இன்று காலை வெளியான வெடி:
அன்புக்குரியவள் வனஸ்பதியில் சுத்தமானதைக் கலந்த சுருக்கு (4)
அதற்கான விடை:
கண்மணி = கண்ணி + ம
கண்ணி = சுருக்கு (வேடர்கள் பறவைகளைப் பிடிக்கப் பயன்படுத்துவது)
ம = வனஸ்பதி என்ற மேளகர்த்தா ராகத்தில் பிரதி மத்யமம் இல்லை, சுத்த மத்யமம்.
மேளகர்த்தா ராகங்களின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, வனஸ்பதி ராகத்தில் ரிஷபமும், காந்தாரமும் சுத்த வகையாகத்தான் வருகின்றன. அதற்கு பதிலாக "சங்கராபரணத்தில்/கரஹரப்ரியாவில் சுத்தமானது" என்றால் மிகப் பொருத்தமாக
'ம' மட்டுமே உறுதியாகச் சொல்லலாம். ஆனால், "You need to say what you mean, but need not mean what you say" என்ற புதிரமைக்கும் கொள்கையின் படி இப்படிச் செய்தேன்.
அதோடு வனஸ்பதி, சுத்தம் என்ற இரு சொற்களும் சேர்ந்து வந்தால் ராகங்கள் பக்கம் போகாமல் திசை திருப்ப முடியும் என்ற எண்ணமும் வந்தது.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments