கி.பா. நினவுக்கு அஞ்சலியாக செய்த தீபாவளிச் சரவெடியை இன்னமும் பலர் விடை கண்டு அனுப்பியுள்ளார்கள். இன்னமும் ஒரு நாள் கழித்து விடையனுப்புகிறேன்.
மாணவனாக 1984/85இல் வாரம் நான்கைந்து முறை கி.பா. அவர்களை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்து கணிதம் கற்றிருக்கிறேன். அப்படி அவரிடம் கற்றதால் பி எச்டி நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று எனது பயணம் இனிதாகத் தொடங்கியது. அந்த நாட்களில் அவ்வப்போது பல பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். ஹிந்து நாளிதழின் ஆங்கிலக் குறுக்கெழுத்துப் புதிரை அவர் போடுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு நாள் தமிழிலே புதிர் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. அப்படி மூன்று புதிர்களை அவர் தனது வழக்கம் போல் ஏதோ அச்சடித்த துண்டு பிரசுரத்தின் மூலையில் கட்டம் போட்டு என்னிடம் விடை கண்டுபிடிக்கக் கொடுத்தார். (அவர் வைத்துக் கொள்ளவில்லை). அதை நான் எனது கணித நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டேன். அதிலிருந்து ஒற்றைக் குறிப்பு இதோ: மணி ஒன்று பல்லை விளக்கவா? (3)

Comments
Is he Ki Pa Viswanathan?