Skip to main content

Posts

Showing posts with the label புதிர்

தொண்டை நாட்டில் ஒரு சோதனை

தொண்டை நாட்டில் ஒரு சோதனை வாஞ்சிநாதன் இதுவும் ஒரு புதிர்தான். இந்த சங்க காலக் கதையைப் படித்து விட்டு  கடைசியாகக் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு விடை  கண்டுபிடியுங்கள். தொண்டை நாட்டு மன்னர், இளவரசிக்கு நல்ல தமிழ் கற்பிக்க அவைப்புலவரான பூதநாதனாரை அழைத்து தக்க ஆசிரியரைக் கண்டறிந்து சொல்லும்படி ஆணையிட்டார். பெருஞ்சாத்தன், அழிசி, ஆதிமந்தி,  எழினி,  நெடுமான் ஆகியோரில் ஒருவரை ஆசிரியராக நியமிக்க எண்ணி அவர்கள் ஐவரையும் பூதநாதனார் சோதித்துத் திறமையை ஆய்வதற்கு அழைத்தார்.  ஓர் அறையில் எல்லோரையும் காத்திருக்கச் சொல்லி  ஒவ்வொருவராக வரவைத்து   மூன்று நாழிகைக்கு மேல் பல கேள்விகள் கேட்டார். சோதனை முடிந்ததும் அவரவர் தங்காமல் அரசவையை விட்டு வெளியேறினர். எழினியிடம் பூதநாதனார் கேட்ட முதல் கேள்வி, "எழினியாரே,    அழிசி தடுமாறிவிட்ட ஈற்றடியையே உங்களுக்கும் அளிக்கிறேன்,  பொங்கிச் சுழன்ற புயல்   அதற்கு ஒரு வெண்பாவைச் சொல்லும் பார்ப்போம்." அழிசியின் சோதனை முடிந்து வெளியே வரும்போது ஆதிமந்தி "எப்படிச் சோதித்தார் பூதநாதனார்?" என்று கேட்க ...

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

உதிரிவெடி 3192

 இன்றைய (19/01/2018) வெடி 3192:  வாஞ்சிநாதன்  கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த அய்யர்   (5) உதிரிவெடி.

உதிரிவெடி 3191

 18  ஜனவரி  2018, உதிரி வெடி 3191 -- வாஞ்சிநாதன் கண்ணியமானவர் மனம் காணும் கற்பனையா? நான் பேசுவதற்கானது இல்லை (4) உதிரி வெடி 3191

உதிரிவெடி 3187,3188

ஹேவிளம்பி மாட்டுப் பொங்கல் (15/01/2018 ) வெடிகள் இரண்டு    வாஞ்சிநாதன் நேற்று பொங்கல் கட்டு வெடிக்கு இதுவரை 29பேர் விடையளித்திருக்கிறார்கள். இதெல்லாம் கட்டோடு பிடிக்காது என்று நினைப்பவர்கள் ஒரு மணிக்கு ஒரு உதிரியாக வெடித்து விடைகளை அனுப்ப அவகாசம் இருக்கிறது. இன்றைய வெடியோடு இரவு 9 மணி வரை அனுப்பலாம். பட்டியலில் மூன்று ரகம் எல்லா விடைகளையும் கண்டவர்கள், ஒரு தவறோடு, மற்றும் இரு தவறுகளோடு கண்டவர்கள் என்று  வெளியிடப்படும். இன்றைக்கு வழக்கம்போல் வரும் வெடியுடன் கொசுறாக ஒரு மாட்டு வெடி, பழங்கால, விடுகதை போல் அமைத்திருக்கிறேன். ஒன்றை நீங்களும் மற்றதை  நீங்கள் வளர்க்கும் மாட்டிடமும் பங்கு போட்டு விடையளித்து அனுப்பலாம்! வெளியூர் செல்பவர் யாரது? வாலை நறுக்கிய குழப்பத்தில் நோயில் வீழ்ந்து விட்டீரே! (4) பொங்கலுக்கு அடுத்த  நாள் மாட்டுப் பொங்கல் என்றால் மார்கழி 29க்கு அடுத்த நாள் பாடப்படும் ராகம் எது? (3) சென்னை புத்தக் கண்காட்சிக்குச் செல்லவிருக்கிறீர்களா? அப்படியென்றால் கீழே சொடுக்கிப் படித்துவிட்டுச் செல்லுங்கள்: ராமானுஜன் பற்றிய நூல் இரட்டை வெடி...

உதிரிவெடி 3186 இல்லை பொங்கல் சரம்

**இன்றைக்கு உதிரி வெடி கிடையாது.  அதற்கு பதிலாக   ஒரு கட்டுவெடி கீழே. விடையளிக்க இரண்டு நாட்கள் அவகாசம் உண்டு. திங்கள் கிழமை  இரவு  பட்டியல் வெளியிடப்படும். மாட்டுப் பொங்கலுக்கு உதிரியாய் வெடி வழக்கம் போல் வரும். சரவெடி.

விடை 3184

இன்று (12/01/2018) காலை வெளியான வெடி:   ஒரு கணக்கைப் போட கணினி, பழத்தைப் பிடுங்க பல கட்சிகள் (4) இதற்கான விடை: கூட்டணி =  கூட்ட + ணி ஒரு கணக்கு போட = கூட்ட கணினி, பழத்தைப் பிடுங்க = கணினி - கனி = ணி கூட்டணி ஆட்சி என்றால் பல கட்சிகளின் ஆட்சி தேர்தலில்   வென்றிடத் தெளிப்பார் பணக்கட்டை நாற்காலி பெற்றதும் நம்மை மறப்பார் பழுத்த  பழங்கள் பறித்திடும்  பண்பால் கொழுத்துப் பெருகினார்  கொல்

உதிரிவெடி 3182

** இன்றைய (10 ஜனவரி 2018) வெடி: வாஞ்சிநாதன்   ஒரு தாளம் அடித்துக் காட்டக் கேட்கிறான் நாகரிகமற்றவன் (4 ) Loading...

உதிரிவெடி 3181

** 09/01/2018 புதிர்: வாஞ்சிநாதன் சத்தியமாய் அடிக்கப்படும் மலர் அணிய இறுதி விருப்பம்  (3) Loading...

உதிரிவெடி 3180

** 08/01/2018 உதிரிவெடி 2018 -- வாஞ்சிநாதன் இன்னமும் மலராதது ஆண்டு வடத்தை  உருவித்  தைத்த கணை   (4) Loading...

உதிரிவெடி 3179

** 07/01/2018  உதிரிவெடி 3179 -- வாஞ்சிநாதன் மாடு கட்டும் மரத்துண்டில் வள்ளலைக் கட்டி  கல்யாணச் சடங்கிற்கான பாண்டம் (5)  Loading...

விடை 3176

** ஜனவரி 4, 2018  காலை வெளியான வெடி: வாசனை பார்க்காத நாசி முனை அதிர்ஷ்டம் (4) இதற்கான விடை: முகராசி = முகரா + (நா)சி

விடை 3175

** இன்று காலை (03 ஜனவரி, 2018) வெளியான வெடி (3175): மனைவி சேலைத் தலைப்பு வெட்ட பொருள் நஷ்டம் (3) இதைப் பின்வருமாறு பாகம் பிரித்து  உடைக்க  வேண்டும்:  மனைவி = சேலைத் தலைப்பு;  வெட்ட;  பொருள் நஷ்டம் (3) பொருள் நஷ்டம் = சேதாரம் சேலைத் தலைப்பு = சே வெட்ட ---> சேதாரம் - சே = தாரம் = மனைவி அதனால் விடை: தாரம் ----- விடையளித்தவர்கள் பட்டியல் கீழே "கருத்துகள்" என்று இடம் பெறும்.

உதிரிவெடி 3174

*02/01/2018 உதிரிவெடி 3174: சைவர்கள் வணங்கும் தென்னமெரிக்க நாட்டு மிருகம் ? (4) விடையளிக்க  இங்கே சொடுக்கவும் :