Skip to main content

விடை 3518

இன்றைய வெடி:
காதற் போயின் சாதல் -- வயதான கே. எஸ்.சித்ராவின் கானம்? (3, 3)
இதற்கான விடை:  குயில் பாட்டு 
 பாரதியாரின் குயில் பாட்டிலிருந்து "காதற் போயின் சாதல்" என்ற வரி.

சின்னக் குயில் என்று  வந்த புதிதில் அழைக்கப்பட்ட சித்ரா எத்தனை வருடத்திற்குதான் சின்னதாகவே இருப்பார்?!
 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
உலக வாழ்வுக்கு ஆதாரம் காதல், அதனாலேயே,
_"காதல் காதல் காதல், காதல் போயில் காதற் போயின்_
_சாதல் சாதல் சாதல்"_
என்று மஹாகவி பாரதி *குயிலின் பாட்டாக* எழுதினாரோ?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*சின்னக்குயில்* ’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் _“சின்னக்குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி_ ” என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி என பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
🌸🌸🌸🌸🌸🌸🌸
************************
_காதற் போயின் சாதல் -- வயதான கே. எஸ்.சித்ராவின் கானம்? (3, 3)_

_வயதான கே. எஸ்.சித்ரா_
= (சின்ன) *குயில்*

_கானம்_
= *பாட்டு*

_காதற் போயின் சாதல்_
= *குயில்+பாட்டு*
= *குயில் பாட்டு*
*************************
*_தமிழ் மரபில் காதல்_*

நம் மரபிலும் காதல் கவிதைகளே மிகுதி. காதலைப் போற்றும், புனிதமாக்கும் வரிகளுக்கு இருக்கும் மேற்கோள் மதிப்பு வேறெவற்றுக்கும் கிடையாது. காதல் இந்த நிலவுலகை விடவும் பெரியது; கடல் நீரை விடவும் ஆழமானது; வானத்தை விடவும் உயர்ந்தது என்னும் வரிகளை அத்தனை சுலபமாகக் கடந்து செல்ல முடியாது.

_‘ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்_ _ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை’,_

‘ _அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’,_

_‘காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இல்வாழ்க்கை’,_

_‘காதல் காதல் காதல், காதல் போயின் காதல் போயின், சாதல் சாதல் சாதல்’,_

_‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்’ –_

இப்படி எத்தனையோ விதமான அற்புதத் தொடர்கள் நம் காதுகளில் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றன. காதலை மகத்துவப்படுத்தும் இவையெல்லாம் இளைஞர்களை ஒன்றுமே செய்யவில்லையா?

காதலின் அருமையை மிகச் சிறப்பாகச் சொல்லும் ஒரு பாடல் (எண்.40) _குறுந்தொகையில்_ உள்ளது. பாடிய புலவர் யாரென்றே தெரியவில்லை. ஆகவே, பாடலில் பயின்று வரும் உவமைத் தொடரையே புலவருக்கும் பெயராக்கிவிட்டனர். அவ்விதம் ஆக்கிய பெயர்: _செம்புலப்பெயல்நீரார்._
அப்பாடல் இது:

*_யாயும் ஞாயும் யாரா கியரோ_*

*_எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்_*

*_யானும் நீயும் எவ்வழி அறிதும்_*

*_செம்புலப் பெயல்நீர் போல_*

*_அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே._*

இந்தப் பாடல் காதலன் அல்லது காதலியின் கூற்று. தம் காதலின் மேன்மையை எடுத்துச் சொல்லித் தாமே வியப்புக்கு உள்ளாவதாக அமைந்த பாடல். ஒருவருக்கு இரண்டு வழிகளில் உறவுகள் இருப்பர். தாய் வழி, தந்தை வழி. இந்தக் காதலர்கள் தாய் வழியிலும் உறவில்லை; தந்தை வழியிலும் உறவில்லை. ஒரே ஊர், சாதி என்றிருந்தால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொள்ள நேர்ந்திருக்கும். ஒருவரை ஒருவர் ஏற்கெனவே அறிந்திருப்பர். அப்படியும் இல்லை. ‘என் தாயும் உன் தாயும் யார் யாரோ. என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ. நானும் நீயும் இதற்கு முன்னால் எந்த வழியிலும் ஒருவரை ஒருவர் அறிந்ததும் இல்லை. இப்போதுதான் முதன்முறை சந்திக்கிறோம். என்ன மாயம்!
_சந்தித்த ஒரு கணத்திற்குள் இரண்டு நெஞ்சங்களும் அன்பு கொண்டு செம்மண்ணில் பெய்த மழை போல ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டனவே’_

என்று தம் காதலை வியந்து போற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
💐🙏🏼💐
*************************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (43):

1) 6:01:36 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:03:37 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:52 ஆர். பத்மா
4) 6:06:28 சங்கரசுப்பிரமணியன்
5) 6:07:06 ராஜா ரங்கராஜன்
6) 6:07:32 மைத்ரேயி
7) 6:08:25 Suba Srinivasan
8) 6:08:35 திருமூர்த்தி
9) 6:10:31 லதா
10) 6:10:34 K.R.Santhanam
11) 6:15:22 ரவி சுப்ரமணியன்
12) 6:15:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:18:12 ராஜி ஹரிஹரன்
14) 6:18:42 கி மூ சுரேஷ்
15) 6:18:54 மாதவ்
16) 6:21:29 ருக்மணி கோபாலன்
17) 6:25:52 வானதி
18) 6:26:51 முத்துமணி
19) 6:27:14 உஷா
20) 6:27:30 மு.க.இராகவன்.
21) 6:34:32 சுசரித்ரா
22) 6:48:48 மாலதி
23) 6:59:18 ஶ்ரீவிநா
24) 7:01:32 மீ கண்ணன்
25) 7:08:24 மீனாக்ஷி
26) 7:16:03 மீ பாலு
27) 7:17:59 பாலா
28) 7:21:25 மீனாக்ஷி கணபதி
29) 7:22:18 ஹரி பாலகிருஷ்ணன்
30) 7:27:00 கோவிந்தராஜன்
31) 7:27:01 ராதா தேசிகன்
32) 7:29:01 சதீஷ்பாலமுருகன்
33) 7:29:08 வி - ஜயா
34) 7:32:37 அம்பிகா
35) 7:38:35 ஆர்.நாராயணன்.
36) 7:57:01 மு க பாரதி
37) 7:59:45 மடிப்பாக்கம் தயானந்தன்
38) 8:46:28 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
39) 10:00:50 தேன்மொழி
40) 15:20:36 KB
41) 16:15:58 கேசவன்
42) 17:36:26 பத்மஶ்ரீ
43) 19:11:28 Sandhya
**********************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்