Skip to main content

விடை 4151

இன்று காலை வெளியான வெடி:
பெருமாள் கையேந்தியது இல்லாதவள் கழுத்தில் இருக்கும் (4)
அதற்கான விடை: சங்கிலி = சங்கு + இலி
சங்கு = மஹாவிஷ்ணு கையில் ஏந்தியிருப்பது

அந்த மழைப் பாடலை வெளியிட்ட பின் புதிர் என்ன செய்யலாம் என்று தீர்மானித்திருந்தேன். அப்பாடலில் "அதிலூருஞ் சங்கினங்கள் . . ." என்று வந்ததைக் கண்டவுடன் சங்கைப் பிடித்துக் கொண்டேன். எப்போதோ தென்றலில் சங்கு + இலி என்று இதையே கையாண்டிருக்கிறேன். ஆனால் இன்று விஷ்ணுகையைப் பிடித்தது புதிய உத்தி.

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************* 
இலி
பெயர்ச்சொல்.
இல்லாதவன், *இல்லாதவள்*, இல்லாதது

இல்லாததைக் குறிக்கும் பின்னொட்டு
இல் - இபோக்கிலி, அறிவிலி, ஏதிலி, விலையிலி, மாறிலி, நிலையிலி, பண்பிலி
************************* 
பெருமாள் கையேந்தியது இல்லாதவள் கழுத்தில் இருக்கும் (4) 

பெருமாள் கை ஏந்தியது
= சங்கு
இல்லாதவள்
= இலி
கழுத்தில் இருக்கும்
= சங்கு+இலி
= சங்கிலி
************************* 
ஆண்டாள், `சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்று பாடுகிறாள். திருமால் ஏன் சங்கையும் சக்கரத்தையும் தனது கைகளில் ஏந்தி நிற்கிறார்? அப்படி என்ன அவற்றுக்குப் பெருமை? அறியலாமே...

சத சத்பதி அத்புதம்' என்று சொல்லியபடி சாந்த வடிவினராகத் திகழும் திருமாலின்  கரங்களில் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்று ஐந்து ஆயுதங்கள் எதற்காக என்று கேட்டால், இவையனைத்தும் பக்தர்களைக் காக்கும் கருவிகள் என்கிறது ஆன்மிகம்.
பெருமாளுக்கே பல்லாண்டு பாடும் பேறு பெற்ற பெரியாழ்வார், 

வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே'

என்று சக்கரத்துக்கும் சங்குக்கும் சேர்த்தே பல்லாண்டு பாடியிருக்கிறார். பெருமாளின் ஆயுதங்களில் சங்கும், சக்கரமும்தான் பிரதானம் என்று இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
*********************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 30-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
தெய்வம் இருக்குமிடம் ஆரம்ப காலத்தில் எல்லோரும் இருந்தது (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************* 
*இன்றைய உதிரிவெடி!*( 30-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
*******************
*கருவறை*
பொருள்
(பெ) -
உட்கோயில், கருப்பக்கிருகம்

குழந்தை உருவாகும் கர்ப்பப் பை = கருப்பை.
*******************
_தெய்வம் இருக்குமிடம் ஆரம்ப காலத்தில் எல்லோரும் இருந்தது (4)_

_தெய்வம் இருக்குமிடம்_
= *கருவறை*

_ஆரம்ப காலத்தில் எல்லோரும் இருந்தது_
= *கருவறை*
*************************
_கருவறை_

கோயில் அமைப்பு மனித உடலோடு ஒத்தது. கோபுரம் மனிதனின் பாதம் போன்றது. மல்லாந்து படுத்திருக்கும் மனிதனின் பாதம் மேல் நோக்கியிருப்பது போல் நுழைவாயிலில் உள்ள கோபுரம் உயர்ந்து காணப்படுகிறது. கொடிமரம் மனிதனின் முதுகுத் தண்டு போன்றது. துவார பாலகர் மனிதனின் தோள்கள் போன்றவர். மகாமண்டபம், அர்த்த மண்டபம் உடம்பு போன்றவை. அந்தராளம் கழுத்து போன்றது. கருவறை தலை போன்றது.

‘என்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்’ என்பதற்கு ஏற்பக் கருவறை, கோயில் அமைப்பில் மிக முக்கியமானது.

கருவறைக்கு மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம், உண்ணாழி எனப் பலபெயர்கள் வழங்கப் பெறுகின்றன.

_“கருவொடு பெயரிய காண்பின் நல்லில்”_ என்று சங்க இலக்கியமான நெடுநல்வாடை கருவறையைக் குறிப்பிடுகின்றது.
*********************
💐🙏🏼💐


*******************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/30, 07:02] திரைக்கதம்பம் Ramarao: கருவறை

[8/30, 07:02] A Balasubramanian: கருவறை
A.Balasubramanian

[8/30, 07:03] stat senthil: *கருவறை*

[8/30, 07:05] பாலூ மீ.: கருவறை.

[8/30, 07:08] மாலதி: கருவறை

[8/30, 07:08] மீ.கண்ணண்.: கருவறை

[8/30, 07:09] Meenakshi: விடை:கருவறை
[
[8/30, 07:16] Dhayanandan: *கருவறை*

[8/30, 07:36] joseph amirtharaj: கருவறை

[8/30, 07:48] sridharan: கருவறை

[8/30, 07:40] chithanandam: கருவறை

[8/30, 07:53] nagarajan: *கருவறை*

[8/30, 08:11] Viji - Kovai: கருவறை

[8/30, 08:12] ஆர். நாராயணன்.: கருவறை
[
[8/30, 08:38] A D வேதாந்தம்: விடை= கருவறை(வேதாந்தம்)
[
[8/30, 08:42] கு.கனகசபாபதி, மும்பை: கருவறை

[8/30, 09:15] prasath venugopal: கருவறை

[8/30, 09:30] Bhanu Sridhar: கருவறை

[8/30, 11:45] ஆர்.பத்மா: கருவறை

[8/30, 12:11] Dr. Ramakrishna Easwaran: கருவறை
[
[8/30, 13:34] வானதி: *கருவறை*

[8/30, 13:53] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கருவறை🙏

[8/30, 14:03] shanthi narayanan: ஆலயம்

[8/30, 20:06] sathish: கருவறை
[
[8/30, 20:20] Bharathi: கருவறை

[8/30, 20:39] Rohini Ramachandran: கருவறை
[
[8/30, 20:47] Revathi Natraj: கருவறை
[
[8/30, 21:39] G Venkataraman: கருவறை
[
[8/30, 22:45] sankara subramaiam: கருவறை
****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 31-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஒரு பறவை வதங்கி உள்ளே பானம் பருகிய மயக்கம் (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************* 
*இன்றைய உதிரிவெடி!*( 31-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*வானம்பாடி*
இந்தப் பறவையை சம்ஸ்கிருத இலக்கியங்கள்
*சாதக பட்சி* (Jacobin cuckoo) என்றும் தமிழ் இலக்கியங்கள்
*‘’துளி நசைப் புள்’’* என்றும் வருணிக்கும்.
********************
ஆங்கிலப் புலவர் *பி.பி.ஷெல்லி* (P.B Shelley), _வானம்பாடி_ பற்றிப் பாடிய *(Skylark-ஸ்கைலார்க்)* பாடல் மிகவும் புகழ்பெற்றது. _வானம்பாடி_ சிறகடித்து மகிழ்ச்சியாகப் பறப்பதைப் பாடும் அவர் அந்த மகிழ்ச்சியின் ரகசியத்தைத் தனக்கும் தர வேண்டுகிறார்!
********************
_வானம்பாடிகள்_ பெரும்பாலான பறவைகளைக்காட்டிலும் விரிவான சத்தங்களை எழுப்புகின்றன. இதன் காரணமாக இவை இலக்கியங்களிலும், இசையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
********************
_ஒரு பறவை வதங்கி உள்ளே பானம் பருகிய மயக்கம் (5)_

_வதங்கி_ = *வாடி*

_உள்ளே பானம்_
= _indicates to place *பானம்* inside *வாடி*_
= *வா(பானம்)டி*

_பருகிய மயக்கம்_
= _anagram indicator for_ *வா(பானம்)டி*
= *வானம்பாடி*

= _ஒரு பறவை_
*************************
_*வானம்பாடி பாடினால் வான்மழை பொழியும்*_

வானம்பாடிப் பறவை, பாடும் என்று அறிந்திருக்கிறோம். அது பாடினால், மழை வரும் என்ற செய்தி நிறைய பேர் அறியாதது. ஆனால், பழந்தமிழ்ப் பாடல்கள் பல, அது பற்றி பேசுகின்றன.

_'வானம் பாடி வறங்களைந் தானா_ 
_தளிதுளி தலைஇய புறவிற் காண்வர_ 
_வானர மகளோ நீயே'_

என்பது, *ஐங்குறுநூறு* பாடல் (418) வரிகள்.

'மழை வறண்ட காலத்தில், வானம்பாடி பறவை, மேகத்து நீர்த்துளியை நினைத்துப் பாடும். மழையும் பெய்யும். அதனால் அனைத்து உயிர்களின் துன்பமும் நீங்கும்' என்பதே இதன் பொருள்.
'வறங்களை' என்பது வறட்சியைக் குறிக்கும். தளித்துளி : 'நீர்த்துளி'.
🌹🌺🌹🌺🌹🌺🌹🌺
_'துளிநசைப் புள்ளின்நின்_ _அளிநசைக்கு இரங்கி, நின்_
_அடிநிழல் பழகிய வடியுறை'_
என்பது *புறநானூற்று* வரிகள் (198)

'மழைத் துளியை விரும்பி உண்ணும் வானம்பாடி பறவையைப் போல், உன் கொடைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் உன் கால் நிழலில் வாழ வேண்டும்' என்பதே இதன் கருத்து. (துளிநசை - மழைத்துளியை விரும்பும்: புள் - பறவை)
🌹🌺🌹🌺🌹🌺🌹🌺
_துளி நசை வேட்கையான்_ _மிசைபாடும் புள்ளிற்றன்'_
என்பது *கலித்தொகை* வரி.
'மழைக்காகவே வானத்தின் உச்சிக்குச் சென்று பாடும் இயல்புடையது, வானம்பாடிப் பறவை' என்பது இதன் கருத்து.
🌹🌺🌹🌺🌹🌺🌹🌺
வானம் மழை பொழியும் வண்ணம், வானம்பாடிப் பறவை மிக உயரத்தில் பறந்து பாடித் தேம்பி நிற்கும். அதன் காரணமாக மழை பெய்யும் என்பதை,
' _தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப்_ _புயல்மாறி, வான் பொய்ப்பினும்'_ என்கிறது, *பட்டினப்பாலை* வரிகள்.

இது போலவே, இன்னும் பல பாடல்கள், வானம்பாடி பாடினால், மழை பெய்யும் என்பதைக் கூறுகின்றன. பார்க்கச் சிட்டுக்குருவி போலவே இருக்கும் பறவை தான் வானம்பாடி.

( *தினமலர்* )
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/31, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வானம்பாடி

[8/31, 07:01] prasath venugopal: வானம்பாடி

[8/31, 07:01] stat senthil: வானம்பாடி

[8/31, 07:06] Meenakshi: விடை:வானம்பாடி

[8/31, 07:10] மாலதி: வானம்பாடி
[
[8/31, 07:13] மீ.கண்ணண்.: வானம்பாடி

[8/31, 07:13] *G Venkataraman* *வானம்பாடி* *( வாடி = வதங்கி + உள்ளே பானம்)*
[
[8/31, 07:15] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏வானம்பாடி🙏

[8/31, 07:18] *பாலூ மீ.:* *வாடி+னம் வானம்பாடி*

[8/31, 07:26] A Balasubramanian: வானம்பாடி
A.Balasubramanian
[
[8/31, 07:30] ஆர்.பத்மா: வானம்பாடி

[8/31, 07:41] sridharan: வானம்பாடி
[
[8/31, 08:18] joseph amirtharaj: வானம்பாடி

****************************.
Raghavan MK said…
[8/31, 08:31] Dhayanandan: *வானம்பாடி*

[8/31, 09:18] ஆர். நாராயணன்.: வானம்பாடி
[
[8/31, 10:06] கு.கனகசபாபதி, மும்பை: வானம்பாடி
[
[8/31, 10:45] Bhanu Sridhar: வானம்பாடி
[
[8/31, 11:40] Viji - Kovai: வானம்பாடி
[
[8/31, 12:15] வானதி: *வானம்பாடி*
[
[8/31, 19:04] nagarajan: *வானம்பாடி*

[8/31, 19:20] sathish: வானம்பாடி
[
[8/31, 19:30] Ramki Krishnan: வானம்பாடி
[
[8/31, 19:35] Revathi Natraj: வானம்பாடி

[8/31, 19:51] siddhan subramanian: வானம்பாடி

****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 01-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
சமமானது சேர்த்துவிடு (2)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
*************************
_சமமானது சேர்த்துவிடு (2)_

_சமமானது_
= *இணை* (யானது)

_சேர்த்துவிடு_
= *இணை*
*************************
_இரட்டுற மொழிதல்_

ஒரு சொல்லையோ அல்லது தொடரையோ இரு பொருள் படுமாறு அமைப்பது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதற்கு சிலேடை அணி என்ற பெயரும் உண்டு.

_*ஆழிக்கு இணை*_
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்_

_மெத்த வணிகலமும் மேவலால் நித்தம்_ 

_அணை கிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு_

_இணை கிடந்ததே தமிழ் ஈண்டு._

சிலேடை:

*முத்தமிழ் துய்ப்பதால்* 
மூன்று+தமிழ்=முத்தமிழ்
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
என்று முத்தமிழாக வளர்ந்தது தமிழ் மொழி

முத்து+அமிழ்=முத்தமிழ்
முத்தினையும்
அமிழ்தினையும்
கடல் நமக்கு தருகிறது

*முச்சங்கம் கண்டதால்*
முச்சங்கம்
=மூன்று+சங்கம்
முதற்சங்கம் 
இடைச்சங்கம் 
கடைச்சங்கம் 
ஆகிய மூன்று சங்கங்கள் கூடி தமிழை வளர்த்தன.

மூன்று+சங்கு+அம்
=முச்சங்கம்
அழகிய 
வெண்சங்கு,
சலஞ்சலம்,
பாஞ்சசன்யம் 
ஆகிய மூன்று வகையான சங்குகளை கடல் தருகிறது

*மெத்த வணிகலமும் மேவலால்_*

மெத்த – மிகுதியான
வணிகலமும்- வணிக கப்பல்களும்
மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் படி கடல் இருக்கிறது

மெத்த+அணிகலமும்
ஐம்பெருங்காப்பியங்களை
அணிகலன்களாக பெற்றது தமிழ்.

*நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்க*

_தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்தி காக்கிறது, கடல்._

_சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது, தமிழ்._

*ஆழிக்கு இணை கிடந்ததே தமிழ்*

ஈண்டு – உணரத்தக்கது.
துய்ப்பது= கற்பது, தருவது
மேவலால்= பொருந்துதலால், பெறுதலால்

-சந்தக்கவிமணி தமிழழகனார்
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/1, 07:00] திரைக்கதம்பம் Ramarao: இணை

[9/1, 07:00] A Balasubramanian: இணை
A.Balasubramanian
[
[9/1, 07:02] stat senthil: இணை
[
[9/1, 07:03] V N Krishnan.: இணை. சேர்த்து விடு. சமமானது

[9/1, 07:05] மீ.கண்ணண்.: இணை
[
[9/1, 07:06] Meenakshi: விடை:இணை
[
[9/1, 07:07] sathish: இணை
[
[9/1, 07:08] பாலூ மீ.: இணை.

[9/1, 07:14] Dr. Ramakrishna Easwaran: இணை

[9/1, 07:15] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏இணை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/1, 07:17] Rohini Ramachandran: இணை

[9/1, 07:25] A D வேதாந்தம்: விடை= இணை( வேதாந்தம்)

[9/1, 07:26] nagarajan: *இணை*

[9/1, 07:28] sridharan: இணை
[
[9/1, 07:46] prasath venugopal: இணை
[
[9/1, 07:49] ஆர். நாராயணன்.: இணை

[9/1, 08:03] chithanandam: இணை

[9/1, 08:06] மாலதி: இணை

[9/1, 08:31] akila sridharan: இணை

[9/1, 08:30] Viji - Kovai: இணை

[9/1, 08:31] akila sridharan: இணை

[9/1, 08:47] Venkat: இணை 🙏🏾

[9/1, 08:48] siddhan subramanian: இணை
[
[9/1, 09:33] ஆர்.பத்மா: இணை
[
[9/1, 11:01] joseph amirtharaj: இணை
[
[9/1, 11:05] G Venkataraman: இணை
[
[9/1, 12:17] sankara subramaiam: இணை

[9/1, 12:24] shanthi narayanan: இணை
[
[9/1, 13:04] கு.கனகசபாபதி, மும்பை: இணை

[9/1, 14:41] வானதி: *இணை*
[
[9/1, 19:45] Ramki Krishnan: இணை

[9/1, 21:46] Revathi Natraj: இணை

****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 02-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
இம்மிருகத்தின் மிகச் சிறிய அளவு (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
*************************
*இம்மி*
= மிகச் சிறிய அளவு 
= the smallest fraction (= the 1,075, 200th part of a unit)

*இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி.* அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை யுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.

(உன்னால் ஒரு இம்மி கூட அசைக்கமுடியாது )
*************************
தமிழர்கள் பேச்சு வழ்க்கில் பயன்படுத்தும் மிகச் சிறிய அளவு இம்மி. ஒரு இம்மி கூடப் பிசகவில்லை என்று கூறுவார்கள். இது பற்றி 1968 உலகத் தமிழ் மாநாட்டு மலரில் *ஸ்தபதி கணபதி* எழுதியது இதோ:

8 அணு= ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள்= ஒரு இம்மி
8 இம்மி= ஒரு எள்ளு
8 எள்= ஒரு நெல்
8 நெல்= ஒரு பெரு விரல்
*************************
*இம்மிருகத்தின் மிகச் சிறிய அளவு (3)*

_Hidden answer in இம்மிருகத்தின்_
= _இம்மி(ருகத்தின்)_
= *இம்மி*
= _மிகச் சிறிய அளவு_
*************************
*இம்மி அரிசித் துணையானும்*

*நாலடியார் 94*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_*இம்மி* அரிசித் துணையானும் வைகலும்_

_நும்மில் இயைவ கொடுத்துண்மின் - நும்மைக்_

_கொடாஅதவர் என்பர் குண்டுநீர் வையத்_

_தடாஅ அடுப்பி னவர்.   94_

*பொருள்*
ஆழமான நீராகிய கடலால் சூழப்பட்ட உலகில் 
சமைக்க அரிசி இல்லாத அடுப்பினை உடையவர்களும் வாழ்கின்றனர்.
அவர்கள் உம்மைக் ’கொடாதவர்’ எனப் பட்டம் சூட்டிப் பழிக்காமல் 
இருக்க வேண்டும்.
எனவே
*இம்மி அளவு* அரிசியாயினும் உம்மால் முடிந்த அளவு 
நாள்தோறும் அவர்கள் சமைத்துண்ணக் கொடுத்து உதவுங்கள். 
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/2, 07:06] nagarajan: *இம்மி*

[9/2, 07:06] மீ.கண்ணண்.: இம்மி
[
[9/2, 07:08] A Balasubramanian: இம்மி
A.Balasubramanian

[9/2, 07:09] திரைக்கதம்பம் Ramarao: இம்மி

[9/2, 07:09] Meenakshi: விடை:இம்மி
[
[9/2, 07:10] stat senthil: *இம்மி*
[
[9/2, 07:10] பாலூ மீ.: இம்மி.

[9/2, 07:13] prasath venugopal: இம்மி
[
[9/2, 07:14] பானுமதி: இம்மி

[9/2, 07:23] sridharan: இம்மி

[9/2, 07:37] chithanandam: இம்மி

[9/2, 07:42] மாலதி: இம்மி

[9/2, 07:43] akila sridharan: இம்மி

[9/2, 07:57] Ramki Krishnan: இம்மி

[9/2, 08:05] joseph amirtharaj: இம்மி

[9/2, 08:05] Dr. Ramakrishna Easwaran: இம்மி
[
[9/2, 08:07] Bhanu Sridhar: இம்மி

[9/2, 08:14] sankara subramaiam: இம்மி

[9/2, 08:20] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏இம்மி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/2, 08:31] ஆர்.பத்மா: இம்மி

[9/2, 08:34] Dhayanandan: *இம்மி*

[9/2, 08:36] G Venkataraman: இம்மி

[9/2, 08:38] ஆர். நாராயணன்.: இம்மி
[
[9/2, 08:41] Bharathi: *இம்மி*

[9/2, 08:43] Usha Chennai: இம்மி

[9/2, 10:35] shanthi narayanan: இம்மி

[9/2, 11:48] *balagopal:* *இம்மி*

[9/2, 12:10] வானதி: *இம்மி*

[9/2, 13:51] Viji - Kovai: இம்மி

[9/2, 17:57] கு.கனகசபாபதி, மும்பை: இம்மி

[9/2, 19:32] ஆர். நாராயணன்.: இம்மி

[9/2, 20:54] Revathi Natraj: இம்மி

****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 03-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

*திருகாணி நடுவில் கழன்றுபோக அடை (2)*

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*காதில் அணியும் ‘கம்மல் திருகாணி’, கால் ‘கொழுசு திருகாணி’ லூசா இருக்கா?*

கொலுசு அணியாத பெண்களும், பெண் குழந்தைகளும் கட்டாயம் இருக்க முடியாது. கொலுசு திருகாணி அடிக்கடி லூசாகி மேலே எழும்பி விடுவதை பார்த்திருப்போம். இதற்கும் சுலபமான வழி ஒன்று உள்ளது. அதை செய்து திருகி விட்டால் போதும். இது போல் கம்மல் திருகாணி, கொழுசு திருகாணி கழண்டு விழாமல் இறுக்கமாகவே இருக்க என்ன செய்யலாம்?  

திருகாணி மாட்டும் பொழுது ஒரு பல் பூண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தோலுரித்துக் கொள்ளுங்கள். அந்த பூண்டு பல்லில் திருகாணியை சொருகி விடுங்கள். பூண்டில் இருக்கும் சாறு திருகாணியில் பதிய வேண்டும். பூண்டை ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காதில் கம்மலை மாட்டி மாட்டி விட்டு உடனே திருகாணியை போட்டு திருகி விட வேண்டும். அவ்வளவுதாங்க! ஆறு மாதத்திற்கு திருகாணி லூசாக செய்யாது.
***********************
_திருகாணி நடுவில் கழன்றுபோக அடை (2)_

_திருகாணி நடுவில் கழன்றுபோக_
= _To delete middle letters in திருகாணி_
= *தி[ருகா]ணி*
= *திணி*

_அடை_
= *திணி*
*************************
இதையும் விட ஆயுதம் இல்லாமல் திருகாணியை கழட்டவே முடியாத அளவிற்கு செய்யலாம். உங்களிடம் இருக்கும் நெயில் பாலிஷ் எடுத்துக் கொள்ளுங்கள். அதை கம்மல் திருகாணியில் லேசாக தடவி விட்டு, நெயில் பாலிஷ் காயும் முன்பு மாட்டி விட வேண்டும்.

இதே போல் தான் கால் கொலுசு திருகாணி கழண்டு விழும் பொழுது நெயில் பாலிஷ் தடவி விட்டு காயும் முன்பே மாட்டி விட்டால் போதும். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடினாலும் காலில் இருந்த கொலுசு கழண்டு விழாது பாதுகாப்பாக இருக்கும். நெயில் பாலிஷ் பயன்படுத்தும் பொழுது நாமே நினைத்தாலும் திருகாணியை சுலபமாக கழட்டிவிட முடியாது. கட்டிங் பிளேடு பயன்படுத்தி தான் திருகி எடுக்க வேண்டும். இந்த வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் ஃபாலோ செய்தால் போதும்!! கம்மல் மற்றும் கொலுசு போன்ற நகைகள் எப்பொழுதும் தொலைந்து போகாமல், பொருள் விரயம் ஆகாமல் உங்களிடம் பாதுகாப்பாக இருக்கும்.
(dheivegam.com)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/3, 07:00] திரைக்கதம்பம் Ramarao: திணி

[9/3, 07:00] nagarajan: *திணி*

[9/3, 07:01] A Balasubramanian: திணி
A.Balasubramanian

[9/3, 07:01] stat senthil: திணி
[
[9/3, 07:01] akila sridharan: அடை

[9/3, 07:02] ஆர். நாராயணன்.: திணி
[
[9/3, 07:02] மீ.கண்ணண்.: திணி

[9/3, 07:02] V N Krishnan.: திணி
[
[9/3, 07:04] மாலதி: திணி

[9/3, 07:05] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏திணி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[9/3, 07:06] Meenakshi: விடை:திணி

[9/3, 07:06] பாலூ மீ.: திணி.

[9/3, 07:07] chithanandam: திணி

[9/3, 07:09] joseph amirtharaj: திணி

[9/3, 07:10] Venkat: திணி 🙏🏾

[9/3, 07:14] ஆர்.பத்மா: திணி

[9/3, 07:17] sridharan: திணி

[9/3, 07:23] Rohini Ramachandran: திணி
[
[9/3, 07:34] A D வேதாந்தம்: விடை= திணி(வேதாந்தம்)

9/3, 07:34] Dr. Ramakrishna Easwaran: *திணி*

:திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

இங்கு *திணி* என்பதன் பொருள் *கடினமான*

திணி ஆன மனோ சிலை மீது ... மிகவும் கடினமான
மனமாகிய கல்லின் மீது,

*கந்தர் அநுபூதி*

[9/3, 07:47] Bhanu Sridhar: திணி

[9/3, 07:56] prasath venugopal: திணி

[9/3, 08:15] shanthi narayanan: திணி

[9/3, 08:22] Ramki Krishnan: திணி

[9/3, 08:30] siddhan subramanian: திணி
[
[9/3, 08:33] Bharathi: திணி

[9/3, 09:16] Dhayanandan: *திணி*

[9/3, 09:29] G Venkataraman: திணி

[9/3, 10:08] N T Nathan: திணி

[9/3, 11:29] வானதி: *திணி*

[9/3, 11:50] sankara subramaiam: திணி

[9/3, 13:56] Viji - Kovai: திணி

[9/3, 14:34] Usha Chennai: திணி

[9/3, 19:39] V R Raman: திணி

[9/3, 19:40] sathish: திணி

[9/3, 20:30] Revathi Natraj: அணி
[
[9/3, 20:43] கு.கனகசபாபதி, மும்பை: திணி

****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 04-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
உபரியான ஆதரவற்றவள் ஓடியதும் அஞ்சி பயமிலை குழப்புகிறாள் (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 04-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
நந்த பாலா என் மணாளா
இங்கு வாராய் கிரிதாரி
முரளி மோகனா
ஹே முரளி மோகனா
மோகனா
ஹே முரளி மோகனா
கருணாலய  சுந்தரா

*அபலை* என்னையே
அறியாப் பருவந்தன்னில்
அடிமை நீ கொண்டதை
அன்றே மறந்தாயோ
அடிமை நீ கொண்டதை
அன்றே மறந்தாயோ
உன்னையல்லால்
இன்பம் உண்டோ

கிரிதாரி நந்தபாலா
உன்னையல்லால்
இன்பம் உண்டோ
கிரிதாரிஅபலை *அபலை* from *அஞ்சி பயமிலை*_
= [அ]ஞ்சி [ப]யமி[லை]
= *ஞ்சியமி*

_குழப்புகிறாள்_
= _Anagram indicator for ஞ்சியமி_
= *மிஞ்சிய*
= _அபலை_
*************************
*பழமொழிகள்*
****
_அளவுக்கு மி்ஞ்சினால் அமுதமும் நஞ்சு_
****
*சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.* *சுப்பிரமணியரக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.*
*************************
_*கயல்விழியை மிஞ்சிய கவிதை*_

அவளை காணும் வரை..? கயல்விழியை மிஞ்சிய கவிதைகளை..!
இதுவரை நான் கண்டதும் இல்லை..
*************************
வானவில்லை மிஞ்சிய
வண்ணங்களோடு
அவள்
கன்னங்கள்
பிரகாசிப்பதைக்கண்டு
வியந்துபோனேன்!

பிறகுதான்
தெரிந்தது

இவ்வுலகிற்கு
அறிமுகமில்லாத
ஓர்
வானவில்லை
தன்னுள்
வரை(சும)ந்து
கொண்டிருக்கிறாள்!

வானவில்_கர்ப்பிணி
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/4, 07:02] A Balasubramanian: மிஞ்சிய
A.Balasubramanian
[
[9/4, 07:02] திரைக்கதம்பம் Ramarao: மிஞ்சிய

[9/4, 07:02] nagarajan: *மிஞ்சிய*

[9/4, 07:03] மீ.கண்ணண்.: மிஞ்சிய

[9/4, 07:03] Rohini Ramachandran: மிஞ்சிய

[9/4, 07:04] Bhanu Sridhar: மிஞ்சிய

[9/4, 07:09] ஆர். நாராயணன்.: மிஞ்சிய

[9/4, 07:10] Meenakshi: விடை:மிஞ்சிய

[9/4, 07:13] பாலூ மீ.: மிஞ்சிய

[9/4, 07:13] chithanandam: மிஞ்சிய
[
[9/4, 07:34] G Venkataraman: மிஞ்சிய

[9/4, 07:35] மாலதி: மிஞ்சிய

[9/4, 07:37] sridharan: மிஞ்சிய.
அஞ்சி பயமிலை- அபலை

[9/4, 07:59] Ramki Krishnan: மிஞ்சிய

[9/4, 08:00] ஆர்.பத்மா: மிஞ்சிய
[
[9/4, 08:00] Venkat: அபலை 🙏🏾

[9/4, 08:16] கு.கனகசபாபதி, மும்பை: மிஞ்சிய

[9/4, 08:17] akila sridharan: மிஞ்சிய
[
[9/4, 08:35] prasath venugopal: மிஞ்சிய

[9/4, 09:58] Dhayanandan: *மிஞ்சிய*

[9/4, 11:10] joseph amirtharaj: மிஞ்சிய
[
[9/4, 11:50] shanthi narayanan: மிஞ்சிய

[9/4, 15:52] வானதி: *மிஞ்சிய*

[9/4, 20:04] Revathi Natraj: மிஞ்சிய

****************************.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்