ராபர்ட் கனிகல் (www.robertkanigel.com) என்ற அமெரிக்கர் விஞ்ஞானியில்லை, அவர் ஓர் எழுத்தாளர். பல ஆய்வுகள் செய்து அறிவியல் தொடர்பான செய்திகள் கொண்ட புத்தகங்கள் பல எழுதியுள்ளார்.
இந்தியாவின் கணித மேதை ராமனுஜன் சரிதையை 1991ல் அவர் The Man Who Knew Infinity என்ற 400 பக்கங்களுக்கும் மேற்பட்ட நூலாக எழுதினார். அது பிரெஞ்சு, ஜெர்மனி, இதாலி, கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து நாட்டினர் மொழிகளில் மொழிபெயர்த்து பெரிதும் போற்றப்பட்டது. (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்தது).
ஐந்து வருடங்களுக்கு முன் இந்திய மொழிகள் பத்திலாவது (அஸ்ஸாமி, ஒதிஷா, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்கம் , தமிழ் ...) மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழாக்கம் செய்யும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. எல்லா மொழிகளிலும் நேஷனல் புக் ட்ரஸ்ட் என்னும் அரசு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இப்போது பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள பள்ளியில் நடை பெற்று வரும் சென்னைப் புத்தக்கக் கண்காட்சியில் அதை வாங்கலாம்.
கடை எண் 207,208. ஜனவரி 22 வரை.
முதல் அத்தியாயத்தின் முதற்பக்கம் இதோ:
அந்த மொழிபெயர்ப்பின் முகவுரையில் எழுதிய அகவற்பாவை இங்கே அளிக்கிறேன்:
காவிரி யாற்றின் கரையூர் இளைஞன்
ஏவிய கேள்விக் கணைகள் யாவும்
ஆவியை உலுக்க அறிஞர் திணறிடும்
தாவிப் பாய்ந்திடும் அறிவின் வீச்சாம்
நாவினில் எழுதினாள் நாமகிரித் தாயென
சேவித் துரைத்த சீரியோன் சரிதை
தூவிய நிகழ்ச்சித் தொகுப்பென இன்றிக்
காவியச் சுவையொடு கதையாய்க் கோத்து
மேலை நாட்டோர் மெச்சிடச் செய்த
நூலைத் தமிழில் நுகர்வோம் வாரீர்

Comments
அனந்தத்தை அறிந்தவன் (ராமனுஜன்)
ஒர் அரிய பொக்கிஷத்தை மொழிபெயர்க்க தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, ஒரு வரப்பிரசாதம்!
முதல் பக்கம் படித்தேன்.
காவிரிக்கரையின் எழிலை கண் முண்ணே கொணர்ந்து நிறுத்தியுள்ளீர்.
ஒரு கணிதப்பேராசியரால் இப்படியும் எழுதமுடியுமா என ஆச்சரியடைந்தேன்!
தங்கள் தமிழ்நடை, மற்றும் அகவற்பா நன்கு போற்றுதற்குரிய வகையில், இயல்பாகவும் உள்ளது!
உதிரிவெடியைத் தவிர்த்து, தங்களின் மற்றுமொறு ஆற்றலைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
வாழ்க! வளர்க!
வாழ்த்துக்கள்!
புதினங்களைப் படிப்பதைக்குறைத்து கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டதால், தமிழில் உருப்படியான நல்ல புத்தகம் ஒன்றைப் படித்து நிறைய வருடங்கள் ஆகி விட்டது என்பது ஒரு சங்கடப்படுத்தும் உண்மை. எனவே வாஞ்சியின் தமிழை நிறையவே சுவைத்துக்கொண்டிருக்கிறேன். திரைப்படத்தில் வெட்டப்பட்டுவிட்ட நிறைய விஷயங்கள் புத்தகத்தில் இருப்பதால், படத்தைப் பார்த்து விட்டதால் புத்தகத்தை படிக்க வேண்டாம் என்று நினைப்பது தவறு. இன்னும் ஓரிரு பிரதிகளாவது வாங்கி என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இந்நூலைப் படிக்க ஊக்குவிக்க முயற்சிக்கிறேன். தமிழில் இப்படிப்பட்ட தரமான புதினங்கள்ளலாத புத்தகங்களை வெளிக்கொணருவது அவ்வளவு சுலபமல்ல. வாஞ்சியில் இருந்து ஆரம்பித்து தமிழில் இந்த நூலைப் பதிப்பிக்க காரணமாய் இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் நன்றி.
-சுந்தர் வேதாந்தம்.
Really feeling blessed sir. Will send you a detailed message after reading the book!