Skip to main content

Posts

Showing posts with the label விருத்தம்

விடை 3860

இன்று காலை வெளியான வெடி: உதவி செய்பவர் வள்ளல் இல்லை, ஆனால் அவருக்குத் துணையோ? (4) இதற்கான விடை: உபகாரி  = உப + காரி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

விடை 3822

இன்று காலை வெளியான வெடி: முனை உடைந்த கத்தி செருகி கிலி உண்டாக்கிய உணவில் கட்டுப்பாடு (5)   அதற்கான விடை:   பத்தியம்   = (க)த்தி + பயம் இப்புதிருக்க்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம் .

விடை 3794

இன்று காலை வெளியான வெடி: ராமன் சீதையைக் கைப்பிடித்த போது முறித்த வில்லிலிருந்து  ஒலித்தது (3) திருமணம் செய்யும் போது (ராமன் சீதையைக் கைப்பிடித்த போது) ஒலிப்பது = தவில். முறித் த வில் லிலிருந்து  என்பதில் "தவில்" ஒளிந்துள்ளது. இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம் .

விடை 3793

இன்று காலை வெளியான வெடி: போதி உண்ட பழங்களில்  தேங்காய்தான்  சிறந்ததாம், எல்லாம்  தலையெழுத்து! (4) அதற்கான விடை:  உபதேசி = உ ண்ட ப ழங்களில் தே ங்காய்தான் சி றந்ததாம், இந்த நான்கு சொற்களின் 'தலை'யெழுத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்டது விடை; போதிப்பது = உபதேசிப்பது; இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

விடை 3265

இன்று (02/04/2018) காலை வெளியான வெடி மெழுகு உள்ளே வர மஞ்சளாய் மலரும் மரம் (4) இதற்கான விடை:  பூவரசு = பூசு + வர ; பூசு = மெழுகு (வினைச் சொல்லாய்) அரசமரத்தின் இலைகளைபோன்ற அமைப்புடன் ஆனால் அழகான மஞ்சள் நிறப் பூக்கள் கொண்டதால் இம்மரம் பூவரசு என்று சொல்லப்படுகிறது. சிறுவயதில் கிராமத்திற்கு விடுமுறைகளில் சித்தப்பா வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் கொல்லைப் பக்கத்தில் இதன் இலைகளைப் பறித்து ஊதல் செய்து விளையாடுவோம். விசேஷம் வந்தால் அக்கா, அண்ணி எல்லாம் எங்களையெல்லாம் கூப்பிட்டு  தம்பிகளா நெறைய பூவரச எலை பறிச்சிட்டு வாங்கப்பா கொழுக்கட்டை சுடுவோம் என்று சொல்லுவோர்கள். அதிக உயரமில்லாத மரமாதலால்  எளிதில் பறித்துவிடுவோம். ஒவ்வொரு இலையிலும் எள்ளு பூரணமும் பருப்பு பூரணமும் வைத்து மடித்து இட்லிப்பானையில் வேக வைத்து கொழுக்கட்டையை சுடுவார்கள். பச்சையான இலை வெந்தபின் திட்டுதிட்டாய் சாம்பல் நிறமாகி  அதைப் பிரித்து நாங்களும் ஆவலாய் இலை வாசனை கொண்ட கொழுக்கட்டையைச் சாப்பிடுவோம்.  நான் பணிபுரியும் பல்கலைக் கழக வளாகத்தில் பூவரச மரம். பின்வரும் காணொளியில் முதல் 10-12 வினா...