Skip to main content

விடை 3526

காலையில் சற்றே விதிமீறி அமைந்த வெடி:
இல்லை இல்லை தாவரத்தின் பகுதி என்றால் கஷ்டம்!! (4)

விதிப்படி அமைந்த வெடி:
இல்லை இல்லை இல்லை தாவரத்தின் பகுதி என்றால் கஷ்டம் (4)

இவற்றுக்கான விடை: அல்லல்

இன்றுகாலை புதிர் எந்த வார்த்தையைக் கொண்டு அமைக்கலாம் என்று என் கணினி முன் அமர்ந்த போது  ஏதோ பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததால் யோசிக்கவே விடவில்லை.

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
என்று திகில் படக் கதையை ஒரே சீரான கதியில் பயப்படாமல் பாடினார்கள் இரண்டு இளம் பெண்கள். எல்லா வேல்களும் அவர்களைக் காப்பாற்றிவிட்டது போலும்.   என்னையும் காப்பாற்றி விட்டது. "அல்லல்" என்ற விடையைக் கொண்டு  இன்றைய புதிரமைத்தேன்.
இல்லை என்ற சொல்லில் இலையைப் பிய்க்க எஞ்சும் "ல்"லுடன்  "அல்ல" (இல்லை) சேர்க்கப்படவேண்டுமென்பது பலருக்கு அதிக இன்னலைத் தந்து விட்டது போலும்.


இருபத்தைந்து பேர் சரியான விடையளித்துள்ளனர்:
1) 6:03:30    ராமராவ்
2) 6:13:36    Suba Srinivasan
3) 6:14:44    ரவி சுப்ரமணியன்
4) 6:19:18    கி மூ சுரேஷ்
5) 6:21:10    திருமூர்த்தி
6) 6:29:25    கு.கனகசபாபதி, மும்பை
7) 7:02:50    முத்துசுப்ரமண்யம்
8) 8:06:40    கோவிந்தராஜன்
9) 8:16:14    கேசவன்
10) 8:29:14    மாதவ்
11) 8:39:27    மீனாக்ஷி கணபதி
12) 8:48:36    மீனாக்ஷி
13) 8:58:03    எஸ் பார்த்தசாரதி
14) 9:26:11    மீ கண்ணன்
15) 10:20:41    திருக்குமரன் தங்கராஜ்
16) 10:29:22    மடிப்பாக்கம் தயானந்தன்
17) 10:30:04    நங்கநல்லூர் சித்தானந்தம்
18) 10:50:08    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
19) 11:34:18    K.R.Santhanam
20) 14:04:03    எஸ் பி சுரேஷ்
21) 14:57:50    லக்ஷ்மி மணியன்
22) 15:20:52     ஆர். பத்மா
23) 15:47:42    KB
24) 18:06:37    ஆர். வா.னதி
25) 20:34:30    பாலா

Comments

மெச்சுகிறேன் ஆசிரியரின் புத்தி கூர்மயை!!! தொடரட்டும் இந்தப்பணி!!!!
Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
நல்லது. இன்றைய புதிரை இரண்டு பேர் ரசித்துவிட்டீர்கள். நீங்களும் எனக்குத் தனிப்பட எழுதிய எஸ் ஆர் பாலசுப்ரமணியனும். விதிமீறல்கள் அத்திப் பூத்தாற்போல்தான் இருக்கும்.
Ambika said…

இரட்டை இல்லை, இரட்டை இலை என்றெல்லாம் நினைத்தும் புதிரை விடுவிக்க முடியவில்லை. ...
மிகவும் எளிதாக விடை கண்டதும் தான் உணர்ந்தேன். அருமையான புதிரமைப்பு

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்