Skip to main content

விடை 3516

இன்று காலை வெளியான வெடி:
பெற்று வளர்க்காதவன் கடைசி கடைசியில் (3)

இதற்கான விடை: ஈன்று =  ஈறு + ன்

ஆகவே பிள்ளைகளைப் பெற்றுவிட்டு வளர்க்கத் தவறியவர்களுக்கு இதன் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை என்னவெனில்,  அவர்களுக்குக் கல்யாணத்துக்குப் போனால் கடைசி பந்தியில் கடைசி இலையில்தான் சாப்பாடு பரிமாறப்படும். பாயசம், அவியல் எல்லாம் தீர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.  இலையும் தலைவாழையாக இல்லாமல் ஏடாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒழுங்காகப் புள்ளை குட்டிங்களை நல்லா வளத்துடுங்க!

இரண்டு நாட்கள் முன்பு  வேறு வகையான ஒரு புதிர் வெளியிட்டிருந்தேன். அதற்கு விடை இது வரை நான் விடையைக் கொடுக்கவில்லை.
சுந்தர் வேதாந்தம், ராஜி ஹரிஹரன், அம்பிகா, கனகசபாபதி இவர்கள் விடையை எழுதியுள்ளார்கள். ஆனால் விளக்கங்களேதும் அளிக்கவில்லை.
இதுவரை பார்க்காதவர்கள்  இந்த சொல்லைச் சொடுக்கிச் சென்று பார்க்கலாம்.  விடையை விளக்கங்களுடன் கருத்துரையாக அங்கே எழுதலாம்.






 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*“ _ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே "_* *_பெண்ணடிமைத்தனமா ?_*

_பொன்முடியார்_ எனும் சங்ககாலப் பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும், அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும் என்கிறார்.

அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.

சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா?

_“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே_
_சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே_
_வேல் வடித்துக் கொடுத்தல்_ _கொல்லற்குக் கடனே_
_நன்னடை நல்கல்_ _வேந்தற்குக் கடனே_
_ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி_
_களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”_ – ( *புறம்: 312)*

எனப் புறநானூற்றில் கூறியுள்ளார்.

*_புறந்தருதல்_* எனும் சொல் பாதுகாத்தல் எனப்பொருள் தரும்.

 இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்  ஒரு தாயாக நின்று,  வீட்டிற்கும், நாட்டிற்கும் உள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டிய ஆளுமையுள்ள தலைசிறந்த பெண்ணாகப் பொன்முடியார் திகழ்ந்துள்ளார்.
********************
_பெற்று வளர்க்காதவன் கடைசி கடைசியில் (3)_

_வளர்க்காதவன் கடைசி_
= *ன்*

_கடைசி_ (யில்)
= *ஈறு*

_கடைசியில்_
= _*ஈறு* க்குள் *ன்*_
= *ஈன்று*
= _பெற்று_
********************
ஆனால் இப்பாடலில் பெண்ணின் அடிமைத்தனத்தை பொன்முடியார் உறுதி செய்திருப்பதாக சிலர் எழுதி வருகிறார்கள்.
பெண் அடிமைத்தனம் இப்பாடலில் எங்கிருக்கிறது?

 நாட்டை ஆளும் அரசனுக்கும் சேர்த்தே, இது இது, உங்கள் கடமை எனச்சுட்டிக் காட்டி இருப்பதை எப்படி அடிமைத்தனம் என்று சொல்வது?

பெண் அடிமைத்தனம் என எழுதுவோர்
_“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே”_
என்று பொன்முடியார் சொன்னதில் வரும் _புறந்தருதல்_ என்பதைப் பிள்ளையைப் பெறுவது எனக் கருகின்றனர். அப்படி பிள்ளையைப் பெறும் இயந்திரமாக அடிமையாகச் சங்ககாலப் பெண்கள் வாழ்ந்தார்கள் என எழுதுவது சரியல்ல. பிள்ளையைப் பெறுவதே தன் கடமை என்று பொன்முடியார் இப்பாடலில் கூறவில்லை.

புறந்தருதல் என்பது என்ன என்பதைப் _பதிற்றுப்பத்துப் பாடல்_ சொல்வதைக் கொண்டு பார்ப்போம். அதில்

_“பாடுசால் நன்கலம் தரூஉம்_
_நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே”_

– (பதிற்றுப்பத்து: 59: 18 – 19)
எனத் _‘திறையாகப் பொருட்களைக் கப்பலில் அனுப்பி வைக்கும் நாடுகளைப் பாதுகாப்பதும் உனது கடமையாகும்’_ என்று நற்செள்ளையார் சேரலாதனுக்குக் கூறுகிறார்.

புறந்தருதல் என்னும் சொல் பிள்ளைபெறுவது என்ற கருத்தைத் தருமானால் திறையளக்கும் நாடுகளையும் சேரலாதரன் பிள்ளை பெறுவதுபோல் பெற்றெடுப்பானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

(தமிழரசி.
மண் வாசம்)
💐🙏🏼💐
*************************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (28):

1) 6:02:47 ராஜா ரங்பராஜன்
2) 6:03:13 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:49 சதீஷ்பாலமுருகன்
4) 6:06:29 ரவி சுப்ரமணியன்
5) 6:07:19 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 6:11:52 KB
7) 6:13:14 ரமணி பாலகிருஷ்ணன்
8) 6:40:44 ராமராவ்
9) 7:01:59 கோவிந்தராஜன்
10) 7:10:51 மீனாக்ஷி கணபதி
11) 7:15:52 ராதா தேசிகன்
12) 7:40:13 வி ன் கிருஷ்ணன்
13) 7:46:10 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 7:53:42 ரவி சுந்தரம்
15) 8:42:35 ஹரி பாலகிருஷ்ணன்
16) 8:44:27 திருமூர்த்தி
17) 9:05:13 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 9:42:50 மாதவ்
19) 10:35:46 மு க பாரதி
20) 10:46:56 முத்துமணி
21) 10:52:32 மாலதி
22) 11:20:54 மீனா
23) 12:08:24 அம்பிகா
24) 12:17:23 தேன்மொழி
25) 15:23:35 மீ கண்ணன்
26) 16:33:18 மு.க.இராகவன்.
27) 19:30:52 வாறதி
28) 19:32:54 ஆர். பத்மா
**********************
உஷா said…
அருமையாகப் புனையப்பட்ட புதிர்
Vanchinathan said…
நேற்று வெண்டைக்காய் பொறியல் சாப்பிட்டபோது நார்போல் பல் ஈறு நடுவே சிக்கிக் கொண்டது. அதுவே இன்றைய புதிரிலும் சிக்கிக் கொண்டது!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்