இன்று காலை வெளியான வெடி:
வாழை மனது ஏறக்குறைய கலங்க வண்ணமயிலின் கண்ணம்மா (4)
இதற்கான விடை: வானமழை
பாரதியாரின் ஒரு கண்ணம்மா பாடல் ஒவ்வொரு வரியிலும்
கண்ணம்மாவை வேறு வேறு வடிவாகக் கற்பனை செய்து அதற்கேற்றாற்போல் தன்னை யாரென்று அடுக்கடுக்காகச் சொல்லும் அழகான கவிதை,
"பாயுமொளி நீயெனக்கு பார்க்கும்விழி நானுனக்கு" என்ற அக்கவிதையில்
வரும் ஓரடி "வானமழை நீயெனக்கு வண்ணமயில் நானுனக்கு" இன்றைய புதிருக்குப் பயன்பட்டது.
நீ விரலென்றால் நான் நகம், நீ கண்ணென்றால் நான் இமை என்றே இக்காலத்தில் பழகிப்போன நமக்கு பாரதியாரின் உவமைகள் சிலிர்க்க வைக்கின்றன:
பூணும்வடம் -- புதுவயிரம்
பேசுபொருள் -- பேணுமொழி
செல்வம் -- சேமநிதி
இதை ஏழாவது மனிதன் திரைப்படத்திற்காக (1982) எல்.வைத்யநாதன் அழகாகக் கல்யாணி ராகத்தில் இசையமைத்திருப்பதைக் கேட்க இந்த யூட்யூப் தளத்தைக் காணவும் (பாடியவர்கள்: ஏசுதாஸ், நீரஜா).
இன்று விடையளித்தோர் பட்டியலை ரவி சுப்ரமணியன் திரட்டியளித்து வெளியிடுவார்.
*****************
பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு,
தோயும்மது நீயெனக்கு, தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீயெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும்வடம் நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;
காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடீ
மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா!
வானமழை நீயெனக்கு வண்ணமயில் நானுனக்கு
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞானவொளி வீசுதடி ,நங்கைநின்றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீயெனக்கு மேவுகடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு; [ பாட்டு + இனிமை!]
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசுகமழ் நீயெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீயெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே! அள்ளுசுவையே கண்ணம்மா!
காதலடி நீயெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லவுயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீயெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீயெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!
தாரையடி நீயெனக்கு, தண்மதியம் நானுனக்கு:
வீரமடி நீயெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!

Comments
இன்று சரியான விடை அளித்தவர் 35 :
1) 12/11/2018 6:01:29 ரவி சுப்ரமணியன்
2) 12/11/2018 6:02:05 எஸ்.பார்த்தசாரதி
3) 12/11/2018 6:02:52 ருக்மணி கோபாலன்
4) 12/11/2018 6:05:03 முத்துமணி
5) 12/11/2018 6:05:41 ராமராவ்
6) 12/11/2018 6:06:56 சந்த்யா
7) 12/11/2018 6:08:36 K.R.சந்தானம்
8) 12/11/2018 6:09:23 ராஜா ரங்கராஜன்
9) 12/11/2018 6:10:06 KB
10) 12/11/2018 6:12:18 சதீஷ்பாலமுருகன்
11) 12/11/2018 6:13:14 லட்சுமி சங்கர்
12) 12/11/2018 6:15:10 மீ பாலு
13) 12/11/2018 6:20:52 அம்பிகா
14) 12/11/2018 6:23:22 திருமூர்த்தி
15) 12/11/2018 6:33:53 சாந்தி நாராயணன்
16) 12/11/2018 6:35:49 சித்தன் சுப்ரமணியன்
17) 12/11/2018 7:02:43 ஹரி பாலகிருஷ்ணன்
18) 12/11/2018 7:06:08 மீ கண்ணன்
19) 12/11/2018 7:19:47 ரவி சுந்தரம்
20) 12/11/2018 7:23:38 மீனாக்ஷி
21) 12/11/2018 7:26:14 உஷா
22) 12/11/2018 7:27:01 மைத்ரேயி
23) 12/11/2018 7:28:06 ஆர்.நாராயணன்.
24) 12/11/2018 8:03:28 சுபா ஸ்ரீநிவாசன்
25) 12/11/2018 8:09:29 நங்கநல்லூர் சித்தானந்தம்
26) 12/11/2018 8:29:20 மாலதி
27) 12/11/2018 9:05:36 ராஜி ஹரிஹரன்
28) 12/11/2018 9:30:42 கோவிந்தராஜன்
29) 12/11/2018 9:39:19 மடிப்பாக்கம் தயானந்தன்
30) 12/11/2018 10:40:50 மு.க.இராகவன்.
31) 12/11/2018 11:47:42 மு க பாரதீ
32) 12/11/2018 12:58:27 தேன்மொழி
33) 12/11/2018 14:26:49 வானதி
34) 12/11/2018 14:55:04 ஆர். பத்மா
35) 12/11/2018 16:14:25 கேசவன்
பாராட்டுக்கள்
பாரதியின் 137 ம் பிறந்த நாளன்று ,எழில் மிக்க வண்ணமயில் தோகை யொப்ப புதிரமைத்து, பாரதியை நினைவூட்டிய புதிராசியருக்கும் இன்று பிறந்த நாள்!
வாழ்க பல்லாண்டு!
����������������
*பாரதத்தின் தீ – பாரதி*
(நாற்சந்தி கூவல்)
_எண்ணிய முடிதல் வேண்டும்_
_நல்லவே எண்ணல் வேண்டும்_
_திண்ணிய நெஞ்சம் வேணும்_
_தெளிந்த நல்லறிவு வேணும்;_
_பண்ணிய பாவமெல்லாம்_
_பரிதிமுன் பனியை போலே,_
_நண்ணிய நின்முன் இங்கு_
_நசிந்திடல் வேண்டும் அன்னாய் !_
சொல் மந்திரம் போல் அமைய வேண்டும் என்பான் பாரதி. மேலே உள்ள கவிதையை, *_தமிழ் வேதம்_* என்றே சொல்லலாம். வாழ்க்கை முழுதும் வறுமையின் பிடியில் மடியில் தவழ்ந்தவன் கேட்கும்வரங்கள் பலே பலே. இது தான் அவனை மேன்மைபடுத்துகிறது. தான் பெற்ற கல்வியை, அறிவை, தெளிவை, ஞானத்தை இந்த உலகுக்கு வழங்கி செழிக்க வேண்டும் என சிந்தித்தவன்.
*_மகா கவிஞன் பிறந்த இந்த 137ஆம் தினத்தில் அவனை பற்றிக் கூற ஆசை._*
_மோகத்தைக் கொன்றுவிடு — அல்லா லென்றன்_
_மூச்சை நிறுத்திவிடு_
_தேகத்தைச்_ _சாய்த்துவிடு_ — _அல்லாலதில்_
_சிந்தனை மாய்த்துவிடு_
_யோகத் திருத்திவிடு__ — _அல்லா லென்றன்_
_ஊனைச் சிதைத்துவிடு !_
ஐந்து வயதில் தாயின் இழப்பு, பத்து வயதில் முறிந்த முதல் (பிள்ளை) காதல், திருநெல்வேலியில் கசக்கும் ஆங்கில கல்வி, பதினைந்து வயதில் தந்தையின் மறைவு, வறுமை, கடன் ! இதற்கு இடையில் பதினான்கு வயதில் பாரதியின் திருமணம் – ஏழு வயது செல்லமாளுடன். எத்தனை எத்தனை ஏற்ற இறக்கங்கள், அத்தனை அத்தனை அனுபவங்கள்.
_புதிர் நிறைந்த வாழ்க்கையை புரிந்த கொள்ள தான் யார் உளர் ?_
*அவன் தமிழினால் தொடாத இடமே இல்லை என்றே சொல்லாம்.* அனைத்து வகையான கருத்துகளையும் சொல்லி உள்ளான். சிறு வயதில் விளையாடும் உரிமை மறுக்க பட்ட பாரதி (படி படி என்று அப்பன் தொல்லை !) எழுதிய “ஓடி விளையாடு பாப்பா” குழந்தை இலக்கியத்தின் முன்னோடி. பெண் விடுதலையின் தலைமகன். தாய் மறைந்த சோகம், சாகும் வரை அவனை வாட்டியது. இதனாலே *அவன் சக்தி மீதும், கண்ணம்மா மீதும் தீராக் காதல் கொண்டான்* என்றே தோன்றுகிறது
_வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;_
_பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;_
_காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!_
_மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! *கண்ணம்மா* ! ..._
*வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;_*
_பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;_
_ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;_
_ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே *கண்ணம்மா* ! ..._
��
��������
_வாழை மனது ஏறக்குறைய கலங்க வண்ணமயிலின் கண்ணம்மா (4)_
_வாழை மனது_ _ஏறக்குறைய_
= *வாழை மன ~(து)~*
_கலங்க_ = *வானமழை*
= _வண்ணமயிலின் கண்ணம்மா_
🌺🌺🌺🌺🌺🌺🌺
பொதுவுடமை என்னும் சொல்லை தமிழில் கொண்டு வந்தவன் பாரதி. உலகம் முழுவதும் தன பார்வையை செலுத்தியவன், தமிழின் சமய சார்பு அற்ற நவீன கவிதை உலகத்தின் முன்னோடி. தன் பா திறத்தால், அனவைருக்கும் தன் தமிழை கொடையாய் வாரி வாரி வழங்கியவன், கவிதையின் முழு அட்சய பாத்திரமாய் வாழ்ந்தவன்.
_அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை_
_அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;_
_வெந்து தணிந்தது_ _காடு;-தழல்_
_வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?_
_தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்_
பாரதியின் சிந்தனை அனைத்தும் இந்த *தீ போன்றது,* ரசனைகளும் தான். தமிழை வைத்து பிழைக்கும் *மாக்கள்* உள்ள இக்காலத்தில், *_தமிழ் பிழைக்க உதித்த உத்தமன் பாரதி_* .
எளிய சொல், எளிய பதம், எளிய சந்தம். எளிய வாழ்கை, செழுமையான தமிழ், வீர உணர்வுகள், விவேக சிந்தனைகள் --> பாரதி
_சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே – அதைத்_
_தொழுது படித்திடடி பாப்பா !_
_செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் – அதைத்_
_தினமும் புகழ்ந்திடடி பாப்பா !_
தமிழன் என்ற மமதையும் , தான் கவிஞன் என்ற கர்வமும், சக்தி தான் வடிவம் என்றும், ரசனை தன் வாழ்வு என்றும் உலாவியவன். பாரத மணித்திருநாடை மறக்காமல் மதித்தவன். அதனாலே தமிழை (தாயை) முதல் சொல்லி, நாட்டையும் இணைக்கிறான். என்னே அவனது அழகு !
தெய்வம் என்பது யாது ? அவனது பதில்
_உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் — தெய்வம்_
_உண்மையென்று தானறிதல் வேணும்;_
இது, இது தான் பாரதி, உண்மை என்பதே பெரும் தெய்வம், பெருமைக்குரிய சொத்து. (இரண்டு பொருள் வரும் : தெய்வம் உண்மை, உண்மை என்பதே தெய்வம். இரண்டுமே சரி தான் !)
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
( 👆🏽வலைத்தளத்தில் கண்டெடுத்த முத்துக்கள் )
💐🙏🏼💐
கவிந்துநின்ற கயமைகளை
களையெடுக்க கவிபடைத்த
பாரதியே வாழ்க!
கவித்தேரில் சாரதியாய்
பவனி வந்த பாரதியே உன்
கவித்தேனில் கலந்துவிட்ட
கண்ணம்மா எக்காலமும்
வாழ்ந்திருப்பாள் திண்ணமாய்
புதிரிலே உமக்கு அழகூட்டும்
வண்ணமாய் ,வண்ணமயிலே,உன்
கண்ணாமாவை தீட்டிவைத்த
புரவலரின் புலமையின்று
களிப்புத்தரும் கன்னலன்றோ!
முகபா