Skip to main content

விடை 3523

இன்றைய வெடி:

கொடுத்து கடன் கொடுக்குமிடத்தில் இறுதியாக வாழ வேண்டும் (4) 

இதற்கான விடை: வழங்கி  = வங்கி + ழ
 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
_வாழ்க்கை எப்படி *வாழ வேண்டும்* தெரியுமா?_

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம்.

பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு.

மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும்.

*_வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு._*
💐🙏🏼💐
***********************
_கொடுத்து கடன் கொடுக்குமிடத்தில் இறுதியாக வாழ வேண்டும் (4)_ 

_கடன் கொடுக்குமிடத்தில்_
= *வங்கி* (யில்)
_இறுதியாக வாழ_
= *ழ*

_கடன் கொடுக்கும் இடத்தில் வேண்டும்_
= *ழ _inside_ வங்கி*
= *வழங்கி*
= _கொடுத்து_
************************
*குறள் 794:*

_குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்_

*_கொடுத்தும்_* கொளல்வேண்டும் நட்பு.

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_*கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்* என்ற அருணாசலக் கவிராயரின் பாடலையொத்து வங்கிக் கடனாளிகள் கலங்குவதில்லை._

_கடன் வசூல் வேட்டையில் இருக்கும் வங்கிகளோ “ *இன்று போய் நாளை வா* ” என்ற கம்பரின் காவிய வரிகளை கடனாளிகளிடம் கூறுவதில்லை._

_கொடாக் கண்டர்களுக்கும், விடாக் கண்டர்களுக்கும் இடையிலான போட்டிகள் எதுவரை தொடரும்?_ 😀😀🤣
************************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (55):

1) 6:03:07 முத்துசுப்ரமண்யம்
2) 6:04:46 அம்பிகா
3) 6:05:10 நாதன் நா தோ
4) 6:05:14 உஷா
5) 6:07:08 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:07:39 வி ன் கிருஷ்ணன்
7) 6:08:39 ராமராவ்
8) 6:08:40 ருக்மணி கோபாலன்
9) 6:10:16 ரவி சுப்ரமணியன்
10) 6:12:32 லக்ஷ்மி ஷங்கர்
11) 6:14:37 KB
12) 6:19:08 ரமணி பாலகிருஷ்ணன்
13) 6:19:46 தி. பொ. இராமநாதன்
14) 6:23:55 மாதவ்
15) 6:24:29 பாலு மீ
16) 6:27:27 ராஜி ஹரிஹரன்
17) 6:27:42 ஶ்ரீவிநா
18) 6:27:56 ராஜா ரங்கராஜன்
19) 6:28:21 மீ கண்ணன்
20) 6:30:44 கலாராணி
21) 6:30:45 திருமூர்த்தி
22) 6:30:54 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 6:31:46 Suba Srinivasan
24) 6:32:46 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
25) 6:41:06 கேசவன்
26) 6:46:17 லதா
27) 6:48:13 Siddhan
28) 6:55:46 கு.கனகசபாபதி, மும்பை
29) 6:57:48 சுந்தர் வேதாந்தம்
30) 7:03:05 மீனாக்ஷி கணபதி
31) 7:04:44 எஸ் பி சுரேஷ்
32) 7:12:18 மீனாக்ஷி
33) 7:13:34 வானதி
34) 7:13:50 ராதா தேசிகன்
35) 7:31:16 எஸ்.பார்த்தசாரதி
36) 7:37:44 மு க பாரதி
37) 7:51:18 திருக்குமரன் தங்கராஜ்
38) 7:54:36 பானுபாலு
39) 7:55:22 பானுபாலு
40) 7:56:25 Sandhya
41) 8:01:06 கி மூ சுரேஷ்
42) 8:02:38 பினாத்தல் சுரேஷ்
43) 8:09:44 ஏ.டி.வேதாந்தம்
44) 8:10:15 பத்மாசனி
45) 8:20:42 ஹரி பாலகிருஷ்ணன்
46) 8:47:40 ஆர்.நாராயணன்.
47) 9:14:09 மாலதி
48) 10:07:20 சங்கரசுப்பிரமணியன்
49) 11:04:51 தேன்மொழி
50) 12:12:43 மு.க.இராகவன்.
51) 14:05:55 ஸௌதாமினி
52) 14:27:06 ஆர் .பத்மா
53) 17:18:17 ஶ்ரீதரன்
54) 19:32:24 பாலா
55) 20:49:23 சாந்தி நாராயணன்
**********************
நாளும் நல்ல புதிரை வழங்கி வரும் திரு. வாஞ்சிநாதன் வாழ்க பல்லாண்டு

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்