இன்று காலை வெளியான வெடி: வளம் கொழிக்கும் குருகும் பறந்த பின் நுழையச் சொல் (4) அதற்கான விடை: செழிப்பு = செப்பு + ழி செப்பு = சொல் (லு) ழி = கொழிக்கும் - குருகும் குருகு = கொக்கு கபிலரின் குறுந்தொகைப் பாடல்: யாரும் இல்லை; தானே கள்வன்; தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!” ஏ கே ராமனுஜன் மொழிபெயர்ப்பு: (The Interior Landscape) Only the thief was there,no one else and if he should lie, what can I do? There was only a thin legged heron standing on legs as millet stems and looking for lampreys in the running water when he took me. திருவெம்பாவையில் குறிப்பிடப்படும் குருகு இந்த திரைப்படப்பாடலில் தொடக்கத்தில் இடம் பெறுகிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.