Skip to main content

Posts

Showing posts from December, 2019

விடை 3915

இன்றைய வெடி: வாகை சூடு படலம் உரச விலகிட இனிப்பு செய்ய தேவைப்படும் (4) அதற்கான விடை:  வெல்லம் = வெல் + லம் வெல் = வாகை சூடு லம் = படலம் ‍- பட (உரச) இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள். **********

உதிரிவெடி 3915

உதிரிவெடி(3915 டிசம்பர் 31, 2019) வாஞ்சிநாதன் ******************** வாகை சூடு படலம் உரச விலகிட இனிப்பு செய்ய தேவைப்படும் (4) Loading…

விடை 3914

இன்றைய வெடி: விஷ்ணு தமிழனாக சிறகடிக்கத் தொடங்க‌ அன்னத்தின் முந்தைய உரு (3) அதற்கான விடை:  அரிசி (அன்னம், அதாவது சாதம், சமைப்பதற்கு முன் அரிசியாய்    இருக்கும்) அரிசி = அரி + சி அரி = ஹரி, தமிழ்ப்படுத்தப்படும்போது சி = சிறகடிக்க என்பதன் தொடக்க எழுத்து இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 3914

  உதிரிவெடி 3914 (டிசம்பர் 30, 2019) வாஞ்சிநாதன் *********************   விஷ்ணு தமிழனாக சிறகடிக்கத் தொடங்க‌ அன்னத்தின் முந்தைய உரு (3) Loading…

விடை 3913

இன்று காலை வெளியான வெடி: அன்புக்குரியவள் வனஸ்பதியில் சுத்தமானதைக் கலந்த சுருக்கு (4) அதற்கான விடை:  கண்மணி = கண்ணி + ம‌ கண்ணி = சுருக்கு (வேடர்கள் பறவைகளைப் பிடிக்கப் பயன்படுத்துவது) ம = வனஸ்பதி என்ற மேளகர்த்தா ராகத்தில் பிரதி மத்யமம் இல்லை, சுத்த மத்யமம். மேளகர்த்தா ராகங்களின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, வனஸ்பதி ராகத்தில்  ரிஷபமும்,  காந்தாரமும் சுத்த வகையாகத்தான் வருகின்றன. அதற்கு பதிலாக "சங்கராபரணத்தில்/கரஹரப்ரியாவில் சுத்தமான‌து"   என்றால் மிகப் பொருத்தமாக   'ம'  மட்டுமே உறுதியாகச் சொல்லலாம். ஆனால், "You need to say what you mean, but need not mean what you say" என்ற புதிரமைக்கும் கொள்கையின் படி இப்படிச் செய்தேன். அதோடு வனஸ்பதி, சுத்தம் என்ற இரு சொற்களும்  சேர்ந்து வந்தால் ராகங்கள் பக்கம் போகாமல் திசை திருப்ப முடியும் என்ற எண்ணமும் வந்தது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 196

Krypton 196 (29th December 2019) Vanchinathan ************************** Out of mercy I  brought in excessive deprivation (7) (Remember to visit this page on New Year morning). Loading...

உதிரிவெடி 3913

உதிரிவெடி 3913 (டிசம்பர் 29, 2019) வாஞ்சிநாதன் *********************   அன்புக்குரியவள் வனஸ்பதியில் சுத்தமானதைக் கலந்த சுருக்கு (4) Loading...

Solution to Krypton 195

Today's clue: Insult about sending a ball to pocket in full glare of publicity (9) Its solution:  SPOTLIGHT = slight + pot slight = insult pot = (in billiards) put the ball in pocket (The form of the word in the clue as "sending" is not a good choice. Hope it it did not confuse) Click here to see the solutions received.

விடை 3912

இன்று காலை வெளியான வெடி: கோபமடைந்ததும்  குமுறி கொம்பு முனை சீவி துதித்த  விளைவு (6) அதற்கான விடை:   கொதித்ததும் = கொம் + துதித்த கொம் = முனை சீவிய  கொம்பு தித்தது  = துதித்த  ( குமுறி ) கோபமடைந்ததும் = கொதித்ததும் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 195

Krypton 195 (28th December 2019)  Vanchinathan *********************** Insult about sending a ball to pocket in full glare of publicity (9) NOTE: I missed posting a clue last Sunday. I will compensate it on New Year. Loading…

உதிரிவெடி 3912

உதிரிவெடி 3912 (டிசம்பர் 28, 2019) வாஞ்சிநாதன் ****************** கோபமடைந்ததும்  குமுறி கொம்பு முனை சீவி துதித்த  விளைவு (6)   Loading...

விடை 3911

இன்று காலை வெளியான வெடி: பரு மூடிய சுழியுடன் ஆரம்பிக்கத்      தூண்டு (4) பரு மூடிய சுழியுடன் ஆரம்பிக்கத்     தூண்டு (4) அதற்கான விடை: உசுப்பு  = உப்பு + சு பரு  = உப்பு ( வினைச்சொல்) சு = சுழியுடன் ஆரம்பிக்க இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட   விடைகளின் பட்டியல் இங்கே.

விடை 3910

இன்று காலை வெளியான வெடி: தாங்கி நிற்பது  நீதான் இடை  வெளியில் மாலை  (4) அதற்கான விடை:  ஆதாரம் = ஆரம் + தா ஆரம் == மாலை தா = 'நீதான்' இடை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 3909

இன்று காலை வெளியான வெடி: மேலும் வெறும் உடல் ஒவ்வொருவருக்கும் ஒன்று (5) அதற்கான விடை:  மேலும் = கூடுதலாக = கூடு + தலா + க; கூடு = வெறும் உடல் தலா = ஒவ்வொருவருக்கும் க = தமிழ் எண்ணுரு 1. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3909

உதிரிவெடி 3909 (டிசம்பர் 25, 2019) வாஞ்சிநாதன் *********************** மேலும் வெறும் உடல் ஒவ்வொருவருக்கும் ஒன்று (5) Loading…

விடை 3908

இன்று காலை வெளியான வெடி: வேறொரு நாட்டில் வாழப் போவது  அடியேன் இடை தழுவியது தண்டனைக்குரிய செயல் (6) அதற்கான விடை: குடியேற்றம் = டியே + குற்றம் டியே = அடியேன் இடை குற்றம் = தண்டனைக்குரிய செயல் இன்றைய வெடிக்கு விடையனுப்பியர்வர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3908

உதிரிவெடி 3908 (டிசம்பர் 24, 2019) வாஞ்சிநாதன் ********************* வேறொரு நாட்டில் வாழப் போவது  அடியேன் இடை தழுவியது தண்டனைக்குரிய செயல் (6) Loading…

விடை 3907

இன்று காலை வெளியான வெடி: ஒரு பூதம் கடைசியாய்ச் சின்ன புலி கண்டு கொள்ளாததில் சிக்கியது (3) அதற்கான விடை: புனல்  = புல் + ன‌ புல் = புலி கண்டு கொள்ளாதது ன‌ = கடைசியாயச் சின்ன‌ புனல் = நீர், பஞ்ச‌ பூதங்களிலொன்று இப்புதிருக்கு விடைகளைக் கண்டவர்கள் பட்டியலைக் காண இங்கே சென்று பார்க்கவும்.

உதிரிவெடி 3907

உதிரிவெடி 3907 (டிசம்பர் 23, 2019) வாஞ்சிநாதன் ********************* ஒரு பூதம் கடைசியாய்ச் சின்ன புலி கண்டு கொள்ளாததில் சிக்கியது (3) Loading…

அறிவிப்பு

இன்று ஒரு நாள் தவறிவிட்ட உதிரிவெடி,  நாளையிலிருந்து   (திங்கள்கிழமை, 23/12/2019, )  வெளிவந்துவிடும். வழக்கம்போல் 6 மணிக்கு எதிர்பார்க்கவும்.

உதிரிவெடி 3906

உதிரிவெடி 3906 (டிசம்பர் 21, 2019) வாஞ்சிநாதன் ******************* இயற்கையாக பூமியில் கிடைக்கும் பழம் சுவைப்பதில்லாமல்  பெயர் (4) Loading…

விடை 3905

இன்று காலை வெளியான வெடி: நீண்ட தூர சிக்கலோடு திட்டி  உணவை ஒதுக்கிவிடும் சமயம் (4) அதற்கான விடை: ஏகாதசி = ஏசி + காத ஏசி = திட்டி காத (ம்)  = நீண்ட தூர(ம்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3905

உதிரிவெடி 3905 (டிசம்பர் 20, 2019) வாஞ்சிநாதன் ****************** நீண்ட தூர சிக்கலோடு திட்டி  உணவை ஒதுக்கிவிடும் சமயம் (4) Loading...

விடை 3904

இன்று காலை வெளியான வெடி: உதாரணமாக  y = -2x+3, சரியத் தொடங்கி பள்ளத்தில் வீழ்ந்தது என்பார் இடை (5) அதற்கான விடை: சமன்பாடு = ச + மடு + ன்பா ச = சரியத் தொடங்கி மடு = பள்ளம் ன்பா = 'என்பார்' இடை y = -2x + 3  என்பது சமன்பாட்டுக்கு ஓர் உதாரணம். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3904

உதிரிவெடி 3904 (டிசம்பர் 19, 2019) வாஞ்சிநாதன் ******************* உதாரணமாக  y = -2x+3, சரியத் தொடங்கி பள்ளத்தில் வீழ்ந்தது என்பார் இடை (5) Loading...

விடை 3903

இன்று காலை வெளியான வெடி: வருங்கால  மட்டை ஆசிரியர் பார்த்து உலகைத் துறந்தார் (4) அதற்கான விடை: குருத்து = குரு + பார்த்து - பார் குருத்து = தென்னை, பனை போன்ற மரங்களின் மட்டைகளின் ஆரம்பகால வடிவம். குரு = ஆசிரியர் பார் = உலகம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3903

உதிரிவெடி 3903 (டிசம்பர் 18, 2019) வாஞ்சிநாதன் **********************  வருங்கால  மட்டை ஆசிரியர் பார்த்து உலகைத் துறந்தார் (4) Loading…

விடை 3902

விடை 3902 இன்று காலை வெளியான வெடி: போர் வர்ணனையாளன் கடைசியாக வராததால் ஒரு ஸ்வரத்துடன் சுற்றி வா (4) அதற்கான விடை:  சஞ்சரி = சஞ்சய்/யா - யா + ரி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியலை  இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3902

உதிரிவெடி 3902 (டிசம்பர் 17, 2019) வாஞ்சிநாதன் ******************** போர் வர்ணனையாளன் கடைசியாக வராததால் ஒரு ஸ்வரத்துடன் சுற்றி வா (4) Loading…

விடை 3901

இன்று காலை வெளியான வெடி: பத்தின் கலவையில்   ஒன்று குறைய எஞ்சியிருப்பது ஒரே தனிமம் (4) அதற்கான விடை:  தங்கம்.  வேதியியல் படி தங்கம் ஒரு தனிமம். தசாங்கம் என்ற வாசனைப் பொடி பத்து விதப் பொருட்களின் கலவை. அதிலிருந்து ஒன்று (அதாவது ஓரெழுத்தான 'சா') போக எஞ்சியது தங்கம். மிகவும் குறைவான விடைகள்தான் வந்திருப்பதால் தசாங்கம் என்றால் என்ன என்பதற்கு,  கைக்குக் கிடைத்த (வணிக) வலைப்பக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். 'ஒரே' என்றது பத்தில் ஒன்று போய் ஒன்பது எஞ்சவில்லை, ஒன்றுதான் என்பதற்காக. நல்ல வேளை நான் வேதியியலைப் படிக்காமல் போனேன். இப்படி மோசமான கணக்கெல்லாம்  வரும் பாடத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். என்றுமில்லாத அதிசயமாக 4 மணிக்குப் பிறகு ஏழெட்டு விடைகள் வந்துள்ளன.

உதிரிவெடி 3901

உதிரிவெடி 3901 (டிசம்பர் 16, 2019) வாஞ்சிநாதன்   ******************** பிழை திருத்திய வடிவம்: பத்தின் கலவையில்   ஒன்று குறைய எஞ்சியிருப்பது ஒரே தனிமம் (4) Loading…

விடை 3895

இன்று காலை வெளியான வெடி: சொந்தமான  தோலையெடு  பின்னர், கேரளத்துக்காரரிடம் நாரையெடு (3) அதற்கான விடை:    உரிய = சொந்தமான =  உரி + ய உரி = தோலையெடு ய  = நாயர் - நார் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3900

உதிரிவெடி 3900 (டிசம்பர் 15, 2019) வாஞ்சிநாதன் ******************** சொந்தமான  தோலையெடு  பின்னர், கேரளத்துக்காரரிடம் நாரையெடு (3)     Loading…

விடை 3899

இன்று காலை வெளியான வெடி: மத்தியாகப்  பாயசம்  கலந்தது ஒன்று விட்ட தம்பி தாரம் முறை (7) அதற்கான விடை:  சம்பிரதாயம்   = யச +  ம்பி + தாரம் யச : பாயசம் என்பதன் மத்தி ம்பி: "ஒன்று" விட்ட தம்பி, 'த" என்ற எழுத்து ஒன்றை விட்ட பின் தம்பி முறை = சம்பிரதாயம் ('தாலி கட்டிக் கொள்ளும்போது  மணப்பெண் மஞ்சள்  நிறத்தில் நூல்புடவை அணிந்து கொள்வதுதான்  எங்கள் வீட்டில் முறை').   இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை  இங்கே சென்று பார்க்கவும்

உதிரிவெடி 3899

உதிரிவெடி 3899 (டிசம்பர் 14, 2019) வாஞ்சிநாதன் ********************   மத்தியாகப்  பாயசம்  கலந்தது ஒன்று விட்ட தம்பி தாரம் முறை (7) Loading…

விடை 3898

இன்று காலை வெளியான வெடி: மெல்லிய துணி அணிந்து தாபம் குறைத்து  காமத்தை வெளிப்படுத்தும்  பேச்சு (5) அதற்கான விடை: சல்லாபம்   = சல்லா + (தா)பம்  சல்லா = மெல்லிய துணி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3898

உதிரிவெடி 3898 (டிசம்பர் 13, 2019) வாஞ்சிநாதன் ******************** மெல்லிய துணி அணிந்து தாபம் குறைத்து  காமத்தை வெளிப்படுத்தும்  பேச்சு (5) Loading…

விடை 3897

இன்று காலை வெளியான வெடி: ஓட்டு சில்லு  முனை  மடிந்து கொண்டது (4) அதற்கான விடை: செலுத்து = லு + செத்து  லு:           சில்லு முனை செத்து : மடிந்து இன்று இப்புதிருக்கு  அனுப்பப்பட்ட விடைகளை இங்கே   சென்று காணலாம்.

விடை 3896

இன்று காலை வெளியான வெடி: ஒரு  ராகம் கேட்டவுடன் தாளத்துடன் ரசிக்கத் தொடங்கியவர்கள் காலம் முடிந்தது (4) அதற்கான விடை: கேதாரம் = ஒரு ராகத்தின் பெயர். கே ட்டவுடன், தா ளத்துடன், ர சிக்க  இச்சொற்களின் தொடக்க எழுத்துகளும் "கால ம் " என்பதன் முடிவான எழுத்தும் கொண்டமைக்கப்பட்டது.  மற்றபடி இக்காலத்து மக்களெல்லாம் ராகங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று  நான் சொல்ல வந்ததாக நினைக்க வேண்டாம். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3896

உதிரிவெடி 3896 (டிசம்பர் 11, 2019) வாஞ்சிநாதன் *********************** ஒரு  ராகம் கேட்டவுடன் தாளத்துடன் ரசிக்கத் தொடங்கியவர்கள் காலம் முடிந்தது (4) Loading...

விடை 3895

விடை 3895 இன்று காலை வெளியான வெடி: உழைத்துக் கச்சேரி செய்யும்படி   ஆசையாக  விண்ணப்பம் (5) அதற்கான விடை: பாடுபட்டு விடைக்கான விளக்கத்தை இதைச் சொடுக்கிக்கேட்கவும். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3895

உதிரிவெடி 3895 (டிசம்பர் 10, 2019) வாஞ்சிநாதன் ********************* உழைத்துக் கச்சேரி செய்யும்படி   ஆசையாக  விண்ணப்பம் (5) Loading...

விடை 3894

இன்று காலை வெளியான வெடி: தாண்டிச் செல்கையில் எல்லைக்கு முன்னே  பெற்றவர் (4) அதற்கான விடை:  அப்பால் = அப்பா + ல் அப்பா = பெற்றவர் ல் = செல்கையில் எல்லை தாண்டி = அப்பால் (ஆற்றுக்கு அப்பால் உள்ள கோவிலில் இருக்கும்   முனீஸ்வரன்தான்  எங்கள் குல தெய்வம் ) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண   இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3894

 உதிரிவெடி 3894  (டிசம்பர்  9, 2019) வாஞ்சிநாதன் ***************** தாண்டிச் செல்கையில் எல்லைக்கு முன்னே  பெற்றவர் (4) Loading…

விடை 3893

இன்று காலை வெளியான வெடி: ஒரு ராகம்,  ராகத்தில் ஒரு பகுதி,  காற்றில்  வந்தது (3) அதற்கான விடை:  வராளி = வளி + ரா வளி : காற்று ரா:  ராகத்தில் ஒரு பகுதி வராளி: ஒரு  ராகத்தின் பெயர் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3893

உதிரிவெடி 3893   (டிசம்பர் 8, 2019) வாஞ்சிநாதன் *********************  ஒரு ராகம்,  ராகத்தில் ஒரு பகுதி,  காற்றில்  வந்தது (3) Loading…

Solution to Krypton 190

Today's clue: Reckless behaviour of many international school  heads'  head   (8) Its solution: MISCHIEF = M, I, S,  CHIEF M,I, S = Many International School  (heads) Chief = head Here is the link to the list of all the answers received for this.

விடை 3892

இன்று காலை வெளியான வெடி: தலை தடுமாற பளு சுமந்த  ஒரு நாடு (4) அதற்கான விடை:   பாரதம் = பாரம் + த பாரம் = பளு த = தலை தடுமாற இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க  இங்கே செல்லவும்.

விடை 3891

இன்று காலை வெளியான வெடி: செம்பு சங்கிலி முனை மூடி வைத்த பாத்திரம் (4) அதற்கான விடை:  கலசம் = கலம் + ச கலம் = பாத்திரம் ச = சங்கிலி முனை செம்பு = கலசம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

விடை 3890

இன்று காலை வெளியான வெடி நடு முதல்வன் கடையன் புகுந்த தீங்கு (3) அதற்கான விடை:   ஊன்று = ஊறு + ன் ஊறு: தீங்கு ன் = முதல்வன் கடையன் நடுதல் == ஊன்றுதல் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும் .

விடை 3889

இன்று காலை வெளியான வெடி: இரு  சுரங்களை இழந்த இரக்கத்தக்க நிலையால் வந்த ஏக்கம் (3) அதற்கான விடை:   தாபம்  = பரிதாபம் -  ப - ரி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3889

உதிரிவெடி 3889 (டிசம்பர் 4, 2019) வாஞ்சிநாதன் *******************     இரு  சுரங்களை இழந்த இரக்கத்தக்க நிலையால் வந்த ஏக்கம் (3) Loading…

விடை 3888

இன்று காலை வெளியான வெடி: அல்லல் பட்டு சாய்ந்து கொள்ளும் பொருளா? பெண்ணே சொல்! (4) அதற்கான விடை: திண்டாடி ( அல்லல் பட்டு)  = திண்டா + டி திண்டு  = தலையணை போல் மென்மையான  சாய்ந்து கொள்ளும் பொருள் . திண்டாடி  =  இது ஒரு திண்டுதானா என்ற கேள்வி,  சிறுமியிடம் கேட்கப்படுகிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை  இங்கே காணலாம்.

உதிரிவெடி 3888

உதிரிவெடி 3888  (டிசம்பர் 2, 2019) வாஞ்சிநாதன் ********************* அல்லல் பட்டு சாய்ந்து கொள்ளும் பொருளா? பெண்ணே சொல்! (4) Loading…

விடை 3887

இன்று காலை வெளியான வெடி: ஓட்டுநர் நடு இரவு சென்ற பின் காரியத்தை நிறைவேற்று  (2) அதற்கான விடை:  சாதி = சாரதி  - ர சாரதி: ஓட்டுநர் ர:  'நடு'  இரவு  இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3887

உதிரிவெடி 3887 (டிசம்பர் 2, 2019) வாஞ்சிநாதன் ******************* ஓட்டுநர் நடு இரவு சென்ற பின் காரியத்தை நிறைவேற்று  (2) Loading...

விடை 3886

விடை 3885 இன்று காலை வெளியான வெடி: மேலே செல்ல உதவும்  மந்திரம்  ஓரங்களுடன் காட்டும் சொற்சித்திரம் (4) அதற்கான விடை: படிமம் = படி  + மம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3886

உதிரிவெடி 3886 (டிசம்பர் 1, 2019) வாஞ்சிநாதன் ********************* மேலே செல்ல உதவும்  மந்திரம்  ஓரங்களுடன் காட்டும் சொற்சித்திரம் (4) Loading…