Skip to main content

விடை 4141

இன்று காலை வெளியான வெடி:
சாதம் போல இறுதியில் மணக்கும் (4)
அதற்கான விடை: அன்னம் = அன்ன + ம்
அன்ன = போல
ம் = இறுதியில் மணக்கும்

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*அன்ன:-*
உரிச்சொல்
_அன்ன = போன்ற = ஒத்த_
*************************
_அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை_
_உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம்_
_வாழவைத்து அன்னமிட்ட கை_ _நம்மைஆக்கிவிட்ட கை_
(அன்னமிட்ட கை:1972)
*************************
*சாதம் போல இறுதியில் மணக்கும் (4)* 

_போல_ = *அன்ன*

_இறுதியில் மணக்கும்_ = *ம்*

_சாதம்_ = *அன்ன+ம்*

= *அன்னம்*
*************************
*தேவாரம்:*
சிதம்பரத்தில் *அன்னதானம்* இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் *அன்னம் பாலிக்கும்* என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம். ஆதிசங்கரர் இங்கே வந்த போது, அன்ன ஆகர்க்ஷண இயந்திரம் நிறுவியதாக கூறுவார்கள். இந்தத் தகவல்களை உணர்த்தும் வகையில் *அன்னம்* என்ற சொல்லுடன் இந்தப் பதிகம் மிகவும் சிறப்பான முறையில் தொடங்குகின்றது.

அன்னம் என்பதற்கு வீட்டின்பம் என்று பொருள் கொண்டு, முக்தி அளிக்கும் சிற்றம்பலம் என்று உணர்த்துவதாகவும் கூறுவார்கள். தில்லை காண முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. 

*பாடல் எண் : 1*

_அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்_
_பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை_
_என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற_
_இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே._

*பொழிப்புரை:*

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன் ?

[பாடியவர்: *திருநாவுக்கரசர்* தலம் : தில்லை சிதம்பரம். ]
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 21-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
பிழைகளை நீக்கிய செல்வம் அகத்தியம் வீட்டைத் துறந்ததால் பெற்றது (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 21-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*பாடல்களை எழுதி வாங்கி திருத்திய வாத்தியார்*
 
எம்.ஜி.ஆர் தன் படத்துக்குப் பாடல்களை எழுதி வாங்கும் போது அவற்றில் அவருக்கு உடன்பாடு இல்லாத சொற்களையும் தொடர்களையும் நீக்கும் படி சொல்லி விடுவார். தனக்கு உகந்தவற்றை சேர்க்கவும் கூறுவார்.

ஒரு முறை கண்ணதாசனிடம் சிலர் ‘வாத்தியார் வாத்தியார் என்று அவரை அழைக்கின்றார்களே, அவர் எந்தப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார்?’ என்று ஏளனமாக கேட்டார்கள்.

அப்போது கண்ணதாசன் ‘ _அவர் நான் எழுதிய பாடல்களில் கூட சிவப்பு மையால் *திருத்திய* வாத்தியார்_ ’ என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

இது பாடலாசிரியர்களோடு எம் ஜி ஆருக்கு இருந்த நெருக்கமான அன்பான பிணைப்பு ஓர்
எடுத்துக்காட்டு!

முனைவர் செ.இராஜேஸ்வரி

************************
_பிழைகளை நீக்கிய செல்வம் அகத்தியம் வீட்டைத் துறந்ததால் பெற்றது (5)_

_செல்வம்_ = *திரு*
_வீட்டை_ = *அகம்*

_அகத்தியம் வீட்டைத் துறந்ததால்_
= *அகத்தியம்* minus *அகம்*
= *த்திய*

_பெற்றது_ = indicator for *திரு+த்திய*
= *திருத்திய*
= _பிழைகளை நீக்கிய_
*************************
தேவை சுய தரிசனமே !
தேடல் மிக அவசியமே !
உன்னை, நீயேச் சீர் தூக்கிப் பாரு !
உண்மையும், நன்மையும் யாதெனக் கேளு !-நீ
செய்வதெல்லாம் அறமோ ?
வாழுதல் தர்மத்தின் வழியோ ?
உன்னையே சீர்தூக்கிப் பாரு !
உன்னை நேர்மைத் தீயில் புடமிட்டுக் கொள்ளு !
உயரிய வாழ்வை நீ வாழு ! -இந்த
உத்தமமே, சுய தரிசனம் சுய தரிசனமே 
தத்துவம் இவைச் சொல்லும் பாதை,
தவறுகள் தம்மைத் *திருத்திய* வாழ்வை,
வாழ்ந்திடு மானுடா ! நீ மகத்துவமானவன்!
பிறர் வாழ்ந்திட, குற்றம் களைந்திட, வழி நடத்து; நீ    
மகத்துவமானவன்!
மானுடர் யாவருக்கும்  தேவை சுய தரிசனமே !
மண்ணில் தீவிரவாதம் ஒழியத் தேவை,சுய தரிசனமே !

- கவி.அறிவுக்கண்.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************


[6/21, 07:05] திரைக்கதம்பம் Ramarao: திருத்திய

[6/21, 07:08] Meenakshi: விடை:திருத்திய

[6/21, 07:10] பாலூ மீ.: திரு+த்திய (அகத்தி -அகம்) விடை திருத்திய

[6/21, 07:15] மீ.கண்ணண்.: திருத்திய

[6/21, 07:18] Dr. Ramakrishna Easwaran: *திருத்திய*

[6/21, 07:19] N T Nathan: திருத்திய

[6/21, 07:23] chithanandam: திருத்திய

[6/21, 07:24] ஆர். நாராயணன்.: திருத்திய

[6/21, 07:25] Dhayanandan: *திருத்திய*

[6/21, 07:27] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏திருத்திய🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/21, 07:28] V N Krishnan.: திருத்திய
(பிழை நீக்கிய)
[
[6/21, 07:32] G Venkataraman: திருத்திய

[6/21, 07:35] sridharan: திருத்திய

[6/21, 07:37] prasath venugopal: திருத்திய

[6/21, 07:39] Bhanu Sridhar: திருத்திய

[6/21, 07:53] joseph amirtharaj: திருத்திய

[6/21, 07:56] Ramki Krishnan: திருத்திய

[6/21, 07:56] stat senthil: திருத்திய

[6/21, 08:02] akila sridharan: திருத்திய

[6/21, 08:09] Bharathi: திருத்திய

[6/21, 08:24] nagarajan: *திருத்திய*

[6/21, 08:40] siddhan subramanian: திருத்திய (திரு + த்திய அகத்தியக்ம் -அகம்)

[6/21, 09:33] கு.கனகசபாபதி, மும்பை: திருத்திய
[
[6/21, 12:51] மாலதி: திருத்திய

[6/21, 13:11] வானதி: *திருத்திய*

[6/21, 18:27] Rohini Ramachandran: திருத்திய

[6/21, 19:45] Revathi Natraj: திருத்திய

[6/21, 19:50] sathish: திருத்திய

[6/21, 19:50] A Balasubramanian: திருத்திய
A.Balasubramanian

[6/21, 19:52] sankara subramaiam: திருத்திய

[6/21, 20:10] Viji - Kovai: பாத்தியம்

[6/21, 20:14] shanthi narayanan: திருத்திய

[6/21, 21:00] ஆர்.பத்மா: திருத்திய

*****************************

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 22-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
குணமாவதற்கு சுகர், மடையன் இருவரும் காலை வெட்டிக் கொண்டார்கள் (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 22-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
_குணமாவதற்கு சுகர், மடையன் இருவரும் காலை வெட்டிக் கொண்டார்கள் (5)_

_காலை_ = _last letter indicator_

_வெட்டிக் கொண்டார்கள்_
= _deletion indicator_

( _சுகர், மடையன்_ ) _இருவரும் காலை வெட்டிக் கொண்டார்கள்_
= _சுக[ர்]மடைய[ன்]_
= *சுகமடைய*

= _குணமாவதற்கு_
*************************
_"உன்னால் நான் *சுகமடைய* வேண்டும்!"_
🌸🌸🌸🌸🌸🌸🌸
கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில்1965ஆம் ஆண்டு வெளியான ' *ஆனந்தி* ' படத்தில் இடம் பெற்ற ' _உன்னை அடைந்த மனம் வாழ்க_ ' என்ற பாடல்.

*பாடல்*

*பல்லவி*
_உன்னை அடைந்த மனம் வாழ்க_
_இனி ஒவ்வொரு இரவும் வாழ்க_
_இந்த மஞ்சம் உன் நெஞ்சில் தேனாக_
_நல்ல வாழ்வும் வளமும் மலர்க!_

*பொருள்:*
_'உன்னை அடைந்த மனம் வாழ்க' -_ அதாவது என் மனம் வாழ்க அல்லது நான் வாழ்க! ஒருவர் தன்னைத் தானே வாழ்த்திப் பாடிக் கொள்கிற பாட்டு இது ஒன்றாகத்தான் இருக்கும்! 'உன்னை' என்று ஆரம்பித்து இன்னொருவரை (கணவனை) வாழ்த்துவது போல் போக்குக்காட்டி, 
எவ்வளவு சாமர்த்தியமாகத் தன்னையே  வாழ்த்திக் கொள்கிறாள்!

_'இனி ஒவ்வொரு இரவும் வாழ்க' -_   ஒவ்வொரு இரவும் வாழ்க என்று இரவை வாழ்த்துவது போல், ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மீண்டும் தன்னை வாழ்த்திக் கொள்கிறாள் இந்த நாயகி.

*சரணம்*
_சிறு  மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத்_
_தஞ்சம் என்று வந்தாள்  உன்னுடன் மகிழ,_
_நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில்_
_வஞ்சம் என்றும் இல்லை மன்னா_ _காத்தருள் புரிக_
*_தினம் உன்னால் என் சுகம் வளர்க_*
_இனி என்னால் உன் நிலை உயர்க_

*பொருள்* :
நான் உன்னைத் தஞ்சம் என்று வந்திருக்கிறேன்
அஞ்சி அஞ்சி நடக்கும் என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
_உன்னால் நான் *சுகமடைய* வேண்டும் ( என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது உன் பொறுப்பு!)
நான் வந்து விட்டேன் இல்லையா? இனிமேல் உனக்கு யோகம்தான்.
🌸🌸🌸🌸🌸🌸
கவிஞர், மெல்லிசை மன்னர் என்ற இரண்டு சித்தர்கள் சேர்ந்து உருவாக்கிய அபூர்வமான பாடல் இது.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[6/22, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சுகமடைய

[6/22, 07:01] V N Krishnan.: சுகமடைய

[6/22, 07:01] A Balasubramanian: சுகமடைய
A.Balasubramanian

[6/22, 07:01] Bhanu Sridhar: சுகமடைய

[6/22, 07:03] மாலதி: சுகமடைய
[
[6/22, 07:03] மீ.கண்ணண்.: சுகமடைய

[6/22, 07:03] Meenakshi: விடை:சுகமடைய

[6/22, 07:05] பாலூ மீ.: சுகமடைய

[6/22, 07:10] chithanandam: சுகமடைய

[6/22, 07:14] sridharan: சுகமடைய
[
[6/22, 07:14] akila sridharan: சுகமடைய

[6/22, 07:15] Rohini Ramachandran: சுகமடைய

[6/22, 07:19] stat senthil: சுகமடைய
[
[6/22, 07:23] G Venkataraman: சுகமடைய
[
[6/22, 07:25] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சுகமடைய🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[6/22, 07:26] joseph amirtharaj: சுகமடைய
[
[6/22, 07:30] prasath venugopal: சுகமடைய

[6/22, 07:32] Dhayanandan: *சுகமடைய*

[6/22, 07:32] Siva: சுகமடைய
[
[6/22, 07:36] Ramki Krishnan: சுகமடைய
[
[6/22, 07:37] ஆர். நாராயணன்.: சுகமடைய

[6/22, 07:39] Viji - Kovai: சுகமடைய

[6/22, 07:42] sathish: சுகமடைய
[
[6/22, 07:43] Venkat: சுகமடைய 🙏🏾

[6/22, 07:47] nagarajan: *சுகமடைய*
[
[6/22, 08:11] siddhan subramanian: சுகமடைய சுக(ர்) + மடைய(ன்)

[6/22, 08:12] Bharathi: சுகமடைய

[6/22, 08:18] ஆர்.பத்மா: சுகமடைய

[6/22, 08:20] sankara subramaiam: சுகமடைய

[6/22, 08:30] Dr. Ramakrishna Easwaran: *சுகமடைய*

[6/22, 08:39] V R Raman: சுகமடைய

[6/22, 09:57] கு.கனகசபாபதி, மும்பை: சுகமடைய

[6/22, 10:10] வானதி: *சுகமடைய*

[6/22, 10:19] பானுமதி: சுகமடைய
[
[6/22, 10:25] Revathi Natraj: சுகமடைய

[6/22, 11:34] shanthi narayanan: சுகமடைய

[6/22, 13:07] N T Nathan: சுகமடைய

*****************************

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 23-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
தூண்டிலில் சிக்கிடும் கால் பகுதி? (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*கெண்டை மீன்*

'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர்
*********
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ. - தேன் 
பொங்கி ததும்பும் கோவை கனிகள் 
புன்னகை செய்வதுண்டோ புன்னகை செய்வதுண்டோ 

கன்னி அழகில் எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும் - கனி 
புன்னகை செய்யும் வண்ண நிலவில்
கெண்டை விளையாடும் கெண்டை விளையாடும்

தங்க நிலவில் இன்பக் கதைகள் 
சொல்லித் திரிவதுண்டோ....... ஆஆஆஆ 
(படம் :திருமணம்-1958)
***************************
தூண்டிலில் சிக்கிடும் கால் பகுதி? (3)

தூண்டிலில் சிக்கிடும்
= கெண்டை ( மீன்)

கால் பகுதி?
= கெண்டை ( கணுக்கால்)

*************************
*கெண்டைக்கால்* (பெ) - பாதத்திற்குமேலிருக்கும், முட்டியின் கீழுள்ள காலின் பின்பகுதி
************************
*கெண்டை விழிகள்*

கெண்டை (இ)ரண்டு மேகம்
கொண்டு  துள்ளியிங்கு வந்ததோ
கண்டுகொண்ட எந்தன் நெஞ்சு
சந்தம் கொண்டு பாடுதோ

வண்டமர்ந்த சோலை மேயும்
மான்கள் போல பார்க்குதே
நோக்கும்போது எந்தன் ஆவி
உன்னைச் நாடிச் சேருதே

தண்மை கொண்ட நிலவின்
கண்கள் நோக்குகின்ற போதிலே 
எந்தன் சிந்தை உன்னைவாழ்த்தி
கவிதை கோடி பாடுதே

சண்டை செய்யும் வாள்களாக
கூர்மை கொண்டபோதிலும்
கருணையோடு அன்பை நாளும்
உந்தன் விழிகள் வீசிடும்.

- கு. இராமகிருஷ்ணன்

********
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[6/23, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கெண்டை

[6/23, 07:02] மாலதி: கெண்டை

[6/23, 07:05] sankara subramaiam: கெண்டை

[6/23, 07:05] மீ.கண்ணண்.: கெண்டை
[
[6/23, 07:11] பாலூ மீ.: கெண்டை.

[6/23, 07:13] prasath venugopal: கெண்டை

[6/23, 07:14] கு.கனகசபாபதி, மும்பை: கெண்டை

[6/23, 07:15] akila sridharan: கெண்டை

[6/23, 07:16] Meenakshi: விடை:கெண்டை

[6/23, 07:18] Bhanu Sridhar: கெண்டை

[6/23, 07:32] sridharan: கெண்டை.

[6/23, 07:34] A Balasubramanian: தண்டு
A.Balasubramanian
[
[6/23, 07:49] ஆர். நாராயணன்.: கெண்டை கெண்டைக்கால், ஒருவகை மீன்
[
[6/23, 09:16] siddhan subramanian: கெண்டை

[6/23, 09:44] stat senthil: கெண்டை

[6/23, 10:08] G Venkataraman: கெண்டை

[[6/23, 10:24] Dr. Ramakrishna Easwaran: *கெண்டை*

Calf, fish

சம்பந்தரின் திருக்கேதாரப் பதிகத்தை நினைவிற்குக் கொண்டு வந்தது 🙏🙏

தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்

இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்

வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்

*கெண்டை* பாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

[6/23, 11:52] வானதி: *கெண்டை*

[[6/23, 12:17] joseph amirtharaj: கெண்டை

[6/23, 19:52] nagarajan: *கெண்டை*
[
[6/23, 20:32] shanthi narayanan: கெண்டை

[6/23, 21:54] Revathi Natraj: கெண்டை

*****************************

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 24-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
அபாயகரமான குறைவான இடைவெளி உன்னையல்லால் உயிரின் மழைக்குள் ஒதுங்கியது (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
_அபாயகரமான குறைவான இடைவெளி உன்னையல்லால் உயிரின் மழைக்குள் ஒதுங்கியது(4)_


_உன்னையல்லால் உயிரின்_
= _To delete உன் from உயிரின்_
= *யிரி*

_மழைக்குள் ஒதுங்கியது_
= _indicates to put *யிரி*_ _inside *மழை*_
= *ம(யிரி)ழை*
= *மயிரிழை*

= _அபாயகரமான குறைவான இடைவெளி_
*************************
*மயிரிழை* என்றால் என்ன ?

உயிர் தப்பித்த அனுபவம் ஒருவருக்கு ஏற்படும்போது... அதை மற்றவருக்கு விவரமாக எடுத்துச்சொல்லும்போது பயன்படுத்தும் உவமை வார்த்தை - " *மயிரிழை".*

சிங்கத்திடமிருந்து மான் _மயிரிழையில்_ உயிர் தப்பியது.

விபத்திலிருந்து _மயிரிழையில்_ உயிர் தப்பினேன்.

ஃ அதாவது...

உயிருக்கும்... அதை எடுக்கவரும் நிகழ்வுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம்தான் " _மயிரிழை_ " என்பது.
************************
*படித்ததில் பிடித்தது!*
கத்திரிவெயில் மெய்யுருக்க
கனவுச்சாலை கருகியோட
தலைக்கவசத்தை கதிர்கள்கிழிக்க
வாகனங்கள் வனவிலங்குபோல்
உறுமிக்கொண்டு பயம்துரத்த
மான்குட்டியாய் ஈருருளியில்
திக்குத்தெரியா
பெருநகரக் கட்டிடக்காட்டில்
இடர்கடந்து
_*மயிரிழையில்* மறுபிறவி சில கண்டு_
வாடிக்கையாளர் பசி தீர்க்க
நிறுவனத்தின் பெயர் காக்க
புதிர்ப்போட்டியில் மறுமுனைதேடிய
குட்டிப்பையனாக
எல்லைக்கோட்டு முகவரியடைந்து
பெட்டிபெட்டியாய் அடுக்குமாடியில்
முக்குவீட்டை வேர்க்க விறுவிறுத்து
தாமதமாய் தேடிப்பிடித்து
தாகத்தோடு தயக்கம்சேர
*_அழைப்பு மணி யழுத்தினான் விரைவு உணவு சேர்ப்பனையாளன்!_*
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[6/24, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மயிரிழை

[6/24, 07:06] Meenakshi: விடை:மயிரிழை

[6/24, 07:08] chithanandam: மயிரிழை

[6/24, 07:10] பாலூ மீ.: மயிரிழை

[6/24, 07:13] மாலதி: மயிரிழை

[6/24, 07:15] மீ.கண்ணண்.: மயிரிழை

[6/24, 07:21] akila sridharan: மயிரிழை

[6/24, 07:27] A D வேதாந்தம்: விடை=மயிரிழை(வேதாந்தம்)
[
[6/24, 07:30] Dhayanandan: *மயிரிழை*
[
[6/24, 07:35] ஆர். நாராயணன்.: மயிரிழை
[
[6/24, 07:42] A Balasubramanian: மயிரிழை
A.Balasubramanian

[6/24, 07:45] Ramki Krishnan: மயிரிழை
[
[6/24, 07:52] nagarajan: *மயிரிழை*

[6/24, 07:54] sridharan: மயிரிழை

[6/24, 07:59] G Venkataraman: மயிரிழை
*சிறப்பான வார்த்தை விளையாடல் ஐயா*

[6/24, 08:13] Dr. Ramakrishna Easwaran: *மயிரிழை*

[6/24, 08:20] ஆர்.பத்மா: மயிரிழை

[6/24, 08:45] siddhan subramanian: மயிரிழை
[6
[6/24, 08:47] sankara subramaiam: மயிரிழை

[6/24, 08:51] stat senthil: மயிரிழை
[
[6/24, 09:27] கு.கனகசபாபதி, மும்பை: மயிரிழை

[6/24, 10:33] Usha Chennai: மயிரிழை

[6/24, 10:57] வானதி: *மயிரிழை*
[
[6/24, 12:03] joseph amirtharaj: மயிரிழை

[6/24, 12:12] shanthi narayanan: மயிரிழை

[6/24, 20:03] Revathi Natraj: மயிரிழை

[6/24, 20:18] N T Nathan: மயிரிழை

[6/24, 21:37] sathish: மயிரிழை

[6/24, 21:41] Bhanu Sridhar: மயிரிழை
Longer definition for solution and exact word inserts like Mazhai instead of synonyms actually took time.
Got too used to Mr Ramarao's puzzles. Short definition and synonyms words. 🙏

*****************************

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 25-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
காதலன் முன்வந்தபோது செல்வதில்லை (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*நட்சத்திரங்கள் விழும் இரவினில்!*

மீன்
துள்ளி விளையாடும் தடாகத்தின்
அல்லி மலர்மீது காதல்கொண்டு
நிலம்நோக்கி
குளம்நோக்கிப் பாய்ந்ததில்
இடம்மாறி
தடம்மாறி விழுகின்றனவோ...
    
நளினச் சொற்களுக்குப் பதிலாக
நட்சத்திரங்களை அடுக்கியொரு கவியெழுத
அழைத்தேன் 
அதற்காக வருகின்றனவோ...

நட்சத்திரங்களை
நிராகரித்துவிட்டு
நிலவை மட்டுமே பாடும் கவிஞர்களிடம்
நீதி கேட்டு
நெடும்பயணமோ...

_நட்சத்திரங்கள் விழுந்த இடம் தேடி விஞ்ஞானிகளும் *செல்வதில்லை*_
_மெய்ஞானிகளும் சொல்வதில்லை_
_பாவபூமியில் விழ அஞ்சிப்_
_பாதியிலே சாம்பலாகிக் கரைகின்றனவோ..._

உச்சி நட்சத்திரங்கள் விழும் 
ஒவ்வோர் இரவும்
உணர்த்துகின்றதோ...
ஒவ்வொன்றாய் என் கனவுகள்
உடைந்து நொறுங்குவதை?

-கோ. மன்றவாணன்
************************
_காதலன் முன்வந்தபோது செல்வதில்லை (3)_

_காதலன் முன்வந்தபோது_

= _காதலன் முன் வந்த போது_

_காதலன் முன்_
= _first letter in காதலன்_ = *கா*

_வந்த_
= _anagram indicator for போது+கா_
= *போகாது*

= _செல்வதில்லை_
*************************
*பழமொழி* : 

_இல்லது வாராது,உள்ளது *போகாது* ._

_பொருள்_ : நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த 
வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும் வரை நீங்காது.

_விளக்கம்_ : இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.
*************************
*வெள்ளத்தால் போகாது ....கல்வி*

ஒருவன் தன் வாழ்வில் கிடைத்த மிகப்
பெரிய செல்வமாகக் கருதுவது கல்விச்
செல்வமாகும்.

கல்வியை ஒருமுறை பெற்றுவிட்டால்
வாழ்நாள் முழுவதும் கூடவே வரும்.

என்னிடம் நிறைய கல்வி இருக்கு யாராவது 
களவாடி சென்று விடுவார்களோ ..என்ற .
கவலை இல்லை. ஐயோ பெருமழை வந்துவிட்டதே...
வெள்ளம் வந்து அடித்துச் சென்றுவிடுமோ என்று
அச்சப்படத் தேவையில்லை.

தீயில் எரிந்து சாம்பலாகிவிடுமோ என்று
நினைத்து வெதும்பிக் கிடக்க வேண்டாம்.

எப்போது நான் உங்களுடையவள் ஆகிவிட்டேனோ...
இனி எப்போதும் உங்களுடையவள்தான்.

எந்த ஒரு சக்தியாலும் உங்களிடமிருந்து
என்னைப் பிரிக்க முடியாது. பிரிக்க முடியாத
பந்தம் கல்விக்கும் கல்வியைப் 
பெற்றவருக்குமிடையே ஏற்பட்டுவிடும்.

இதையேத்தான் *விவேக சிந்தாமணி* ஆசிரியர்

_வெள்ளத்தால் *போகாது* வெந்தணலால் வேகாது வேந்தராலும்_
_கொள்ளத்தான் முடியாது_

_கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது_
_கள்ளர்க்கோ மிக அரிது காவலோ மிக எளிது_

_கல்வி என்னும் உள்ளத்தே_
_பொருளிருக்க உலகெலாம்_
_பொருள்தேடி உமல்வதேனோ !"_

என்று கூறுகிறார்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
புத்தி சிகாமணி
பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது
சின்னப் பிள்ளை 

ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன்
பாழும் காதலினால் திரும்பி வந்தேன்

*போகாது அய்யா போகாது*
*எங்கு போனாலும் ஆசை போகாது*
ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ 

இருவர் உள்ளம் (1963)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*போகாதே போகாதே என் கணவா*
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் அய்யோ
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்

வாழைத் தோப்பு அழியக் கண்டேன்
அய்யோ மல்லிகை தோட்டமும் வாடக் கண்டேன்
*போகாதே போகாதே என் கணவா*

[வீரபாண்டிய கட்டபொம்மன்(1959)]
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[6/25, 07:00] திரைக்கதம்பம் Ramarao: போகாது

[6/25, 07:03] பாலூ மீ.: போகாது

[6/25, 07:03] Dr. Ramakrishna Easwaran: *போகாது*

[6/25, 07:05] sathish: போகாது

[6/25, 07:08] மீ.கண்ணண்.: போகாது

[6/25, 07:09] Meenakshi: விடை:போகாது
[
[6/25, 07:25] ஆர்.பத்மா: போகாது

[6/25, 07:28] sridharan: போகாது

[6/25, 07:32] மாலதி: போகாது

[6/25, 07:34] akila sridharan: போகாது

[6/25, 07:51] ஆர். நாராயணன்.: போகாது

[6/25, 08:25] nagarajan: *போகாது*
[
[6/25, 08:26] siddhan subramanian: போகாது (கா+போது)

[6/25, 08:43] stat senthil: போகாது

[6/25, 09:17] joseph amirtharaj: போகாது
[
[6/25, 09:32] கு.கனகசபாபதி, மும்பை: போகாது
[
[6/25, 12:15] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏போகாது🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[6/25, 13:27] sankara subramaiam: போகாது

[6/25, 17:54] வானதி: *போகாது*
[
[6/25, 19:35] A Balasubramanian: போகாத
A.Balasubramanian

[6/25, 19:42] G Venkataraman: போகாது
[
[6/25, 19:43] Rohini Ramachandran: போகாது
[
[6/25, 19:47] Ramki Krishnan: போகாது

[6/25, 20:04] Bhanu Sridhar: போகாது
[
[6/25, 20:09] Revathi Natraj: போகாது

[6/25, 20:18] Viji - Kovai: போகாது

[6/25, 20:20] N T Nathan: போகாது

[6/25, 20:30] shanthi narayanan: போகாது
[
[6/25, 22:33] Venkat: போகாது 🙏🏾

***************************

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 26-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
பெரிதாகி வந்து கள்ளர் குடியை அழித்து நுழைந்தனர் (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளை தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்

_இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து_
_இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை_
_துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து_
_துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை_
_இன்பம் பாதி துன்பமும் பாதி_
_இரண்டும் வாழ்வின் அங்கம்_

(திரைப்படம்: உள்ளம் கேட்குமே-2005)
************************
_வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா_

_அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா_

_குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா_

_அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா (வளர்ந்த)_

(Kaathiruntha Kangal 1962)
************************
_பெரிதாகி வந்து கள்ளர் குடியை அழித்து நுழைந்தனர் (5)_

_குடியை_ = *கள்*
_அழித்து_ = _deletion indicator_

_கள்ளர் குடியை அழித்து_
= *கள்ளர் - கள்*
= *ளர்*

_நுழைந்தனர்_
= _insertion indicator to place_ *ளர்* _inside_ *வந்து*
= *வ(ளர்)ந்து*
= *வளர்ந்து*

= _பெரிதாகி_
*************************
_சித்தர்கள் மறைந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா ஞானிகள் ஆவர்._ அவர்கள் பிறந்த இடங்கள், வாழ்ந்த இடங்கள், மறைந்த இடங்கள் எல்லாமே புனிதத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. இப்படிப் பட்ட ஒரு புனிதமான இடம் தான் சென்னையை அடுத்த திருவெற்றியூர் கடற்கரை மீனவர் குப்பத்திற்கு மத்தியில் அமைந்துள்ள *பட்டினத்தார்* கோயில்... 

சித்தர்களில் *பட்டினத்தாருக்கென்று* ஒரு சிறப்பான இடமுண்டு. அவர் பாடல் வடிவில் விட்டுச் சென்ற தத்துவங்கள் அனைத்தும் பெரும் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

_பத்தும் புகுந்து பிறந்து *வளர்ந்து* பட்டாடைசுற்றி,_

_முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு_

_செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்_

_கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!_

என்பது அவரது வரிகளில் சில. 

*விளக்கம்:*

பத்துத் திங்கள் அன்னை வயிற்றில் இருந்து பின் பிறந்து *வளர்ந்து* பட்டாடையும் விலை உயர்ந்த ஆடைகளையும் உடுத்தி , முத்தும் பவளமும் இன்னும் உயர்ந்த ஆபரணங்களையும் அணிந்து செல்வத்துக்காக ஓடி செல்வம் கிடைத்து சந்தோஷத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து எதுவும் எடுத்துச் செல்லாது தனியே செத்து கிடக்கும் பிணத்தின் அருகே இனி தாம் சாகப் போகிறோம் என்பதை உணராது சாகப் போகிற பிணங்கள் அனைத்தும் உட்கார்ந்து அழுகின்றனவே .
இதைப் பார்த்தாயா கயிலையை ஒத்த தென்கயிலை எனும் கயிலாயபுரி வாழும் காளத்தி அப்பனே . 🙏🏼
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[6/26, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வளர்ந்து

[6/26, 07:02] prasath venugopal: வளர்ந்து

[6/26, 07:03] Bhanu Sridhar: வளர்ந்து

[6/26, 07:04] மீ.கண்ணண்.: வளர்ந்து

[6/26, 07:11] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வளர்ந்து🙏
வீ. ஆர். பாலகிருஷ்ணன்

[6/26, 07:13] A Balasubramanian: வளர்ந்து
A.Balasubramanian

[6/26, 07:14] ஆர்.பத்மா: வளர்ந்து

[6/26, 07:15] பாலூ மீ.: வளர்ந்து.

[6/26, 07:25] ஆர். நாராயணன்.: வளர்ந்து

[6/26, 07:35] A D வேதாந்தம்: விடை=வளர்ந்து(வேதாந்தம்)
[
[6/26, 07:40] மாலதி: வளர்ந்து
[
[6/26, 07:41] sridharan: வளர்ந்து. கள்ளர்- கள் + வந்து

[6/26, 08:00] Ramki Krishnan: வளர்ந்து

[6/26, 08:00] nagarajan: *வளர்ந்து*

[6/26, 08:02] கு.கனகசபாபதி, மும்பை: வளர்ந்து
[
[6/26, 08:03] வானதி: *வளர்ந்து*

[6/26, 08:25] G Venkataraman: வளர்ந்து

[6/26, 09:14] siddhan subramanian: வளர்ந்து (வந்து+ளர்)

[6/26, 09:25] stat senthil: வளர்ந்து

[6/26, 10:00] Meenakshi: விடை: வளர்ந்து
[
[6/26, 13:06] joseph amirtharaj: வளர்ந்து
[
[6/26, 14:44] chithanandam: வளர்ந்து

[6/26, 19:14] sathish: வளர்ந்து

[
[6/26, 19:15] N T Nathan: வளர்ந்து
[
[6/26, 20:02] Dr. Ramakrishna Easwaran: *வளர்ந்து*
வ( ~கள்~ ளர்)ந்து
[
[6/26, 20:27] Revathi Natraj: வளர்ந்து

[6/26, 21:21] Viji - Kovai: வந்துளர்

[6/27, 05:09] Venkat: வளர்ந்து 🙏🏾

***************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்