Skip to main content

உதிரிவெடி 3187,3188

ஹேவிளம்பி மாட்டுப் பொங்கல் (15/01/2018 ) வெடிகள் இரண்டு 
  வாஞ்சிநாதன்

நேற்று பொங்கல் கட்டு வெடிக்கு இதுவரை 29பேர் விடையளித்திருக்கிறார்கள்.
இதெல்லாம் கட்டோடு பிடிக்காது என்று நினைப்பவர்கள் ஒரு மணிக்கு ஒரு உதிரியாக வெடித்து விடைகளை அனுப்ப அவகாசம் இருக்கிறது. இன்றைய வெடியோடு இரவு 9 மணி வரை அனுப்பலாம். பட்டியலில் மூன்று ரகம் எல்லா விடைகளையும் கண்டவர்கள், ஒரு தவறோடு, மற்றும் இரு தவறுகளோடு கண்டவர்கள் என்று  வெளியிடப்படும்.


இன்றைக்கு வழக்கம்போல் வரும் வெடியுடன் கொசுறாக ஒரு மாட்டு வெடி, பழங்கால, விடுகதை போல் அமைத்திருக்கிறேன். ஒன்றை நீங்களும் மற்றதை  நீங்கள் வளர்க்கும் மாட்டிடமும் பங்கு போட்டு விடையளித்து அனுப்பலாம்!

வெளியூர் செல்பவர் யாரது? வாலை நறுக்கிய குழப்பத்தில் நோயில் வீழ்ந்து விட்டீரே! (4)

பொங்கலுக்கு அடுத்த  நாள் மாட்டுப் பொங்கல் என்றால் மார்கழி 29க்கு அடுத்த நாள் பாடப்படும் ராகம் எது? (3)





சென்னை புத்தக் கண்காட்சிக்குச் செல்லவிருக்கிறீர்களா? அப்படியென்றால் கீழே சொடுக்கிப் படித்துவிட்டுச் செல்லுங்கள்:

ராமானுஜன் பற்றிய நூல்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்