நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற பெயர்கள்:
சாவித்திரிபாய் புலே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பெங்களூர் நாகரத்தினம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம்
இதில் தில்லையாடி வள்ளியம்மை நீங்கலாக மற்ற நால்வரும் பெண்ணுரிமைக்குப் போராடியவர்கள். மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்குப் போராடினார்கள். பெங்களூர் நாகரத்தினம்மாள் பெண்கள் பாடுவதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை எதிர்த்துப் போராடினார். சாவித்திரிபாய், பெண்கள், தலித்கள் கல்வி கற்று முன்னேற வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் கோட், சூட் அணிந்த மோகன்தாஸ் காந்தியுடன் இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான சட்டங்களை எதிர்க்கும் போராட்டத்தில் கலந்து சிறை சென்றவர். அவர் தென்னாப்பிரிக்காவிலேயெ பிறந்து வளர்ந்து பதினாறாம் வயதிலேயெ அங்கே இறந்துபோனவர். மற்றவர்கள் எல்லோரும் இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்தவர்கள்.
Comments