Skip to main content

விடை 3520

மாதுளையின் உள்ளே முத்துகளாகப் பொதிந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் கொஞ்சம் மாற்றி முத்திலே மாதுளையைப் புதைத்தாலென்ன  என்று தோன்ற இன்றைய புதிர்.  ஆனால் அதற்குள் அந்த மாது நுழைய மாட்டேனென்று நின்று விட்டார்கள். அதனால் மங்கையைத் தள்ளிவைத்து "மாதுளை"யிலிருந்து "ளை" மட்டும்  முத்து (ஒரு மணி)  உள்ளே புதைத்ததில்  "முளைத்து" வந்தது  இன்றைய புதிர்:

வளர்ந்து ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி உட்கொள் (4) 


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (13):

1) 6:01:55 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:34 அம்பிகா
3) 7:43:48 மீ கண்ணன்
4) 8:16:48 மாலதி
5) 8:18:37 முத்துசுப்ரமண்யம்
6) 8:20:22 மீனாக்ஷி
7) 8:22:11 பாலு மீ
8) 8:31:42 ரவி சுப்ரமணியன்
9) 14:21:26 ரமணி பாலகிருஷ்ணன்
10) 14:22:26 மடிப்பாக்கம் தயானந்தன்
11) 14:46:16 கேசவன்
12) 18:32:25 சாந்தி நாராயணன்
13) 20:37:08 சதீஷ்பாலமுருகன்
**********************
Raghavan MK said…
[12/14, 21:06] M K Raghavan: முளைத்து என்பதும் வளர்ந்து என்பதும் ஒன்றா? முளைத்த பின் தானே வளர்ச்சி?
[12/14, 21:08] M K Raghavan: முளைத்தல் என்பது தாவரங்கள், பூஞ்சைகள் முறையே அவற்றின் வித்துக்களிலிருந்து வெளியேறி *வளரத் தொடங்கும்* செயலாகும்.
[12/14, 21:13] M K Raghavan: வளர்ந்து ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி உட்கொள் (4)
ஒரு மணியில்= முத்து (ல்)
ஒரு கனி = மாதுளை
மங்கையைத் தள்ளி வைத்து
=மாதுளை-மாது = ளை
உட்கொள்=
முத்து <--ளை
=
முளைத்து
Upto this okay
Is it equal to வளர்ந்து?
Chittanandam said…
மிக நல்ல புதிர்.
Vanchinathan said…
வளர்ச்சி = முளைத்தல் என்று கிடையாது; ஆனால் வளர்ச்சியின் பல படிகளில் முதற்படி முளைத்தல். முளைத்தல் என்பது தாவரங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். வளர்ச்சி இன்னமும் பொதுவாக. (கையெழுத்துப் பிரதியாக தொடங்கப்பட்ட அப்பத்திரிகை இன்று பல லட்சங்கள் விற்கும்படி வளர்ச்சியடைந்துள்ளது). புதிரில் இந்த அளவு நெருக்கம் உள்ல சொற்கள் பொருளாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
மாது மாதுளை முத்து எல்லாம் யோசிச்சேன்.

ஆனால் வளர்ந்து (ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து) ஒரு கனி உட்கொள் (4) ன்னு முட்டி மோதி கொழம்பிட்டேன்.

வளர்ந்து ஒரு மணியில் (மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி) உட்கொள் (4) ன்னு பிரிச்சிருக்கணும், அங்கதான் கோட்டை விட்டுட்டேன்.

கணித ஆசிரியர் வளைகுறிகள் () சேர்த்திருந்தால சுலபமாக இருந்திருக்கும். 🙂
Muthu said…
ஆங்கிலத்தில் "புதிர் அகராதிகள்" இருக்கின்றன. நேர்மறை, எதிர்மறைச் சொல் அகராதிகளும் (synonyms and antonyms/ thesaurus) இருக்கின்றன. அது போல் தமிழில் கிடையாது. அது போல் ஒன்று தயாரிக்க வேண்டும். தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் முயன்று செயல் பட வேண்டும். என் போன்ற, அதிகத் தமிழறிவும் இல்லாத, பன்னெடுங்காலம் வெளி நாட்டிலேயே "குப்பை கொட்டி" ஓய்ந்தோருக்கு, இத்தகைய அகரமுதலி/நிகண்டு இல்லாமை ஒர் பெரும் முட்டுக்கட்டை. மங்கை என்றால் பெண், கன்னி, சிறுமி என்றெல்லாம் நின்சிவு வந்தது; ஆனால் "மாது" தூன்றவில்லை; என்ன் வசம் உள்ள இரண்டு அச்சு அகரமுதலி மற்றும் 10-க்கு மேற்பட்ட வலைத்தள அகரமுதலிகளிலும் மங்கை = மாது என்று காணப் படவில்லை. வார்த்தை விளையாட்டுப் புதிர்களுக்காவே நிகண்டு தயாரித்தால் இக் குறைகளைப் போக்கலாம்.
Muthu said…
சுலபமாக ஆக்கினால் சுவை குன்றி விடக் கூடும்!
Something wrong. I don't want to argue.
Muthu said…
நானும் அதே. எந்த மணியிலும் மங்கையைக் காண முடியவில்லை (மங்கையரிடம்தான் மணிகள் இருக்கும்). பல மணித்துளிகளுக்குப் பின் ஒளி கிடைத்தது - விடை முளைத்தது.
கூகுள் ரொம்ப ஆபத்தானது. மங்கை பெண் க்கு மற்ற சொற்கள் தேடியபோது சில அசிங்க ஆபாச வலைத்தளங்கள் கண்ணில் பட்டன. ஆங்கிலத்தில் சொற்களை மட்டும் வைத்து ஆபாச தளங்களை வடிகட்டும் செயல் ஓரளவு செய்யக்கூடியது. அகரமுதலிகள் நிகண்டுகள் போன்றவை இல்லாததால் இது தமிழில் இயலாத காரியமாகவே தோன்றுகிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்