இன்றைய வெடி:
கடைசியாய் மெழுகி வைத்து வாசலில் விரிந்திருப்பது ஒரு பறவை (4)
இதற்கான விடை: கோகிலம் = கோலம் + கி
வாசலில் விரிந்திருப்பது கோலம்
"மெழுகி" என்பதன் கடைசி எழுத்து கி
கடைசியாய் மெழுகி வைத்து வாசலில் விரிந்திருப்பது ஒரு பறவை (4)
இதற்கான விடை: கோகிலம் = கோலம் + கி
வாசலில் விரிந்திருப்பது கோலம்
"மெழுகி" என்பதன் கடைசி எழுத்து கி
Comments
1) 6:01:24 லட்சுமி சங்கர்
2) 6:01:42 ராமராவ்
3) 6:01:52 KB
4) 6:10:52 முத்துசுப்ரமண்யம்
5) 6:12:10 அம்பிகா
6) 6:13:24 ரவி சுப்ரமணியன்
7) 6:19:11 சங்கரசுப்பிரமணியன்
8) 6:31:10 கேசவன்
9) 6:35:15 ஆர்.வானதி
10) 6:56:17 Siddhan
11) 7:06:08 ரவி சுந்தரம்
12) 7:21:42 பா நடராஐன்
13) 7:30:39 எஸ்.பார்த்தசாரதி
14) 7:32:58 மீனாக்ஷி
15) 7:34:19 மீனாக்ஷி கணபதி
16) 7:50:22 மீ கண்ணன்
17) 7:56:29 மாலதி
18) 8:11:21 மாதவ்
19) 8:14:29 பாலு மீ
20) 8:21:10 கோவிந்தராஜன்
21) 8:51:04 Suba Srinivasan
22) 9:04:36 நங்கநல்லூர் சித்தானந்தம்
23) 9:33:38 ஸௌதாமினி
24) 9:49:50 பிரசாத் வேணுகோபால்
25) 9:53:08 விஜயஸ்ரீ
26) 10:35:33 ராஜா ரங்கராஜன்
27) 11:04:15 ராஜி பக்தா
28) 11:37:43 ராஜி ஹரிஹரன்
29) 12:11:50 வி ன் கிருஷ்ணன்
30) 12:59:28 சதீஷ்பாலமுருகன்
31) 14:11:35 மு.க.இராகவன்.
32) 14:30:08 உஷா
33) 15:26:51 ரமணி பாலகிருஷ்ணன்
34) 16:45:44 ஆர். பத்மா
35) 16:57:35 பா நடராஐன்
36) 19:29:20 ஹரி பாலகிருஷ்ணன்
இந்தியாவின்
கோகிலம்
வானம்பாடி !
கவிக்குயில் சரோஜினி
அம்மையார்
🌸🌸🌸🌸🌸🌸🌸
சரோஜினி நாயுடு அம்மையார் 1879 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள் , ஐதராபாத் நகரில் அவதரித்த கவியரசி. அவர்தம் இளம் வயதிலேயே விசேஷ குணங்கள் அமையப்பெற்ற அதிசயப் பிறவி. சுப்பிரமணிய பாரதிக்கு இணையாகத் தம் எழுச்சிமிகு கவிதைகள் மூலம் நாட்டு மக்களிடையே, சுதந்திர தாகத்தையும், விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு தாமும் அப்போராட்டத்தில் பங்கு கொண்டவர்.இந்தியாவின் , முதல் பெண் மாநில ஆட்சித் தலைவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவரும் ஆவார். கவிக்குயில், கவியரசி, இந்தியாவின் கோகிலம் , வானம்பாடி என்றெல்லாம் பல்வேறு பட்டங்களுடன் சிறப்பிக்கப்பட்டவர்.
ஒரு கவிஞர் என்பவர், கற்பனைச் சோலையுள், மலர்ப் பூஞ்சோலைகளின் நறுமணத்தினூடேயும், இயற்கையின் இன்பத் தேனைப் பருகிக் கொண்டு அம்மயக்கத்தில் இனிய கானங்கள் மட்டும் இசைத்துக் கொண்டு, மக்களைப் பரவசப்படுத்தும் ஒரு இசைக்கருவியாக மட்டும் இராது, சக மனிதர்களின் துயரங்களிலும் பங்கு கொண்டு அவர்தம் துயர் தீர்க்கும் முகமாக, போர்க்களத்தினிடையேயும் பரணி பாடும் வல்லமை கொண்டவனாக இருப்பவனே சிறந்த கவியாக இருக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் கவியரசி சரோஜினி அம்மையார். ஓய்ந்து போன உழைப்பாளிகளுக்கும், துவண்டு போன மக்களுக்கும், தம் உரிமையைக் கூட உணராத பேதைப்பெண்டிருக்கும், சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் விழிப்புணர்வையும், எழுச்சியையும் ஊட்டும் உன்னத கவிஞர் கவிக்குயில் சரோஜினி தேவியார் என்றால் அது மிகையாகாது.
*********
கோகிலம்
பெயர்ச்சொல்
உயர் வழக்கு
குயில் .
*********
கடைசியாய் மெழுகி வைத்து வாசலில் விரிந்திருப்பது ஒரு பறவை (4)
கடைசியாய் மெழுகி
= கி
வாசலில் விரிந்திருப்பது
= கோலம்
வைத்து,
= கி --> கோலம்
= கோ + கி+ லம்
= கோகிலம்
ஒரு பறவை
= கோகிலம்
*********
பிறப்பு
நான் ஒரு விசித்திரப் பிறவி என் தாய்க்கு!
சொந்த மனை கட்டத் தெரியாமல்.....
என்னை எண்ணிப் பார்க்காமல்......
என் இனம் சேர்க்காமல்....
மாற்றாள் மனையில் திருட்டுத் தனமாய்
என்னை இட்டவுடன் பணி விட்டதென்று
விரைந்து பறக்கும் விளங்காப் புதிர்.
குரல்களால் கொள்ளை கொள்ளும்
கொள்ளைக் காரிக்குதன் குழந்தைக்கு_
தாலாட்டுப் பாடத் தெரியாத கோகிலம்
என்னை இட்ட மனையில்நான்_
வளர்ந்து வரும் வேளையில்......_
வளர்ப்புத் தாய் 'இனம்' கண்டு
அவள் 'யாதி' இல்லையென்று..
குழந்தையென்று பாராமல்..
'கொத்தித்' துரத்திவிட.....
சே............என்ன? பிறப்பு அநாதையாய்.......
தரிசனம் காட்டா ......_
கரிசனமில்லாத் தாயை
கானகத்தில் கூவிக் கூவி அழைக்கின்றேன் .
🌸🌸🌸🌸🌸🌸🌸
சொந்தத்தாய் {குயில்}
வளர்ப்புத்தாய்{காகம்}
நன்றி
பீஷான் கலா,சிங்கப்பூர்