Skip to main content

விடை 4090


இன்று காலை வெளியான வெடி:
ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3)
அதற்கான விடை:
ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு
மெதுவாகத் தொடங்கி =மெ
மெழுகு = மெ  + குழு

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3)


ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் = குழு

கலையும்
= "குழு" கலைந்து "ழுகு "ஆனது

முன்பே மெதுவாக
= முதலெழுத்து in மெதுவாக
= மெ
தொடங்கி
=indicator to start with மெ

பூசு = மெ+ழுகு
= மெழுகு
**************************
மெழுகுதல்
பொருள்
பெயர்ச்சொல்.

தரையைச் சாணமிட்டுச் சுத்தி செய்தல்
பூசுதல்
மெழுகு = பூசு --> வினைச்சொல்
**************************
பூசி மெழுகுதல்

தமிழ்இலக்கணம்

மரபுத்தொடர்கள்
எப்பொருளை எந்தச் சொல்லால் நம் முன்னோர்கள் எவ்வாறு வழங்கி வந்தனரோ அச்சொல்லாலேயே நாமும் வழங்குவது மரபு.
அவ்வாறில்லாமல், நாம் பேச்சு வழக்கில் அவைகளைக் குறிப்பிடுவது மரபு வழு.

பூசி மெழுகுதல் ஒர் மரபுத் தொடர் ஆகும்.

சில மரபுத் தொடர்கள்:
ஆழம் பார்த்தல் - மனநிலை அறிதல்
ஆறப்போடுதல் - நீட்டித்தல்
ஒருகைபார்த்தல் - சண்டைக்குப் போதல்
ஒருகாலில் நிற்றல் - தீவிரம் காட்டுதல்
கம்பி நீட்டுதல் - ஓடிப்போதல்
கடை கட்டுதல் - செயலை நிறுத்துதல்
குட்டு உடைதல் - உண்மை வெளிப்படுதல்
கயிறு திரித்தல் - பொய்சொல்லிப் பரப்புதல்
காது குத்துதல் - ஏமாற்றுதல்
கடுக்காய் கொடுத்தல் - ஏமாற்றுதல்
சாயம் வெளுத்தல் - உண்மை வெளிப்படுதல்
பூசி மெழுகுதல் - மறைத்தல்
வாய்ப்பூட்டு - பேசக்கூடாது என தடை விதித்தல்
வாலாட்டுதல் - மீறி நடத்தல்
வெட்ட வெளிச்சம் - எல்லோருக்கும் தெரிதல்
முகத்தில் கரி - தாழ்வு/ இழிவுபடுதல்
முழுக்குப் போடுதல் - கை விடுதல்.
**************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 08-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************

தேவையான ஒரு கனி போனது வேறுவிதமாய் (4)

**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 08-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
_சினம்_

அக்னிப்பிழம்பில் அழகு பள்ளத்தாக்கின் அடியில் கிடக்கும் இருபெரும் விண்கற்கள் தான் உன் *போதுமான* கோபம்…

( Prakash Chakkaravarthy)
**************
_தேவையான ஒரு கனி போனது வேறுவிதமாய் (4)_

_ஒரு கனி_ = *மா*

_வேறுவிதமாய்_
= anagram indicator for *(போனது +மா)*
= *போதுமான*

= _தேவையான_
**************
எட்டாத *கனி* அது காதல் என்று 

சிலர் பறிக்க முயற்சி செய்கிறார்கள் 

எட்ட முடியவில்லை ஆதலால் 

சிலருக்குப் புளித்து விடுகிறது!


எட்டிப் பிடித்ததாய் உணர்ந்தவன் 

முழுவதும் ருசிக்கும் முன் 

தவறான முடிவெடுத்து விடுகிறான் 

இதற்கா ஆசைப் பட்டோம் என்கிறான்!


எட்டிப் பிடிக்கவும் முடியவில்லை 

எட்டிப் பிடிக்காமல் இருக்கவும் முடியவில்லை 

இரண்டிற்கும் இடைப்பட்ட சம நிலை 

தினமும் ருசிக்கிறான் காதல் கனியை !

(nellaibaskar)
**************
விடையளித்தோர் பட்டியல்
**************
[6/8, 07:04] Ramarao : போதுமான

[6/8, 07:04] ஆர். நாராயணன்.: போதுமான

[6/8, 07:07] chithanandam: போதுமான

[6/8, 07:16] மீ.கண்ணண்.: போதுமான

[6/8, 07:33] prasath venugopal: போதுமான

[6/8, 07:39] பாலூ மீ.: போனது +மா = போதுமான

[6/8, 07:47] nagarajan: போதுமான

[6/8, 08:02] Meenkshi: விடை:போதுமான

[6/8, 08:04] N T Nathan: போதுமான

[6/8, 08:23] கு.கனகசபாபதி, மும்பை: போதுமான
மா+போனது

[6/8, 14:05] Ramki Krishnan: POtthumaana

[6/8, 14:17] Rajalakshmi Krishnan: Podhumaana

[6/8, 17:16] sankara subramaiam: போதுமான

[6/8, 17:35] siddhan submn: போதுமான
********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 09-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
பக்காத் திருடன் மாட்டிக்கொள்வானென்று எதிர்பார் (4)

**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 09-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா
**********************
_பக்காத் திருடன் மாட்டிக்கொள்வானென்று எதிர்பார் (4)_

_பக்காத் திருடன் மாட்டிக்கொள்வானென்று_
= _விடை *பக்காத் திருடன்* உள்ளே மாட்டிக்கொண்டுள்ளது_
= _பக்[ *காத் திரு* ]டன்_
= *காத்திரு*
= _எதிர்பார்_
**************
*_முடிந்தால் காத்திரு!_*

நீயில்லாத நேரங்களில்
நான் எங்கு செல்கிறேன்?
நாமிருந்த நேரங்களின்
பக்கம் செல்கிறேன்!

நீ பார்க்காத நேரங்களில்
நான் என்ன செய்கிறேன்?
நாம் பார்க்காத நேரங்களை
சுத்தம் செய்கிறேன்!

நீ வருவாய்,
நான் வருவேன்,
மறுபடி மறுபடி!

நீ எனைத்தேடி வருவாய்
நான் உனைத்தேடி வருவேன்…
ஆனால்,

வேண்டாம், விளைவுகள் பயங்கரம்
என்று அடம்பிடித்தாலும்
எச்சரித்தாலும்,

அண்டம் விழுங்கும் ஆசை கொண்டு,
நம்மை நாமாகவே நேசிக்கும்
இந்த நொடி மறுபடி வராது!

அதனால்தான் சொல்கிறேன்…
கொஞ்சம் நேரம் கொடு.

தலை தட்டும் திமிரை
தசை திங்கும் குழப்பத்தை
கொன்று கொளுத்திவிட்டு வருகிறேன்!

காத்திரு!
முடிந்தால் காத்திரு
மறுமுறை சொல்கிறேன்…
முடிந்தால் காத்திரு!

இந்த நொடியை
பத்திரப்படுத்தி வை!
கொள்ளை ஆசையை
மொத்தம் அடுக்கி வை!

உந்தன் காதலை
சற்றே அடக்கி வை!
நான் வரும் வரை
காத்திரு.

நான் வருவேன்
காத்திரு!
முடிந்தால் காத்திரு

(ஊசிமிளகாயின் கவிதை)
********************
*காத்திருக்காமல் விடையளித்தோர்!*

[6/9, 07:00] Ramarao : காத்திரு

[6/9, 07:01] மீ.கண்ணண்.: காத்திரு

[6/9, 07:01] balakrishnan: Kaathiru🤣🙏🏻

[6/9, 07:02] prasath venugopal: காத்திரு

[6/9, 07:02] V N Krishnan.: காத்திரு

[6/9, 07:02] N T Nathan: காத்திரு

[6/9, 07:08] உஷா, கோவை: காத்திரு

[6/9, 07:09] Venkat UV: காத்திரு 🙏🏽

[6/9, 07:10] Ramki Krishnan: Kaaththiru

[6/9, 07:12] sankara subramaiam: காத்திரு

[6/9, 07:14] Viji - Kovai: 9.6.2020 விடை
காத்திரு
பக்காத் திருடன்
காத்+திரு
எதிர்பார்=காத்திரு

[6/9, 07:16] sathish: காத்திரு

[6/9, 07:17] Meenkshi: விடை:காத்திரு
பக் *காத்திரு*) டன்

[6/9, 07:24] பாலூ மீ.:
பக் (காத்திரு) டன்

[6/9, 07:28] nagarajan: காத்திரு

[6/9, 07:45] கு.கனகசபாபதி, மும்பை: காத்திரு

[6/9, 08:04] ஆர். நாராயணன்.: காத்திரு

[6/9, 08:05] stat senthil: காத்திரு

[6/9, 08:10] Dr. Ramakrishna Easwaran: காத்திரு
Telescopic clue

[6/9, 08:27] akila sridharan: காத்திரு

[6/9, 08:58] siddhan submn: காத்திரு

[6/9, 10:34] chithanandam: காத்திரு.
[
[6/9, 11:04] sridharan: காத்திரு

[6/9, 12:25] Rajalakshmi Krishnan: Kaaththiru

[6/9, 16:04] balagopal: தென்றல்.
புதிரிலேயே விடையுள்ளது. காத்திரு.🙏




[6/9, 07:00] Ramarao : காத்திரு

[6/9, 07:01] மீ.கண்ணண்.: காத்திரு

[6/9, 07:01] balakrishnan: Kaathiru🤣🙏🏻

[6/9, 07:02] prasath venugopal: காத்திரு

[6/9, 07:02] V N Krishnan.: காத்திரு

[6/9, 07:02] N T Nathan: காத்திரு

[6/9, 07:08] உஷா, கோவை: காத்திரு

[6/9, 07:09] Venkat UV: காத்திரு 🙏🏽

[6/9, 07:10] Ramki Krishnan: Kaaththiru

[6/9, 07:12] sankara subramaiam: காத்திரு

[6/9, 07:14] Viji - Kovai: 9.6.2020 விடை
காத்திரு
பக்காத் திருடன்
காத்+திரு
எதிர்பார்=காத்திரு

[6/9, 07:16] sathish: காத்திரு

[6/9, 07:17] Meenkshi: விடை:காத்திரு
பக் *காத்திரு*) டன்

[6/9, 07:24] பாலூ மீ.:
பக் (காத்திரு) டன்

[6/9, 07:28] nagarajan: காத்திரு

[6/9, 07:45] கு.கனகசபாபதி, மும்பை: காத்திரு

[6/9, 08:04] ஆர். நாராயணன்.: காத்திரு

[6/9, 08:05] stat senthil: காத்திரு

[6/9, 08:10] Dr. Ramakrishna Easwaran: காத்திரு
Telescopic clue

[6/9, 08:27] akila sridharan: காத்திரு

[6/9, 08:58] siddhan submn: காத்திரு

[6/9, 10:34] chithanandam: காத்திரு.
[
[6/9, 11:04] sridharan: காத்திரு

[6/9, 12:25] Rajalakshmi Krishnan: Kaaththiru

[6/9, 16:04] balagopal: தென்றல்.
புதிரிலேயே விடையுள்ளது. காத்திரு.🙏
************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 10-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
மனமுருகி இளக இறுதியாக ஓர் ஆறு சங்கமித்தது (4)

**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 10-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
_நமச்சிவாயத் திருப்பதிகம்_

_காதலாகிக் *கசிந்து* கண்ணீர் மல்கி_

என்று பதிவிட நினைத்தேன். ஆனால்
*Dr.RKE* ., தன் விடையுடன் இப்பாடலை பதிவிட்டுள்ளார்.
அப்பாடலின் விளக்கம் இதொ! ..

*விளக்கம்:*
 உள்ளன்பு கொண்டு மனம் *கசிந்து* கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும்.
🙏🏼
**********************
_மனமுருகி இளக இறுதியாக ஓர் ஆறு சங்கமித்தது (4)_

_இளக இறுதியாக_
= _இறுதி எழுத்து in இள( *க* )_
= *க*
_ஓர் ஆறு_ = *சிந்து*

_சங்கமித்தது_
= anagram indicator for *க+சிந்து*
= *கசிந்து*
= _மனமுருகி_
**********************
*புறநானூறு - 19.* _எழுவரை வென்ற ஒருவன்!_

பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

_நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,_
_எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்_
_எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;_
_இன்ன விறலும் உளகொல், நமக்கு?என,_
_மூதில் பெண்டிர் *கசிந்து* அழ, நாணிக்__

_கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,_
_எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்_
_கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?_

*பொருளுரை:* 
கலப்பையைப் போல நிலத்தின் மீது கிடந்து புரள வெட்டிப் 
போர்க் களத்தில் வீழ்த்த ஏந்திய வாள் வெற்றியை உடையோராய் எம் தலைவனோடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்கள். 

இப்படிப்பட்ட வெற்றியும் உண்டோ நமக்கு என்று சொல்லி
_மறக்குடிப் பெண்டிர் இன்புற்று *உவகையால் அழ,*_ 
அது கண்டு நாணி கூற்றம் இரங்கிய அஞ்சத்தக்க போர்க்களத்தில் இரு பெரு வேந்தரும், ஐம்பெரும் வேளிருமாகிய வலிமையான *எழுவரையும் வென்றவனே!* 

பெரும் புலியைப் பிடிக்கும் வேடன், பாறைகள் செறிந்த குன்றுகளில் முழைகள் (குகைகள்) இருக்குமிடம் அறிந்து,
 அவற்றின் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி புலிகளை அதனுள் புகுவித்து, அவைகளைப் பிடிக்கும் பொறி போன்றது என விருப்பபட்டு, உனது கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த மார்பினைத் தழுவினேன் அல்லவோ நான்! 
**********
இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை
💐🙏🏼💐
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************
[6/10, 07:00] Ramarao : கசிந்து
[6/10, 07:04] Ramki Krishnan: Kasinthu
[6/10, 07:06] chithanandam: கசிந்து
[6/10, 07:09] Suba: Hello sir, கசிந்து
[6/10, 07:14] மீ.கண்ணண்.: கசிந்து
[6/10, 07:17] பாலூ மீ.: கசிந்து.
[6/10, 07:18] sankara subramaiam: கசிந்து
[6/10, 07:24] nagarajan: கசிந்து
[6/10, 07:25] balakrishnan: Kasindhu🤣👌🙏🏻
[6/10, 07:25] ஆர். நாராயணன்.: கசிந்து
[6/10, 07:51] A D வேதாந்தம்: விடை= கசிந்து
[6/10, 08:00] prasath venugopal: கசிந்து
[6/10, 08:02] Meenkshi: விடை: கசிந்து
[6/10, 08:15] akila sridharan: கசிந்து
[6/10, 09:15] siddhan submn: Kasindhu
[6/10, 10:14] Dr. Ramakrishna Easwaran: *கசிந்து*
இளக இறுதியாக= க
ஓர் ஆறு= சிந்து
க+சிந்து = மனமுருகி

திருநல்லூர் பெருமணத்தில் இறைவன் சந்நிதியில் சம்பந்தர் அவரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில் இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் என போற்றப்படும் பாடல்:

_காதலாகிக் *கசிந்து* கண்ணீர் மல்கி_
_ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது_
_வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது_
_நாதன் நாமம் நமச்சிவாயவே._
[6/10, 12:19] Rajalakshmi Krishnan: Kasindhu
[6/10, 10:42] உஷா, கோவை: கசிந்து
*லக்ஷ்மி மணியன் குன்னூர்
[6/10, 12:22] Viji - Kovai: 10.6.2020 விடை
க+சிந்து
கசிந்து
[6/10, 18:26] கு.கனகசபாபதி, மும்பை: கசிந்து
**********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 11-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
நீர் வற்ற, பால் துளி மிஞ்ச, தாளித்த தின்பண்டம் (4)
**************
(இனி காலை 7.00 மணிக்கு புதிர்
பதிவாகும்)
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
(புதிராடுகளத்தில் இனைய post your willingness msg in whatsapp)
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
 
Raghavan MK said…
[6/11, 19:57] M K Raghavan: A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 11-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
*சுண்டல்* என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.
**********************
*_தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்_*

பீச் சுண்டல் என்று அழைக்கப்படும் தேங்காய், மாங்காய் மற்றும் வெள்ளை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சுண்டலை பலரும் கடற்கரை செல்லும் போது சுவைத்திருப்போம். ஆனால் அதை வீட்டில் செய்து சுவைத்ததுண்டா?
**********************
_நீர் வற்ற, பால் துளி மிஞ்ச, தாளித்த தின்பண்டம் (4)_

_நீர் வற்ற_
= _(நீர்)_ *சுண்ட*
= *சுண்ட*

_பால் துளி மிஞ்ச_
= *[பா]ல் = ல்*

_தாளித்த தின்பண்டம்_
= *சுண்ட+ல்*
= *சுண்டல்*
**********************
படித்ததில் பிடித்தவை (சுண்டல் - கவிதை)

*_சுண்டல்_*

_“கொலு வைக்கும் வீடுகளில்_
_ஒரு குத்து சுண்டல்_
_அதிகம் கிடைக்கும் என்று_
_தங்கச்சி பாப்பாக்களை_
_தூக்க முடியாமல் தூக்கி வரும்_
_அக்கா குழந்தைகள்..!”_
                                 (கலாப்ரியா.)
**********************
_கடற்கரையோரம் விலகியபடியே நடக்கும்_
_நம்மிருவருக்கும் உள்ள இடைவெளியில்_
_நசுங்காமல் பயணிக்கிறது_
_காற்றும்.... காதலும்!_

_' அக்கா' என்று உன்னை அழைத்தும்_
_அண்ணன்' என்று என்னை அழைக்காமல்_
_'சார்' என்று சொல்லும் அந்தச் சுண்டல் விற்கும்_
_சிறுவன்_ _உணர்த்துகிறான் நமக்குள் துளிர்த்த காதலை!_

(கு. வைரச்சந்திரன்)
**********************
💐🙏🏼💐
[6/11, 20:56] M K Raghavan: **********************
சுண்டல் சாப்பிட வந்தவர்களை வரவேற்போம்!
**********************

[6/11, 07:00] மீ.கண்ணண்.: சுண்டல்

[6/11, 07:03] Ramarao : சுண்டல்

[6/11, 07:08] ஆர். நாராயணன்.: சுண்டல்

[6/11, 07:09] கு.கனகசபாபதி, மும்பை: சுண்டல்

[6/11, 07:14] A D வேதாந்தம்: விடை= சுண்டல்/ வேதாந்தம்

[6/11, 07:14] balakrishnan: Sundal🤣🙏🏻

[6/11, 07:30] Meenkshi: விடை:சுண்டல்

[6/11, 07:30] prasath venugopal: வற்றல்

[6/11, 07:41] nagarajan: சுண்டல்
.
[6/11, 07:49] பாலூ மீ.: சுண்டல்

[6/11, 09:45] Dr. Ramakrishna Easwaran: சுண்டல்
நீர் வற்ற= சுண்ட
பால் துளி= ல்
சுண்ட+ல் = தாளித்த தின்பண்டம்

[6/11, 09:55] V N Krishnan.: சுண்ட+ல். சுண்டல்

[6/11, 12:27] akila sridharan: வற்றல்

[6/11, 13:13] N T Nathan: வறுவல்

[6/11, 13:31] Suba: hello sir, சுண்டல்

[6/11, 14:51] balagopal: பொரியல்.

[6/11, 18:47] sathish: சுண்டல்
**********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 12-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************

தெளித்த விதை ஓரம் வெட்டி சுத்தமான சூழலில் வைக்கப்படும் (3)

**********************
(இனி காலை 7.00 மணிக்கு புதிர் பதிவாகும்)

உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .

(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
 
Raghavan MK said…
[6/12, 20:47] M K Raghavan: A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 12-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
********************
மணி மாளிகை மாடங்களும்
மலர் *தூவிய* மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை

தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை
-(மோகன் பாபு)
**********************
பூ மழைத் *தூவி* வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது 
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின்
நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது

படம் : நினைத்ததை முடிப்பவன் (1975)
**********************
_தெளித்த விதை ஓரம் வெட்டி சுத்தமான சூழலில் வைக்கப்படும் (3)_

_விதை ஓரம்_
= *வி[தை] = வி*

_சுத்தமான சூழல்_
= *தூய*

_விதை ஓரம் வெட்டி சுத்தமான சூழலில் வைக்கப்படும்_
= *வி* inside *தூய*
= *தூவிய*
= _தெளித்த_
**********************
ஏதோ ஒரு பேச்சு ஏதோ ஒரு நிகழ்வு
எப்படியோ நினைவுபடுத்தி விடுகிறது

இன்னுமொரு நினைவினை  மற்றுமொரு நிகழ்வினை

இந்த சிறுதூறலும் இழுத்து வந்து சேர்க்கிறது
அந்த மழைச்சாரலை

அந்த மரத்தினடியில் நடுங்கியபடி ஒதுங்கியதை
அந்தக் கிளையின் இலைகளசைந்து
அட்சதையாய் பொழிந்து *தூவிய*
இன்னொரு மழையை!

(மதுமிதா)
**********************
💐🙏🏼💐
[6/12, 20:49] M K Raghavan: *மலர் தூவி மகிழ்ந்தவர்கள்*

[6/12, 07:01] Ramarao : தூவிய

[6/12, 07:02] மீ.கண்ணண்.: தூவிய

[6/12, 07:08] balakrishnan: Thooviya
🙏🏻🤣👌

[6/12, 07:12] Suba: Hello sir, தூவிய

[6/12, 07:15] parthasarathyvedantham:
விடை - தூவிய

[6/12, 07:16] A D வேதாந்தம்: விடை= தூவிய

[6/12, 07:31] nagarajan: தூவிய

[6/12, 07:39] Meenkshi: விடை:தூவிய
தூய+வி

[6/12, 08:22] ஆர். நாராயணன்.: தூவிய

[6/12, 09:28] siddhan submn: தூவிய (வி +தூய)

[6/12, 09:33] chithanandam: தூவிய

[6/12, 12:22] Viji - Kovai: 12.6.2020 விடை
தூவிய

[6/12, 13:32] sathish: தூவிய

[6/12, 14:05] shanthi narayanan: தூவிய

[6/12, 18:18] கு.கனகசபாபதி, மும்பை: தூவிய

[6/12, 18:22] sankara subramaiam: தூவிய

[6/12, 19:44] Rajalakshmi Krishnan: Thooviya

*************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 13-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
அவலட்சண காவி மேற்புறமாய் கட்டிய ரமா வதனம் தவமிழந்தது (5)
**********************
(இனி காலை 7.00 மணிக்கு புதிர் பதிவாகும்)

உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .

(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
 
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 13-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
********************
*விகாரம்*
பொருள்

விகாரம் 
1) வேறுபாடு, 
2) மாற்றம் ,3)காமவிகாரம், 
4) பௌத்தாலயம்.
5) அவலட்சணம்
********************
_அவலட்சண காவி மேற்புறமாய் கட்டிய ரமா வதனம் தவமிழந்தது (5)_

_காவி மேற்புறமாய்_
= *காவி* to be read from right to left
= *விகா*

_வதனம் தவமிழந்தது_
= *வதனம்-தவம்*
= *ன*

_கட்டிய_ = indicator for joining *விகா+ரமா+ன*
= *விகாரமான*

= _அவலட்சண_
**********************
*பட்டினத்தார் பாடல்*
கோயில் திரு அகவல்
******
_மாயா *விகாரம்* ; மரணப் பஞ்சரம்;_
_சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;_
_காற்றில் பறக்கும் கானப் பட்டம்;_
_விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;_
_சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;_

பொருள்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்           
=மாயம் செய்யும் மனமாற்றம், சாகும் ஐம்பொறி

சோற்றுத் துருத்தி தூற்றும் பத்தம்  = சோற்றால் ஊதும் துருத்தி, தூற்றும் தீப்பந்தம்

காற்றில் பறக்கும் கானப் பட்டம்    
=மூச்சுக் காற்றில் பறக்கும் காட்டுப் பட்டம்

விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை =விதிவழி எமன் வெட்டும் கட்டை

சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை =  பிரமன் தைத்த சட்டை
**********************
*விடையளித்தோர் பட்டியல்!*
**********************
[6/13, 07:02] Ramarao : விகாரமான

[6/13, 07:02] மீ.கண்ணண்.: விகாரமான

[6/13, 07:03] balakrishnan: Vikaramana🤣🙏🏻

[6/13, 07:07] sankara subramaiam: விகாரமான

[6/13, 07:07] sathish: விகாரமான

[6/13, 07:13] ஆர். நாராயணன்.: விகாரமான

[6/13, 07:15] akila sridharan: விகாரமான

[6/13, 07:15] Ramki Krishnan: Vikaaramaana

[6/13, 07:15] nagarajan: விகாரமான

[6/13, 07:15] chithanandam: விகாரமான

[6/13, 07:16] A D வேதாந்தம்: விடை= விகாரமான/

[6/13, 07:21] பாலூ மீ.: விகாரமான.
[
[6/13, 07:43] Meenkshi: விடை:விகாரமான

[6/13, 07:45] N T Nathan: விகாரமான

[6/13, 08:33] Suba: Hello sir ,விகாரமான

[6/13, 09:26] Dr. Ramakrishna Easwaran: *விகாரமான*
வதனம் minus தவம்= *ன*
காவி மேற்புறமாய் --> *விகா* ( மேற்கு நோக்கிச் செல்லும் -in English crosswords this is clued as "going westward")
(விகா+ *ரமா*+ன) = அவலட்சணமான (definition)

[6/13, 09:23] prasath venugopal: விகாரமான

[6/13, 10:04] கு.கனகசபாபதி, மும்பை: விகாரமான

[6/13, 12:39] Bharathi: விகாரமான
[
[6/13, 12:58] shanthi narayanan: விகாரமான

[6/13, 14:13] Rajalakshmi Krishnan: Vigaaramaana

[6/13, 20:03] Viji - Kovai: 13.6.2020 விடை
விகாரமான
**********************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்