Skip to main content

Posts

Showing posts from 2019

விடை 3915

இன்றைய வெடி: வாகை சூடு படலம் உரச விலகிட இனிப்பு செய்ய தேவைப்படும் (4) அதற்கான விடை:  வெல்லம் = வெல் + லம் வெல் = வாகை சூடு லம் = படலம் ‍- பட (உரச) இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள். **********

உதிரிவெடி 3915

உதிரிவெடி(3915 டிசம்பர் 31, 2019) வாஞ்சிநாதன் ******************** வாகை சூடு படலம் உரச விலகிட இனிப்பு செய்ய தேவைப்படும் (4) Loading…

விடை 3914

இன்றைய வெடி: விஷ்ணு தமிழனாக சிறகடிக்கத் தொடங்க‌ அன்னத்தின் முந்தைய உரு (3) அதற்கான விடை:  அரிசி (அன்னம், அதாவது சாதம், சமைப்பதற்கு முன் அரிசியாய்    இருக்கும்) அரிசி = அரி + சி அரி = ஹரி, தமிழ்ப்படுத்தப்படும்போது சி = சிறகடிக்க என்பதன் தொடக்க எழுத்து இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 3914

  உதிரிவெடி 3914 (டிசம்பர் 30, 2019) வாஞ்சிநாதன் *********************   விஷ்ணு தமிழனாக சிறகடிக்கத் தொடங்க‌ அன்னத்தின் முந்தைய உரு (3) Loading…

விடை 3913

இன்று காலை வெளியான வெடி: அன்புக்குரியவள் வனஸ்பதியில் சுத்தமானதைக் கலந்த சுருக்கு (4) அதற்கான விடை:  கண்மணி = கண்ணி + ம‌ கண்ணி = சுருக்கு (வேடர்கள் பறவைகளைப் பிடிக்கப் பயன்படுத்துவது) ம = வனஸ்பதி என்ற மேளகர்த்தா ராகத்தில் பிரதி மத்யமம் இல்லை, சுத்த மத்யமம். மேளகர்த்தா ராகங்களின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, வனஸ்பதி ராகத்தில்  ரிஷபமும்,  காந்தாரமும் சுத்த வகையாகத்தான் வருகின்றன. அதற்கு பதிலாக "சங்கராபரணத்தில்/கரஹரப்ரியாவில் சுத்தமான‌து"   என்றால் மிகப் பொருத்தமாக   'ம'  மட்டுமே உறுதியாகச் சொல்லலாம். ஆனால், "You need to say what you mean, but need not mean what you say" என்ற புதிரமைக்கும் கொள்கையின் படி இப்படிச் செய்தேன். அதோடு வனஸ்பதி, சுத்தம் என்ற இரு சொற்களும்  சேர்ந்து வந்தால் ராகங்கள் பக்கம் போகாமல் திசை திருப்ப முடியும் என்ற எண்ணமும் வந்தது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 196

Krypton 196 (29th December 2019) Vanchinathan ************************** Out of mercy I  brought in excessive deprivation (7) (Remember to visit this page on New Year morning). Loading...

உதிரிவெடி 3913

உதிரிவெடி 3913 (டிசம்பர் 29, 2019) வாஞ்சிநாதன் *********************   அன்புக்குரியவள் வனஸ்பதியில் சுத்தமானதைக் கலந்த சுருக்கு (4) Loading...

Solution to Krypton 195

Today's clue: Insult about sending a ball to pocket in full glare of publicity (9) Its solution:  SPOTLIGHT = slight + pot slight = insult pot = (in billiards) put the ball in pocket (The form of the word in the clue as "sending" is not a good choice. Hope it it did not confuse) Click here to see the solutions received.

விடை 3912

இன்று காலை வெளியான வெடி: கோபமடைந்ததும்  குமுறி கொம்பு முனை சீவி துதித்த  விளைவு (6) அதற்கான விடை:   கொதித்ததும் = கொம் + துதித்த கொம் = முனை சீவிய  கொம்பு தித்தது  = துதித்த  ( குமுறி ) கோபமடைந்ததும் = கொதித்ததும் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 195

Krypton 195 (28th December 2019)  Vanchinathan *********************** Insult about sending a ball to pocket in full glare of publicity (9) NOTE: I missed posting a clue last Sunday. I will compensate it on New Year. Loading…

உதிரிவெடி 3912

உதிரிவெடி 3912 (டிசம்பர் 28, 2019) வாஞ்சிநாதன் ****************** கோபமடைந்ததும்  குமுறி கொம்பு முனை சீவி துதித்த  விளைவு (6)   Loading...

விடை 3911

இன்று காலை வெளியான வெடி: பரு மூடிய சுழியுடன் ஆரம்பிக்கத்      தூண்டு (4) பரு மூடிய சுழியுடன் ஆரம்பிக்கத்     தூண்டு (4) அதற்கான விடை: உசுப்பு  = உப்பு + சு பரு  = உப்பு ( வினைச்சொல்) சு = சுழியுடன் ஆரம்பிக்க இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட   விடைகளின் பட்டியல் இங்கே.

விடை 3910

இன்று காலை வெளியான வெடி: தாங்கி நிற்பது  நீதான் இடை  வெளியில் மாலை  (4) அதற்கான விடை:  ஆதாரம் = ஆரம் + தா ஆரம் == மாலை தா = 'நீதான்' இடை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 3909

இன்று காலை வெளியான வெடி: மேலும் வெறும் உடல் ஒவ்வொருவருக்கும் ஒன்று (5) அதற்கான விடை:  மேலும் = கூடுதலாக = கூடு + தலா + க; கூடு = வெறும் உடல் தலா = ஒவ்வொருவருக்கும் க = தமிழ் எண்ணுரு 1. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3909

உதிரிவெடி 3909 (டிசம்பர் 25, 2019) வாஞ்சிநாதன் *********************** மேலும் வெறும் உடல் ஒவ்வொருவருக்கும் ஒன்று (5) Loading…

விடை 3908

இன்று காலை வெளியான வெடி: வேறொரு நாட்டில் வாழப் போவது  அடியேன் இடை தழுவியது தண்டனைக்குரிய செயல் (6) அதற்கான விடை: குடியேற்றம் = டியே + குற்றம் டியே = அடியேன் இடை குற்றம் = தண்டனைக்குரிய செயல் இன்றைய வெடிக்கு விடையனுப்பியர்வர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3908

உதிரிவெடி 3908 (டிசம்பர் 24, 2019) வாஞ்சிநாதன் ********************* வேறொரு நாட்டில் வாழப் போவது  அடியேன் இடை தழுவியது தண்டனைக்குரிய செயல் (6) Loading…

விடை 3907

இன்று காலை வெளியான வெடி: ஒரு பூதம் கடைசியாய்ச் சின்ன புலி கண்டு கொள்ளாததில் சிக்கியது (3) அதற்கான விடை: புனல்  = புல் + ன‌ புல் = புலி கண்டு கொள்ளாதது ன‌ = கடைசியாயச் சின்ன‌ புனல் = நீர், பஞ்ச‌ பூதங்களிலொன்று இப்புதிருக்கு விடைகளைக் கண்டவர்கள் பட்டியலைக் காண இங்கே சென்று பார்க்கவும்.

உதிரிவெடி 3907

உதிரிவெடி 3907 (டிசம்பர் 23, 2019) வாஞ்சிநாதன் ********************* ஒரு பூதம் கடைசியாய்ச் சின்ன புலி கண்டு கொள்ளாததில் சிக்கியது (3) Loading…

அறிவிப்பு

இன்று ஒரு நாள் தவறிவிட்ட உதிரிவெடி,  நாளையிலிருந்து   (திங்கள்கிழமை, 23/12/2019, )  வெளிவந்துவிடும். வழக்கம்போல் 6 மணிக்கு எதிர்பார்க்கவும்.

உதிரிவெடி 3906

உதிரிவெடி 3906 (டிசம்பர் 21, 2019) வாஞ்சிநாதன் ******************* இயற்கையாக பூமியில் கிடைக்கும் பழம் சுவைப்பதில்லாமல்  பெயர் (4) Loading…

விடை 3905

இன்று காலை வெளியான வெடி: நீண்ட தூர சிக்கலோடு திட்டி  உணவை ஒதுக்கிவிடும் சமயம் (4) அதற்கான விடை: ஏகாதசி = ஏசி + காத ஏசி = திட்டி காத (ம்)  = நீண்ட தூர(ம்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3905

உதிரிவெடி 3905 (டிசம்பர் 20, 2019) வாஞ்சிநாதன் ****************** நீண்ட தூர சிக்கலோடு திட்டி  உணவை ஒதுக்கிவிடும் சமயம் (4) Loading...

விடை 3904

இன்று காலை வெளியான வெடி: உதாரணமாக  y = -2x+3, சரியத் தொடங்கி பள்ளத்தில் வீழ்ந்தது என்பார் இடை (5) அதற்கான விடை: சமன்பாடு = ச + மடு + ன்பா ச = சரியத் தொடங்கி மடு = பள்ளம் ன்பா = 'என்பார்' இடை y = -2x + 3  என்பது சமன்பாட்டுக்கு ஓர் உதாரணம். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3904

உதிரிவெடி 3904 (டிசம்பர் 19, 2019) வாஞ்சிநாதன் ******************* உதாரணமாக  y = -2x+3, சரியத் தொடங்கி பள்ளத்தில் வீழ்ந்தது என்பார் இடை (5) Loading...

விடை 3903

இன்று காலை வெளியான வெடி: வருங்கால  மட்டை ஆசிரியர் பார்த்து உலகைத் துறந்தார் (4) அதற்கான விடை: குருத்து = குரு + பார்த்து - பார் குருத்து = தென்னை, பனை போன்ற மரங்களின் மட்டைகளின் ஆரம்பகால வடிவம். குரு = ஆசிரியர் பார் = உலகம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3903

உதிரிவெடி 3903 (டிசம்பர் 18, 2019) வாஞ்சிநாதன் **********************  வருங்கால  மட்டை ஆசிரியர் பார்த்து உலகைத் துறந்தார் (4) Loading…

விடை 3902

விடை 3902 இன்று காலை வெளியான வெடி: போர் வர்ணனையாளன் கடைசியாக வராததால் ஒரு ஸ்வரத்துடன் சுற்றி வா (4) அதற்கான விடை:  சஞ்சரி = சஞ்சய்/யா - யா + ரி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியலை  இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3902

உதிரிவெடி 3902 (டிசம்பர் 17, 2019) வாஞ்சிநாதன் ******************** போர் வர்ணனையாளன் கடைசியாக வராததால் ஒரு ஸ்வரத்துடன் சுற்றி வா (4) Loading…

விடை 3901

இன்று காலை வெளியான வெடி: பத்தின் கலவையில்   ஒன்று குறைய எஞ்சியிருப்பது ஒரே தனிமம் (4) அதற்கான விடை:  தங்கம்.  வேதியியல் படி தங்கம் ஒரு தனிமம். தசாங்கம் என்ற வாசனைப் பொடி பத்து விதப் பொருட்களின் கலவை. அதிலிருந்து ஒன்று (அதாவது ஓரெழுத்தான 'சா') போக எஞ்சியது தங்கம். மிகவும் குறைவான விடைகள்தான் வந்திருப்பதால் தசாங்கம் என்றால் என்ன என்பதற்கு,  கைக்குக் கிடைத்த (வணிக) வலைப்பக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். 'ஒரே' என்றது பத்தில் ஒன்று போய் ஒன்பது எஞ்சவில்லை, ஒன்றுதான் என்பதற்காக. நல்ல வேளை நான் வேதியியலைப் படிக்காமல் போனேன். இப்படி மோசமான கணக்கெல்லாம்  வரும் பாடத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். என்றுமில்லாத அதிசயமாக 4 மணிக்குப் பிறகு ஏழெட்டு விடைகள் வந்துள்ளன.

உதிரிவெடி 3901

உதிரிவெடி 3901 (டிசம்பர் 16, 2019) வாஞ்சிநாதன்   ******************** பிழை திருத்திய வடிவம்: பத்தின் கலவையில்   ஒன்று குறைய எஞ்சியிருப்பது ஒரே தனிமம் (4) Loading…

விடை 3895

இன்று காலை வெளியான வெடி: சொந்தமான  தோலையெடு  பின்னர், கேரளத்துக்காரரிடம் நாரையெடு (3) அதற்கான விடை:    உரிய = சொந்தமான =  உரி + ய உரி = தோலையெடு ய  = நாயர் - நார் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3900

உதிரிவெடி 3900 (டிசம்பர் 15, 2019) வாஞ்சிநாதன் ******************** சொந்தமான  தோலையெடு  பின்னர், கேரளத்துக்காரரிடம் நாரையெடு (3)     Loading…

விடை 3899

இன்று காலை வெளியான வெடி: மத்தியாகப்  பாயசம்  கலந்தது ஒன்று விட்ட தம்பி தாரம் முறை (7) அதற்கான விடை:  சம்பிரதாயம்   = யச +  ம்பி + தாரம் யச : பாயசம் என்பதன் மத்தி ம்பி: "ஒன்று" விட்ட தம்பி, 'த" என்ற எழுத்து ஒன்றை விட்ட பின் தம்பி முறை = சம்பிரதாயம் ('தாலி கட்டிக் கொள்ளும்போது  மணப்பெண் மஞ்சள்  நிறத்தில் நூல்புடவை அணிந்து கொள்வதுதான்  எங்கள் வீட்டில் முறை').   இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை  இங்கே சென்று பார்க்கவும்

உதிரிவெடி 3899

உதிரிவெடி 3899 (டிசம்பர் 14, 2019) வாஞ்சிநாதன் ********************   மத்தியாகப்  பாயசம்  கலந்தது ஒன்று விட்ட தம்பி தாரம் முறை (7) Loading…

விடை 3898

இன்று காலை வெளியான வெடி: மெல்லிய துணி அணிந்து தாபம் குறைத்து  காமத்தை வெளிப்படுத்தும்  பேச்சு (5) அதற்கான விடை: சல்லாபம்   = சல்லா + (தா)பம்  சல்லா = மெல்லிய துணி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3898

உதிரிவெடி 3898 (டிசம்பர் 13, 2019) வாஞ்சிநாதன் ******************** மெல்லிய துணி அணிந்து தாபம் குறைத்து  காமத்தை வெளிப்படுத்தும்  பேச்சு (5) Loading…

விடை 3897

இன்று காலை வெளியான வெடி: ஓட்டு சில்லு  முனை  மடிந்து கொண்டது (4) அதற்கான விடை: செலுத்து = லு + செத்து  லு:           சில்லு முனை செத்து : மடிந்து இன்று இப்புதிருக்கு  அனுப்பப்பட்ட விடைகளை இங்கே   சென்று காணலாம்.

விடை 3896

இன்று காலை வெளியான வெடி: ஒரு  ராகம் கேட்டவுடன் தாளத்துடன் ரசிக்கத் தொடங்கியவர்கள் காலம் முடிந்தது (4) அதற்கான விடை: கேதாரம் = ஒரு ராகத்தின் பெயர். கே ட்டவுடன், தா ளத்துடன், ர சிக்க  இச்சொற்களின் தொடக்க எழுத்துகளும் "கால ம் " என்பதன் முடிவான எழுத்தும் கொண்டமைக்கப்பட்டது.  மற்றபடி இக்காலத்து மக்களெல்லாம் ராகங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று  நான் சொல்ல வந்ததாக நினைக்க வேண்டாம். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3896

உதிரிவெடி 3896 (டிசம்பர் 11, 2019) வாஞ்சிநாதன் *********************** ஒரு  ராகம் கேட்டவுடன் தாளத்துடன் ரசிக்கத் தொடங்கியவர்கள் காலம் முடிந்தது (4) Loading...

விடை 3895

விடை 3895 இன்று காலை வெளியான வெடி: உழைத்துக் கச்சேரி செய்யும்படி   ஆசையாக  விண்ணப்பம் (5) அதற்கான விடை: பாடுபட்டு விடைக்கான விளக்கத்தை இதைச் சொடுக்கிக்கேட்கவும். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3895

உதிரிவெடி 3895 (டிசம்பர் 10, 2019) வாஞ்சிநாதன் ********************* உழைத்துக் கச்சேரி செய்யும்படி   ஆசையாக  விண்ணப்பம் (5) Loading...

விடை 3894

இன்று காலை வெளியான வெடி: தாண்டிச் செல்கையில் எல்லைக்கு முன்னே  பெற்றவர் (4) அதற்கான விடை:  அப்பால் = அப்பா + ல் அப்பா = பெற்றவர் ல் = செல்கையில் எல்லை தாண்டி = அப்பால் (ஆற்றுக்கு அப்பால் உள்ள கோவிலில் இருக்கும்   முனீஸ்வரன்தான்  எங்கள் குல தெய்வம் ) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண   இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3894

 உதிரிவெடி 3894  (டிசம்பர்  9, 2019) வாஞ்சிநாதன் ***************** தாண்டிச் செல்கையில் எல்லைக்கு முன்னே  பெற்றவர் (4) Loading…

விடை 3893

இன்று காலை வெளியான வெடி: ஒரு ராகம்,  ராகத்தில் ஒரு பகுதி,  காற்றில்  வந்தது (3) அதற்கான விடை:  வராளி = வளி + ரா வளி : காற்று ரா:  ராகத்தில் ஒரு பகுதி வராளி: ஒரு  ராகத்தின் பெயர் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3893

உதிரிவெடி 3893   (டிசம்பர் 8, 2019) வாஞ்சிநாதன் *********************  ஒரு ராகம்,  ராகத்தில் ஒரு பகுதி,  காற்றில்  வந்தது (3) Loading…

Solution to Krypton 190

Today's clue: Reckless behaviour of many international school  heads'  head   (8) Its solution: MISCHIEF = M, I, S,  CHIEF M,I, S = Many International School  (heads) Chief = head Here is the link to the list of all the answers received for this.

விடை 3892

இன்று காலை வெளியான வெடி: தலை தடுமாற பளு சுமந்த  ஒரு நாடு (4) அதற்கான விடை:   பாரதம் = பாரம் + த பாரம் = பளு த = தலை தடுமாற இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க  இங்கே செல்லவும்.

விடை 3891

இன்று காலை வெளியான வெடி: செம்பு சங்கிலி முனை மூடி வைத்த பாத்திரம் (4) அதற்கான விடை:  கலசம் = கலம் + ச கலம் = பாத்திரம் ச = சங்கிலி முனை செம்பு = கலசம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

விடை 3890

இன்று காலை வெளியான வெடி நடு முதல்வன் கடையன் புகுந்த தீங்கு (3) அதற்கான விடை:   ஊன்று = ஊறு + ன் ஊறு: தீங்கு ன் = முதல்வன் கடையன் நடுதல் == ஊன்றுதல் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும் .

விடை 3889

இன்று காலை வெளியான வெடி: இரு  சுரங்களை இழந்த இரக்கத்தக்க நிலையால் வந்த ஏக்கம் (3) அதற்கான விடை:   தாபம்  = பரிதாபம் -  ப - ரி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3889

உதிரிவெடி 3889 (டிசம்பர் 4, 2019) வாஞ்சிநாதன் *******************     இரு  சுரங்களை இழந்த இரக்கத்தக்க நிலையால் வந்த ஏக்கம் (3) Loading…

விடை 3888

இன்று காலை வெளியான வெடி: அல்லல் பட்டு சாய்ந்து கொள்ளும் பொருளா? பெண்ணே சொல்! (4) அதற்கான விடை: திண்டாடி ( அல்லல் பட்டு)  = திண்டா + டி திண்டு  = தலையணை போல் மென்மையான  சாய்ந்து கொள்ளும் பொருள் . திண்டாடி  =  இது ஒரு திண்டுதானா என்ற கேள்வி,  சிறுமியிடம் கேட்கப்படுகிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை  இங்கே காணலாம்.

உதிரிவெடி 3888

உதிரிவெடி 3888  (டிசம்பர் 2, 2019) வாஞ்சிநாதன் ********************* அல்லல் பட்டு சாய்ந்து கொள்ளும் பொருளா? பெண்ணே சொல்! (4) Loading…

விடை 3887

இன்று காலை வெளியான வெடி: ஓட்டுநர் நடு இரவு சென்ற பின் காரியத்தை நிறைவேற்று  (2) அதற்கான விடை:  சாதி = சாரதி  - ர சாரதி: ஓட்டுநர் ர:  'நடு'  இரவு  இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3887

உதிரிவெடி 3887 (டிசம்பர் 2, 2019) வாஞ்சிநாதன் ******************* ஓட்டுநர் நடு இரவு சென்ற பின் காரியத்தை நிறைவேற்று  (2) Loading...

விடை 3886

விடை 3885 இன்று காலை வெளியான வெடி: மேலே செல்ல உதவும்  மந்திரம்  ஓரங்களுடன் காட்டும் சொற்சித்திரம் (4) அதற்கான விடை: படிமம் = படி  + மம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3886

உதிரிவெடி 3886 (டிசம்பர் 1, 2019) வாஞ்சிநாதன் ********************* மேலே செல்ல உதவும்  மந்திரம்  ஓரங்களுடன் காட்டும் சொற்சித்திரம் (4) Loading…

Solution to Krypton 188

Revised corrected clue: A nonegenarian has gravity in one, though lacking energy, in a place lacking gravity. Its solution: LONGEVITY = ONE +G + LEVITY - E Here is the link to the list of solvers   (just two persons!)

விடை 3885

இன்று காலை வெளியான வெடி: அத்தானை விட்டுவிட்டு  வர மறுக்கும்  கடைசி ஆட்டமும்  வராகனும் ஒன்று  (5) அதற்கான விடை:  அவதாரம் = அதா + வர  + ம் வராகன் = திருமாலின் (பத்து) அவதாரங்களில் ஒன்று அதா = அத்தானை (விட்டுவிட்டு) வர ம்  = மறுக்கும் கடைசி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியல் இங்கே.

Krypton 188

Krypton 188  (30th November 2019) Vanchinathan ************************   A nonagenarian has gravity in one where there is lack of gravity    (9) Kesavan pointed out a blunder in the above clue (shown as struck off). He also gave a good alternative. I apologize for the confusion I caused and thank Kesavan.  Here comes his version:   A nonegenarian has gravity in one, though lacking energy, in a place lacking gravity (9) Loading...

உதிரிவெடி 3885

உதிரிவெடி 3885 (நவம்பர் 30, 2019) வாஞ்சிநாதன் ******************* அத்தானை விட்டுவிட்டு  வர மறுக்கும்  கடைசி ஆட்டமும்  வராகனும் ஒன்று  (5) Loading…

விடை 3884

இன்று காலை வெளியான வெடி: நிறைவான உடல் இச்சை தொடர்பான உறவில் இறுதியாக ஈடுபட்ட பெண் இப்படி இருப்பாள்! (5) அதற்கான விடை: முழுகாமல் =  முழு  + காம + ல் முழு = நிறைவான காம = உடல் இச்சை தொடர்பான ல் = உறவில் இறுதியாக கருவுற்ற பெண்களை முழுகாமல் இருப்பதாகச் சொல்வது  பேச்சு வழக்கு. புதிரின் முதல் பகுதியை இரு முறை படிக்க வேண்டுமென்பதற்காக  "!" வியப்புக்குறி. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3884

உதிரிவெடி 3884  (நவம்பர் 29,  2019) வாஞ்சிநாதன் ********************  நிறைவான உடல் இச்சை தொடர்பான உறவில் இறுதியாக ஈடுபட்ட பெண் இப்படி இருப்பாள்! (5) Loading…

விடை 3883

இன்று காலை வெளியான வெடி: எங்கேயென்று அலைந்து  நடு இரவு  வந்த இடம் கோவிலுக்கருகில் இருக்கும் (3) அதற்கான விடை:  தேரடி = தேடி + ர சென்ற வருடம்  ராஜேஷ் வைத்யாவின் வீணை இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய நிகழ்ச்சியில்  கர்நாடக இசையில் அமைந்த திரைப்படப் பாடல்களும் வாசிப்பார் என்று குறிப்பிட்டிருந்ததால்  கொஞ்சம் சங்கீத அறிவையும் வளர்த்துக் கொள்ளலாமென்று ஒரு நப்பாசை.  அன்று பல பாடல்கள் வாசித்தாலும்  ஒரு பாடலை வாசிக்கும் முன்னால்  தனக்குத் தெரிந்து  திரைப்படங்களில் அந்தப் பாடல் மட்டும்தான் அந்த ராகத்தில் அமைந்தது என்று குறிப்பிட்டு  "நிக்கட்டுமா, போகட்டுமா நீலக் கருங்குயிலே" என்று வாசித்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாடலை  இணையத்தில் தோண்டிப் பார்த்துக் கேட்டேன்.  அது கிராமத்துப் பாட்டாகத்தான்  தெரிந்தது. நேற்றும் ஒருமுறை அதைக் கேட்டேன். ஒரு சங்கீதமும் ஒரு ராகமும் பிடிபடவில்லை. "தேரடி வீதியிலே..." என்ற வார்த்தை சிக்கி ஒரு புதிர் அகப்பட்டதுதான் மிச்சம். வாசஸ்பதியாவது, வனஸ்பதியாவது ஒன்றும் விளங்கவில்லை.  இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3873

உதிரிவெடி 3873  (நவம்பர் 28,  2019) வாஞ்சிநாதன் ******************** எங்கேயென்று அலைந்து  நடு இரவு  வந்த இடம் கோவிலுக்கருகில் இருக்கும் (3) Loading…

விடை 3882

இன்று காலை வெளியான வெடி: ஆதி பராசக்தியுடன்  அடிக்க  சிவனும் கடைசியாக வந்ததால் அமைதியற்ற நிலை (5) அதற்கான விடை: பதட்டம் = ப + தட்ட + ம் ப = 'ஆதி' பராசக்தி தட்ட = அடிக்க ம் = சிவனும் கடைசியாக வந்தது இன்று காலையில் பிரசாத் வேணுகோபால் எனக்குத் தனியாகத்  தெரிவித்தது: "பதற்றம்: என்பதுதானே சரியான தமிழ்ச் சொல். இப்புதிரின் மூலம் பிழையான வடிவத்தைத் தவிர்த்து சரியான வடிவத்தை அளிக்கலாமே" என்பது அவருடைய பரிந்துரை.  "பதற்றம்" என்பது சரியான வடிவம் என்றால் அதன்  பேச்சு/கொச்சை வடிவம் "பதட்டம்" என்று கொள்வதா?  ஆனால் அதில் ஒரு சிக்கல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.   பேச்சுவழக்கில் "ற்ற/ற்றி/ற்று" என்பது "த்த/த்தி/த்து" என்ற வடிவத்தில்தான் வருகிறது. (மஹாராஷ்டிராவில்  அரசு அமைக்க  நேத்து நெத்தியடி வாங்கித்  தோத்தவர்களின் வெத்துப் பேச்சைக் கேட்டால் இது புரியும். ) அதனால் பதட்டம் என்பது பதற்றத்திற்கு  ஓர் இலக்கிய அந்தஸ்துள்ள மாற்றுவடிவம் என்று கொள்ளலாம். கொச்சை வடிவமாக இருக்க முடியாது என்பது என் வாதம்.  சரிதானா? இவ்வெடிக்கு அனுப்பப்பட்

உதிரிவெடி 3882

உதிரிவெடி 3882 (நவம்பர் 27, 2019) வாஞ்சிநாதன் **********************   ஆதி பராசக்தியுடன்  அடிக்க  சிவனும் கடைசியாக வந்ததால் அமைதியற்ற நிலை (5) Loading…

விடை 3881

இன்று காலை வெளியான வெடி: எஜமான் முன்னே மிகுதி சுழியெடுத்து முந்தி இடையுடன் வர ஆலோசனை (5) அதற்கான விடை: பரிந்துரை = பரி + ந் + துரை; பரி = உபரி (மிகுதி)  - உ ந் = முந்தி இடை எஜமான் = துரை இதற்கு அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3881

உதிரிவெடி 3881 (நவம்பர் 26, 2019) வாஞ்சிநாதன் ******************* எஜமான் முன்னே மிகுதி சுழியெடுத்து முந்தி இடையுடன் வர ஆலோசனை (5)   Loading…

விடை 3880

இன்றைய வெடி: வாகனங்களை இயக்கப் பயன்படும்   ஒரு எண்ணெய் வித்து ஐந்து பொரி கலவை (5)  அதற்கான விடை: எரிபொருள்   = எள் + ரு + பொரி எள் = ஒரு எண்ணெய் வித்து ரு = எண் 5 இன் தமிழ் எழுத்து வடிவம்.  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்றால் காணலாம். Play this.

உதிரிவெடி 3880

உதிரிவெடி 3880 (நவம்பர் 25, 2019) வாஞ்சிநாதன் ******************** வாகனங்களை இயக்கப் பயன்படும்   ஒரு எண்ணெய் வித்து ஐந்து பொரி கலவை (5)  Loading…

விடை 3879

இன்று காலை வெளியான வெடி: வீணைக்காரி ஸ்வர பேதம் மறைத்த மனைவி  (5) அதற்கான விடை: சரஸ்வதி = சதி (மனைவி)  + ஸ்வர விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

Solution to Krypton 187

Today's clue: Deviate from the straight direction then another,  veer off course (6) Its solution:  SWERVE = SW for directions and VEER rearranged. It is a delightful coincidence  that though  VEER appears in the clue not for the meaning,  its meaning is close to swerve! Click here to see the list of solutions submitted today.

விடை 3878

இன்று காலை வெளியான வெடி: பூச்சிக் கடியின் விளைவு கொஞ்சம் ஓடி ஒளிந்து  பிழை  (4) அதற்கான விடை:  தடிப்பு = தப்பு (பிழை) + டி ('கொஞ்சம்' ஓடி) ( புதிர் வாக்கியத்தை மாற்றி எழுத வெட்டி ஒட்ட முயன்ற போது "கொஞ்சம்" என்ற சொல் ஒட்டிக் கொள்ளாமல் கொஞ்சநேரம் ஓடி ஒளிந்திருந்தது.15 மிடங்கள் கழித்துதான் திருத்தினேன்.) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே;

உதிரிவெடி 3878

உதிரிவெடி 3878 (நவம்பர் 23, 2019) வாஞ்சிநாதன் ****************** பூச்சிக் கடியின் விளைவு கொஞ்சம் ஓடி ஒளிந்து  பிழை  (4) Loading…

விடை 3877

இன்று காலை வெளிவந்த வெடி: கட்டி உருட்டி கடைசியாக நுழைந்து முன்னே செல் (4) அதற்கான விடை:  முடிந்து   = முந்து (முன்னே செல்)  + டி (உருட்டியின் கடைசி எழுத்து) கூந்தலைக் கட்டுவது = கூந்தலை முடிந்து கொள்வது . இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3877

உதிரிவெடி 3857 (நவம்பர் 22, 2019) வாஞ்சிநாதன் ********************* கட்டி உருட்டி கடைசியாக நுழைந்து முன்னே செல் (4) Loading…

விடை 3876

ஒரு பழைய சொல் விளையாட்டு இருக்கிறது. முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்! ஆற்றுப் பக்கம்  சென்ற போது ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சியின் காய் குத்தியது என்பதைத்தான் ஒரு புலவர் அப்படிச் சொன்னாராம்.   அதைக் கேட்ட மற்றொரு புலவர் கூறிய பதில்: "பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின் பெயரில் கால் நீக்கித் தேய் " தசரதனின் மகனான ராமனின்  எதிரியான  வாலியின் மனைவியின் தாரை என்ற பெயரில் காலை எடுத்து,  தரையில், தேய்த்தால் முள் குத்திய இடம் சரியாகி விடும்! அப்படிப்பட்ட பிரபலமான நெருஞ்சி உதிரிவெடியில் முதன்முதலாக இடம்பெற்றதைப் பலரும் திரளாக வந்து கலந்து கொண்டு சரியான விடையளித்துள்ளீர்கள். இம்முள்ளின் படம்:  செடியில் இருக்கும் படம்: இன்றைய  வெடி: நெருஞ்சியில் இருப்பதை அருளில்லாத வட்டாரத்திற்கு வெளியே வைத்த  அறிவில்லாதவன்(4) இதற்கான விடை:  முட்டாள் = முள் (நெருஞ்சிச் செடியில் இருப்பது)    + வட்டாரம்  - வரம் (அருள்) ஒருவரும் தவறான விடையளிக்கவில்லை. அனைவருக்கும் பாராட்டுகள்!  விவரங்களைக் காண இங்கே செ

உதிரிவெடி 3876

உதிரிவெடி 3876 (நவம்பர் 21, 2019) வாஞ்சிநாதன் *********************   நெருஞ்சியில் இருப்பதை அருளில்லாத வட்டாரத்திற்கு வெளியே வைத்த  அறிவில்லாதவன் (4) Loading…

விடை 3875

இன்று காலை வெளியான வெடி முன்னால் இருக்கும் மரியாதைக்குரியவர் விலக அவள் கடைசியாக ஒட்டிக் கொண்டாள் (4) அதற்கான விடை: நீங்கள் = நீங்க (விலக)  +  (அவ) ள் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3875

உதிரிவெடி 3875 (நவம்பர் 20, 2019) வாஞ்சிநாதன் ********************** முன்னால் இருக்கும் மரியாதைக்குரியவர் விலக அவள் கடைசியாக ஒட்டிக் கொண்டாள் (4) Loading…

விடை 3874

இன்று காலை வெளியான வெடி: இணைத்துக் கட்ட மூன்றாம் கண்ணிற்கு வெளியே தெரியாத காரணம் (4) அதற்கான விடை: பின்னணி  = பின்ன  (இணைத்துக் கட்ட)  + ணி (மூன்றாம் 'கண்ணிற்கு') ஒரு நிகழ்சிக்கு வெளியே தெரியாத காரணத்தையும் பின்னணி என்பார்கள். ( உண்மையான பின்னணி தெரிந்தால் மாணவர்களின் போராட்டத்தை விமர்சிக்க மாட்டோம். ) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் இங்கே.

உதிரிவெடி 3874

உதிரிவெடி 3874 (நவம்பர் 2019) வாஞ்சிநாதன் **********************  இணைத்துக் கட்ட மூன்றாம் கண்ணிற்கு வெளியே தெரியாத காரணம் (4) Loading…

விடை 3873

இன்றைய வெடி: பல்லில் வைத்து சோகமான  வியாபாரி லாபத்திற்காக செய்யும் அநியாயச் செயல்  (5) அதற்கான விடை:  பதுக்கல் = பல் + துக்க இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3873

உதிரிவெடி 3873 (நவம்பர் 18, 2019) வாஞ்சிநாதன் ********************** பல்லில் வைத்து சோகமான  வியாபாரி லாபத்திற்காக செய்யும் அநியாயச் செயல்  (5) Loading…

Solution to Krypton 185

Today's clue: Keeper, not his brother's keeper,  has doubts, kills first brother  violently  (9) Its solution:  CUSTODIAN CAIN + DOUBTS - B In a biblical story Cain killed his brother Abel and when God  asked about Abel  responded "Am I my brother's keeper?" Here is the list of answers received today.

விடை 3872

இன்று காலை வெளியான வெடி அண்ணனைக் கொன்றவன் தலையைக் கொய்து வெற்றி பெற்றவன் (3) அதற்கான விடை: ஜயன் ; தனது அண்ணனான கர்ணனைக் கொன்றவன் விஜயன்; விஜயன் - வி = ஜயன் இப்புதிருக்கு வந்த விடைகளை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3872

உதிரிவெடி 3872 (நவம்பர் 17, 2017) வாஞ்சிநாதன் ********************* அண்ணனைக் கொன்றவன் தலையைக் கொய்து வெற்றி பெற்றவன் (3) Loading…

Krypton 185

Krypton 185 (17th November 2019) Vanchinathan *********************** Keeper, not his brother's keeper,  has doubts, kills first brother  violently  (9) Loading…    

விடை 3871

இன்று காலை வெளியான வெடி: கண்ணுக்கும் மேலானது  இளமையைக் கொஞ்சகாலம் இழந்தவன் வம்சம் பாதி போனது (4) இதற்கான விடை: புருவம் = புரு + வம்(சம்) யயாதியின் மகன் புரு. நீண்டநாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்பிய யயாதிக்கு, புரு தன் இளமையை அளிக்கிறான். இது மகாபாரதக் கதை. (இளமையை  எந்த பாத்திரத்தில் அளந்து கொடுத்தான் என்ற கேள்வியெல்லாம் என்னைக்  கேட்காதீர்கள்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைன் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3871

உதிரிவெடி 3871 (நவம்பர் 16, 2019) வாஞ்சிநாதன் ******************** கண்ணுக்கும் மேலானது  இளமையைக் கொஞ்சகாலம் இழந்தவன் வம்சம் பாதி போனது (4) Loading...

விடை 3870

இன்று காலை வெளியான வெடி: ஆதி பகவன் ஏற்ற இறக்கம் இறுதி வெற்றிக்குப் பரிசு (5) அதற்கான விடை: பதக்கம் = ப + தக்க + ம் ப = ஆதி பகவன் தக்க = ஏற்ற‌ ம் = இறக்கம் என்ற சொல்லின் இறுதி (எழுத்து) இப்புதிருக்கு அனுப்பப்ப‌பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3870

உதிரிவெடி 3870 (நவம்பர் 15, 2019) வாஞ்சிநாதன் *********************** ஆதி பகவன் ஏற்ற இறக்கம் இறுதி வெற்றிக்குப் பரிசு  (5) Loading...

விடை 3869

இன்று காலை வெளிவந்த வெடி: சிக்கு ஆட்டி இடை வைத்த விலங்கொன்று (3) அதற்கான விடை:  மாட்டு =   மாடு (விலங்கு)  +  (ஆ) ட் (டி) இப்புதிருக்கு விடைகளை அனுப்பியவர்கள் பட்டியல் இங்கே இருக்கிறது.

விடை 3868

இன்று காலை வெளியான வெடி தரையைப் பார்த்தபடி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பவர் (4) அதற்கான விடை:  குப்புற =  "ஊருக்குப் புறப்பட்டு" என்ற சொற்கள் விடையை உள்ளே கொண்டுள்ளன.  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3868

உதிரிவெடி 3868 (நவம்பர் 13, 2019) வாஞ்சிநாதன் ************************ தரையைப் பார்த்தபடி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பவர் (4) Loading...

விடை 3867

இன்றுகாலை வெளியான வெடி: ஒரு வகை  அழும் முறையை விட்டு கோயிலில் வணங்குவது (6) அதற்கான விடை: விக்கிரகம் = விக்கி (அழும் முறை )  + ரகம் (வகை) விட்டு என்றால் நீக்குதல் என்ற பொருள் தவிர சேர்த்தல் என்ற  (எதிரான) பொருளும் உண்டு!   ( பாலில் கொஞ்சம் தேன் விட்டுக் குடித்தால் உடம்புக்கு நல்லது) . வாக்கிய அமைப்பு சீராக இருக்க வேண்டுமென்று  முதலைல் ரகம், பின்னர் அழும் முறை என்று மாற்றிச் சொன்னேன். (பக்தர்கள்) கோவிலில் வணங்குவது விக்கிரகத்தை. இன்றைய புதிருக்கு விடைகளை இப்பக்கம் சென்று காணலாம்.

உதிரிவெடி 3867

உதிரிவெடி 3867 (நவம்பர் 12, 2019) வாஞ்சிநாதன் ******************** ஒரு வகை  அழும் முறையை விட்டு கோயிலில் வணங்குவது (6) Loading...

விடை 3866

இன்று காலை வெளியான வெடி: சண்டை நடக்குமிடத்தில் வீரர்கள் இறுதியாக வீழ செய்யப்பட்ட தந்திரம் ? (4) அதற்கான விடை:  கள்ளம் = களம் + (வீரர்க) ள் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3866

உதிரிவெடி 3866 (நவம்பர் 11, 2019) வாஞ்சிநாதன் ******************** சண்டை நடக்குமிடத்தில் வீரர்கள் இறுதியாக வீழ செய்யப்பட்ட தந்திரம் ? (4) Loading...

Solution to Krypton 183

Today's clue: Leaders of  local  insurgents  like Tom  support for survival  (8) Its solution:   LIFELINE = L I + FELINE  L, I as leading letters of Local & Insurgents. 'LIKE TOM' = Feline The solutions received for this clue are found in this page.

விடை 3865

இன்று காலை வெளியான வெடி: தூக்கத்தின்போது பாதுகாப்பு கொலை விழுந்தபின்  சாதத்திலிட்ட  நிலையானது (5) இதற்கான விடை: சாசுவதம் = சாதம், அதில் 'சுவ' இட வேண்டும் ;  சுவ = கொசுவலை - கொலை (கொசுவலை, தூக்கத்தின்போது பாதுகாப்பு அளிப்பது, திருடர்களிடமிருந்து என்று நான் சொல்லவில்லை!) இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3865

உதிரிவெடி 3865 (நவம்பர் 10, 2019) வாஞ்சிநாதன் ********************** தூக்கத்தின்போது பாதுகாப்பு கொலை விழுந்தபின்  சாதத்திலிட்ட  நிலையானது (5) Loading...

விடை 3864

இன்று காலை வெளியான புதிர்: நூறு வயது போர்வையை உதறி நுழைந்த நட்சத்திரம்  (4)   அதற்கான விடை:  சதயம் = சதம் +  (வ)ய (து ) ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர தினம் தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டது என்ற செய்தியைப் படித்தேன். அதைப் புதிராக்கிக்  கொண்டேன். (25 வருடங்களுக்கு  முன்பு  அந்நாளில் தஞ்சையில் விடுமுறை  உண்டு. இப்போது என்னவென்று தெரியவில்லை) இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Solution to Krypton 182

Today's clue: Where  secluded men  wander set on Mary  (9) Its solution: MONASTERY  = anagram of  "set on mary" (An hour after posting the clue  I felt Where secluded are found wandering set on Mary  would be more precise. Already  so me 15  answers had been submitted by then. So I let it stand.)

உதிரிவெடி 3864

உதிரிவெடி 3864 (நவம்பர் 9, 2019) வாஞ்சிநாதன் ********************  நூறு வயது போர்வையை உதறி நுழைந்த நட்சத்திரம்  (4) Loading...

விடை 3863

இன்று காலை வெளிவந்த வெடி: கொடூரமான வன்செயலில் நிதி  விளையாடி ஆவியாகிவிடும் தருணம் (4) அதற்கான விடை:  கொதிநிலை = கொலை + நிதி இன்றைய புதிருக்கு வந்த விடைகளைக் காண இப்பக்கம் சென்று பாருங்கள்.

உதிரிவெடி 3863

உதிரிவெடி 3863  (நவம்பர் 8, 2019) வாஞ்சிநாதன் ***********************   கொடூரமான வன்செயலில் நிதி  விளையாடி ஆவியாகிவிடும் தருணம் (4) Loading...

விடை 3862

இன்று காலை வெளியான வெடி: மண்டை ஓரத்தை மறைத்த பரு துண்டிப்பு (4) இதற்கான விடை: உடைப்பு = உப்பு (பரு, குண்டாகு)  + (மண்) டை   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

விடை 3861

இன்று காலை வெளியான வெடி: தெய்வாம்சம் கொண்ட குரு,  அவள் உமிழ  விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார் (5)  ( இது ஒரு போலி சாமியார் பக்தையுடன் செய்த லீலை பற்றியது அல்ல, சும்மா ஒரு தமாஷ் புதிர். அவ்வளவுதான். ) இதற்கான விடை: அருள்மிகு = குரு + அள்மி ( அ வ ள் உ மி ழ ="அவள் உமிழ"  இவற்றில் விட்டுவிட்டு எழுத்துகளைக் கொள்ள)   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 3861

உதிரிவெடி 3861 (நவம்பர் 6, 2019) வாஞ்சிநாதன் *********************** தெய்வாம்சம் கொண்ட குரு,  அவள் உமிழ  விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார் (5) Loading...

விடை 3860

இன்று காலை வெளியான வெடி: உதவி செய்பவர் வள்ளல் இல்லை, ஆனால் அவருக்குத் துணையோ? (4) இதற்கான விடை: உபகாரி  = உப + காரி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 3860

உதிரிவெடி 3860 (நவம்பர் 5, 2019) வாஞ்சிநாதன் *************************** உதவி செய்பவர் வள்ளல் இல்லை, ஆனால் அவருக்குத் துணையோ? (4) Loading...

விடை 3859

இன்று காலை வெளிவந்த வெடி: மைசூர் ஆண்டவர் முன்பே பல்லவர்களின் ஆரம்ப வெளியீடு  (4) அதற்கான விடை: பதிப்பு  = ப(ல்லவர்)  + திப்பு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விடையனுப்பி அதில் ஒன்றும் தவறில்லாமல் வந்திருக்கிறது. அனைவருக்கும்  பாராட்டுகள். விடையளித்தோர் விவரத்தைப்  பார்க்க இங்கே சொடுக்கவும்.  

உதிரிவெடி 3859

உதிரிவெடி 3859 (நவம்பர் 4, 2019) வாஞ்சிநாதன் ****************** மைசூர் ஆண்டவர் முன்பே பல்லவர்களின் ஆரம்ப வெளியீடு  (4) Loading...

விடை 3858

இன்று காலை வெளியான வெடி: எடை கூடிய மக்கள் இறுதியாகப் பாடுவது? (3) இதற்கான விடை:  பள்ளு = பளு +  (மக்க) ள் பள்ளு  தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று, எழுதப்படுவது. பாடவும்படும்.   பாரதியாரின் "ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ..." இப்புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளின் பட்டியல்.

Solution to Krypton 181 (3rd Nov 2019)

Today's clue: Where races can be seen deep against outside influences (9) Its solution:  SPEEDWAYS  i.e., racetracks.  DEEP reversed,  with SWAYS outside (swaying -= influencing) Congratulations to Sundar Vedantham and MK Raghavan for cracking what, in hindsight,   seems to be a tough one. Here is the list of solutions re ceived.

Solution to Krypton 180

Today's clue: The most important product is silver, be silent,  inside and turn over (8) Its solution: FLAGSHIP = FLIP (turn over) with AG and SH inside Kasturi & Sons has many publications, but THE HINDU is their flagship.   To see the answers sent for this visit this link.

விடை 3857

இன்று காலை வெளியான வெடி: கடைசித் திருவிழா சென்ற படி செய் (3) இதற்கான விடை: ஆக்கு = ஆழாக்கு ‍- ழா படி என்றால் 8 ஆழாக்குதானே, இது எப்படி பொருந்தும் என்று கேள்வி எனக்குத் தனியாக வந்தது. அதற்கு நான் அளித்த அதே பதிலை இப்போது பொதுவில் சொல்லிவிடுகிறேன். வழக்கிலிருக்கும் இரண்டு உதாரண‌ங்களைச் சொன்னாலே போதும்.  " ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு அவன் செய்யும் காரியத்தைப் பாரேன் ". " அவர்கள் வீட்டில் இருக்கும் முத்துகளை ப் படியால் அளந்து பங்கு போட்டுக் கொண்டார்களாம் " இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

விடை 3856

இன்று காலை வெளிவந்த வெடி: இரண்டாம் மாறவர்மன்   தாக்கி   வெளியே வந்தவள் வள்ளியாக இருக்கலாம் (4) அதற்கான விடை:  குறத்தி = குத்தி (= தாக்கி)  + ற ( = இரண்டாம் மாறவர்மன்) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.

உதிரிவெடி 3856

 உதிரிவெடி 3856 (நவம்பர் 1, 2019) வாஞ்சிநாதன் ********************** இரண்டாம் மாறவர்மன்   தாக்கி   வெளியே வந்தவள் வள்ளியாக இருக்கலாம் (4) Loading...

விடை 3855

காலையில் நான் வெளியிட்ட புதிரில் ஒரு பிழையிருந்ததை, சித்தானந்தம் அவர்கள் சுட்டிக்காட்டிய பின் திருத்திய வடிவம்: இறுதியாக தேகம் முன்பே சிறுக்க வந்த மலை (4) அதற்கான விடை: குன்றம் = குன்ற + (தேக) ம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக்  காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

உதிரிவெடி 3855

உதிரிவெடி 3855 (அக்டோபர் 31, 2019) வாஞ்சிநாதன் ********************* சிறுத்த தேகம் இறுதியாக வந்த மலை (4) கருத்துரையில் வந்த ஆட்சேபம் நியாயமானது. அதனால் புதிரைத் திருத்துகிறேன்.   இறுதியாக தேகம் முன்பே சிறுக்க வந்த மலை (4) Loading...

Solution to Deepavali Special Krypton Puzzle

Deepavali Special  Puzzle Besides publishing in my blog  this puzzle with the grid as a simple jpg file, it was also hosted in puthirmayam website which provided an online solver. Hari Balakrishnan who developed that tool mainly for Tamil puzzle modified it to allow  typing English characters. I thank him which many people have found to be very helpful saving many troubles. Kesavan pointed out an error in a clue which I changed in my blog but did not know how to correct in the version uploaded in puthirmayam. I apologize for that inconsistency. All the answers submitted through puthirmayam website can be accessed by following the link below.  (In my laptop the 15x15grid is wrapped after 9 columns and I am unable to see it in full.) Here are those solutions as received.  However the answers were also sent to me by email. From that I see the following people have solved it fully, all correct. 1.  Ramki Krishnan 2. Sundar 3.  Sandhya 4. Raju Umamaheswar 5. Ravi Subra