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும் மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே யோது இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4149

உதிரிவெடி 4149 (ஆகஸ்டு 15, 2021) வாஞ்சிநாதன் ************************* உதிரிவெடி ஆரம்பித்த 2017ஆம் ஆண்டில் அம்மன், ஆடி வெள்ளி என்றெல்லாம் வெடியமைத்தது நினைவுக்கு வந்தது. நாளையோடு ஆடி முடிகிறதே இன்னமும் செய்யவில்லையே என்று தோன்றியதால் இது: இடையொடிய சுமை கொண்டு முதியவள் ஆடிக் குடத்தடைய வைப்பவள் (5) Loading…

விடை 4148

முதலில் குறள் விடுகதைக்கு வருவோம். குறள்வடிவிலேயே நடராஜனும், நாலடி வெண்பாவாக சங்கரசுப்ரமணியனும் சரியான விடையளித்துள்ளார்கள். அதில் பின்னவர் விடைமட்டுமின்றிப் புதிரை மேலும் மெருகூட்டிவிட்டார். நடராஜனின விடை: வீம்பாய் அடியேன் விடைசொல வந்தனன் காம்பே பதிலெனக் காண்! சங்கரசுப்ரமணியனின் விடை: வ ிசிறிக் கிருப்பது வீசுமணப் பூவில் பசிய நிறத்ததாய்ப் பார்ப்பாய் - பொசிந்துமிகப் பால்தரும் ஆவுக்கும் பாக்குசேர் வெற்றிலைக்கும் கால்பக்கம் கண்டிடுவாய் காம்பு. ம ுதுகைச் சொறிதலோடு முத்தான வெண்பா எதுகையொ டாக்கவும் இவ்விசிறி ஆகுமென்று காட்டிய சங்கரர் கைவண்ணம் செந்தமிழ்ப் பாட்டில் தொடரட்டும் பாய்ந்து. ---- அடுத்து இன்றைய வழக்கமான வெடி; திரையில் தோன்றுவது நடுவில் உண்ண விழுங்கப்பட்ட பொருள் (4) அதற்கான விடை: பண்டம் = படம் + ண் படம் = திரையில் தோன்றுவது ண் = நடுவுல் உண்ண இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4148

உதிரிவெடி 4148 (ஆகஸ்டு 8, 2021) வாஞ்சிநாதன் ************************* அழகாக வெண்பாவடிவில் அதிசயிக்கும்படிப் பல புலவர்கள் இரு பொருள்களை ஒப்பிட்டு (பல முறை தொடர்பில்லாதவை) சிலேடைப் பாடல்களை எழுதியுள்ளார்கள். நானும் அது போல் முயன்றேன். முடிந்தது வெறும் குறள்தான். புதிரிலும் சேர்த்தியில்லை. கொஞ்சம் விடுகதை போல் என்று சொல்லிக்கொள்ளலாம். ஏதோ ஆடிக்கொருதடவை அமாவாசைக்கொருதடவை புதிரில் இப்படி வேறுவிதமாய் முயன்றால் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். விசிறிக் கிருப்பது வீசுமணப் பூவில் பசிய நிறத்ததாம் பார் (3) ஊஹூம். குறட்புதிரில் எனகு முழுத் திருப்தியில்லை. எனவே வழக்கமான வெடி இதோ: திரையில் தோன்றுவது நடுவில் உண்ண விழுங்கப்பட்ட பொருள் (4) Loading…

Solution to Krypton 283

Today's clue: It will no longer be odd after subtracting two (6) Solution: ELEVEN Any odd number remains odd when 2 is subtracted as elementary arithmetic lesson says. Not so in the puzzle world as evidenced from the number 11 (i.e. elEVEN) when the two letters "el" are taken away. I made this puzzle two days ago and messaged it to a computer scientist friend, the answer came in less than 10 seconds! He also assured me that using subtraction in a different sense is fair in puzzles. Thanks, Madhavan! The list of submitted solutions is given in this the page.

விடை 4147

இன்று காலை வெளியான வெடி: இஸ்லாமியப் பெண்கள் அணிவது முதல்வர் கலைஞர் சென்ற அடையாளம் (4) அதற்கான விடை: முத்திரை = முகத்திரை - க முத்திரை = அடையாளம் க = முதல்வர் கலைஞர் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4147

உதிரிவெடி 4147 (ஆகஸ்டு 1, 2021) வாஞ்சிநாதன் ************************* இஸ்லாமியப் பெண்கள் அணிவது முதல்வர் கலைஞர் சென்ற அடையாளம் (4) Loading…

விடை 4146

இன்று காலை வெளியான வெடி: நாற்றை ஊன்ற நீரை வெளியேற்று பாக்கை முனை வெட்டிச் செயல்பாடு (6) அதற்கான விடை: நடவடிக்கை = நட (நாற்றை நடுவதற்கு) + வடி (நீரை வெளியேற்று + பாக்கை - பா காலையில் புதிரைவெளியிட்ட 20 நிமிடங் கழித்து இன்னமும் சுருக்கமாகப் பண்ணியிருக்கலாம் என்று தோன்றியது. அதற்குள் பத்து பேருக்கு மேல் வந்து விட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். மாற்ற நினைத்த வடிவம்: நாற்றை ஊன்ற நீரை வெளியேற்று பொக்கை வாயில்லாமல் போக்கு (6) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4146

உதிரிவெடி 4146 (ஜூலை 25, 2021) வாஞ்சிநாதன் ************************* நாற்றை ஊன்ற நீரை வெளியேற்று பாக்கை முனை வெட்டிச் செயல்பாடு (6) Loading…

விடை 4145

இன்று காலை வெளியான வெடி: கண்ணாளா இடை ஒடுங்கியது கதவிலிருக்கும் (4) அதற்கான விடை: கண்ணாளா=நாதா+ங்கி(ஒடுங்கியது இடை) ஆனாலும் இன்றைய புதிரில் ஒரு பிழை. கதவிலிருப்பது தாழ்ப்பாள்தான். கதவை ஒட்டியிருக்கும் நிலையில்தான் நாதாங்கி இருக்கும். ஏதோ ஒரு சில இடத்தில் அது மாறியிருக்கலாம். எப்படியோ வழக்கம்போல் பலரும் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். பாராட்டுகள். இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 281

Today's clue: Original sin event, live guillotining! (9) Solution INVENTIVE = (S) in + (E) ven t + (L) ive DISCLAIMER: The author of the clue neither decapitated nor witnessed such an event for making this clue. Any resemblence to an event on Earth or Heaven is purely coincidental. :-) The list of submitted solutions is given in this the page.

விடை 4144

இன்று காலை வெளியான வெடி: அதிக அளவில் வாங்குவது ஒரு தானியம் கடைசியாக வராவிட்டாலும் ஆரம்பம் உண்டு (5) அதற்கான விடை: கொள்முதல் = கொள்(ளு) + முதல் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4144

உதிரிவெடி 4144 (ஜூலை 11, 2021) வாஞ்சிநாதன் ************************* அதிக அளவில் வாங்குவது ஒரு தானியம் கடைசியாக வராவிட்டாலும் ஆரம்பம் உண்டு (5) Loading…

Solution to Krypton 279

Today's clue: Where parasites are found || heartlessly slaughtering in massive scale (4) Solution HOST = HOLOCAUST, without its middle part "locau" Parasites can't live independently, they live inside the body of another host organism Here is the page with the list submitted solutions.

விடை 4143

இன்று காலை வெளியான வெடி: ஒரு ஸ்வரம் குறைந்த கடம் குறையுடன் உருட்டி அடக்கமானவர் (5) அதற்கான விடை: நிறைகுடம் = நி + குறை + டம் நி = ஒரு ஸ்வரம் றைகு = குறை (உருட்டி ) டம் = குறைந்த கடம் தன்னடக்கத்துடன் இருப்பவர் நிறைகுடம் (அது தளும்பாது) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4143

உதிரிவெடி 4143 (ஜூலை 4, 2021) வாஞ்சிநாதன் ************************* ஒரு ஸ்வரம் குறைந்த கடம் குறையுடன் உருட்டி அடக்கமானவர் (5) Loading…

Solution to Krypton 278

Today's clue: Spoil half of Nazi utensil product from ground nuts (8) Solution MARZIPAN = MAR + ZI + PAN Mar = Spoil zi = (Na) zi pan = utensil Marzipan, a confection where the main ingredient is, not groundnuts, but ground (powdered) nuts of almond. Here is the page with the list of people who have given the solution politely keeping quiet about the mistake.

விடை 4142

இன்று காலை வெளியான வெடி: எதிர்க்கும் அழகியை அடக்க கதை கேட்கக் கொட்டுவது தியாகத்திற்கு சிந்துவது (4) அதற்கான விடை: உதிரம் = உம் + திர உம் = கதை கேட்பவர்கள் "உம்" கொட்டுவது. திர = எதிர்ப்புறமாய வந்த ரதி, அழகி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4142

உதிரிவெடி 4142 (ஜூன் 27, 2021) வாஞ்சிநாதன் ************************* எதிர்க்கும் அழகியை அடக்க கதை கேட்கக் கொட்டுவது தியாகத்திற்கு சிந்துவது (4) Loading…

Solution to Krypton 277

Today's clue: Go forward mixing gains with a loss account (11) Solution PROCEEDINGS = Proceed + ings Procceed = Go forward ings = gains - a The proceedings of the trial against the assassin will remain classified for the next fifty years Here is the page with the list of people who have given the solution politely keeping quiet about the mistake.

விடை 4141

இன்று காலை வெளியான வெடி: சாதம் போல இறுதியில் மணக்கும் (4) அதற்கான விடை: அன்னம் = அன்ன + ம் அன்ன = போல ம் = இறுதியில் மணக்கும் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 277

Krypton 277 (20th June, 2021) Vanchinathan ****************** For more than 4 hours I had indicated length of the word mistakenly as 10, now corrected. Go forward mixing gains with a loss account (11) Loading...

விடை 4140

இன்று காலை வெளியான வெடி: கால் பட்டால் இடையைக் கரம் தலை சீவும் பிரதேசம் (5) அதற்கான விடை: வட்டாரம் = வ + ட்டா + ரம் வ = 1/4 ட்டா = பட்டால் இடை ரம் = தலை சீவிய கரம் இந்த வெடி உருவாக மறைமுகமான காரணமாக இருந்த சங்கரசுப்ரமணியனுக்கு நன்றி. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 276

Today's clue: Independent secret contents buried in a symbol (9) Unfortunately I made a mistake in making this clue, missing out the "e". I thought SOVEREIGN = SIGN + c OVER t This must have confused and and stopped some of you from arriving at the solution even when you had a hunch Sorry for this. I'll try to come up with a better one next time. Here is the page with the list of people who have given the solution politely keeping quiet about the mistake.

உதிரிவெடி 4140

உதிரிவெடி 4140 (ஜூன் 13, 2021) வாஞ்சிநாதன் ************************* கால் பட்டால் இடையைக் கரம் தலை சீவும் பிரதேசம் (5) Loading…

Solution to Krypton 275

Today's clue: What comes after second revolution in bay is a time to celebrate (8) Its solution: BIRTHDAY = THIRD + BAY THIRD = what comes after second; with revolution becomes IRTHD Here is the page with the list of solvers.

விடை 4139

இன்று காலை வெளியான வெடி: நீண்ட காலம் தொட்டுத் தடவ கூந்தலாலும் முடியும் (4) அதற்கான விடை: வருடம் = வருட + ம் வருட = தொட்டுத் தடவ ம் = கூந்தலாலும் முடியும் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4139

உதிரிவெடி 4139 (ஜூன் 6, 2021) வாஞ்சிநாதன் ************************* நீண்ட காலம் தொட்டுத் தடவ கூந்தலாலும் முடியும் (4) Loading…

Solution to Krypton 274

Today's clue: One who ruins city of Paris surrounded by a variety of reeds (9) Its solution: DESTROYER If you have not decoded how this solution came about here is a (bit time-consuming) way: Read Agatha Christie's Lord Edgware Dies. Here is the page with the list of solvers.

விடை 4138

இன்று காலை வெளியான வெடி: பரப்பிய ஒரு தானியத்தின் இடையே பத்தடி வைத்துக் கட்டிய நூல் (5) அதற்கான விடை: புத்தகம் = கம்பு + (ப)த்த(டி) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4138

உதிரிவெடி 4138 (மே 30, 2021) வாஞ்சிநாதன் ************************* பரப்பிய ஒரு தானியத்தின் இடையே பத்தடி வைத்துக் கட்டிய நூல் (5) Loading…

Solution to Krypton 273

Today's clue: One making cosmetic changes when boyfriend can put the spy agency in (10) Its solution: BEAUTICIAN = BEAU + TIN + CIA Beau = boyfriend TIN = can CIA = Spy agency Here is the page with the list of solvers.

விடை 4137

நேற்று காலை வெளியான வெடி: மாலை அணிந்து பார்ப்பதற்கு மாலை மாற்றிய பின் மரத்தைக் கோத்திடு (5) அதற்கான விடை: அருந்ததி = அந்தி + ருத அந்தி = மாலை ருத = தரு (மரம்) திருமணமாகும் தம்பதியர் (மாலை அணிந்து) பார்ப்பது, அருந்ததி எனும் நட்சத்திரம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4137

உதிரிவெடி 4137 (மே 23, 2021) வாஞ்சிநாதன் ************************* இன்றைய புதிருக்கான விடை தாமதமாக திங்கள்கிழமை 10 மணிக்கு மேல் வெளியிடப்படும் மாலை அணிந்து பார்ப்பதற்கு மாலை மாற்றிய பின் மரத்தைக் கோத்திடு (5) Loading…

Krypton 273

Krypton 273 (23rd May, 2021) Vanchinathan ****************** Solutions to today's puzzle will be published after 10 am on Monday One making cosmetic changes when boyfriend can put the spy agency in (10) Loading...

Solution to Krypton 272

Today's clue: Powerful story about gold and Midas omits Lydia and Dionysus finally (10) Its solution: FORMIDABLE = FABLE + OR + MIDAS - A - S I took help from Wikipedia to write today's clue. Originally I had come up to "Powerful story about gold and Midas ..." and was thinking how to fit the phrase "WHEN it left" to suggest omission of AS. Then decided to connect A and S to the story of Midas. Until that time I did not know anything about Lydia and Dionysus! Here is the page with the list of solvers.

விடை 4136

காலை வெளியான வெடி: கடைசிநாளுக்குப் பின் யானை வர விதிகளில் கட்டுப்பாடு (4) அதற்கான விடை: கெடுபிடி = கெடு + பிடி கெடு = கடைசி நாள் பிடி = (பெண்) யானை இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4136

உதிரிவெடி 4136 (மே 16, 2021) வாஞ்சிநாதன் ************************* கடைசிநாளுக்குப் பின் யானை வர விதிகளில் கட்டுப்பாடு (4) Loading…

விடை 4135

காலை வெளியான வெடி: ஆசிரியரின் மேலுள்ள மரியாதையால் சக்தி குறையும் முன்பே கலக்கிக் குடி (5) அதற்கான விடை: குருபக்தி குருப (பருகு) + சக்தி - ச இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 271

Krypton 271 (9th May, 2021) Vanchinathan ****************** It is compulsory that I tamper meandering river that has no banks (10) Loading...

உதிரிவெடி 4135

உதிரிவெடி 4135 (மே 9, 2021) வாஞ்சிநாதன் ************************* ஆசிரியரின் மேலுள்ள மரியாதையால் சக்தி குறையும் முன்பே கலக்கிக் குடி (5) Loading…

Solution to Krypton 270

Opposition party suppresses bill with terminally sick leader leading (8) Its solution: BACKLASH = BASH + AC + K +L BASH = party (celebration) AC = bill K = terminally sick L = leader leading backlash = opposition. The government relaxed the rules after seeing the backslash against its strict lockdown policy Here is the page with the list of solvers.

விடை 4134

காலை வெளியான வெடி: இன்பமடைந்து படித்துக் கலக்கிய இப்புளி முதலில் நீக்கப்பட்டது (6) அதற்கான விடை: களிப்புற்று படித்து= கற்று + (இ)ப்புளி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 270

Krypton 270 (2nd May, 2021) Vanchinathan ****************** I regret missing the post last week. Hope today's clue gives sufficient satisfaction to make up for that Opposition party suppresses bill with terminally sick leader leading (8) Loading...

உதிரிவெடி 4134

உதிரிவெடி 4134 (மே 2, 2021) வாஞ்சிநாதன் ************************* கடந்த ஞாயிறு ஊரடங்கினால் வெளியூரில் மாட்டிக் கொண்டு விட்டு வீட்டிற்கு வர முடியாமல் புதிர் வெளியிடுவது தடைபட்டது. பொறுத்திருந்ததற்கு நன்றி. இன்பமடைந்து படித்துக் கலக்கிய இப்புளி முதலில் நீக்கப்பட்டது (6) Loading…

விடை 4133

சற்று வேலை அதிகமாகிவிட்டதால் விடையளிப்பதில் இரண்டு நாட்கள் தாமதமேற்பட்டுவிட்டது. இதோ: 18/04/2021 காலை வெளியான வெடி: தெய்வப்பிறவி முன் அழகு போய் துடித்து மண்ணிலிருந்து தோன்றும்(5) அதற்கான விடை: தாவரம் = அவதாரம் -அ தெய்வப்பிறவி = அவதாரம் அ = முன் அழகு இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4133

உதிரிவெடி 4133 (ஏப்ரல் 18, 2021) வாஞ்சிநாதன் ************************* தெய்வப்பிறவி முன் அழகு போய் துடித்து மண்ணிலிருந்து தோன்றும் (4) Loading…

Krypton 269

Krypton 269 (18th April, 2021) Vanchinathan ****************** In remembrance of C G Rishikesh aka Gridman, veteran crossword setter for The Hindu. Distribution of aids blurs variations (9) Loading...

Solution to Krypton 268

Today's clue: Produce staff with initially ugly truth but purer heart (11) Its solution: MANUFACTURE = MAN + U + FACT + URE MAN = (to) staff U = initially Ugly FACT = Truth URE = purer heart Here is the page with the list of solvers.

விடை 4132

காலை வெளியான வெடி: சம்பளத்தில் வராதது அரைப்படி சேர்த்த பைத்தியம் (5) அதற்கான விடை: பிடித்தம் = பித்தம் + டி பித்தம் = பைத்தியம் டி = அரைப்படி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4132

உதிரிவெடி 4132 (ஏப்ரல் 11, 2021) வாஞ்சிநாதன் ************************* சம்பளத்தில் வராதது அரைப்படி சேர்த்த பைத்தியம் (5) Loading…

விடை 4132

காலை வெளியான வெடி: கையளவில் அடக்கம் பிடிவாதம் போனபின் பேரொலி (5) அதற்கான விடை: முழக்கம் = முழம் + அடக்கம் - அடம் முழம் = கையளவு அடம் = பிடிவாதம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4131

உதிரிவெடி 4131 (ஏப்ரல் 4, 2021) வாஞ்சிநாதன் ************************* கையளவில் அடக்கம் பிடிவாதம் போனபின் பேரொலி (5) Loading…

Solution to Krypton 266

Today's clue: Train to keep losing middle fat with extreme usage (7) Its solution: RETINUE = RETAIN - A + UE RETAIN = Keep middle fat = 'A" UE = extreme usage Here is the page with the list of solvers.

விடை 4130

காலை வெளியான வெடி: பிடித்த மாது பெருமையிழந்தது குறித்தது (5) அதற்கான விடை: பற்றியது = பற்றிய + து பற்றிய = பிடித்த து = மாது - மா (பெருமை) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 265

Today's clue: Understanding a revolutionary mystic sage finally covering the trajectory (11) Its solution: SYMPATHETIC = MYSTIC + E + PATH E = SAGE, finally TRAJECTORY = path Here is the page with the list of solvers.

விடை 4129

காலை வெளியான வெடி: சொட்டு ரத்தத்தை மறைக்கும் பாங்கு காரியத்தில் உறுதியைக் காட்டும் (4) அதற்கான விடை: விரதம் = விதம் + ர விதம் = பாங்கு ர = சொட்டு ரத்தம் விரதம் மேற்கொள்வது = காரியத்தைச் செய்வதில் உறுதியாய் இருப்பது இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4129

உதிரிவெடி 4129 (மார்ச் 21, 2021) வாஞ்சிநாதன் ************************* சொட்டு ரத்தத்தை மறைக்கும் பாங்கு காரியத்தில் உறுதியைக் காட்டும் (4) Loading…

விடை 4128

காலை வெளியான வெடி: புதரில் களையெடுக்க கிராமத்து மக்கள் கண்ணுக்குத் தெரிவது (5) அதற்கான விடை: தரிசனம் தரி = புதரில் - புல் சனம் = கிராமத்து மக்கள் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4128

உதிரிவெடி 4128 (மார்ச் 14, 2021) வாஞ்சிநாதன் ************************* புதரில் களையெடுக்க கிராமத்து மக்கள் கண்ணுக்குத் தெரிவது (5) Loading…

விடை 4127

ஞாயிற்றுக் கிழமை வெளியான வெடி பாஞ்சாலி சபதத்தின் படி கூந்தலைக் கலைத்து இருள் விலக மலர் சூடினாள் (4) அதற்கான விடை: இருள் விலக = விடிய மலர் = முல்லை விடிய முல்லை --> முடியவில்லை பாஞ்சாலி (தனது) சபதத்தின் படி கூந்தலை முடியவில்லை ! இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

4127 விடைக்கு பதிலாக மேலும் உதவிக் குறிப்பு

இன்றுகாலை வெளியான புதிருக்கு இதுவரை சரியான விடை அளிக்கப்படாததால் மேலும் ஒரு உதவிக் குறிப்பு: மலர் என்பதை "முல்லை" என்று கொண்டு விடை காண முயலுங்கள். நாளை இரவுவரை கெடு நீடிக்கப்படுகிறது

உதிரிவெடி 4127

உதிரிவெடி 4127 (மார்ச் 7, 2021) வாஞ்சிநாதன் ************************* பாஞ்சாலி சபதத்தின் படி கூந்தலைக் கலைத்து இருள் விலக மலர் சூடினாள் (6) Loading…

Solution to Krypton 262

Today's clue: Toy fan circling around? Jesus Christ, it is dazzling! (10) Its solution: FLAMBOYANT = FAN + TOY + LAMB To learn that Lamb refers to Jesus Christ was bit confusing to me at the first time. Because having seen picturs of Jesus with a lamb in arms, and also seen that Good Shepherd refers to Jesus it took me a while to accept it. Possibly the innocence associated with lambs is the reason behind it I guess. Here is the page with the list of solvers.

விடை 4126

காலை வெளியான வெடி: அனுமதி மறுத்தாலும் தோலைவைக்கும் முன்பே தோலையெடு (4) அதற்கான விடை: உரிமம் = உரி + மம் உரி = தோலையெடு மம் = மறுத்தாலும் தோலைவை உரிமம் என்ற சொல் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளுக்குள் வந்த சொல்லாக இருக்க வேண்டும். கல்கி காலத்து நாவல்களில் இதைப் படித்ததாக நினைவில்லை. உரிமை என்பதற்கும் உரிமம் என்பதற்கும் வேறுபாட்டைச் செய்தது மொழியை வளப்படுத்தியுள்ளது. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4126

உதிரிவெடி 4126 (பிப்ரவரி 28, 2021) வாஞ்சிநாதன் ************************* அனுமதி மறுத்தாலும் தோலைவைக்கும் முன்பே தோலையெடு (4) Loading…

விடை 4125

ஒரு விசேஷத்திற்காக வெகுதூரம் சென்று வீடு திரும்ப மிகவும் தாமதாகி விட்டதால் நேற்று வெளிவர வேண்டிய விடை இப்போது வெளியாகிறது . நேற்று காலை வெளியான வெடி: தளைகளில்லாத, படித்த, ஓட்டம் மந்திரமில்லாமல் வசப்படும் (5) அதற்கான விடை: கட்டற்ற = கற்ற + ஓட்டம் - ஓம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 261

Attending a function far out of the city meant I could not return home in time to post the answer last night. So I am posting it now. Yesterday's clue: Fretful to lift the fretted instrument upwards in palpitation (8) Its solution: PETULANT = LUTE + PANT Here is the page with the list of solvers.

உதிரிவெடி 4125

உதிரிவெடி 4125 (பிப்ரவரி 21, 2021) வாஞ்சிநாதன் ************************* தளைகளில்லாத, படித்த, ஓட்டம் மந்திரமில்லாமல் வசப்படும் (5) Loading…

விடை 4124

இன்று காலை வெளியான வெடி: கொஞ்சம் கடன் பாதி நட்டம் முதல் மோசமான பணம் செலுத்த வேண்டிய பணம் (5) அதற்கான விடை: கட்டணம் கொஞ்சம் கடன் = க; பாதி நட்டம் = ட்ட; முதல் மோசமான பணம் = ணம்; இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4124

உதிரிவெடி 4124 (பிப்ரவரி 14, 2021) வாஞ்சிநாதன் ************************* கொஞ்சம் கடன் பாதி நட்டம் முதல் மோசமான பணம் செலுத்த வேண்டிய பணம்(5) Loading…

விடை 4123

இன்று காலை வெளியான வெடி: தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3) அதற்கான விடை: கொத்து = கொளுத்து - ளு கொளுத்து = தீவை ளு = பாதி பளு (சுமை) இன்று காலை புதிர் செய்ய மிகவும் தாமதமாகிவிட்டதால் யோசிக்க சோம்பல்பட்டு ஒரு பழைய புதிரைச் சற்று தட்டி உரு மாற்றினேன். சுமார் 12 வருடம் அல்லது அதற்கும் முந்தைய அப்புதிர் இதோ: தீவை மண்வெட்டியால் தோண்டு, இரண்டாம் சாளுக்கியன் புதைக்கப்பட்டுள்ளான் (4) தோண்டிக் கிடைத்ததைத் தொல்லியலார் ஆய்ந்திடுவார் ஆண்டுகள் ஐந்தாயிரம் முந்தைய தென்றுரைப்பார் மீண்டும் பழம்புதிரை வேற்றுருவில் இன்றளித்தேன் மூண்டிடும் தீதந்த முத்து. இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4123

உதிரிவெடி 4123 (பிப்ரவரி 7, 2021) வாஞ்சிநாதன் ************************* சென்ற வாரம் இப்பக்கத்தில் இனிமேல் ஞாயிறு தவிர சில விடுமுறை நாட்களிலும் புதிர் வெளியிடலாம் என்று தெரிவித்திருந்தேன். அந்த அறிவிப்பைப் படித்து புருஷோத்தமன், ஜான் அல்போன்ஸ், சடகோபன், கமலா, தங்கசபை, பிரம்மானந்தம், மாதவன், ஷிஹாபுதீன், கிருஷ்ணராவ், ஆடலரசு, புவனேஸ்வரி, கலிய பெருமாள் இவர்கள் எல்லோரும் ஆஹா சந்தோஷம் செய்யுங்கள் என்று எனக்கு டெலிபதியில் தெரிவித்திருந்தார்கள். என்னிடம் டெலிபதி பொறியின் ரிசீவர் மட்டும்தான் இருக்கிறதால் இதன் மூலம் நான் அளிக்கும் நன்றியை டெலிபதியாக ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய வெடி: தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3) Loading…

Solution to Krypton 259

Today's clue: It is dishonest to spread out without the web address and talk publicly (6) Its solution: UNFAIR (as verb) =UNFURL -URL + AIR Unfurl = to spread out; URL = Uniform Reseource Locator , jargon for web address. air = to talk pulbicly expressing ones opinion. Here is the page with the list of solvers.

விடை 4122

இன்று காலை வெளியான வெடி: பாதி முறுக்கிய பின்னலுடன் இரவில் அநிருத்த பிரம்மராயர் அங்கிருந்தார் (4) அதற்கான விடை: அன்பில் = அல் + ன்பி அல் = இரவு; ன்பி = பாதி பின்னல் (முறுக்கிய) சோழ மன்னருக்கு அமைச்சராக இருந்தவர், அநிருத்த பிரம்மராயர். "அன்பில்" என்பது அவருடைய ஊர். பொன்னியின் செல்வன் படித்துப் பெற்ற தகவல் இது. இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

விடை 4121 ( தைப்பூசப்புதிருக்கான விடை)

வியாழக்கிழமை காலை வெளியான வெடி: தோல்வியாதியும் அரிப்பும் கடவுளை ஒதுக்கச் செய்த கலைஞரின் கைவண்ணம் (4) அதற்கான விடை: படைப்பு = படை + அரிப்பு - அரி படை = தோல்வியாதி அரி = கடவுள் இனிமேல் இப்படி வார நடுவில் விடுமுறை வந்தால் அதற்கும் ஒரு வெடி வெளியிடலாமென்று நினைக்கிறேன். நீங்கள் காட்டும் ஆர்வத்தின் அடிப்படையில் அது வரும். உங்கள் கருத்துகளை இரவில் விடை வந்தபின் உதிரிவெடியில் இடுங்கள். வாட்சப்பில் கருத்திடும் உங்கள் விரல்களை சற்று முயன்று சுமார் 1 மிமீ தள்ளிச் சென்று பார்த்தால் இப்பக்கத்திற்கும் வந்துவிடலாம். அடுத்து ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை கிடைக்கும். தைப்பூசம் போல் பங்குனி பௌர்ணமிக்கும் விசேஷமான புதிரை எதிர்பார்த்து இருங்கள். எடப்பாடியார், அம்மாவின் பிறந்த நாளுக்காக மாசி மகத்துக்கும் விடுமுறை அறிவித்தால் இன்னொன்றும் உண்டு! தைப்பூசப்புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியல் இதோ: 1/28/2021 6:48:12 ராமராவ் படைப்பு படை (தோல்வியாதி) + அரிப்பு - அரி (கடவுள்) 1/28/2021 7:05:21 இரா.செகு படைப்பு படை(தோல்வியாதி)+(அரி)ப்பு ...

உதிரிவெடி 4122

உதிரிவெடி 4122 (ஜனவரி 31, 2021) வாஞ்சிநாதன் ************************* இரண்டு நாட்கள் முன்பு வந்த வெடியை கவனிக்காதவர்கள் 9 மணிக்குள் இங்கே எட்டிப் பார்த்து வாருங்கள். இன்றைய வெடி: பாதி முறுக்கிய பின்னலுடன் இரவில் அநிருத்த பிரம்மராயர் அங்கிருந்தார் (4) Loading…

உதிரிவெடி 4121 (தைப்பூச விடுமுறையில் வெட்டியாக இருக்கும்போது செய்ய )

உதிரிவெடி 4121 (ஜனவரி 28, 2021) வாஞ்சிநாதன் ************************* பௌர்ணமி என்றால் பளிச்சிடும் இரவுதான். இல்லை காரிரவையும் நினைக்கவேண்டும். அவர் செய்த சரவெடியை இங்கே சென்று வெடிக்கலாம். Afterdark என்ற பெயரில் ஆங்கிலத்தில் இந்து நாளிதழில் புதிரை வெளியிடுபவர் தமிழிலும் அளிக்கத் தொடங்கியுள்ளார். திடீரென்று தைப்பூசம், இன்று கல்லூரி கிடையாது என்று சொல்லி விட்டார்கள். அதனாலொரு உதிரி உருவானது. முழுமதியன்று காரிரவை நாடியது போல், முருகனுக்கு விசேஷமான நாளில் கடவுளை ஒதுக்கி உதிரிவெடியையும் முயலுங்கள்: (விடைகள் ஞாயிறன்று வெளிவரும்) தோல்வியாதியும் அரிப்பும் கடவுளை ஒதுக்கச் செய்த கலைஞரின் கைவண்ணம் (4) Loading…

கொஞ்சம் முணுமுணுப்பு

"அவித்து" என்ற விடை குறித்து ரோஹிணி ராமசந்திரன், சித்தானந்தம், நாகராஜன், சதீஷ், என் டி.நாதன் இவர்களின் சுருக்கமான கருத்துகளை வாங்கி எம்.கே. ராகவன் இங்கே வெளியிட்டுள்ளதைப் படித்தேன். (1) புதிரை "உதிரிவெடி" என்னும் இப்பக்கத்தில் ஒரு புதிராளி வெளியிடுகிறார். (2) புதிராளியின் "உதிரிவெடி" பக்கத்தில் பலர் அதை வந்து படித்து அங்கேயுள்ள கூகிள் படிவத்தில் விடையை எழுதி அனுப்புகிறார்கள். (3) புதிராளி இரவில் 9 மணிக்கு விடையை "உதிரிவெடி" பக்கத்தில் வெளியிடுகிறார். (4) புதிராளி விடையளித்தோர் பட்டியலை யும் "உதிரிவெடி" பக்கத்தில் வெளியிடுகிறார். இதையும் வாசகர்கள் "உதிரிவெடி" பக்கத்திற்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். எம்கே ராகவன் தவிர யாரும் புதிரைப் பற்றி இங்கே கருத்து எழுதுவது என்று ஒரு மூச்சு விடுவதில்லை. அவரைப் போல் ஆர்வமுள்ளவர்கள் அரிது. அவருக்கு நன்றி. ஒரு கல்யாண வீட்டில் விருந்தைச் சாப்பிட்டுவிட்டு அதே வீட்டிலேயே சரியாக மொழி எழுதும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஏன் வாட்சப்பில் உதிரிவெடி வருவதி...

விடை 4120

இன்று காலை வெளியான வெடி: வேகவைத்து | உள்ளே காலிசெய்து படு | கேளிக்கை தொடங்காது (4) அதற்கான விடை: அவித்து = அவி + த்து அவி = அனுபவி (படு) - னுப த்து = கூத்து (கேளிக்கை) - கூ இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.