Skip to main content

Posts

Showing posts with the label விடை

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 56 விடை

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் ஊசி, லட்சுமி,  கிளி, குருவி, சிவாஜி    இதில் கிளி மற்றவற்றுடன் சேராதது.  தீபாவளிப் பட்டாசு வகைகள்: ஊசி வெடி, லட்சுமி வெடி, குருவி வெடி, சிவாஜி வெடி.   உதிரிவெடிக்கு 8 ஆண்டு நிறைவு பெற்றதற்குக் காசைக் கரியாக்காமல்  வெடி வெடித்துக் கொண்டாடியாயிற்று. இத் திரிவெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

விடை 4341

   நேற்றைய வெடி அயோத்தியில் ஆளாதவன் தந்தையிடம் இரண்டு ஸ்வரங்களை ஒதுக்கி மூன்றாவதைக் கொண்டான் (4) அதற்கான விடை: பரதன் = தசரதன் -த - ச - ப‌ த , ச , ப‌ ---> ஸ்வரங்கள்   ராமன் காட்டிலிருந்த போது பரதன் அயோத்தியில் இல்லாமல் வேறிடத்திலிருந்து ஆட்சி செய்தான் . இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 55 விடை

   நேற்றைய திரிவெடியில் பின்வரும்   சொற்கள் வெளிவந்தன: ஈட்டி, வேல், அம்பு, வாள், சூலம்   இம்முறை  பொருத்தமான ஆனால் வெவ்வேறான‌ விடைகள் வந்துள்ளன. அதைப் படிப்பது சுவாரசியமாக இருப்பதுடன் எப்படி மற்றவர்களின் சிந்தனை தர்க்கரீதியாக  வேறு வழியில் செல்கிறது என்று அறிந்து கொள்ள எனக்கு உதவுகிறது. நான் எண்ணிய விடை: வாள். இது மட்டுமே வெட்டும் (அல்லது பிளக்கும்) ஆயுதம் மற்றவை குத்துபவை. இதே விடைக்கு வேறொரு பொருத்தமான காரணத்தையும் வாச‌கர்கள் அளித்திருக்கிறீர்கள்: வாள் சண்டையின்போது கையில் ஏந்திய படியே இருக்கும், மற்றவற்றை எறிய வேண்டும்! இன்னொரு விடை, அம்பு. மற்றவற்றை வெறும் கையால் பயன்படுத்த இதற்கு மட்டும் வேறொரு கருவி (வில்) வேண்டும்! சூலம். இதன் முனை மூன்றாக இருக்கும் மற்றவை ஒரே முனையுடன் இருக்கும். நன்றி இதற்கு  விடையனுப்பியர்வர்கள் பட்டியலை இங்கே காணலாம்.  

விடை 4340

 நேற்றைய வெடி பெண்ணுடன் சேர மானம் பெரிதில்லை என்று சபதம் (5) அதற்கான விடை : வஞ்சினம் = வஞ்சி + மானம் -மா வஞ்சி = பெண் மானம் பெரிதில்லை = மானம் ‍-மா வஞ்சினம் = சபதம், சூளுரை இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

விடை 4339

 நேற்றைய வெடி நாளை மலர் கணையில் தொடுத்த ஒரு பாதி (4) அதற்கான விடை: அரும்பு = அம்பு + ரு அம்பு =  கணை ரு = "ஒரு" பாதி நாளை மலர் = நாளைமலரப்போகும் மலர்,  அரும்பு "க்" இல்லாததால், மலர்க்கணை என்று மன்மதன் பக்கம் போகக்கூடாது இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 53 விடை

 நேற்றைய திரிவெடியில் பின்வரும் நான்கு நீதிநூல்களின் பெயர்கள் வெளிவந்தன: சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி  இதில் திரிகடுகம் என்பது, சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் கலந்த மருந்தின் பெயர். அதுபோல் சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவையும் பல கலவைகளாலான மருந்தின் பெயர்கள்.  இனியவை நாற்பது மட்டும் மருந்தின் பெயரில்லாது,  இப்படி இப்படிச் செய்வது இனியது என்று கூறும் நூல்.  இதற்கு அனுப்பப்பட்ட விடைப் பட்டியலை இங்கே காணலாம்.   

விடை 4338

   நேற்றைய வெடி எலியிடமோ ஆசை குறைந்தால் தலைப்பிரசவத்திற்குத் தயாராகிறவள் பராக் (4) அதற்கான விடை : வளையோசை = வளையோ + சை வளையோ = எலியிடமோ = எலியினது இடமோ (ஆறாம் வேற்றுமைத் தொகையாக); சை = ஆசை குறைந்தால் தலைப்பிரசவத்துக்கு முன் வளைகாப்பு முடிந்தபின் கலகலவென பெண் வருவதை அறிவிக்கும் ஓசை. மூன்று நாட்கள் முன்பு லதா மங்கேஷ்கர், எஸ்பிபி பாடிய பாட்டைக் கேட்டபோதே இந்தவார்த்தையை அமுக்கிப் பிடித்துக் கொண்டேன், எதாவது புதிருக்குப் பிரயோஜனமாகுமென்று. இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 52க்கு விடை

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற  பெயர்கள்   டான்டே அலிகெரி (Dante Alighieri), மைகேலேஞ்செலோ(Michelangelo) மொஸார்ட்(Mozart) , வில்லியம் ஷேக்ஸ்பியர், விக்ரம் சேத்   மொஸார்ட் நீங்கலாக மற்ற அனைவரும் இலக்கியம் படைத்தவர்கள். ஓராண்டுகாலத்தை நிறைவு செய்த 52ஆம் திரிவெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

விடை 4337

 நேற்றைய வெடி அழகியும் இடையொடிந்தபின் சற்றே எடை கூடி வந்த பொது வெளி (5)  அதற்கான விடை: அம்பலம் = அம் + பலம் அம் = அழகியும் (இடையொடிந்து) பலம் = சிறிய  எடையளவு அம்பலம் = பொதுவெளி இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 51 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற சொற்கள்:  நேபாளம், மியான்மர், மலேசியா, இந்தியா, இலங்கை இதற்கு அனுப்பப்பட்ட விடைப் பட்டியலை இங்கே காணலாம்.     

விடை 4336

     நேற்றைய வெடி கிளி உண்ணத் தயாராகும் முன்பு சமைப்பது சிறிய கொங்குநகருக்காக எனலாம் (5) கோவைப்பழம், கிளி உண்பது. அத்திக்காய் யோசித்தவர்கள்,  தயாராகும் முன்பு அப்பழம்,  கோவைக்காய் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். கொங்குநகர் = கோயம்புத்தூர் அது சிறியதாகும்போது = கோவை எதற்காய் அதை கோவைக்காய் என்று சொன்னேன் என்பதை விளக்காய் என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள். அது ஒன்றும் புரியாத விளாங்காயல்ல. .நேற்றைய திரிவெடிக் கு பலவிதமாய் யோசித்தவர்களின் புத்திசாலித்தனமான‌ விடைகளை மனதாரப் பாராட்டிக் கருத்துரை எழுத நேரமில்லாதவர்கள் சார்பாக  இன்னொருமுறை  இங்கே நன்றி கூறுகிறேன். இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 50 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள். சுண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய்  இப்புதிருக்குப் பொருத்தமாய் பல விடைகள், வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்கப்படவேண்டியவை என்று தெரிந்து கொண்டேன் (1) வாழைக்காய் மட்டும் பழமாகவும் உண்ணப்படுவது, மற்றவை காய்களாகவே பயன்படும் என்று விடை கூறிய மீ கண்ணன், மீனாக்ஷி, அனிதா காந்தி, பானுமதி இவர்களுக்குப் பாராட்டுகள். (2) சுண்டைக்காய் மட்டும் அப்படியே முழுதாகச் சமைக்கப்படுவது, மற்றவையெல்லாம் நறுக்கிய துண்டுகளாகவே சமைக்கப்படும் என்ற‌ ராம்கி கிருஷ்ணன் அளித்த விடை  ஏற்கத்தக்கது. பாராட்டுகள். (3) அமாவாசையன்று வாழைக்காய் மட்டும் சமைக்கலாம் என்ற மரபை(பௌர்ணமியன்று!) சுட்டிகாட்டியிருக்கிறார் சொக்கலிங்கம். ஏற்றுக்கொள்ளலாம். (4) பத்மா, ஜோசப் அமிர்தராஜ் இருவரும் வாழைக்காய் மட்டும் தோலை நீக்கிச் சமைக்கப்படவேண்டிய காய் மற்றவை தோலோடு சமைக்கப்படுபவை என்ற பொருத்தமான விடையளித்திருக்கிறார்கள். பாராட்டுகள் (வாஞ்சிநாதனின் விடையும் இதுவே. தினம் காலையில் வீட்டில் சமையலுக்கு உதவுகிறேன் என்று கையில் கத்தியுடன் கிளம்பும்போது இன்று ...

உதிரிவெடி 4335 விடை

   நேற்றைய உதிரிவெடி அடிப் பெண்ணே, சிதம்பரமா? இல்லை வள்ளியூர் (5) அதற்கான விடை : தில்லையாடி   = தில்லையாடி தில்லையா = சிதம்பரமா டி =  அடிப் பெண்ணே தில்லையாடி = "வள்ளி"யூர்   (நேற்றைய திரிவெடியில்) வந்த  வள்ளியம்மையின் ஊர்       இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 49 விடை

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற   பெயர்கள்: சாவித்திரிபாய் புலே,  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பெங்களூர் நாகரத்தினம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம்     இதில் தில்லையாடி வள்ளியம்மை நீங்கலாக மற்ற நால்வரும் பெண்ணுரிமைக்குப் போராடியவர்கள். மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்குப் போராடினார்கள். பெங்களூர் நாகரத்தினம்மாள் பெண்கள் பாடுவதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை எதிர்த்துப் போராடினார். சாவித்திரிபாய், பெண்கள், தலித்கள் கல்வி கற்று முன்னேற வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் கோட், சூட் அணிந்த மோகன்தாஸ் காந்தியுடன் இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான சட்டங்களை எதிர்க்கும் போராட்டத்தில் கலந்து சிறை சென்றவர். அவர் தென்னாப்பிரிக்காவிலேயெ பிறந்து வளர்ந்து பதினாறாம் வயதிலேயெ அங்கே இறந்துபோனவர். மற்றவர்கள் எல்லோரும் இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்தவர்கள். விடையளித்தோர்  பட்டியலை இங்கே காணலாம்.  

திரிவெடி 48 விடை

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் வெள்ளி, நீலம், நெல், மரவள்ளி, கருணை நான் எண்ணிப்பார்க்காத ஆனால் சுவாரசியமான விடைகள் வந்துள்ளன. கருணை என்பது மட்டும் மனதின் உணர்ச்சி மற்றவை பொருள்கள் என்பது ஓரளவுதான் சரி, ஏனென்றால் மொட்டையாக பொருள்கள் என்பது நெருக்கமான தொடர்பைக் காட்டவில்லை. இதே நான்கு சொற்களை இயற்கை வளங்கள் என்று பிணைக்கலாம் அல்லது தவரங்களைச் சார்ந்தவை என்று வெள்ளியை  நீக்கி மற்றவற்றைக் கூறலாம். மண்ணுக்குள்ளா அல்லது மேலா என்ற வகையில் நெல் தனித்திருப்பது என்கிறார்கள். என்னுடைய விளக்கம் இதோ: தனித்த சொல் மரவள்ளி . மற்றவை  பற்றி: வெள்ளி (சுக்கிரன் என்றும் அழைக்கப்படும்) நவகிரகங்களில் ஒன்று. நீலம் (sapphire), நவரத்தினங்களில் ஒன்று. நெல் நவதானியங்களில் ஒன்றாகவும், கருணை  நவரசங்களில் ஒரு ரசம் என்றும் ஒன்பது ஒன்பதாக வகைப்படுத்தப்படுபவையில் ஒன்றாக உள்ளன. மீண்டும் அடுத்த சனிக்கிழமை வேறொரு திரிவெடியில் பார்க்கலாம். புதிதாக வந்துள்ளவர்கள் இன்று உதிரிவெடியையும், க்ரிப்டான் என்ற ஆங்கிலப் புதிரையும் எட்டிப் பாருங்கள். மேலே மூன்றுபட்டையை அழுத்தி பழைய புதிர்களைப் பாருங்கள், ஆன...

விடை 4333

   நேற்றைய உதிரிவெடி இரண்டில் மூன்றாவதைக் கொண்ட ஓர் ஆள் நட்பாகப் பழகுபவர் (4) அதற்கான விடை :  நண்பர் = நபர் + ண் நபர் = ஓர் ஆள் ண் = "இரண்டில்" மூன்றாவது (எழுத்து)       இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி விடை 47

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற  தனிமங்களின் பெயர்கள் (பிழைகளைத் திருத்தி): பல்லேடியம் (Pd), டெர்பியம் (Tb),  தூலியம் (Tm), சீரியம் (Ce), ப்ரொமெதியம் (Pm)    தனிமங்களின் அட்டவணையில் இரண்டு வரிசைகளில் இடைவெளி இருக்கும். விடுப‌ட்ட அவை தனியாக வேறிரு வரிசைகளில் அட்டவணையில் இருக்கும்.  லாந்தனம் என்ற 57வது தனிமத்தைப் பின்வரும்  முதல் இடைவெளியிலிருந்து (58-71)  இன்றைய புதிரில் நான்கை (முதன்முதலாகத் தேடிப் பெயரையறிந்துகொண்டு) அளித்திருந்தேன். பல்லேடியம் மட்டும் அந்த வகையில் சேராதது. விடையளித்தோர்  பட்டியலை இங்கே காணலாம்.  

விடை 4332

 நேற்றைய வெடி அன்ன நடை தொடங்காமல் பிறர் பொறுப்பில் விடு (4)  அதற்கான விடை: ஒப்படை = ஒப்ப + டை ஒப்ப = அன்ன (உவம உருபு) டை = நடை- ‍ ந‌   இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

விடை 4331

   நேற்றைய உதிரிவெடி சொல்லியது எவன்? தலையை வெட்டி உயிரை வாங்குப‌வன்தான்  (5) அதற்கான விடை :  கூற்றுவன் = கூற்று + எவன் ‍- எ கூற்று = சொல்லியது  ("சாட்சியின் கூற்று, குற்றஞ் சாட்டப்பட்டவர் கொலை நடந்த நேரத்தில் அங்கேயிருந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது") கூற்றுவன் = எமன் சரியான விடையைக்  கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள்.       இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.