Skip to main content

விடை 3191

*இன்று (18 ஜனவரி 2018) காலை வெளியான வெடி:
கண்ணியமானவர் மனம் காணும் கற்பனையா? நான் பேசுவதற்கானது இல்லை (4)
இதற்கான விடை: கனவான். இந்தவிடை வெடியுடன் எப்படிப் பொருந்தும் என்பதை யாராவது இதன் கீழே கருத்துரையாக இடுங்கள்.

பொதுவாக முதல் நாளிரவே அடுத்த நாள் காலைக்கான புதிரை யோசித்து வைத்துத்  தயார் செய்தும் வைத்திருப்பேன். அது மாதிரி  நேற்றிரவு செய்யாமல் காலை எழுந்து ஐந்தேமுக்கால் மணிக்குக் க்ரியா அகராதியை ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து ஒரு சொல்லை எடுத்து அவசரக் கோலமாகச் செய்தது இன்றைய புதிர்.





க்ரியா பதிப்பகத்தார் மெனக்கட்டு அழகாக‌த் தயாரித்திருக்கின்றனர் இந்த அகராதியை. நான் 2001இல் வாங்கியது இந்த அகராதி. இன்று புத்தகக் கண்காட்சியில் புதிய பதிப்பைப் பார்த்தேன். புதிர் ஆர்வலர்கள் இதை வாங்கிவைத்துக் கொள்ளலாம். இமையம் எழுதிய வீடியோ மாரியம்மன் போன்ற அழகான கிராமியக் கதைகள் நடுவே  புத்தகக் காட்சியில் இந்த அகராதியை வாங்கலாம்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (27):

6:07:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:11:23 லட்சுமி சங்கர்
6:12:52 ரவி சுந்தரம்
6:16:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:22:18 கேசவன்
6:23:57 எஸ்.பார்த்தசாரதி
6:30:28 மீனாக்ஷி கணபதி
6:52:41 ரா. ரவிஷங்கர்..
6:56:49 கி.பாலசுப்ரமணியன்
7:01:32 சித்தன்
7:03:28 ரவி சுப்ரமணியன்
7:04:23 எஸ் பி சுரேஷ்
7:06:11 ரங்கராஜன் யமுனாச்சாரி
7:27:27 ஆர்.நாராயணன்.
8:00:20 வி ன் கிருஷ்ணன்
9:34:59 சந்திரசேகரன்
9:40:50 ராஜி ஹரிஹரன்
9:46:33 ரா.ரவிஷங்கர்..
9:47:12 விஜயா ரவிஷங்கர்
13:30:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
17:53:45 ரமணி பாலகிருஷ்ணன்
19:28:30 அம்பிகா
20:06:41 நாதன் நா தோ
20:24:40 ஜீவமோகன்
20:47:30 சுந்தர் வேதாந்தம்
20:55:51 ஏ.டி.வேதாந்தம்
20:56:25 பத்மாசனி
**************************
Raghavan MK said…
O

மனம் கானும் கற்பனையா =கனவா

நான் -நா =ன்
நா = பேசுவதற்கு (நாக்கு) இல்லை
கனவா+ன்=கனவான்
Sundar said…
வாஞ்சி கணிதப்பேராசிரியர் என்பதால், கணித சமன்பாடுகளை solve செய்வது போல், அவர் தரும் இந்த புதிர்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு L.H.S. = R.H.S. என்று prove செய்ய வேண்டும் என்று எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். அதன்படி, முதலில் = குறியை எங்கு போடுவது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

கண்ணியமானவர் = மனம் காணும் கற்பனையா? நான் பேசுவதற்கானது இல்லை (4)

இப்போது LHS definition & RHS construction என்பது தெரிகிறது. அடுத்து..

கண்ணியமானவர் = கனவா? நான் பேசுவதற்கானது இல்லை (4)

கண்ணியமானவர் = கனவா? நான் “நா” இல்லை (4)

கண்ணியமானவர் = கனவா? நான் - “நா” (4)

கண்ணியமானவர் = கனவா + ன் (4)

கண்ணியமானவர் = கனவான்

கனவான் = கனவான்

LHS = RHS :-)

Vanchinathan said…
இதென்ன புது கதை? கணிதச் சமன்பாடா? விடையின் பொருளை எழுதிவிட்டு அதோடு அதைக் கிறுக்குத்தனமாகவும் விளக்கிப் புதிர் என்று சொல்கிறேன். LHS, RHS என்று சொல்வது எனக்குப் புதிதாக இருக்கிறது. செல்போன் வந்ததும் இத்த்னை நாளாக லான்ட்லைனில் பேசிக் கொண்டிருந்தோம் என்ற கண்டுபிடிப்புபோல் இருக்கிறது எனக்கு.
I don't know how or where to thank you for visiting my blog and commenting. Thanks.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்