Skip to main content

விடை 3509

இன்று காலை வெளியான வெடி:
ஆகாரத்தை அன்புடன் அளிப்பது அருவருக்கத் தக்கது (4)


இதன் விடை:  ஆபாசம்  = ஆ + பாசம்

"ஆ"காரம் என்பது வயிற்றுக்கல்ல செவிக்களிப்பப்படுவது!

குறிப்பு: இது புதிருக்காகச் சொன்னது. குழந்தைக்கு சாப்பாட்டை ஊட்டிவிடுபவர்கள் தாராளமாகச் செய்யலாம்.  நான் தடையேதும் சொல்லவில்லை.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (33):

1) 6:05:48 எஸ் பி சுரேஷ்
2) 6:06:32 லட்சுமி சங்கர்
3) 6:07:13 சாந்தி நாராயணன்
4) 6:12:06 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:12:26 வானதி
6) 6:14:07 ஆர்.நாராயணன்.
7) 6:15:51 சதீஷ்பாலமுருகன்
8) 6:15:53 ரவி சுப்ரமணியன்
9) 6:19:30 கேசவன்
10) 6:20:02 முத்துசுப்ரமண்யம்
11) 6:24:23 ரமணி பாலகிருஷ்ணன்
12) 6:38:02 வி சீ சந்திரமௌலி
13) 6:38:04 மு.க.இராகவன்.
14) 6:52:33 மாலதி
15) 6:53:41 ராமராவ்
16) 7:07:26 மீனாக்ஷி
17) 7:18:22 மீ கண்ணன்
18) 7:19:02 வி ஜயா
19) 7:40:10 வி ன் கிருஷ்ணன்
20) 8:39:25 மீனாக்ஷி கணபதி
21) 9:06:01 ஶ்ரீவிநா
22) 9:09:18 லதா
23) 9:51:23 கோவிந்தராஜன்
24) 10:34:36 ருக்மணி கோபாலன்
25) 10:41:09 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
26) 11:58:03 மு க பாரதி
27) 12:56:00 ராஜி ஹரிஹரன்
28) 14:28:39 KB
29) 14:33:24 அம்பிகா
30) 15:32:12 பிரசாத் வேணுகோபால்
31) 17:56:54 ஆர். பத்மா
32) 18:42:35 பானுபாலு
33) 18:53:48 கு.கனகசபாபதி, மும்பை

**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************* _காந்தி உண்ட ஆகாரம்_
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இந்திய சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் பொதுமக்களிடையே மிகப்பிரபலமாக யிருந்தச் சொற்கள் இவை...
தேசப்பிதா என்றுக் கொண்டாடப்படும் அண்ணல் காந்தி அவர்கள், சிலகாலம் பாசிப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் ஆட்டுப்பாலை மட்டுமே உணவாகக்கொண்டு வாழ்ந்தார்...
அவருடைய தீவிரமான சீடர்களில் சிலரும் அவரைப் பின்பற்றி இந்த மூன்று உணவுப் பொருட்களையே உண்டு உயிர் வாழ்ந்தனர்...
ஆகவே இவை *காந்தி* *ஆகாரம்*  என்றுப் பொதுமக்களால் குறிப்பிடப்பட்டது...
*************************
_வழிந்துஓடிய_ _சாக்கடையும்_
=== _காரி உமிழ்ந்த எச்சும்_
_கசக்கி எறிந்த குப்பையும்_
=== _படிந்துப்போன தூசியும்_
_அழுகிப்போன காய்கறியும்_
=== _அழுக்கு நிரைந்த தொட்டியும்_
_ஈ மொய்த்த பண்டமும்_
===
_மிச்சமாக கொட்டப்பட்ட உணவும்_

_*அருவருப்பாய்*_ _தோன்றவில்லை_

_தோன்றுகிறது அருவருப்பாய்_
_மனிதம் தொலைத்து மனிதனாக_
_நடமாடும் மக்களை நித்தம் பார்க்கையில்!!!_

.(..கவியாழினி..).
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
J.P.Fabricius Tamil and English Dictionary
*ஆகாரம்*
ākāram   s.
1. the name of the letter  *ஆ* என்ற எழுத்து ;
2. meat, food and drink, உணவு

அகரம் =அ
ஆகாரம் = ஆ
இகரம் = இ
உகரம் = உ
..........and so on.
*************************
_ஆகாரத்தை அன்புடன் அளிப்பது அருவருக்கத்தக்கது (4)_

_ஆகாரத்தை_ = *ஆ*
_அன்புடன்_ = *பாசம்*

_அன்புடன் அளிப்பது_ = *ஆ+ பாசம்*
= *ஆபாசம்*

_அருவருக்கத்தக்கது_
= *ஆபாசம்*
************************
*ஆபாசம்* என்பது பார்ப்பவர் கண்களில் !

கிரிஹலட்சுமி வார இதழ் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கேரளாவில் மாத்ருபூமி நாளிதழ் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கிருஹலஷ்மி வார இதழின் அட்டையில் ஒரு பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை போன்ற படம் பிரசுரிக்கப்பட்டது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் கட்டுரை அந்த இதழில் வெளியானது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், *ஆபாசம்* என்பது பார்ப்பவரின் கண்களை பொறுத்தது, ஒருவர் கண்களுக்கு அழகாக தெரிவது மற்றொருவருக்கு ஆபாசமாக தெரியலாம். எனவே அட்டை படத்தில் பிரசுரமான புகைப்படம் எந்த விதத்திலும் பெண்களை இழிவுபடுத்துவது போல இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*நீர் ஆகாரம்*
= ஆரோக்கியம்

_ஆற்று நீர் வாதம் போக்கும்_
_அருவி நீர் பித்தம்_, _போக்கும்_
_சோத்து நீர்_ _இரண்டையும்_ _போக்கும்....._

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர்
தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
💐🙏🏼💐
****************
Muthu said…
பழம், பால், சர்க்கரை:
பக்கத்து வீட்டு நபர் எப்போதும் உற்சாகத்துடனும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டார். தினம் காலையில் அவர் “பழம், பால் சர்க்கரை” கொண்டுவா என்பது காதில் விழும். அது என்ன பழம், பால், சர்க்கரை என்று தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாகவே ஒரு நாள் கேட்டு விட்டேன். ”அதுவா? து வேறஒண்னும் இல்லை. அழம் என்றது பழம் சோறு; பால் என்றது பழம் சோற்றுத் தண்ணி; சட்க்கரை என்றது உப்பு” என்றார்!
Raghavan MK said…



First and foremost, compliments to the author for constructing such a nice riddle today!

Nicety has emerged in the form of a well constructed, meaningful sentence as the riddle!

Next the choice of the word, ஆகாரம், misdirecting and pushing the solvers spiraling down into the abyss!

We expect more such enjoyable riddles from the author in the days to come!

💐💐💐
M k Bharathi said…

ஆஹா..இன்று
அருவருப்பு இல்லாத
ஆபாசம் இல்லாத
அழகான புதிர்.👏🏼👏🏼

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்