இன்றைய வெடி:
கனி உதிர்ந்து கடைசியில் சீர்கெட்ட நிலை (3)
இதற்கான விடை:
பழுது = பழு + (உதிர்ந்) து (கனி என்ற வினைச்சொல்லுக்கு ஈடாகப் பழு)
கனி உதிர்ந்து கடைசியில் சீர்கெட்ட நிலை (3)
இதற்கான விடை:
பழுது = பழு + (உதிர்ந்) து (கனி என்ற வினைச்சொல்லுக்கு ஈடாகப் பழு)
Comments
சரியான விடை அளித்தவர்கள் (36):
1) 6:02:25 ரவி சுப்ரமணியன்
2) 6:04:10 ராஜா ரங்கராஜன்
3) 6:08:50 சங்கரசுப்பிரமணியன்
4) 6:11:29 புவனா சிவராமன்
5) 6:13:34 ரவி சுந்தரம்
6) 6:18:17 Sandhya
7) 6:26:07 லட்சுமி சங்கர்
8) 6:30:18 எஸ்.பார்த்தசாரதி
9) 6:34:57 பாலு மீ
10) 6:35:35 கோவிந்தராஜன்
11) 6:41:54 வி ன் கிருஷ்ணன்
12) 7:04:43 Siddhan Subramanian
13) 7:04:50 வி ஐயா
14) 7:07:41 முத்துசுப்ரமண்யம்
15) 7:09:24 சதீஷ்பாலமுருகன்
16) 7:14:15 ஹரி பாலகிருஷ்ணன்
17) 7:14:54 மீனாக்ஷி
18) 7:18:59 அம்பிகா
19) 7:27:32 மீனாக்ஷி கணபதி
20) 7:30:21 ஆர்.நாராயணன்.
21) 8:28:10 Suba Srinivasan
22) 8:35:39 கி மூ சுரேஷ்
23) 8:52:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
24) 9:20:40 பாலா
25) 9:47:20 மீ கண்ணன்
26) 11:39:32 மு க பாரதி
27) 11:52:13 பானுமதி
28) 12:40:21 KB
29) 12:42:13 ஶ்ரீதரன்
30) 12:49:40 தேன்மொழி
31) 13:25:37 மாலதி
32) 13:40:48 ஆர். பத்மா
33) 13:53:13 ராஜி ஹரிஹரன்
34) 17:33:05 மடிப்பாக்கம் தயானந்தன்
35) 18:35:12 மு.க.இராகவன்.
36) 19:17:03 ருக்மணி கோபாலன்
**********************
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_மதம் பிடித்த_ _யானைகளாய்_
_சமுதாய *சீர்கேடுகள்* ..._
_தேவை அங்குசக்_ _கவிஞர்கள்!__
கா.ந.கல்யாணசுந்தரம்
🌸🌸🌸🌸🌸🌸🌸
_பாம்பு என்று_ _ஒதுங்கவும் முடியாது; *பழுது* என்று மிதிக்கவும் முடியாது -_
🌸🌸🌸🌸🌸🌸🌸
தமிழில் அழகான, ஆழமான பொருள் பொதிந்த பழமொழிகள் உள. ஒருவன் செய்யும் காரியம் எவ்வளவுதான் நல்லதானாலும் இடமும் நேரமும் சூழ்நிலையும் சரியாக இல்லாவிடில் நல்ல பெயர் கிடைக்காது
பாம்புப் புற்றுக்கு அருகில் ஒரு கயிறு கிடந்தாலும் அதைப் பாம்பென்றே மக்கள் கருதுவர்; சஹவாச தோஷம்!
பனைமரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும், அதன் வெண்மை நிறமும், இடமும் அதைக் கள் என்று நினக்கச் செய்யும்.
_நிந்தையிலாத் தூயவரும் நிந்தையைச் சேரில் அவர்_
_நிந்தையது தம்மிடத்தே நிற்குமே – நிந்தைமிகு_
_தாலநிழல் கீழிருந்தான் றன்பால் அருந்திடினும்_
_பாலதனச் சொல்லுவரோ பார்._
-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)
_பொருள்:-_
பனை மரத்தின் அடியின் உடகார்ந்துகொண்டு பசுவின் பாலைக் குடித்தாலும், பிறர் அதைப் பால் என்று சொல்லுவரோ? நீ அதனை நினைத்துப் பார். அதுபோல நல்ல பெயருடைய மேலோர், கெட்டவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடைய கெட்ட பெயர் இவர்களையும் ஒட்டிக்கொள்ளும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_கனி உதிர்ந்து கடைசியில் சீர்கெட்ட நிலை (3)_
_கனி_
= *பழு*
_(கனிந்து = பழுத்து)_
_உதிர்ந்து கடைசியில்_
= *து*
_சீர்கெட்ட நிலை_
= *பழு+து*
= *பழுது*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பழுதும் பாம்பும்*
இதே கருத்தை வலியுறுத்த இன்னொரு பாடலையும் பாடி வைத்தார் அந்தப் புலவர்!
_நல்லொழுக்கம் இல்லாரிடம் சேர்ந்த நல்லோர்க்கு_
_நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும் விடப்_
_பாம்பென உன்னாரோ *பழுதையே* ஆனாலும்_
_தூம்பு அமரும் புற்று அடுத்தாற் சொல்_
-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)
ஓட்டைகள் மிக்க புற்றுக்குப் பக்கத்தில் கயிறே கிடந்தாலும், அதை கொல்லக் கூடிய விஷப் பாம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா? நீயே சொல்! அது போல நல்ல ஒழுக்கம் இல்லாதவர்களுடன் சேர்ந்த நல்லோரையும் பழிச் சொல் வந்து சேரும்.
அழகான இரண்டு உவமைகள் மூலம் நமக்கு உயரிய கருத்துக்களைச் சொல்வர் தமிழ்ப் புலவர். இளம் வயதிலேயே இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தால், அவை நம் மனதில் பசு மரத்தாணி போலப் பதியும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் புலவர்தம் பெருமை!
(London Swaminathan)
💐🙏🏼💐
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸