Skip to main content

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆர்வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.
 

எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை
விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப்
பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள்
அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு

 நேற்றைய வெடி

கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2)

அதற்கான விடை நாழி =நாழி-கை 

நாழிகைசிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங்
நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்')

இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Comments

R. Padma said…
ஆரம்பித்தது முதல் எங்கள் குடும்பத்தில் நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். துளியும் அலுப்பு தட்டவில்லை. நன்றி வாஞ்சி.