சர வெடி கி. பாலசுப்ரமணியன் ******************* கி. பாலசுப்ரமணியன் 1985 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆக்கிய புதிர். தன்னுடைய வழக்கம் போல் ஒரு செய்தித்தாளின் பக்கத்தில் காலியாக இருந்த பகுதியில் அவர் எழுதியது. "இதைப் போட்டுப் பாருங்கள்", என்று என்னிடம் கொடுத்தார். நான் அப்போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் அதை எழுதிக் கொண்டேன். அதுதான் இது.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.