சாய் சதுரங்கள் (rhombus) பற்றிய முந்தைய கட்டுரையில் அதன் மூலை விட்டங்கள் (diagonals) இரண்டில் ஒன்றின் அளவை மாற்றாமல் மற்றது எவ்வளவு பெரிதாக வருமாறும் அமைக்க முடியும் என்று பார்த்தோம். அவற்றை அமைக்கும் விதத்தையும் பார்த்தோம். இன்று சாய்சதுரத்தின் பக்க அளவை மாற்றாமாலே எத்தனை வடிக்கலாம் என்று அலசுவோம். அப்படி மாற்றினால் கோணங்கள் மட்டும் மாறும். இது கற்பனை செய்வதற்கு எளிதானதுதான் ஒரு சதுரத்தையே எடுத்துக் கொள்வோம் நான்கு சம அளவுள்ள இரும்புப் பட்டைகளை மூலைகளில் திருகாணி கொண்டு இணைத்து உருவாக்கப் பட்ட சட்ட்த்தை நினைத்துக் கொள்வோம். திருகாணியின் இறுக்கத்தைக் குறைத்தால் சட்டத்தை அதன் மூலைகளில் அசைத்துக் கோணங்கள் மாறும். ஆனால் பக்க அளவு மாறாது (அதே இரும்புப் பட்டைதானே, மந்திரத்தால் நீண்டு வளரப் போவதில்லையே!) சட்டைகளை மாட்டுவதற்கு இது போன்ற மரச்சட்டங்கள் ஒரு காலத்தில் இருந்தன. இதோ அதன் படம். இதோ 5 செமீ அளவுள்ள பக்கங்களைக் கொண்ட எல்லா சாய்சதுரங்களையும் கண்டறியும் வரைகணித வழிமுறையைக் காண்போம். முதலில் 5 செம...
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.