இன்று காலை வெளியான வெடி:
நெல்லின் போர்வையை பித்தளைக்கு பரிமாற்றம் செய்த உயர்ந்த குணத்தினள் (4)
அதற்கான விடை: உத்தமி = உமி + (பி)த்த (ளை)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
************************
_நெல்லின் போர்வையை பித்தளைக்கு பரிமாற்றம் செய்த உயர்ந்த குணத்தினள் (4)_
_நெல்லின் போர்வை_ = *உமி*
_பித்தளையின் போர்வை_
= *பி* [ _த்த_ ] *ளை*
= *பிளை*
_பரிமாற்றம் செய்தால்_
= *பிளை* exchanged with *உமி* in பித்தளை
= *உ+த்த+மி*
= *உத்தமி*
= _உயர்ந்த குணத்தினள்_
*************************
_திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்_
******
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
_மத்தள வயிறனை *உத்தமி* புதல்வனை_
_மட்டவிழ் மலர்கொடு ......_ _பணிவேனே_
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
**************
*விளக்கம் .........*
கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம்,
அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின்
திருவடிகளை விரும்பி,
அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில்
நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,
என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில்
ஓடிப் போய்விடும்.
ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும்
சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க
திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,
மத்தளம் போன்ற பெருவயிறு
உடையவனும், *உத்தமியாகிய* பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத்
தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல்
முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல்
முதலில் எழுதிய முதன்மையானவனே,
. (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த
அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத்
தூளாக்கிய மிகுந்த தீரனே*,
(வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத்
துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப்
புனத்திடையில் யானையாகத் தோன்றி,
அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச்
சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள்
பாலித்த பெருமாளே.
(* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான்
விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின்
அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.)
*********
_*'உத்தமி'* என்றது உமாதேவியாரை அருள் ஞானம்_ _முதலியவற்றின் வடிவாகி,_ _முப்பத்திரண்டு அறம் வளர்த்து அரனைவிட்டு நீங்காப் பாகத்தளாகி,_ _எல்லா அண்டங் களையும் திரு வயிற்றில் வைத்துக் காத்துப் பெற்று அருளும் இறைவி_ _ஆதலின், ' *உத்தமி* என்றார். எல்லா உத்தம குணங்களுமாக விளங்குபவள் என்பது_ _குறித்து எனினும்,ஆம். -_
*************************💐🙏🏼💐
*இன்றைய புதிர்!*( 29-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
புண்படும்படி பேச வம்பை மையமிட்டுச் செயல்முறை ஏற்பாடு (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
A peek into today's riddle!
*************************
*இன்றைய புதிர்!*( 29-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
*திட்டம்*
அரசின் நமக்குநாமே தற்கொலை திட்டம் பெயர்
*டாஸ்மாக்*
(prgeetha)
**********************
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ்
Movie: Singaravelan-1992
**********************
திருடாதே... பாப்பா திருடாதே...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே... பாப்பா திருடாதே...
திரைப்படம்: திருடாதே
(1961)
**********************
புண்படும்படி பேச வம்பை மையமிட்டுச் செயல்முறை ஏற்பாடு (4)
புண்படும்படி பேச
= திட்ட
வம்பை மையமிட்டு
= middle letter of வம்பை
= ம்
செயல்முறை ஏற்பாடு
= திட்ட+ம்
= திட்டம்
**********************
திட்டம் போட்டு நடக்கறவங்களுக்கு அவங்க மட்டுமே துணை. எந்த திட்டமும் இல்லாம இருக்குறவங்களுக்கு அந்த ஆண்டவனே துணை.
**********************
நினைவு சதுரங்கத்தில்
திட்டம் போட்டு
கட்டம் கட்டியதும்
வட்டமிட்டு வீழ்த்தி
பட்டம் கட்டியதும் நினைவுப்
பெட்டகத்தில் நீ
நீங்காதிருப்பதும் உண்மைதான்.
-(திருப்பதி)
*************************
திட்டமிட்டு விடையனுப்பியோர்!
*************************
[6/29, 07:00] Ramarao : திட்டம்
[6/29, 07:01] chithanandam: திட்டம்
[6/29, 07:09] Meenkshi: விடை. திட்டம்.திட்ட+ம்
[6/29, 07:10] V N Krishnan.: திட்டம்
[6/29, 07:10] Dr. Ramakrishna Easwaran: *திட்டம்*
திட்ட+ம்
[6/29, 07:12] Dhayanandan: திட்டம்
[6/29, 07:17] sankara subramaiam: திட்டம்
[6/29, 07:30] Ramki Krishnan: Thittam (thitta + m)
[6/29, 07:38] nagarajan: *திட்டம்*
[6/29, 08:38] ஆர். நாராயணன்.: திட்டம்
[6/29, 08:51] balakrishnan: THITTAM
👌🙏🏻
[6/29, 09:20] siddhan submn: திட்டம் (திட்ட + வ (ம்)பு )
[6/29, 09:27] prasath venugopal: திட்டம்
[6/29, 12:49] N T Nathan: திட்டம்
[6/29, 13:42] பாலூ மீ.: திட்டம்.
[6/29, 15:19] shanthi narayanan: திட்டம்
[6/29, 17:08] கு.கனகசபாபதி, மும்பை: திட்டம்
[6/29, 17:09] Viji - Kovai: 29.6.2020 விடை
திட்டம்
புண்படும்படி பேச=திட்ட
வம்பை மையமாக=ம்
[6/29, 19:24] Rajalakshmi Krishnan: Thittam
*************************
*இன்றைய புதிர்!*( 30-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
இளகிய குரல் கொண்டு உட்கார், உள்ளே தெய்வத்தை நிராகரித்த கோழை (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய புதிர்!*( 30-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
********************** *குழைவு,*
பெயர்ச்சொல்.
நெகிழ்கை , இரக்கம், வாடுகை
கலப்பு, அணைவு, வளைவு
*********
*குழைய, குழைந்து:* வினைச்சொல்
1(அரிசி முதலியவற்றை வேகவைப்பதால்)
குழகுழப்புத் தன்மை ஏற்படுதல்; . சாதம் *குழைந்து* களி
மாதிரிஆகிவிட்டது.
2. (உறுதியாக இருக்க
வேண்டிய உடல்,கால்
முதலியன) *தளர்தல்* ; துவளுதல்; மயக்கத்தால் உடல்
*குழைந்து*
தலை சரிந்தது./பயத்தில் கால்கள்
*குழைந்து*
துணி போல் துவண்டன.
3.(ஒரு காரியம் நடக்க
வேண்டும் என்பதற்காக
ஒருவரிடம்)
அளவு கடந்து நயமாக நடந்து கொள்ளுதல்; காரியம்
ஆகவேண்டும் என்றால் அவன் நாய்போல் குழைவான்.
4. (உ.வ.) (ஒன்றோடு
இனிமையாக)
இணைதல்; கலத்தல்; காற்றில் *குழைந்து* வந்தது
கீதம்
**********************
_மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து_
_நோக்கக் குழையும் விருந்து._
(அதிகாரம்:
விருந்தோம்பல்
குறள் எண்:90)
பொழிப்பு
(மு வரதராசன்):
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
**********************
_இளகிய குரல் கொண்டு உட்கார், உள்ளே தெய்வத்தை நிராகரித்த கோழை (4)_
_உட்கார்_ = *குந்து*
(Madras பாஷை!இன்னா நைனா குந்திகினு இருக்கே?😂)
_தெய்வம்_ = *கோ*
_தெய்வத்தை நிராகரித்த கோழை_
= *கோழை-கோ*
= *ழை*
*குந்து* _(உட்கார்) உள்ளே_ *ழை*
= *குழைந்து*
= _இளகிய குரல் கொண்டு_
**********************
*கம்ப இராமாயணம்* _இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு_
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*கோசலை* அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். _அப்படியே அன்பால் *குழைந்து* வாழ்த்துகிறாள்._
பின் கேட்கிறாள்
*_முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ?_*
என்று.
*பாடல்*
_புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்_
_நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்_
_வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், *குழைந்து* வாழ்த்தி_
' _நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்_
*இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?*
கோசலை _"இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?"_ என்று கேட்டாள்.
*"நீ"* நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ என்று கேட்கவில்லை.
முடி சூட்டுவது என்பது ஒரு அரசாங்கம் சம்பந்தப் பட்ட விஷயம். இராமன் முடி சூட்டினானா இல்லையா என்பதல்ல கேள்வி. _முடி சூட்டுதல் என்ற முறை நடந்ததா , அதில் ஏதேனும் தடை வந்ததா என்று கேட்கிறாள்._
முடி சூட்டு விழா தடை பட்டால் அரசாங்க காரியம் தடை பட்டு விட்டதாக அர்த்தம்.
எவ்வளவு நாசூக்காக கேட்கிறாள்.
தாய் மகன் உறவை தள்ளி வைத்து விட்டு கேட்கிறாள் ..
கோசலை தன் உணர்ச்சியைப் பிறர் அறிய வெளிப்படுத்தல் தவறு என்று கூறினால், தாயன்பின் முன்னர் இச்சிறு தவறுகள் தவிடு பொடியாகிவிடும். ஆனால், சாதாரண நிலையிலுள்ள ஒரு தாய் செய்யக் கூடிய இச்செயலைக் கோசலை செய்துவிட்டால், அது தவறாகிவிடும். தசரதன் முதல் தேவி, இராமனைப் பெற்ற தாய், இவ்வாறு செய்யலாமா? என்ற வினாவிற்கு விடை அளிப்பது சிறிது தொல்லைதான். சிறந்த நிறை உடையவளும் ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவளுமாகிய அப்பெருமாட்டியிடம் நடுவு நிலைமையையும் அமைதியையும் எதிர் பார்க்கலாம் அல்லவா? இவை இரண்டும் தோன்றவே, அவளுடைய பேச்சு அமைகிறது. _மனத்துள் நிகழும் பெரும்போராட்டத்தைச் சிறிதும் வெளிக்காட்டாமல் *குழைந்து* வாழ்த்துகிறாளாம்._ எத்தனை பெரிய மனக் கலக்கமாயினும் வணங்கினவரை வாழ்த்தலே முறை. எனவே, அவள் வாழ்த்தினாள். _அவ் வாழ்த்தலின் பின்னர் உள்ள மனம் எத்தகைய நினைவில் இருந்தது, என்பதைக் கவிஞன் *குழைந்து* என்ற சொல்லால் குறிப்பிட்டுவிட்டான்._ நிறையுடைய தேவியாகலின், மன வருத்தம் மிகுந்து பிதற்றாமல் மைந்தன்மேல் உள்ள அன்பு விஞ்ச வாழ்த்தினாளாம். *குழைவு என்ற ஒரு சொல்லால் கோசலையின் மனம் முழுவதும் எதிரே திறந்து கிடக்கும் புத்தகம் போல நமக்கு விளங்குகிறது* . இம்மன நிலையுடன் அவள் தன்னை வணங்கிய இராமனை வாழ்த்திவிட்டுக் கேட்கும் கேள்வியிலும் அவளுடைய மன நிலையைக் கவிஞன் விளக்குகிறான். _"நினைந்தது என்? இடையூறு உண்டோ_ _நெடுமுடி புனைதற்கு?” என்றாள்._
*************
கம்பனுக்கு இனை யாரும் உளரோ!
💐🙏🏼💐
குழைந்து வந்து புதிருக்கு விடையளித்தோரை வாழ்த்துவோம்! 💐
**********************
[6/30, 07:01] Ramarao : குழைந்து
[6/30, 07:03] V N Krishnan.: குழைந்து
[6/30, 07:24] ஆர். நாராயணன்.: குழைந்து
[6/30, 07:35] Meenkshi: விடை:குழைந்து
[6/30, 07:49] nagarajan: *குழைந்து*
[6/30, 08:41] balakrishnan: KUZHAINDHU 👌🙏🏻
[6/30, 09:15] Dr. Ramakrishna Easwaran: *குழைந்து*
உட்கார் = குந்து
தெய்வம்= கோ
நிராகரித்த = எழுத்தை நீக்கும் குறிப்பு
கோழை- கோ = ழை
(குந்து+ழை)* = பொருள் "இளகிய குரல் கொண்டு"
[6/30, 09:45] siddhan submn: குழைந்து (குந்து + (கோ)ழை
[6/30, 10:43] chithanandam: குழைந்து
[6/30, 11:08] Dhayanandan: குழைந்து
[6/30, 11:33] N T Nathan: குழைந்து
[6/30, 12:13] பாலூ மீ.: குழைந்து.
[6/30, 12:18] கு.கனகசபாபதி, மும்பை: குழைந்து
[6/30, 17:01] balagopal: தென்றல்.இருமல்
*************************
*இன்றைய புதிர்!*( 01-07-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
காம ரம்பா தர்மனுக்கு முதல்வனுடன் ஆட்டம்போட்டதெல்லம் பழம்பெருங்கதை (6)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய புதிர்!*( 01-07-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
_காம ரம்பா தர்மனுக்கு முதல்வனுடன் ஆட்டம்போட்டதெல்லம் பழம்பெருங்கதை (6)_
_தர்மனுக்கு முதல்வனுடன்_
= *த[ர்மனுக்கு]*
= *த* ( _முதலெழுத்து_ )
_ஆட்டம் போட்டதெல்லாம்_
= anagram indicaror for *காம ரம்பா + த*
= *மகாபாரதம்*
= _பழம்பெருங்கதை_
**********************
*மகாபாரதப் போர் தத்துவம்*
மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அதில் இருக்கும் தத்துவம் உண்மை. அதை அனைவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள். ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்.
எண்ணிக்கையில் பெரிதான கௌரவர்களை எதிர்த்து கிருஷ்ண பரமாத்மா என்னும் மனசாட்சியின் படி சத்தியத்தை கடைபிடித்து சத்தியத்தின் படி வாழ்க்கையை வாழ்ந்து ஐம்புலன்களால் போரிட தீமைகளை வெற்றி பெறலாம்.
கர்ணன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை மோகம். அவன் இந்திரியங்களின் ஒரு பகுதி. கூடவே பிறந்தவன். ஆனால் தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அவனது விருப்பம் ஆசை போல ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தவறு செய்வான். அவனையும் வெற்றி பெற்றால் இறைவனை அடையலாம்.
💐🙏🏼💐
**********************
*_பழம்பெருங்கதை மகாபாரதம் கேட்க வந்தவர்கள்!_*
**********************
[7/1, 07:00] Ramarao : மகாபாரதம்
[7/1, 07:00] sathish: மகாபாரதம்
[7/1, 07:03] akila sridharan: மகாபாரதம்
[7/1, 07:04] prasath venugopal:
மகாபாரதம்
[7/1, 07:06] balakrishnan: MAKAABAARATHAM
🙏🏻👌
[7/1, 07:07] Meenkshi: விடை; மகா பாரதம்
[7/1, 07:08] sridharan: மகாபாரதம்.
[7/1, 07:10] Dhayanandan: மகாபாரதம்
[7/1, 07:12] Dr. Ramakrishna Easwaran: *மகாபாரதம்*
(காமரம்பா+த)*
[7/1, 07:13] Ramki Krishnan: Makaabaaratham
(Kaama rambaa tha)*
[7/1, 07:15] chithanandam: மகாபாரதம்
[7/1, 07:15] Venkat UV: மகாபாரதம் 🙏🏽
[7/1, 07:18] nagarajan: *மகாபாரதம்*
[7/1, 07:23] ஆர். நாராயணன்.: மகாபாரதம்
[7/1, 07:24] A D வேதாந்தம்: விடை=மகாபாரதம்/வேதாந்தம்
[7/1, 07:25] பாலூ மீ.: மகாபாரதம்
[7/1, 07:25] senthil: மகாபாரதம்
[7/1, 07:31] N T Nathan: மகாபாரதம்
[7/1, 07:35] மீ.கண்ணண்.: யுகாரம்பமா
[7/1, 09:15] கு.கனகசபாபதி, மும்பை: மகாபாரதம்
[7/1, 09:35] siddhan submn: மகாபாரதம் (காம ரம்பா த)
[7/1, 11:49] Rajalakshmi Krishnan: Makaabhaaratham
[7/1, 14:25] sankara subramaiam: மகாபாரதம்
[7/1, 15:21] shanthi narayanan: மகாபாரதம்
************************
*இன்றைய புதிர்!*( 02-07-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
உலக்கையால் உழைத்து தாமரை நுனியால் அரசனுக்கு அறிவுரை கூறு (5)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**************************
*இன்றைய புதிர்!*( 02-07-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
உலக்கையால் உழைத்து தாமரை நுனியால் அரசனுக்கு அறிவுரை கூறு (5)
உலக்கையால் உழைத்து
= இடித்து
தாமரை நுனியால்
= [தாம]ரை = ரை
அரசனுக்கு அறிவுரை கூறு
= இடித்து+ரை
= இடித்துரை
**********************
பழங்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்த தமிழ்ப் புலவர்கள் மூவேந்தர்களையும்,குறுநில மன்னர்களையும், வள்ளல்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அப்புலவர்கள் பரிசுகள் பெறுவதோடமையாமல் அரசர்களிடமும் பிறரிடமும் காணப்படுகின்ற குறைகளை எடுத்துக்கூறி, அவர்களைத் திருத்தினர் ; உற்ற இடத்தில் உதவிபுரிந்தனர் ; பகை அரசர்களை அறவுரை கூறி நண்பர்களாக்கினர். முற்றுகைகளிலும் படையெடுப்பிலும் ஆண்மையோடு சென்று அறிவுரை கூறினர். அரசியல் நெறி கடந்து செல்பவர்களுக்கு *இடித்துரை* வழங்கினர்.
அக்கால அரசர்கள் முதலியோர், புலவர்களை நண்பர்களாகவும், உயிர்த் துணைவர்களாகவும், மதிகூறும் நல்ல அமைச்சர்களாகவும் கொண்டு, அவர்கள் கூறும் பொன்மொழிகளைப் போற்றி வாழ்ந்தார்கள்
**********************
*குறள் 448:*
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
மு.வரதராசன் விளக்கம்:
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
**********************
_விடையளித்தோர் பட்டியல்_
**********************
[7/2, 06:59] Ramarao திரைக்கதம்பம்: இடித்துரை
[7/2, 07:00] Dhayanandan: இடித்துரை
[7/2, 07:01] V N Krishnan.: இடித்துரை
[7/2, 07:03] chithanandam: இடித்துரை
[7/2, 07:04] sathish: இடித்துரை
[7/2, 07:06] Meenakshi: விடை: இடித்துரை.
[7/2, 07:11] akila sridharan: இடிப்பாரை
[7/2, 07:18] Dr. Ramakrishna Easwaran: *இடித்துரை*
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
[7/2, 07:36] மீ.கண்ணண்.: இடித்துரை
[7/2, 07:37] ஆர். நாராயணன்.: இடித்துரை
[7/2, 07:42] Viji - Kovai: 2.7.2020 விடை
இடித்துரை
[7/2, 07:50] பாலூ மீ.: இடித்துரை
[7/2, 07:54] nagarajan: *இடித்துரை*
[7/2, 08:09] prasath venugopal: இடித்து + ரை = இடித்துரை
[7/2, 08:27] கு.கனகசபாபதி, மும்பை: இடித்துரை
[7/2, 08:40] Bharathi: இடித்துரை
[7/2, 08:53] venkatraman: இடித்துரை
[7/2, 09:03] sankara subramaiam: இடித்துரை
[7/2, 10:03] siddhan submn: இடித்துரை (இடித்து + (தாம)ரை)
[7/2, 10:57] Ramki Krishnan: Idiththurai (idiththu + rai)
[7/2, 13:00] shanthi narayanan: இடித்துரை
[7/2, 17:23] balagopal: இடித்துரை.
[7/2, 17:56] N T Nathan: இடித்துரை
************************
💐🙏🏼💐
*இன்றைய புதிர்!*( 03-07-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
மெதுவாக அடித்து மறைப்பு (3)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**************************
*இன்றைய புதிர்!*( 03-07-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
சிவகங்கை அருகே ஊரடங்கால் கோடைக்காலங்களில் அதிகம் விற்பனையாகும் தென்னந்தட்டிகள் முடங்கின. இதனால் தட்டிகள் முடையும் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இங்கு கிடைக்கும் தென்னங்கீற்றை விலைக்கு வாங்கி தட்டி முடையும் தொழிலில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன
அவர்கள் தென்னங்கீற்றை ரூ.5க்கு வாங்கி, அதனைத் தண்ணீரில் நனைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தட்டியைப் பின்னுகின்றனர். இரண்டு மட தட்டி, மூன்று மட தட்டி என இரண்டு விதமாக முடைகின்றனர். இதன்மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 தட்டிகள் வரை பின்னுகின்றனர். ஆண்டு முழுவதும் அவர்கள் தட்டி முடைந்தாலும் கோடைக்காலத்தில்தான் தட்டிகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
தற்போது கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீசனில் தட்டிகள் விற்பனையாகவில்லை. தட்டிகள் தேக்கமடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்க
*********************
மெதுவாக அடித்து மறைப்பு (3)
மெதுவாக அடித்து = தட்டி
மறைப்பு = தட்டி
**********************
தட்டி கழிக்காமல் விடையளித்த அன்பர்களை, கை தட்டி வாழ்த்துவோம்!
**********************
[7/3, 07:02] Ramarao : தட்டி
[7/3, 07:02] Dhayanandan: தட்டி
[7/3, 07:02] V N Krishnan.: தட்டி
[7/3, 07:03] balakrishnan: THATTI
🙏🏻🤣
[7/3, 07:06] Suba: Hello sir,தட்டி
[7/3, 07:07] A D வேதாந்தம்: விடை= தட்டி/ வேதாந்தம்
[7/3, 07:08] மீ.கண்ணண்.: தட்டி
[7/3, 07:09] chennai usha: தட்டி
[7/3, 07:14] உஷா, கோவை: தட்டி
[7/3, 07:14] பாலூ மீ.: தட்டு.
[7/3, 07:15] chithanandam: தட்டி
[7/3, 07:15] akila sridharan: தட்டி
[7/3, 07:16] Meenakshi: விடை:தட்டி
[7/3, 07:20] sathish: தட்டி
[7/3, 07:21] nagarajan: *தட்டி*
[7/3, 07:29] Dr. Ramakrishna Easwaran: *தட்டி*(இரு பொருள் ஒரு சொல்)
[7/3, 07:33] shanthi narayanan: தட்டி
[7/3, 07:36] sridharan: தட்டி
[7/3, 07:56] prasath venugopal: தட்டி
[7/3, 09:54] ஆர். நாராயணன்.: தட்டி
[7/3, 09:56] siddhan submn: தட்டி
[7/3, 11:56] கு.கனகசபாபதி, மும்பை: தட்டி
[7/3, 15:35] Ramki Krishnan: *Thatti (double def)*
[7/3, 13:16] Bharathi: தட்டி
[7/3, 18:47] sankara subramaiam: தட்டி
[7/3, 07:35] balagopal: தட்டி.
[7/3, 19:16] Viji - Kovai: 3.7.2020 விடை
தட்டி
**********************
*இன்றைய புதிர்!*( 04-07-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
கடைசியாகப் பணம் பாதாளம் சேர தட்டு (5)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய புதிர்!*( 04-07-20)
from
*Vanchinathan's archive*
(தென்றல்)
**********************
*தாம்பாளம்* (பெ)
ஒருவகை பெரிய தட்டு
தாம்பாளம் ஒன்றில் தேங்காய், வெற்றிலைபாக்கு, ஊதுவத்தி ஆகியவற்றை வைத்துக் கொண்டு, வாசற்படியைத் தாண்டினாள்.
**********************
*குத்து குத்து தாம்பாளம்*
நாட்டுப்புறச் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ' _குத்து குத்து தாம்பாளம்_ ' என்பது. சிறுவர்கள் வட்டமாக அமர்ந்து கைகளைத் தரையில் வைத்து ஆடும் விளையாட்டு இது. இந்த ஆட்டத்தை ஆடும்போது பாடப்படும் ஒரு சிறுவர் பாடலை பாடிப்பார்ப்போம்.. வாருங்கள்.
_குத்து குத்து தாம்பாளம் கோடாலி தாம்பாளம்_
_உங்க அப்பா பேர் என்னா?_
_'முங்கப்பூ"_
_முருங்கப்பூ தின்னுபுட்டு_
_பாம்பு கைய எடுப்பியா_
_எடுக்க மாட்டியா?_
_எடுக்காட்டி போனா பீச்சாங் கைய எடுத்து_
_தலை மேல வச்சிக்கோ..._
இந்தக் ' _குத்து குத்து தாம்பாளம்'_ பாடல் பல ஊர்களில் பல வகையாகப் பாடப்படுகிறது! 😌**********************
_கடைசியாகப் பணம் பாதாளம் சேர தட்டு (5)_
_கடைசியாகப் பணம்_
= _last letter in பணம்_
= *ம்*
_சேர_ = _anagram indicator for_ *பாதாளம்+ம்*
= *தாம்பாளம்*
= _தட்டு_
**********************
_கணவனால் மதிப்பாக நடத்தப்படும் மனைவியை_ _“அவளுக்கென்ன? *தங்கத்* *தாம்பாளத்திலேல்லா* வச்சுத் தாங்குதான்! ”_ என்பார்கள்
**********************
*என் சொர்க்கம்*
அதிகாலை சுப்ரபாதம் காதில் தேன் பாயும்
வாசலில் மாக்கோலம் மனதிற்கு குதூகலம்
பில்ட்டர் காபி கடைசி சொட்டு வரை சுவைக்கும் இன்பம்
கூகுளில் கூட காணக் கிடைக்காத சிட்டுக்குருவி நாட்டியம்
என்றோ நட்டு வைத்த பவழமல்லி
எனை கண்டு மலர்ந்து சிரித்தது
நானே செய்தேன் என் பிரண்டு பிள்ளையார்
கரைக்கக் கூடாது என்று அடம் பிடித்தேனே
பூஜையில் இருந்து முறைக்கிறார்
பார்க்க வர ஆறு மாதமா கணக்குக் கேட்கிறார்
மல்லிகைப்பூ இட்லி பொங்கல் காரச் சட்னி
முதலிடம் யாருக்கு அதை செய்த கைகளுக்கு
அம்மாவின் மடியில் குட்டித் தூக்கம்
அப்பாவின் கைகள் என் தலையை வருடும்
சொர்க்கத்தில் இருக்கிறேன் இன்று
இக்கணம் இப்படியே நீடிக்காதோ
இன்னும் ஒரு வாரம் மட்டுமே
அடுத்து எத்தனை நாள் காத்திருப்போ
தங்களையே உருக்கி என்னை உருவாக்கிய
தாய் தந்தைக்குப் பெருமை சேர்க்கவே
திரைக்கடல் ஓடி புகழும் பொருளீட்டி
தங்கத் *தாம்பாளத்தில்* அவர்களை தாங்கி மகிழவே
தூரங்கள் இடங்களுக்கு உண்டு
அன்பு கொண்ட மனங்களுக்கு அன்று
என் பாசமும் அவர்கள் உள்ளம் நிறைந்த ஆசியும்
எங்கும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என்னை!!!
💐💐💐
( படிப்பு, வேலை நிமித்தம் தாய் தந்தையை [ சிலர் தாய் மண்ணை ] பிரிந்து தனிமையில் தவமிருக்கும் பிள்ளைகளுக்காக...)
( மது )
*************************
💐🙏🏼💐
************************