இன்று (12/01/2018) காலை வெளியான வெடி:
ஒரு கணக்கைப் போட கணினி, பழத்தைப் பிடுங்க பல கட்சிகள் (4)
இதற்கான விடை: கூட்டணி = கூட்ட + ணி
ஒரு கணக்கு போட = கூட்ட
கணினி, பழத்தைப் பிடுங்க = கணினி - கனி = ணி
கூட்டணி ஆட்சி என்றால் பல கட்சிகளின் ஆட்சி
தேர்தலில் வென்றிடத் தெளிப்பார் பணக்கட்டை
நாற்காலி பெற்றதும் நம்மை மறப்பார்
பழுத்த பழங்கள் பறித்திடும் பண்பால்
கொழுத்துப் பெருகினார் கொல்
ஒரு கணக்கைப் போட கணினி, பழத்தைப் பிடுங்க பல கட்சிகள் (4)
இதற்கான விடை: கூட்டணி = கூட்ட + ணி
ஒரு கணக்கு போட = கூட்ட
கணினி, பழத்தைப் பிடுங்க = கணினி - கனி = ணி
கூட்டணி ஆட்சி என்றால் பல கட்சிகளின் ஆட்சி
தேர்தலில் வென்றிடத் தெளிப்பார் பணக்கட்டை
நாற்காலி பெற்றதும் நம்மை மறப்பார்
பழுத்த பழங்கள் பறித்திடும் பண்பால்
கொழுத்துப் பெருகினார் கொல்
Comments
விடையுடன் கூடிய வெண்பா மிகவும் அருமை! 😊
1/12/2018 6:04:39 எஸ்.பார்த்தசாரதி
1/12/2018 6:16:32 ஆர்.நாராயணன்.
1/12/2018 6:16:36 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/12/2018 6:17:06 சங்கரசுப்பிரமணியன்
1/12/2018 6:17:47 கி.பாலசுப்ரமணியன்
1/12/2018 6:19:15 சித்தன்
1/12/2018 6:26:33 கி மூ சுரேஷ்
1/12/2018 6:28:32 ரவி சுப்ரமணியன்
1/12/2018 6:40:26 லக்ஷ்மி ஷங்கர்
1/12/2018 6:45:46 மு.க.இராகவன்
1/12/2018 7:15:36 எஸ் பி சுரேஷ்
1/12/2018 7:19:09 ரவி சுந்தரம்
1/12/2018 7:26:35 சுந்தர் வேதாந்தம்
1/12/2018 7:32:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/12/2018 7:47:35 கேசவன்
1/12/2018 7:50:57 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/12/2018 7:57:52 நாதன் நா தோ
1/12/2018 8:13:28 முத்துசுப்ரமண்யம்
1/12/2018 8:22:34 ராஜி ஹரிஹரன்
1/12/2018 8:58:36 பினாத்தல் சுரேஷ்
1/12/2018 9:21:41 ராஜா ரங்கராஜன்
1/12/2018 9:22:56 ஆர். பத்மா
1/12/2018 9:45:44 ரா. ரவிஷங்கர்
1/12/2018 9:57:25 ஶ்ரீவிநா
1/12/2018 11:58:38 ஜீவமோகன்
1/12/2018 13:18:02 ராதா தேசிகன்
1/12/2018 13:21:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/12/2018 13:40:03 ரமணி பாலகிருஷ்ணன்
1/12/2018 16:55:20 கு. கனகசபாபதி, மும்பை
1/12/2018 18:01:03 இரா.செகு
1/12/2018 18:52:11 ஏ.டி.வேதாந்தம்
1/12/2018 18:52:45 பத்மாசனி
1/12/2018 18:53:35 அனுராதா ஜயந்த்
1/12/2018 18:53:43 சதீஷ்பாலமுருகன்
1/12/2018 20:41:42 அம்பிகா
*கூட்டணி* தர்மம்
"சென்ற தேர்தலைப் போலவே *கூட்டணி* தர்மத்தை மதித்து எங்களை தொகுதிப் பங்கீடிற்கு அழைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் "
உன் கட்சிக் கூட வைக்கிறதே பிரயோசனமில்லாத தர்மக் கூட்டணி , இதுல கூட்டணி தர்மம் வேறையா?
*மனதைக் கவர்ந்த பாடல்*
காலம் கடந்தும் தென்னகத்தில் ஒரு சில பாடல்க ளே காதில் கேட்டவுடன், மக்களால் முனுமுனுக்கப் படுகின்றன.
தமிழகம் என்று கூறாமல் தென்னகம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் பிறந்து தென்னகத்தின் மற்ற மொழிகளை தாய் மொழியாய் கொண்டவர்களையும் இப்பாடல்கள் சேர்ந்து பாட வைப்பதுண்டு. இவ்வகையான பாடலை எழுத ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். அதற்கு உயிர் கொடுத்து ஐம்பது வருடங்கள் கடந்தும் கேட்ட வைக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். வசீகரிக்கும் குரலில் பாடி மனதில் இடம் பிடிக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். எதுவுமே பலர் தொடங்கினாலும், கடைசியில் ஒரு சிலரில் தான் முடியும். அதற்கு முயற்சி, நம்பிக்கை, ஆற்றல் என காரணங்களை பலர் அடுக்கினாலும், ஒரு சிலரிடம் சென்று கேட்டால் எல்லாம் அவன் அருள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமகாக தெரிந்து இருக்ககூடும், யார் கண்டது?
தொடர்ந்து, பல வருடங்களாக இவர்கள் *கூட்டணி* அமைத்து மிரட்டிய காலம் அது. ஒருவர் பாட்டெழுத, இருவர் இசையமைக்க, மூவர் பாட, படத்தில் நால்வர் ஆட, மொத்தத்தில் அட்டகாசமான *கூட்டணி*
அது.
அதற்கு அப்புறம் 1980 களில் மீண்டும் சில காலம் இதே போல் ஒரு *கூட்டணி* அமைந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை, *கூட்டணி* நீடிக்கவில்லை. இனி யாருக்கு வாய்க்குமோ இத்தகைய *கூட்டணி* , தெரியவில்லை.
*_பாடல்: ஆறோடும் மண்ணில் எங்கும்_*
திரைப்படம்: பழனி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1965
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்