Skip to main content

Posts

Showing posts from December, 2018

விடை 3537

இன்றைய வெடி: உங்களுடைய இரண்டடி பா தொலைந்து போனது (4)  இதற்கான விடை:  தங்கள் அடி = பாதம் இரண்டடி = பாதங்கள்!  

விடை 3536

இன்றைய வெடி: தட்டான் அணிந்திருப்பதும் பித்தளைக் கலவை கொண்டதுதான் (3)  இதற்கான விடை:  தும்பி= அணிந்திருப்ப தும் பி த்தளைக் இன்று விடையளித்தோர் பட்டியலை வெளியிட ராஜி ஹரிஹரன் இசைந்துள்ளார். அவருக்கு நன்றி. **************** தும்பி என்பது ஒரு பூச்சியினம். ஹெலிகாப்டர் போன்ற தலை கொண்ட இப்பூச்சியின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்ஸ்கள் உள்ளன.  இதன் வாலில் சிறுவர்கள் நூலைக் கட்டிக் கொடூரமாக விளையாடுவார்கள். தேனீ போல் இது அவ்வளவு முறை சிறகடிக்காது. ( எகோர் காமெலேவ் எடுத்த புகைப்படம். இணையத்தில் இலவசமாகப் பயன்படுத்த அனுமதி  கொடுக்கப்பட்ட  படம்.)   இதன் பெருமையை உணர்ந்த இளையராஜா மலையாளத்தில் "தும்பி வா" என்ற பாடலை உருவாக்கியும், பின்னர் திருவாசகத்திலிருந்து தும்பியைப் போற்றும் பதிகத்திலிருந்தும் பாடலுக்கு இசையமைத்து மகிழ்ந்தார். அமெரிக்காவின் திறமை வாய்ந்த கணினி மென்பொருள் வல்லுநர்கள் யுனிக்ஸை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஓர் இயங்குதளத்துக்கு இதன் பெயரைச் சூட்டி இப்பூச்சிக்கு மேலும் புகழ் சேர்த்தனர். பின் குறிப்பு: பள்ளிக் கூடத்தில் படித்து முடித்து பல  வருஷங்

Solution to Krypton 94

Today's clue: Strong dislike for headgear having a defective reed (6) Its solution: HATRED  Note 1:  I have requested Raji Hariharan to post the list of solvers today, as I'd be home late this evening. Note 2: The above clue is not to be interpreted as an expression of my opinion on Straw hats or the Linux distribution named RedHat. I simply don't use them.  

உதிரிவெடி 3536

உதிரிவெடி 3536 (டிசம்பர் 30, 2018) வாஞ்சிநாதன் ********************** தட்டான் அணிந்திருப்பதும் பித்தளைக் கலவை கொண்டதுதான் (3) Loading...

Solution to Krypton 93

Today's clue: A fodder cover to donor, and cover at a time of no work (7)  Its solution: HOLIDAY = HAY O LID Solved by the following: 1)  6:03:13    Ravi Subramanian 2)  6:05:57    S.R.BALASUBRAMANIAN 3)  6:07:11    Kesavan 4)  6:07:16    Srivina 5)  7:58:18    S.Parthasarathy 6)  8:52:29    Siddhan Subramanian 7)  18:31:17   Thirumoorthi Subramanian 8)  19:02:54   R.Narayanan. 9)  19:32:58   Sandhya

விடை 3535

இன்றைய வெடி: கழுத்தை கையை வளைக்கச் செய்பவன் மெதுவாக அடிக்க மாட்டான்! (4) இதற்கான விடை: தட்டான் =  தட்ட மாட்டான், அதாவது மெதுவாக அடிக்க மாட்டான். கையை வளைக்கும் வளையலும், கழுத்தை வளைக்கும் சங்கிலியையும் செய்பவன் தட்டான், பொற்கொல்லன்,  

உதிரிவெடி 3535

உதிரிவெடி 3535 (டிசம்பர் 29, 2018) வாஞ்சிநாதன் ******************** கழுத்தை கையை வளைக்கச் செய்பவன் மெதுவாக அடிக்க மாட்டான்! (4) Loading...

விடை 3534

இன்றைய வெடி: அடியோடு துடைத்து  பயணத்திற்கு உடன்வருபவரிடமிருந்து கடைசி பெண்ணை  விரட்டு (4)  இதற்கான விடை:  வழித்து  = வழித்துணை -  ணை 

உதிரிவெடி 3534

உதிரிவெடி 3534 (டிசம்பர் 28, 2018) வாஞ்சிநாதன் ********************** அடியோடு துடைத்து  பயணத்திற்கு உடன்வருபவரிடமிருந்து கடைசி பெண்ணை  விரட்டு (4) Loading...

விடை 3533

இன்றைய வெடி: உணவு மத்தியில் இல்லையென்று குற்றங் கூறு (2) இதற்கான விடை :  சாடு   சாப்பாடு = உணவு சா (ப்பா)  டு

விடை 3532

( நேற்று விடையளித்தோர் பட்டியலைக் கடைசி நிமிட அழைப்பை ஏற்றுத் தயாரித்து வெளியிட்ட  திருக்குமரன் தங்கராஜுக்கு நன்றி.) இன்றைய வெடி: நிலையில் இருக்கும் புராணத்தில் கணவா! தூங்கி தலை சீவு (4) இதற்கான விடை:  நாதாங்கி = கதவில் இருக்கும் தாழ்ப்பாளை வாங்கிக் கொள்ளும் பகுதி,  நிலையில் இருப்பது. (தாழின் நாக்குப் பகுதியைத் தாங்கிக் கொள்வது) நாதா = புராணத்தில் மனைவியர் தங்கள் கணவன்மாரை அழைக்கும் விதம் ங்கி = தூங்கி தலை சீவு சரியான விடை கண்ட 48 பேர்:  1)  6:01:49    ராமராவ்  2)  6:03:31    முத்துசுப்ரமண்யம்  3)  6:04:29    அம்பிகா  4)  6:06:43    வி ன் கிருஷ்ணன்  5)  6:08:55    ஹரி பாலகிருஷ்ணன்  6)  6:10:50    ரமணி பாலகிருஷ்ணன்  7)  6:14:28    நங்கநல்லூர் சித்தானந்தம்  8)  6:18:54    ஆர்.நாராயணன்.  9)  6:21:10    கு.கனகசபாபதி, மும்பை   10)  6:21:36    சங்கரசுப்பிரமணியன் 11)  6:31:32    கேசவன் 12)  6:34:23    லட்சுமி சங்கர் 13)  6:34:56    மாதவ் 14)  6:41:21    உஷா 15)  6:42:56    KB 16)  6:48:40    ராஜி ஹரிஹரன் 17)  6:49:10    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் 18)  6:55:45    தி. பொ. இராமநாதன

உதிரிவெடி 3532

உதிரிவெடி 3532 (டிசம்பர் 26, 2018) வாஞ்சிநாதன் ****************** நிலையில் இருக்கும் புராணத்தில் கணவா! தூங்கி தலை சீவு (4) Loading...

விடை 3531

இன்றைய வெடி: கடைசியாய் மெழுகி வைத்து வாசலில் விரிந்திருப்பது  ஒரு பறவை (4) இதற்கான விடை:  கோகிலம் = கோலம் + கி வாசலில் விரிந்திருப்பது கோலம் "மெழுகி" என்பதன் கடைசி எழுத்து கி

உதிரிவெடி 3531

உதிரிவெடி 3531 (டிசம்பர் 25, 2018) வாஞ்சிநாதன் ******************** கடைசியாய் மெழுகி வைத்து வாசலில் விரிந்திருப்பது  ஒரு பறவை (4) Loading...

விடை 3530

 மாலை வேளைகளில் பாட்டுக் கச்சேரி, நாடகம் என்று  வெளியே சென்றால்  வீட்டுக்கு 9 மணிக்குத் திரும்ப முடியாமல் விடைகளையும், விடையளித்தோர் பட்டியலையும்  தாமதமாக அளிப்பதைப் பார்த்திருப்பீர்கள். நேற்று அவ்வாறு ஒரு கேளிக்கை நிகழ்ச்சிக்குச் சென்று  9 மணிக்குக் கிளம்பும்போது மேலும் பல நிகழ்ச்சிகள் அந்த இடத்தில் தொடர்ந்து நடக்கும் என்று சொன்னார்கள்.  நான் வீட்டுக்கு வந்து நேராநேரத்தில் சாப்பிட்டுத் தூங்க வேண்டும் என்றால் இதென்ன ராக்கூத்து ? அது எங்கே நானும் போகிறேன் என்று கேட்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ என் பதில்: அது ஓர்  அரங்கு = அங்கு  இரவு நடு . அங்கு என்பது தூரத்திலுள்ள இடத்தையும்  "அங்கு" என்ற சொல்லையும் குறிக்கிறதால்  இன்றைய புதிரில் "அந்த இடத்தில்" என்பது இரட்டை வேலை செய்கிறது என்று எச்சரித்தேன்.   நடு இரவு அந்த இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் ! (4)   நடு இரவு செல்லாமல் இன்றும் மாலை ஆறு மணிக்கும் அதே இடத்திற்குச் செல்வதால் விடையளித்தோர் பட்டியல் மாலை 5 மணிவரை (50 பேர்) என்று ஒரு முறையும் பின்னர் விடையளித்தோர் பிற்சேர்க்கையாகவும் வெளிவரும்.  1   

உதிரிவெடி 3530

உதிரிவெடி 3530 (டிசம்பர் 24, 2018) வாஞ்சிநாதன் ******************* (எச்சரிக்கை:  ஒரு சொல் இரண்டு வேலை செய்கிறது!)   நடு இரவு அந்த இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் ! (4) Loading...

Solution to Krypton 92 (updated)

Today's clue: Profession leaves us in a container as physician leaves the dress (8) Its solution: BUSINESS =  US BIN   (DR) ESS Upto 5.15 pm solved by the following 12 persons. Any correct answer submitted after 5.15 pm but before 9 pm will be  included in an updated list. Solved by the 15 persons listed below:  1) 6:12:22    R.Narayaanan  2) 6:16:25    Dhayanandan Bhaskar  3) 6:42:56    Kesavan  4) 6:47:03    KB  5) 6:58:51    S P Suresh  6) 7:01:32    Ramarao  7) 7:02:57    Maskarade  8) 7:48:57    Ravi Sundaram  9) 7:49:35    Sundar Vedantham 10) 8:06:52    S.Parthasarathy 11) 9:13:23    Bhuvana Sivaraman 12) 15:58:56    Ambika 13) 20:06:37   M.K.RAGHAVAN. 14) 20:45: 40   Sandhya  15) 20:55:20   Ravi Subramanian

விடை 3529

இன்றைய  வெடி: ச்சீ! ஸ்வரம் அற்ற நிறம் அற்ற ஆட்டத்தில் அநியாயம் கண்டு பொங்குதல் (7) ஸ்வரம் அற்ற நிறம் = றம் ச்சீ + றம் + அற்ற  = அறச்சீற்றம்   = அநியாயம் கண்டு பொங்குதல் (விடையளித்தோர் பட்டியல் ஒன்பதரைக்கு மேல் வெளியிடப்படும்).  

உதிரிவெடி 3529

உதிரிவெடி 3529 (டிசம்பர் 23, 2018) வாஞ்சிநாதன் ********************* ச்சீ! ஸ்வரம் அற்ற நிறம் அற்ற ஆட்டத்தில் அநியாயம் கண்டு பொங்குதல் (7)      Loading...

விடை 3528

சில சமயம் பொம்மையாகச் செய்யப்பட்ட பழங்கள் அப்படி பார்ப்பதற்குப் பழங்கள் போலவே தோன்றும். ஆனால் அவையெல்லாம் வெளிநாட்டில் விளையும் பழங்கள் போன்றவை. ( அமேசான் வலைப்பக்கத்திலிருந்து பறித்த சுட்ட பழம், இல்லை சுட்ட படம் )   ஆனால் நம் ஊர் மாம்பழம் பலாப்பழம் போன்றவை உண்மைதானோ என்ற சந்தேகம் எழலாம். அப்படிப் பார்த்த போது உதித்ததுதான் இன்றைய புதிர்: உங்களுக்கும் எனக்கும் சொந்தமான பழங்கள் உண்மைதானா? (5) நம்பலாமா= நம் + பலா + மா

Solution to Krypton 91

Today's clue: A new development in a rustic pipe came back  (8) Its solution:  RETURNED = REED TURN (as in turn of events) Solved by the following 11 persons:  1)  6:41:39     Ravi Subramanian  2)  7:11:58     S.Parthasarathy  3)  7:26:52     Nathan N T  4)  7:48:41     Maskarade  5)  8:14:28     Ramani Balakrishnan  6)  13:20:43    Bhuvana Sivaraman  7)  13:53:41    Kesavan  8)  13:55:25    Dhayanandan Bhaskar  9)  16:26:44    S P Suresh 10)  16:28:46    S.R.BALASUBRAMANIAN 11)  19:05:32    Govindarajan

உதிரிவெடி 3528

உதிரிவெடி 3528 (டிசம்பர் 22, 2018) வாஞ்சிநாதன் *********************** Today's Krypton will be delayed by half an hour உங்களுக்கும் எனக்கும் சொந்தமான பழங்கள் உண்மைதானா? (5) Loading...

விடை 3527

இன்றைய வெடி: உணர்ச்சியற்று இழிவில் வீழ்ந்தாலும் காலத்தை வென்ற தன்மை (7) இதன் விடை: அமரத்துவம் = அவம் + மரத்து 

உதிரிவெடி 3527

உதிரிவெடி 3527 (டிசம்பர் 21, 2018) வாஞ்சிநாதன் ********************** உணர்ச்சியற்று இழிவில் வீழ்ந்தாலும் காலத்தை வென்ற தன்மை (7) Loading...

விடை 3526

காலையில் சற்றே விதிமீறி அமைந்த வெடி: இல்லை இல்லை தாவரத்தின் பகுதி என்றால் கஷ்டம்!! (4) விதிப்படி அமைந்த வெடி: இல்லை இல்லை இல்லை தாவரத்தின் பகுதி என்றால் கஷ்டம் (4) இவற்றுக்கான விடை: அல்லல் இன்றுகாலை புதிர் எந்த வார்த்தையைக் கொண்டு அமைக்கலாம் என்று என் கணினி முன் அமர்ந்த போது  ஏதோ பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததால் யோசிக்கவே விடவில்லை. பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் என்று திகில் படக் கதையை ஒரே சீரான கதியில் பயப்படாமல் பாடினார்கள் இரண்டு இளம் பெண்கள். எல்லா வேல்களும் அவர்களைக் காப்பாற்றிவிட்டது போலும்.   என்னையும் காப்பாற்றி விட்டது. "அல்லல்" என்ற விடையைக் கொண்டு  இன்றைய புதிரமைத்தேன். இல்லை என்ற சொல்லில் இலையைப் பிய்க்க எஞ்சும் "ல்"லுடன்  "அல்ல" (இல்லை) சேர்க்கப்படவேண்டுமென்பது பலருக்கு அதிக இன்னலைத் தந்து விட்டது போலும். இருபத்தைந்து பேர் சரியான விடையளித்துள்ளனர்: 1) 6:03:30    ராமராவ் 2) 6:13:36    Suba Srinivasan 3) 6:14:44    ரவி சுப்ரமணியன் 4) 6:19:18    கி மூ சுரேஷ் 5) 6:21:10    திருமூர்த்

விடை 3526 ???

இன்று கொஞ்சம் திட்டமிட்டு விதியைமீறி குறிப்பை அமைத்திருந்தேன். ஆங்கிலத்தில் double duty செய்வது என்பார்கள். மாலை ஏழரை வரை 41 விடையளித்திருந்தார்கள். அதில் 23தான் சரியானவை.  இன்னமும் ஒரு மணி நேரம் அவகாசத்தில் சிலர் விடையளிக்கக் கூடும், அல்லது தவறான விடையை மாற்றியளிக்கக் கூடும். காலையில் சற்றே விதிமீறி அமைந்த வெடி: இல்லை இல்லை தாவரத்தின் பகுதி என்றால் கஷ்டம்!! (4) விதிப்படி அமைந்த வெடி: இல்லை இல்லை இல்லை தாவரத்தின் பகுதி என்றால் கஷ்டம் (4) பத்து மணிக்கு மீண்டும் எட்டிப்பாருங்கள் சரியான விடையும், விடையளித்தோர் பட்டியலும் அப்போது வரும்.

உதிரிவெடி 3526

உதிரிவெடி 3526 (டிசம்பர் 20, 2018) வாஞ்சிநாதன் *********************** இல்லை இல்லை தாவரத்தின் பகுதி என்றால் கஷ்டம் !!(4) Loading...

விடை 3525

இன்றைய வெடி: அநியாயம் அண்ணன் பாதியில் விட்டோடிய அனுபவம் தருவது குழப்பம் (5)  இதற்கான விடை: அபாண்டம்  = பாடம் + அண் (ணன்) (விடையளித்தோர் பட்டியல் 10 மணிக்குதான் வெளியிடப்படுமென்பதால் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது).  சரியான விடையளித்தவர்கள் 24 பேர்: 1)   6:03:56    Suba Srinivasan 2)   6:04:27    அம்பிகா 3)   6:07:29    நங்கநல்லூர் சித்தானந்தம் 4)   6:08:12    முத்துசுப்ரமண்யம் 5)   6:10:25    லட்சுமி சங்கர் 6)   6:10:38    ராஜா ரங்கராஜன் 7)   6:11:37    சாந்தி நாராயணன் 8)   6:12:56    ரவி சுப்ரமணியன் 9)   6:29:43    கோவிந்தராஜன் 10)   6:45:43    பாலு மீ 11)   6:51:47    நாதன் நா தோ 12)   7:15:23    மும்பை ஹரிஹரன் 13)   7:38:57    எஸ்.பார்த்தசாரதி 14)   7:54:25    சதீஷ்பாலமுருகன் 15)   8:36:59    சுந்தர் வேதாந்தம் 16)   9:07:14    மீனாக்ஷி 17)   9:29:03    மடிப்பாக்கம் தயானந்தன் 18)   9:37:24    மாலதி 19)   11:10:44    ஜயஸ்ரீ 20)   14:48:42    ராஜி ஹரிஹரன் 21)   16:54:14    மு க பாரதி 22)   17:23:49    ஆர்.வானதி 23)   19:24:13    மு.க.இராகவன். 24)   19:54:45    வி ன் கிருஷ்ணன்

உதிரிவெடி 3525

உதிரிவெடி 3525 (டிசம்பர் 19, 2018) வாஞ்சிநாதன் ***************** அநியாயம் அண்ணன் பாதியில் விட்டோடிய அனுபவம் தருவது குழப்பம் (5) Loading...

விடை 3524

சென்றமாதம் வேதாரண்யம் பக்கம் வீசிய கஜா புயலால் சென்னைக்குக் கிடைத்த மழை கொஞ்சம்தான். அடுத்தது பெரிதாய் இன்னொரு புயல் உருவாகி நேற்று சிறுதூறலும் தராமல் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது. வருங்கோடையில் சென்னையில் தண்ணீருக்குப் பெரிய திண்டாட்டம் இருக்கும். மேற்றிசைச் செல்நதி வேறிடம் மாறினும் காற்றழுத்தத் தாழ்வால் கடல்மீது தோற்றிய எப்புயலும் வாராதாம் இத்தகையப் பாழ்நகரில் எப்படிநாம் வாழ்வோம் இனி (தோற்றிய =  தோன்றிய என்பதன் வலித்தல் விகாரம். உவேசாவின் தோற்றிய அல்ல.) இன்றைய புதிர்: மேற்றிசைச் செல்நதி கரைகளையுடைத்து வயலில் பாய்ந்து உண்டான தெளிவு (5) இதற்கான விடை:  நிர்மலம் = நிலம் + நர்மதா - நதா இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் வங்கக் கடலில் கலக்க, நர்மதா அரபிக்கடல் நோக்கி மேற்காகச் செல்லும் நதி சில நதிகளில் முக்கியானது.

உதிரிவெடி 3524

உதிரிவெடி 3524 (டிசம்பர் 18, 2018) வாஞ்சிநாதன் ******************** மேற்றிசைச் செல்நதி கரைகளையுடைத்து வயலில் பாய்ந்து உண்டான தெளிவு (5) Loading...

விடை 3523

இன்றைய வெடி: கொடுத்து கடன் கொடுக்குமிடத்தில் இறுதியாக வாழ வேண்டும் (4)  இதற்கான விடை: வழங்கி   = வங்கி + ழ  

உதிரிவெடி 3523

உதிரிவெடி 3523 (டிசம்பர் 17, 2018) வாஞ்சிநாதன் **************** கொடுத்து கடன் கொடுக்குமிடத்தில் இறுதியாக வாழ வேண்டும் (4) Loading...

Solution to Krypton 90

Today's clue: Experiment with an inner garment is a farce (8) Its solution: TRAVESTY = TRY A VEST Solved by the following 24 persons:  1)  6:01:13    S Parthasarathy  2)  6:03:19    S.R.Balasubramanian  3)  6:07:46    Ravi Subramanian  4)  6:08:50    Siddhan Subramanian  5)  6:10:55    Natarajan B  6)  6:11:13    Sundar Vedantham  7)  6:12:45    Raja Rangarajan  8)  6:14:26    ravi sundharam  9)  6:15:06    Kesavan 10)  6:25:09    Ramarao 11)  6:30:08    KB 12)  6:34:08    R.Narayanan 13)  6:55:12    Ambika 14)  6:59:42    Bhuvana Sivaraman 15)  7:07:02    Sandhya 16)  7:26:52    Dhayaanandan Bhaskar 17)  8:14:04    Nathan NT 18)  8:58:21    Philistine 19)  9:10:36    Kalyani Desikan 20)  9:20:01    Meenakshi Ganapathi 21)  9:46:36    Radha Desikan 22)  11:09:12    M.K.RAGHAVAN. 23)  12:32:31    Lakshmi V 24)  20:49:32   Bala

விடை 3522

இன்று காலை வெளியான வெடி ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6 ) இதற்கான விடை: சிவந்தவன் = சிவன் + வந்த  

ராம்சுரேஷ் எழுதிய கரும்புனல்

சில நாட்களுக்கு முன் மனதைக் கலக்கும் நாவல் ஒன்றைப் படித்தேன்.  நிலக்கரி தோண்டுவதற்காக ஜார்கண்டில் (பீஹாரில்?) ஓரிடத்தில் அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்தும்போது எழும் சிக்கல்கள்  இதன் மையக்கரு. பல வருடங்களாக இது போன்ற தீவிரமான எதையும் படிக்காமல் பொழுதுபோக்குக் கதைகளே படித்திருக்கிறேன் என்று குற்ற உணர்வு தோன்றியது. அல்லது இது போன்ற கதைகள் தமிழில் வருவதில்லையா? அதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எவ்வாறு நடக்கிறார்கள், எளிய மக்களின் வாழ்வு எப்படி இதில்  திண்டாடுகிறது என்பதெல்லாம் மிகவும் சங்கடப்படுத்துகிறது. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த எரின் ப்ரோக்கொவிச் என்ற படம் பார்த்தால் ஒருவரை ஹீரோவாக்கும் முயற்சி தெரியும். இக்கதையில் ஆசிரியர் அது போல் செய்யாமல் எவ்வாறு எல்லோரது வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறார்.  இவர் விவரங்களை ஆசிரியராக அதிகம் எழுதாமல், கதைப் பாத்திரங்களின் உரையாடல்களிலேயே வருமாறு ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார். இது  அந்நூலை இன்னமும் விரிவாக எழுதாமல் விட்டாரோ என்று எண்ணவைத்தது. ஆனால் அப்படி எழுதியிருந்தால் என்ன இது வளவளவென்று எழுதியிருக்கிறாரென்று பாதியிலேயே புத

உதிரிவெடி 3522

உதிரிவெடி 3522 (டிசம்பர் 16, 2018) வாஞ்சிநாதன் ************************ ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6) Loading...

Solution to Krypton 89

Today's clue: A process to get Oxygen, Boron and a circle around a planet lacking core (9)  Its solution:  BREATHING =  B  RING  EA ( R ) TH Solved by the following 7 persons: 1) 6:04:06    Ravi Subramanian 2) 6:19:14    Ambika 3) 6:41:08    R.Narayanan 4) 7:09:02    Siddhan Subramanian 5) 7:21:24    S P Suresh 6) 7:24:34    Srivina 7) 8:12:53    Kesavan

விடை 3521

இன்று காலை வெளியான வெடி: காப் பு கட்டு வதற்குள் பாடம் கற்பி (4) இதற்கான விடை: புகட்டு

விடை 3520

மாதுளையின் உள்ளே முத்துகளாகப் பொதிந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் கொஞ்சம் மாற்றி முத்திலே மாதுளையைப் புதைத்தாலென்ன  என்று தோன்ற இன்றைய புதிர்.  ஆனால் அதற்குள் அந்த மாது நுழைய மாட்டேனென்று நின்று விட்டார்கள். அதனால் மங்கையைத் தள்ளிவைத்து "மாதுளை"யிலிருந்து "ளை" மட்டும்  முத்து (ஒரு மணி)  உள்ளே புதைத்ததில்  "முளைத்து" வந்தது  இன்றைய புதிர்: வளர்ந்து ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி உட்கொள் (4) 

உதிரிவெடி 3520

உதிரிவெடி 3520 (டிசம்பர் 14, 2018) வாஞ்சிநாதன் *********************** வளர்ந்து ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி உட்கொள் (4)  Loading...

விடை 3519

இன்றைய வெடி: பைத்தியம் பலகூறுகளாக்கி ஒரு ஸ்வரத்தை நீக்கியது (3) இதற்கான விடை:   பித்து =  பி (ரி) த்து  (விடையளித்தோர் பட்டியல் 10 மணி வாக்கில் வெளியிடப்படும்).

உதிரிவெடி 3519

உதிரிவெடி 3519 (டிசம்பர் 13, 2018) வாஞ்சிநாதன் ********************** பைத்தியம் பலகூறுகளாக்கி ஒரு ஸ்வரத்தை நீக்கியது (3)  Loading...

விடை 3518

இன்றைய வெடி: காதற் போயின் சாதல் -- வயதான கே. எஸ்.சித்ராவின் கானம்? (3, 3) இதற்கான விடை:  குயில் பாட்டு   பாரதியாரின் குயில் பாட்டிலிருந்து "காதற் போயின் சாதல்" என்ற வரி. சின்னக் குயில் என்று  வந்த புதிதில் அழைக்கப்பட்ட சித்ரா எத்தனை வருடத்திற்குதான் சின்னதாகவே இருப்பார்?!  

உதிரிவெடி 3518

உதிரிவெடி 3518 (டிசம்பர் 12, 2018) வாஞ்சிநாதன் ****************** காதற் போயின் சாதல் -- வயதான கே. எஸ்.சித்ராவின் கானம்? (3, 3) Loading...

விடை 3517

இன்று காலை வெளியான வெடி: வாழை மனது ஏறக்குறைய கலங்க வண்ணமயிலின் கண்ணம்மா (4) இதற்கான விடை: வானமழை பாரதியாரின் ஒரு கண்ணம்மா பாடல் ஒவ்வொரு வரியிலும் கண்ணம்மாவை வேறு வேறு வடிவாகக் கற்பனை செய்து அதற்கேற்றாற்போல் தன்னை யாரென்று அடுக்கடுக்காகச் சொல்லும் அழகான கவிதை, "பாயுமொளி நீயெனக்கு பார்க்கும்விழி நானுனக்கு"  என்ற அக்கவிதையில் வரும் ஓரடி "வானமழை நீயெனக்கு வண்ணமயில் நானுனக்கு" இன்றைய புதிருக்குப் பயன்பட்டது. நீ விரலென்றால் நான் நகம், நீ கண்ணென்றால் நான் இமை என்றே இக்காலத்தில் பழகிப்போன நமக்கு பாரதியாரின்  உவமைகள் சிலிர்க்க வைக்கின்றன: பூணும்வடம் -- புதுவயிரம் பேசுபொருள் -- பேணுமொழி செல்வம் -- சேமநிதி இதை ஏழாவது மனிதன் திரைப்படத்திற்காக (1982)  எல்.வைத்யநாதன் அழகாகக் கல்யாணி ராகத்தில்  இசையமைத்திருப்பதைக் கேட்க இந்த யூட்யூப்   தளத்தைக் காணவும் (பாடியவர்கள்: ஏசுதாஸ், நீரஜா). இன்று விடையளித்தோர் பட்டியலை ரவி சுப்ரமணியன் திரட்டியளித்து வெளியிடுவார். ***************** பாயுமொளி  நீயெனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு, தோயும்மது நீயெனக்கு, தும்பியடி நானுனக்க

உதிரிவெடி 3517

உதிரிவெடி 3517 (டிசம்பர் 11, 2018) வாஞ்சிநாதன் ******************** வாழை மனது  ஏறக்குறைய கலங்க வண்ணமயிலின் கண்ணம்மா (4) Loading...

விடை 3516

இன்று காலை வெளியான வெடி: பெற்று வளர்க்காதவன் கடைசி கடைசியில் (3) இதற்கான விடை: ஈன்று =  ஈறு + ன் ஆகவே பிள்ளைகளைப் பெற்றுவிட்டு வளர்க்கத் தவறியவர்களுக்கு இதன் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை என்னவெனில்,  அவர்களுக்குக் கல்யாணத்துக்குப் போனால் கடைசி பந்தியில் கடைசி இலையில்தான் சாப்பாடு பரிமாறப்படும். பாயசம், அவியல் எல்லாம் தீர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.  இலையும் தலைவாழையாக இல்லாமல் ஏடாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒழுங்காகப் புள்ளை குட்டிங்களை நல்லா வளத்துடுங்க! இரண்டு நாட்கள் முன்பு  வேறு வகையான ஒரு புதிர் வெளியிட்டிருந்தேன். அதற்கு விடை இது வரை நான் விடையைக் கொடுக்கவில்லை. சுந்தர் வேதாந்தம், ராஜி ஹரிஹரன் , அம்பிகா, கனகசபாபதி இவர்கள் விடையை எழுதியுள்ளார்கள். ஆனால் விளக்கங்களேதும் அளிக்கவில்லை. இதுவரை பார்க்காதவர்கள்  இந்த சொல்லைச் சொடுக்கிச் சென்று பார்க்கலாம்.  விடையை விளக்கங்களுடன் கருத்துரையாக அங்கே எழுதலாம்.  

Solution to Krypton 88

Today's clue: Interferes with initial disturbances upsetting purists  (8) Its solution: DISRUPTS = D + PURISTS Solved by: 1) 6:06:15    S.Parthasarathy 2) 6:09:15    S.R.BALASUBRAMANIAN 3) 6:10:23    Sandhya 4) 6:10:37    Ravi Subramanian 5) 6:10:52    Kesavan 6) 6:11:14    ravi sundaram 7) 6:14:16    KB 8) 6:25:03    NATHAN NT 9) 6:29:25    Meenakshi Ganapathi 10) 6:29:46    Ramarao 11) 6:31:03    Siddhan Subramanian 12) 6:36:06    M.K.RAGHAVAN. 13) 6:38:29    Hari Balakrishnan 14) 7:05:08    Srivina 15) 7:14:53    Raja Rangarajan 16) 7:17:07    R.Narayanan. 17) 7:59:32    Dhayanandan Bhaskar 18) 8:01:02    Rukmani Gopalan 19) 8:56:38    S P Suresh 20) 9:38:07    Bhuvana Sivaraman 21) 10:56:45    Ambika

விடை 3515

இன்று காலை வெளியான வெடி: தமிழீழ தேசிய மலரின் வசீகர இதழ்கள் ஓரம்? (4) இதற்கான விடை:  காந்தள் = காந்த (வசீகர)  + ள் (இதழ்கள் ஓரம்) ஈழதேசியக்கொடியாக அறிவிக்கப்பட்டுள்ள மலர். சங்கப்பாடல்களில் அதிகம் இடம்பெறும் காந்தள் மலர் (காந்தள் மலர் போன்ற விரல்கள் உடையவளே!) விக்கிபீடியா இதன் ஆங்கிலப் பெயர் Flame Lily என்றும் அறிவியல் பெயர் Gloriosa Superba என்றும் கூறுகிறது சென்னையையொட்டிய, கோவிலஞ்சேரியில் (வேளச்சேரியிலிருந்து 15 கி மீ தூரத்தில்)  நேற்று எடுக்கப்பட்ட புகைப்படம். கார்த்திகை மாதத்தில் பூப்பதால் இலங்கையில் கார்த்திகைப்பூ என்கிறார்கள்.  தீக்கதிர் செய்திக்குறிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில்  இது பயிரிடப்படுகிறது என்று தெரிவிக்கிறது.  (கலப்பைக் கிழங்கு, கண்வலிக் கிழங்குச் செடி என்றும் இதற்குப் பெயராம்).

Krypton 88

Krypton 88 (9th December 2018) Vanchinathan ************************** Note: yesterday's  puzzle was wrongly numberd as 88. It should have been 87. It is now corrected. Interferes with initial disturbances upsetting purists  (8) . . . .

உதிரிவெடி 3515

உதிரிவெடி 3515 (டிசம்பர் 9, 2018) வாஞ்சிநாதன் ******************** எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் கதைகளில் கொலை நடந்த வீட்டிற்கு கொலை நடந்த இரவில்  அந்த ஒரு மணி நேரத்தில் பலர் வந்து சென்றிருப்பார்கள். பெர்ரி மேசன் வாதாடும்போது இவருக்கு முன்னே இவர் வந்தார் என்று பெரிய குண்டைப் போட்டு வழக்கையே புரட்டிப் போட்டு குற்றஞ் சுமத்தப்பட்டவரை விடுவிப்பார். உங்களுக்கும் பெர்ரி மேசன்போல்  புலனாய்வு செய்து யார் எந்த வரிசையில் சென்றார்கள் என்று கண்டு பிடிக்க வேண்டுமா? அப்படியானால் இந்தப்புதிரை விடுவிக்க முயலுங்கள். இன்றைய வெடி:   தமிழீழ தேசிய மலரின் வசீகர இதழ்கள் ஓரம்? (4) Loading...

Solution to Krypton 87

Today's (8th December) clue: A state in which the French and I left a raagam (5)   Its solution BIHAR   = (BILAHARI without LA, I) Solved by:  1)  7:11:29    R.Narayanan  2)  7:28:20    Kesavan  3)  8:15:15    Hari Balakrishnan  4)  8:46:24    Thirumoorthi Subramanian  5)  9:16:25    Meenakshi Ganapathi  6)  11:14:13    KB  7)  12:57:53    Bhuvana Sivaramsn  8)  13:22:10    S.Parthasarathy  9)  14:31:32    Ambika 10)  19:43:09    M.K.RAGHAVAN.

விடை 3514

இன்றைய வெடி: ர சிகர்கள் ம த்தியில் தொடக்கத்தில் சாதி ப் போர்வையால் சர்ச்சைக்குள்ளான திரைப்பாடலின் ராகம் (4)   இதற்கான விடை:  சாரமதி =  சாதி + ர( சிகர்கள்) + ம(த்தியில்)  மரிமரி நின்னே என்ற தியாகையர்  பாடல் அவர் வடிவமைத்த படி காம்போதி ராகம்; ஆனால் திரைப்படத்தில்  அது  சாரமதி ராகத்தில் பாடப்பட்டதால்   ஒரு சர்ச்சை  எழுந்தது ("சிந்து பைரவி" படம், இளையராஜா இசை, கே. எஸ். சித்ரா பாடிய "பாடறியேன்" என்ற பாடல், 1985.)

தொண்டை நாட்டில் ஒரு சோதனை

தொண்டை நாட்டில் ஒரு சோதனை வாஞ்சிநாதன் இதுவும் ஒரு புதிர்தான். இந்த சங்க காலக் கதையைப் படித்து விட்டு  கடைசியாகக் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு விடை  கண்டுபிடியுங்கள். தொண்டை நாட்டு மன்னர், இளவரசிக்கு நல்ல தமிழ் கற்பிக்க அவைப்புலவரான பூதநாதனாரை அழைத்து தக்க ஆசிரியரைக் கண்டறிந்து சொல்லும்படி ஆணையிட்டார். பெருஞ்சாத்தன், அழிசி, ஆதிமந்தி,  எழினி,  நெடுமான் ஆகியோரில் ஒருவரை ஆசிரியராக நியமிக்க எண்ணி அவர்கள் ஐவரையும் பூதநாதனார் சோதித்துத் திறமையை ஆய்வதற்கு அழைத்தார்.  ஓர் அறையில் எல்லோரையும் காத்திருக்கச் சொல்லி  ஒவ்வொருவராக வரவைத்து   மூன்று நாழிகைக்கு மேல் பல கேள்விகள் கேட்டார். சோதனை முடிந்ததும் அவரவர் தங்காமல் அரசவையை விட்டு வெளியேறினர். எழினியிடம் பூதநாதனார் கேட்ட முதல் கேள்வி, "எழினியாரே,    அழிசி தடுமாறிவிட்ட ஈற்றடியையே உங்களுக்கும் அளிக்கிறேன்,  பொங்கிச் சுழன்ற புயல்   அதற்கு ஒரு வெண்பாவைச் சொல்லும் பார்ப்போம்." அழிசியின் சோதனை முடிந்து வெளியே வரும்போது ஆதிமந்தி "எப்படிச் சோதித்தார் பூதநாதனார்?" என்று கேட்க   விடையேதுமளிக்காமல் அழிசி  விரைந்து வெளியே செ

உதிரிவெடி 3514

உதிரிவெடி 3514 (டிசம்பர் 8, 2018) வாஞ்சிநாதன் ************************* ரசிகர்கள் மத்தியில் தொடக்கத்தில் சாதிப் போர்வையால் சர்ச்சைக்குள்ளான திரைப்பாடலின் ராகம் (4) Loading...

Krypton 87 (UPDATED)

Krypton 88 (8th December 2018) Vanchinathan ******************** NOTE: If the clue today is found seems to have insufficient  information, I'll provide a supporting clue at 9.30 am after seeing the number correct solutions submitted. A state in which the French and I left a raagam (5) The solution to the following clue has the same terminal letter as the above: Reportedly transparent cutting tool (5) . . . .

விடை 3513

இன்று காலை வெளியான வெடி: உறையூர் அரண்மனைக்காரியோடு ஓடு? (2) இதற்கான விடை: சோழி (நத்தை போன்ற நீர்வாழ் உயிரினத்தின் ஓடு; உறையூரைத் தலைநகராகக் கொண்ட  சோழ வம்சத்துக்காரி சோழி! )

விடை 3512

இன்று காலை வெளியான வெடி: கனியைச் சாறாக்காமல் பருகச் சொல்லும் தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்! (5) இதற்கான விடை: பழங்குடி  

உதிரிவெடி 3512

உதிரிவெடி 3512 (டிசம்பர் 6, 2018) வாஞ்சிநாதன் ********************** கனியைச் சாறாக்காமல் பருகச் சொல்லும் தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்! (5) Loading...

விடை 3511

இன்றைய வெடி: கனி உதிர்ந்து கடைசியில் சீர்கெட்ட நிலை (3) இதற்கான விடை: பழுது = பழு +  (உதிர்ந்) து  (கனி என்ற வினைச்சொல்லுக்கு ஈடாகப் பழு)

விடை 3510

இன்று காலை வெளியான வெடி:  தந்தையின் இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றைக் கொண்ட முடிசூடா  மன்னன் (4) இதற்கான விடை: பரதன் = தசரதன் - தச + ப

உதிரிவெடி 3510

உதிரிவெடி 3510 (டிசம்பர் 4, 2018) வாஞ்சிநாதன் *********************** தந்தையின் இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றைக் கொண்ட முடிசூடா  மன்னன் (4) Loading...

விடை 3509

இன்று காலை வெளியான வெடி: ஆகாரத்தை அன்புடன் அளிப்பது அருவருக்கத் தக்கது (4) இதன் விடை:  ஆபாசம்   = ஆ + பாசம் "ஆ"காரம் என்பது வயிற்றுக்கல்ல செவிக்களிப்பப்படுவது! குறிப்பு: இது புதிருக்காகச் சொன்னது. குழந்தைக்கு சாப்பாட்டை ஊட்டிவிடுபவர்கள் தாராளமாகச் செய்யலாம்.  நான் தடையேதும் சொல்லவில்லை.

உதிரிவெடி 3509

உதிரிவெடி 3509 (டிசம்பர் 3, 2018) வாஞ்சிநாதன் ******************** ஆகாரத்தை அன்புடன் அளிப்பது அருவருக்கத்தக்கது (4) Loading...

Solution to Krypton 88

Today's clue:   Made a blueprint with a plus or minus in the document (8) Its solution:  DESIGNED = DEED  SIGN   Solved by the following 13 persons:  1)  6:01:01      S.Parthasarathy  2)  6:01:45      Ravi Subramanian  3)  6:11:54      Ambika  4)  6:26:42     Brummie  5)  6:34:51     KB  6)  6:54:09     S.R.BALASUBRAMANIAN  7)  9:05:08     Govindarajan  8)  9:51:57     R.Narayanan.  9)  10:52:45    Rukmani Gopalan 10)  11:49:49    Ramarao 11)  12:29:27    M.K.RAGHAVAN. 12)  14:00:03    Siddhan Subramanian 13)  19:25:39    M K Bharathi

விடை 3508

இன்றைய வெடி திருடரும் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?? (5) இதற்கான விடை:  கள்வரும் (கள்  வரும்) வெட்டிய பாளையிலிருந்து சொட்டிடும் கள்ளைச் சேகரிக்கிறார். (படம் : tamilwin.com என்ற வலைப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது).

உதிரிவெடி 3508

உதிரிவெடி 3508 (2 டிசம்பர், 2018) வாஞ்சிநாதன் ******************** திருடரும் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?? (5) Loading...

Solution to Krypton 87

Today's clue: Surface initially near central Yamuna caused the downfall of Indira Gandhi (9) Its solution: EMERGENCY = EMERGE + N, C, Y (Near Central Yamuna) Surface as a verb means to come up, emerge. (Made this puzzle up while travelling in our new university bus. There was a notice saying what to do during an Emergency!) 1 ) 6:02:49    Kesavan 2 ) 6:05:54    S.Parthasarathy 3 ) 6:08:55    Sundar Vedantham 4) 6:09:02    Ramani Balakrishnan 5 ) 6:09:17    S.R.BALASUBRAMANIAN 6 ) 6:10:43    Hari Balakrishnan 7) 6:10:58    Lakshmi Shankar 8 ) 6:12:07    Muthusubramanyam 9 ) 6:17:48    Ramarao 10 ) 6:17:53    S P Suresh 11 ) 6:19:16    KB 12) 6:26:43    Dhayanandan Bhaskar 13) 6:29:24    Balu M 14) 6:47:55    Raji baktha 15) 6:49:41    Srivina 16) 6:54:28    Ravi Subramanian 17 ) 7:17:33    Ambika 18) 7:49:44    Soudhamini 19 ) 8:30:10    Meenakshi Ganapathi 20 ) 8:33:27    Ravi sundaram 21) 8:54:15    Govindarajan 22) 10:52:04    NATHAN NT 23) 10:52:12    Bala 24) 11:13:06   

விடை 3507

இன்று காலை வெளியான வெடி: ஒரு மாவட்டத்தில் யாவரும் எதிர்க்க பாதி அடங்கிய கசனின் காதலி (4) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் அசுரர்கள் பக்கம் இருந்த சுக்கிராச்சாரியார் தன்னுடைய மருந்து ஒன்றினால் இறந்தவர்களையெல்லாம் உயிர்ப்பித்து வந்தார். தேவர்கள் பக்கமிருந்த பிரகஸ்பதி தனக்குத் தெரியவில்லையே என்றுரு நினைத்துத் தன் மகன் கசனை அதைக் கற்று வர சுக்கிராச்சாரியாருக்கு மாணவானக் இருந்து வா என்று அனுப்பினார் அவ்வாறு சுமார் 500 வருடங்கள் மாணவனாயிருந்த கசனை சுக்கிராசாரியார் மகள் தேவயானி காதலித்தாள். ஆனால் அவள் மணந்தது என்னவோ யயாதியை. அந்த கதை நான் மேலும் சொல்லவில்லை. இன்னொரு புதிருக்கு உதவுமல்லவா! இன்றைய புதிரின் விடை, தேவயானி = தேனி + யாவ (ரும்) இன்றைய புதிர் 50க்கும் மேற்பட்டோர் விடையளித்து ,எளிதாக அமைந்துவிட்டது.  நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,  நீங்கள் எல்லோரும் வீட்டில் உட்கார்ந்து நீண்ட நேரம் யோசிக்கும்படியாக  ஒரு புதிரை வெளியிடுகிறேன்.

உதிரிவெடி 3508

உதிரிவெடி 3508 (டிசம்பர் 1, 2018) வாஞ்சிநாதன் ********************* ஒரு மாவட்டத்தில் யாவரும் எதிர்க்க பாதி அடங்கிய கசனின் காதலி (4) Loading...