இன்று காலை வெளியான வெடி:
கனியைச் சாறாக்காமல் பருகச் சொல்லும் தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்! (5)
இதற்கான விடை: பழங்குடி
கனியைச் சாறாக்காமல் பருகச் சொல்லும் தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்! (5)
இதற்கான விடை: பழங்குடி
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:04:19 அம்பிகா
2) 6:04:49 லட்சுமி சங்கர்
3) 6:04:53 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:04:56 முத்துசுப்ரமண்யம்
5) 6:05:29 எஸ்.பார்த்தசாரதி
6) 6:06:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:06:06 ரவி சுப்ரமணியன்
8) 6:07:23 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:07:24 லதா
10) 6:09:21 மீ கண்ணன்
11) 6:11:49 வி ன் கிருஷ்ணன்
12) 6:12:51 ராஜா ரங்கராஜன்
13) 6:13:09 ராதா தேசிகன்
14) 6:14:45 வி ன் கிருஷ்ணன்
15) 6:14:58 தி. பொ. இராமநாதன்
16) 6:15:06 இரா.செகு
17) 6:15:37 ஶ்ரீவிநா
18) 6:16:15 மு.க.இராகவன்.
19) 6:17:41 ரவி சுந்தரம்
20) 6:18:07 சங்கரசுப்பிரமணியன்
21) 6:18:15 K.R.Santhanam
22) 6:20:55 பா நடராஜன்
23) 6:21:38 ஆர். பத்மா
24) 6:22:50 பிரசாத் வேணுகோபால்
25) 6:23:31 மாலதி
26) 6:25:57 பாலு மீ
27) 6:30:42 ரபணி பாலகிருஷ்ணன்
28) 6:34:40 நாதன் நா தோ
29) 6:35:05 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 6:35:22 கு.கனகசபாபதி, மும்பை
31) 6:36:20 மடிப்பாக்கம் தயானந்தன்
32) 6:36:50 மீனாக்ஷி கணபதி
33) 6:37:23 Suba Srinivasan
34) 6:37:39 கேசவன்
35) 6:39:53 KB
36) 6:41:54 கி மூ சுரேஷ்
37) 6:42:04 வானதி
38) 6:42:32 Siddhan Subramanian
39) 6:45:23 ஹரி பாலகிருஷ்ணன்
40) 6:49:06 ஸௌதாமினி
41) 6:50:34 உஷா
42) 6:54:42 மு க பாரதி
43) 6:56:38 மாதவ்
44) 7:00:20 புவனா சிவராமன்
45) 7:09:57 ராஜி பக்தா
46) 7:12:15 வி ஜயா
47) 7:22:36 மீனாக்ஷி
48) 7:44:56 பானுபாலு
49) 7:51:30 ஆர்.நாராயணன்.
50) 7:59:37 பினாத்தல்
51) 8:02:17 ஶ்ரீதரன்
52) 8:04:01 திருக்குமரன் தங்கராஜ்
53) 8:17:17 பானுமதி
54) 8:42:41 சதீஷ்பாலமுருகன்
55) 8:49:46 தேன்மொழி
56) 9:48:44 வி சீ சந்திரமௌலி
57) 9:52:47 கோவிந்தராஜன்
58) 10:52:19 பாலா
59) 11:18:54 Viji Durai
60) 19:07:30 ருக்மணி கோபாலன்
61) 19:34:27 வெங்கடேசன் மீ
**********************
*************************
*இலக்கணப் போலி*
இலக்கண நெறிக்குப் பொருந்தாததாக இருப்பினும் *தொன்றுதொட்டு* ஆன்றோர்கள் வழங்கி, இலக்கணமுடையது போல் ஏற்றுக்கொள்ளப்பட்டவை இலக்கணப் போலி ஆகும்.
இல்வாய் - வாயில், நகர்ப்புறம் - புறநகர், தசை - சதை, கோவில் - கோயில்.
இல்வாய், நகர்ப்புறம், தசை, கோவில் ஆகிய சொற்கள் இலக்கண முறைப்படி அமைந்தவை. ஆனால், அவை வாயில், புறநகர், சதை, கோயில் என மாற்றம் பெற்று அனைவராலும் பயன்படுத்தப் படுகின்றன.
*மரூஉ*
இலக்கணம் சிதைந்து வடிவம் மாறி வழங்கும் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றை மரூஉ என்கிறோம். *தொன்றுதொட்டு* இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று பயன்பட்டு வருவதாகும்.
சர்க்கரை - சக்கரை, பெயர் - பேர், தஞ்சாவூர் - தஞ்சை, கறிவேப்பிலை - கருவேப்பிலை
🌺🌺🌺🌺🌺🌺
_மொழிகளின் தாயாம்_ _முதிர்ந்தத் தமிழை_
_மொழியென் றுயிரில் முடிந்து – எழிலாகக்_
_கண்ணின் மணியெனக் காக்கின்றப் பற்றன்றோ_ _மண்ணின் தமிழரின் மாண்பு ._
_ஒப்பற்ற தெங்கள் உலகப் பொதுமறை_
_தப்பற்ற தந்தத் திருக்குறள். –அப்தம்_
_பலதாண்டி ஆன்றோர் புகழ்சூட மண்ணில்_
_உலவுவதோ ஒப்பற்ற மாண்பு_
_தொல்காப் பியம்மற்றும்_ _தொன்மை பொருந்திய_
_நல்காப் பியங்களும் *தொன்றுதொட்டு* – கல்வெட்டாய்_ _இன்றுவரைக் காத்திருக்கும் எந்தமிழர் தம்மாண்பு_
_ஒன்றல்ல நூறுண்டு காண் !_
(மெய்யன் நடராஜ்)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_கனியைச் சாறாக்காமல் பருகச் சொல்லும் தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்! (5)_
_கனியைச் சாறாக்காமல்_ = *பழம்*
_பருகச் சொல்லும்_
= *குடி*
_தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்_
= *பழம் + குடி*
= *பழங்குடி*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_*பழங்குடிகள்* என்போர் *தொன்றுதொட்டோ* பன்னெடுங்காலமாகவோ, ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள்._
இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தன்னிறைவோடு வாழ்பவர்கள்.
பழங்குடியின மக்கள் தங்களுக்கென்று பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த எதையும் வைத்துக்கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சியாக இருந்தாலும், தண்ணீராக இருந்தாலும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர்கள். பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன.
💐🙏🏼💐