Skip to main content

தீபாவளிச் சரவெடி 2020

சென்ற வாரம் கி.பா. என்ற பெயரில் இங்கே பங்கேற்று வந்த முனைவர் கே. பாலசுப்ரமணியன் காலமனார். அவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியர், பின்னர் ஆராய்ச்சிப் பாதையில் நான் அடியெடுத்து வைக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். மற்றும் என் ஒருவனுக்காகத் தமிழில் குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்கியவர். பின்னர் எனது மாமனாரும் ஆனவர். அவர் நினைவாக இன்றைய சரவெடி. விடைகள் 18/11/2020 இரவு 9 மணிக்கு. Krypton English Grid puzzle will be made available some time between 10 am and 11 am today.

குறுக்காக
3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5)
6. பழுத்த மரம் பெறுவது வெல்லம் ஓரங்களை விட்டு சுற்றிக் கடி (4)
7. முன்னாள் குடியரசுத் தலைவரும் வருங்கால முதல்வரும் ஆடிடும் நளினம் (4)
8. சூழ்ச்சியோடு வீணையின் கம்பி அதிர்ந்த கரமா ? (6)
13. தலைமைச் செயலாளர் ரம்பத்தை மாற்றிச் செய்த ஒரு மலர் (6)
14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4)
15. வெறுப்புற்ற கந்தல் ஓரங்கிழிந்து சரீரத்தின் மேல் பகுதியை மூடும் (4)
16. மழையில் தோன்றியது மழையிலிருந்து காக்க உதவாது (5)

நெடுக்காக
1. மாட்டிற்கு சிறை நுழைவாயில் அலற கடைசிப் பெட்டி (5)
2. மண்ணில் நித்திரை நல்ல மூப்பின் அடையாளமின்றிக் கலைந்தது (5)
4. ஓராயுதமாக முதலில் விற்பதற்கு ஒரு வரியில் மாற்றம் (4)
5. இரு கால்களிடையே ஒரு பாதி நடக்கவிருப்பது (4)
9. பெரிய தானியம் பாதி காணாமற்போக வைத்த மந்திரம் (3)
10. வெளிச்சம் பெற காலை தொடங்கும் சம்பிரதாயம் ஒன்று மறைந்து திரிந்தது (5)
11. ஓராயுதத்தினிடையே சிக்கித் தவித்த தத்தை பயிரிடத் தொடங்கும் செயல் (5)
12. பெரிய குளம் மதுரையை எரித்தவள் பாதி செத்துப்போ (4)
13. புண்ணாக்கை ஆக்கும் கருவியில் துளித் துளியிட்டு புல்லை வெட்டு (4)

Comments

Raghavan MK said…
தீபாவளிச் சரவெடி 2020
விடைக்கு பின்னர் " தென்றல்" புதிர் தொடரும்
I have submitted, but, no acknowledgement
Thanks
Received acknowledgement by email.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்