Skip to main content

Posts

Recent posts

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 56 விடை

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் ஊசி, லட்சுமி,  கிளி, குருவி, சிவாஜி    இதில் கிளி மற்றவற்றுடன் சேராதது.  தீபாவளிப் பட்டாசு வகைகள்: ஊசி வெடி, லட்சுமி வெடி, குருவி வெடி, சிவாஜி வெடி.   உதிரிவெடிக்கு 8 ஆண்டு நிறைவு பெற்றதற்குக் காசைக் கரியாக்காமல்  வெடி வெடித்துக் கொண்டாடியாயிற்று. இத் திரிவெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

Krypton 476

     Krypton 476 (27th April  2025)  ****************** *** Government official  with Vitamin is territorially confined (8)   SOLUTION will appear tomorrow 7am Click here and find the form to fill in your solution 

உதிரிவெடி 4342

   உதிரிவெடி 4342 ( ஏப்ரல் 27, 2025 ) வாஞ்சிநாதன் ****************** உதிரிவெடிக்கு முதல்முறையாக வருபவர்கள் விடைகண்டுபிடிக்கும் வழிகளை அறிய 2017 இல் இங்கே வெளிவந்ததைப் படிக்கலாம்.   இந்த வாரத்தின் உதிரிவெடி இதோ: கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2)   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும் . விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும் .

திரிவெடி 56

  திரிவெடி 56 (26/04/2025)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் எது மற்றவற்றிலிருந்து எவ்வகையில் வேறுபட்டது என்று கண்டுபிடித்து இதர நான்கு சொற்களின் பொதுவான அம்சத்தையும் கூறவும். ஊசி, லட்சுமி,  கிளி, குருவி, சிவாஜி   உங்கள் விடையை  இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.