ஒவ்வொரு வருடமும் திடீரென்று சில சமயம் முன்னறிவிப்பின்றி பெரிய மழை என்று வருவது நடப்பதுதான். ஆனால் 2003ஆம் ஆண்டில் முதன்முதலாக குளிரூட்டிய அறையில் வெளியில் நடப்பது தெரியாமல் பணி புரியும் போது மழை வந்து ஓய்ந்த பிறகே தெரிய வந்தது. அப்படிப்பட்ட தருணத்தில் குற்றாலக் குறவஞ்சியில் கவித்துவம் நிறைந்த "முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்/ முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்" போன்ற வரிகள் நினைவுக்கு வந்தன. நானும் அதுபோல் எழுதிப்பார்க்கலாமா என்று முயன்றேன். நேற்று மீண்டும் அதுபோல் நெட்பிளிக்ஸ் படம் ஒன்றைப் பார்த்து முடித்தபிறகுதான் பெரிதாக மழை வந்ததை கவனித்தேன். உடனே அன்று எழுதிய விருத்தப்பாவைத் தேடியெடுத்து இப்போது இங்கே: இலைக்குடையை விரித்துயர்ந்த பூவாகை மரத்தின் இடுக்குவழிப் பொழிந்தமழை தெருவிலாறா யோடும் அலையெழுந்து கடல்வீட்டின் மணல்வாசல் தெளிக்கும் அதிலூருஞ் சங்கினங்கள் இழைத்தகோலம் அழிக்கும் வலைவீசுஞ் செம்படவர் சென்றதோணி கவிழும் வஞ்சிரமும் வவ்வாலும் உயிர்பிழைத்துத் துள்ளும் குலைகனக்க வாழையதும் பேய்க்காற்றால் வீழும் க...
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.