Skip to main content

Posts

Showing posts from August, 2021

விடை 4151

இன்று காலை வெளியான வெடி: பெருமாள் கையேந்தியது இல்லாதவள் கழுத்தில் இருக்கும் (4) அதற்கான விடை: சங்கிலி = சங்கு + இலி சங்கு = மஹாவிஷ்ணு கையில் ஏந்தியிருப்பது அந்த மழைப் பாடலை வெளியிட்ட பின் புதிர் என்ன செய்யலாம் என்று தீர்மானித்திருந்தேன். அப்பாடலில் "அதிலூருஞ் சங்கினங்கள் . . ." என்று வந்ததைக் கண்டவுடன் சங்கைப் பிடித்துக் கொண்டேன். எப்போதோ தென்றலில் சங்கு + இலி என்று இதையே கையாண்டிருக்கிறேன். ஆனால் இன்று விஷ்ணுகையைப் பிடித்தது புதிய உத்தி. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4151

உதிரிவெடி 4151 (ஆகஸ்டு 29 2021) வாஞ்சிநாதன் ************************* பெருமழை பெய்த ஒரு நாளில் சுஜாதா சொல்வது போல் சற்று அஜாக்கிரதையாக இருந்த தருணத்தில் கவிதை புனைய முயன்றதன் விளைவைக் காண இங்கே செல்லுங்கள். பெருமாள் கையேந்தியது இல்லாதவள் கழுத்தில் இருக்கும் (4) Loading…

மழை

ஒவ்வொரு வருடமும் திடீரென்று சில சமயம் முன்னறிவிப்பின்றி பெரிய மழை என்று வருவது நடப்பதுதான். ஆனால் 2003ஆம் ஆண்டில் முதன்முதலாக குளிரூட்டிய அறையில் வெளியில் நடப்பது தெரியாமல் பணி புரியும் போது மழை வந்து ஓய்ந்த பிறகே தெரிய வந்தது. அப்படிப்பட்ட தருணத்தில் குற்றாலக் குறவஞ்சியில் கவித்துவம் நிறைந்த "முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்/ முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்" போன்ற வரிகள் நினைவுக்கு வந்தன. நானும் அதுபோல் எழுதிப்பார்க்கலாமா என்று முயன்றேன். நேற்று மீண்டும் அதுபோல் நெட்பிளிக்ஸ் படம் ஒன்றைப் பார்த்து முடித்தபிறகுதான் பெரிதாக மழை வந்ததை கவனித்தேன். உடனே அன்று எழுதிய விருத்தப்பாவைத் தேடியெடுத்து இப்போது இங்கே: இலைக்குடையை விரித்துயர்ந்த பூவாகை மரத்தின் இடுக்குவழிப் பொழிந்தமழை தெருவிலாறா யோடும் அலையெழுந்து கடல்வீட்டின் மணல்வாசல் தெளிக்கும் அதிலூருஞ் சங்கினங்கள் இழைத்தகோலம் அழிக்கும் வலைவீசுஞ் செம்படவர் சென்றதோணி கவிழும் வஞ்சிரமும் வவ்வாலும் உயிர்பிழைத்துத் துள்ளும் குலைகனக்க வாழையதும் பேய்க்காற்றால் வீழும் க

விடை 4150

இன்று காலை வெளியான வெடி: வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5) அதற்கான விடை: வளர்ச்சி = கிளர்ச்சி - கி + வ கிளர்ச்சி = போராட்டம் கி , வ = வஞ்சகி தலைகால் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4150

உதிரிவெடி 4150 (ஆகஸ்டு 22, 2021) வாஞ்சிநாதன் ************************* உதிரிவெடியில் பழைய வெடிகள் மீண்டும் கருத்துரைப் பகுதியில் வெளிவருவதைப் படித்த போது "கல்யாணி" ராகம் பற்றிய புதிருக்கு ராமகிருஷ்ண ஈஸ்வரன் "கல்யாணியின் ஜீவனே அதன் பிரதி மத்யமம் தான். கல்யாணியில் சுத்த மத்யமம் கிடையாது. ஆகவே, சுத்தமாக மத்யமம் இன்றி கணினியால் அமைக்கப்பட்ட சம்பூரண ராகம்! (4) என்று இருந்தால் இன்னமும் மெருகூட்டியிருக்குமே என்கிறார். நிச்சயம். இதற்கு இசை பற்றிய என்னுடைய "அறிவில்" உள்ள ஓட்டைதான் காரணம். புத்தகத்தைப் படித்து, கராத்தேயும் நீச்சலும் கற்றுக் கொள்ள முடியுமா? அப்படி முடியும் என்று இசையை நினைத்ததால் வந்த வினை இது. பாட்டைக் கேட்டும், பாடிப் பழகியும் இசையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். கேட்டால் புரிந்தால்தானே ...: இன்றைய வெடிக்கு வருகிறேன்: வஞ்சகி தலைகால் மாற்றிய போராட்டம் ஈன்ற முன்னேற்றம் (5) Loading…

Solution to Krypton 285

Today's clue: Reading it comes with a price that a lawyer is expected to accept (7) Solution: BARCODE Human beings can only SEE the barcode, when machines read it the price is shown. A lawyer, in to be a registered professional has to acccept the code as set by the bar. An attempt at "siledai". The list of submitted received is given in this the page.

விடை 4149

இன்று காலை வெளியான வெடி: இடையொடிய சுமை கொண்டு முதியவள் ஆடிக் குடத்தடைய வைப்பவள் (5) அதற்கான விடை: பாம்பாட்டி = பாம் + பாட்டி பாம் = பாரம் - ர காளமேகம் எள்ளுக்கும் பாம்புக்கும் பொருந்துமாறு எழுதிய சிலேடை: ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும் மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே யோது இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4149

உதிரிவெடி 4149 (ஆகஸ்டு 15, 2021) வாஞ்சிநாதன் ************************* உதிரிவெடி ஆரம்பித்த 2017ஆம் ஆண்டில் அம்மன், ஆடி வெள்ளி என்றெல்லாம் வெடியமைத்தது நினைவுக்கு வந்தது. நாளையோடு ஆடி முடிகிறதே இன்னமும் செய்யவில்லையே என்று தோன்றியதால் இது: இடையொடிய சுமை கொண்டு முதியவள் ஆடிக் குடத்தடைய வைப்பவள் (5) Loading…

விடை 4148

முதலில் குறள் விடுகதைக்கு வருவோம். குறள்வடிவிலேயே நடராஜனும், நாலடி வெண்பாவாக சங்கரசுப்ரமணியனும் சரியான விடையளித்துள்ளார்கள். அதில் பின்னவர் விடைமட்டுமின்றிப் புதிரை மேலும் மெருகூட்டிவிட்டார். நடராஜனின விடை: வீம்பாய் அடியேன் விடைசொல வந்தனன் காம்பே பதிலெனக் காண்! சங்கரசுப்ரமணியனின் விடை: வ ிசிறிக் கிருப்பது வீசுமணப் பூவில் பசிய நிறத்ததாய்ப் பார்ப்பாய் - பொசிந்துமிகப் பால்தரும் ஆவுக்கும் பாக்குசேர் வெற்றிலைக்கும் கால்பக்கம் கண்டிடுவாய் காம்பு. ம ுதுகைச் சொறிதலோடு முத்தான வெண்பா எதுகையொ டாக்கவும் இவ்விசிறி ஆகுமென்று காட்டிய சங்கரர் கைவண்ணம் செந்தமிழ்ப் பாட்டில் தொடரட்டும் பாய்ந்து. ---- அடுத்து இன்றைய வழக்கமான வெடி; திரையில் தோன்றுவது நடுவில் உண்ண விழுங்கப்பட்ட பொருள் (4) அதற்கான விடை: பண்டம் = படம் + ண் படம் = திரையில் தோன்றுவது ண் = நடுவுல் உண்ண இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4148

உதிரிவெடி 4148 (ஆகஸ்டு 8, 2021) வாஞ்சிநாதன் ************************* அழகாக வெண்பாவடிவில் அதிசயிக்கும்படிப் பல புலவர்கள் இரு பொருள்களை ஒப்பிட்டு (பல முறை தொடர்பில்லாதவை) சிலேடைப் பாடல்களை எழுதியுள்ளார்கள். நானும் அது போல் முயன்றேன். முடிந்தது வெறும் குறள்தான். புதிரிலும் சேர்த்தியில்லை. கொஞ்சம் விடுகதை போல் என்று சொல்லிக்கொள்ளலாம். ஏதோ ஆடிக்கொருதடவை அமாவாசைக்கொருதடவை புதிரில் இப்படி வேறுவிதமாய் முயன்றால் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். விசிறிக் கிருப்பது வீசுமணப் பூவில் பசிய நிறத்ததாம் பார் (3) ஊஹூம். குறட்புதிரில் எனகு முழுத் திருப்தியில்லை. எனவே வழக்கமான வெடி இதோ: திரையில் தோன்றுவது நடுவில் உண்ண விழுங்கப்பட்ட பொருள் (4) Loading…

Solution to Krypton 283

Today's clue: It will no longer be odd after subtracting two (6) Solution: ELEVEN Any odd number remains odd when 2 is subtracted as elementary arithmetic lesson says. Not so in the puzzle world as evidenced from the number 11 (i.e. elEVEN) when the two letters "el" are taken away. I made this puzzle two days ago and messaged it to a computer scientist friend, the answer came in less than 10 seconds! He also assured me that using subtraction in a different sense is fair in puzzles. Thanks, Madhavan! The list of submitted solutions is given in this the page.

விடை 4147

இன்று காலை வெளியான வெடி: இஸ்லாமியப் பெண்கள் அணிவது முதல்வர் கலைஞர் சென்ற அடையாளம் (4) அதற்கான விடை: முத்திரை = முகத்திரை - க முத்திரை = அடையாளம் க = முதல்வர் கலைஞர் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4147

உதிரிவெடி 4147 (ஆகஸ்டு 1, 2021) வாஞ்சிநாதன் ************************* இஸ்லாமியப் பெண்கள் அணிவது முதல்வர் கலைஞர் சென்ற அடையாளம் (4) Loading…