வெண்ணிக்குயத்தியார் பாடிய வாகை (அல்லது) விடை 3270 கவிஞர்கள் அரசனைப் புகழ்ந்து பாடி ஏதேனும் பரிசு பெற்றுச் செல்வது வழக்கம். அதுவும் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்த மன்னனை வாகைத்திணையில் பாராட்டிப் பாடுவது வழக்கம். கரிகாலன், சேரன் பெருஞ்சேரலாதனை வென்று வந்த போது வெண்ணிக் குயத்தி(யார்) பாடுகிறார்: களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய். அதோடு நிற்காமல், அப்படியே தோற்ற அரசனையும் சொல்கிறார்: நின்னினும் நல்ல னன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் ணாணி வடக்கிருந்தோனே. ( புறநானூறு 66) சோழன் வீசிய வேல் சேரன் மார்பில் புகுந்து முதுகு வழியாய் வெளிவந்து முதுகிலும் காயமுற்றதை முதுகைக் காட்டி ஓடிய போது பெற்ற புண் என்று உலகோர் இழிவாக நினைக்கக் கூடாது என்று அவன் வடக்கிருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டான். அதனால் தோற்ற அவ்வரசன் உன்னைவிட நல்லவன் என்று சொல்கிறார். இதில் பல விஷயங்கள் இடிக்கின்றன. அப்படி வேல் பாய்ந்து மறுபுறம் வந்தபின் உடனே சாகவில்லையா? பல நாள் வடக்கிருந்துதான் சாகவேண்டுமா? இவ்வளவு தைரியமாக ஒரு பெண், அர...
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.