சென்றமாதம் வேதாரண்யம் பக்கம் வீசிய கஜா புயலால் சென்னைக்குக்
கிடைத்த மழை கொஞ்சம்தான். அடுத்தது பெரிதாய் இன்னொரு புயல் உருவாகி நேற்று சிறுதூறலும் தராமல் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது.
வருங்கோடையில் சென்னையில் தண்ணீருக்குப் பெரிய திண்டாட்டம் இருக்கும்.
மேற்றிசைச் செல்நதி வேறிடம் மாறினும்
காற்றழுத்தத் தாழ்வால் கடல்மீது தோற்றிய
எப்புயலும் வாராதாம் இத்தகையப் பாழ்நகரில்
எப்படிநாம் வாழ்வோம் இனி
(தோற்றிய = தோன்றிய என்பதன் வலித்தல் விகாரம். உவேசாவின் தோற்றிய அல்ல.)
இன்றைய புதிர்:
மேற்றிசைச் செல்நதி கரைகளையுடைத்து வயலில் பாய்ந்து உண்டான தெளிவு (5)
இதற்கான விடை: நிர்மலம் = நிலம் + நர்மதா - நதா
இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் வங்கக் கடலில் கலக்க, நர்மதா அரபிக்கடல் நோக்கி மேற்காகச் செல்லும் நதி சில நதிகளில் முக்கியானது.
Comments
A peek into today's riddle!
*************************
_*அறிவிலே தெளிவு*, நெஞ்சிலே உறுதி,_
_அகத்திலே அன்பினோர் வெள்ளம்,_
_பொறிகளின்மீது தனியர சாணை,_
_பொழுதெலாம் நினதுபே ரருளின்_
_நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்_
_நிலைத்திடல் என்றிவை யருளாய்_
_குறிகுண மேதும் இல்லதாய்_
_அனைத்தாய்க்_
_குலவிடு தனிப்பரம் பொருளே!_
*(பாரதியார்)*
************************
துன்பம், துன்பம் என்று ஒவ்வொருவரும் தலையிலடித்துக் கொள்கிறார்களே! அவர்கள் அந்தத் துன்பந்தான் அவர்களுடைய குரு என்பதை மறந்து போகிறார்கள்.
கிராமங்களிலே _` *பட்டறி, கெட்டறி* ’_ என்பார்கள்.
பட்டால் தான் அறிவு வரும்.
கெட்டால்தான் *தெளிவு* வரும்.
அறிவும் தெளிவும் வந்த பின்பு ஞானம் வரும்.
அந்த ஞானத்திலே அமைதி வரும்.
அந்த அமைதியில் பேராசை, கெட்ட எண்ணங்கள் எல்லாம் அடிபட்டுப் போகும்.
பற்று அளவோடு நிற்கும். உள்ளம் வெள்ளையடிக்கப்பட்டு *நிர்மலமாக* இருக்கும்
*************************
_மேற்றிசைச் செல்நதி கரைகளையுடைத்து வயலில் பாய்ந்து உண்டான தெளிவு (5)_
_வயல்_ = *நிலம்*
_மேற்றிசைச் செல்நதி_
= *நர்மதை*
_கரைகளையுடைத்து_
= *~ந~ ர்ம ~தை~*
= *ர்ம*
_வயலில் பாய்ந்து உண்டான_
= *ர்ம --> நிலம்*
= *நி +ர்ம+லம்*
= *நிர்மலம்*
_தெளிவு_ = *நிர்மலம்*
*************************
*_பட்டினத்தார் பாடல்_*
_பூரண மாலை_
உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே!
விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே!
நெற்றி விழியுடைய _*நிர்மல சதாசிவத்தைப்*_
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!
உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே!
**********************
*நிர்மலம்*
ஞானக்கூத்தன் கவிதைகள்
_வருகிறான் அவன் யார்? சவரத் தகடா? புதிய பல்பொடியா? இன்னதென்று நினைவில் இல்லை. என்னிடம் விற்க முயன்று, வாங்கப் படாமல் திரும்பிப் போகிறான் அவன் யார்? போகும் திசையில்_ _நிற்கிறான் நடக்கிறான் தயங்கிப் போகிறான் கண்ணுக்குக்கீழ் தலைப்பில் குத்திய_ _ஐம்பது காசுப் பேருந்துச் சீட்டுப் போல என்னவோ சுருக்கம் பார்வையைக் கவரும். இடது கையில் ஏதோ பெட்டியைச் சுமப்பது போன்ற பாவனை. நிற்கிறான் நடக்கிறான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்_
_வேங்கட ரங்கம்_ _பிள்ளைத் தெருவின்_
_வால்போல் நீண்ட_
_சந்து முனையில் நின்று கொண்டு_
_எவளோ ஒருத்தி_
_பகிரங்கமாக்கிக்_ _குளிக்கத்_ _தொடங்கினாள்__ .
_பனம்பழங்கள் இரண்டு_
_என்மேல் வீழ_
_விழித்துக் கொண்டேன்_ _எழுப்பினாற் போல._
_விழித்துக் கொண்டு_
_தெருவைப் பார்த்தேன்_
_வெறிச் சென்றிருந்தது_
_*நிர்மலமாய்*_
_இந்தக் கனாக்கள்_
_தெருவில் எங்கும் காணப்படாமல்_ .
💐🙏🏼💐
*************************
1) 6:05:33 முத்துசுப்ரமண்யம்
2) 6:09:11 எஸ்.பார்த்தசாரதி
3) 6:10:23 ரவி சுப்ரமணியன்
4) 6:21:04 ராமராவ்
5) 6:27:35 கலாராணி
6) 6:31:27 லதா
7) 6:32:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 6:33:53 லக்ஷ்மி ஷங்கர்
9) 6:38:44 பாலு மீ
10) 6:38:54 ரவி சுந்தரம்
11) 6:41:52 ஆர்.நாராயணன்
12) 6:58:20 சுந்தர் வேதாந்தம்
13) 6:59:56 கு.கனகசபாபதி, மும்பை
14) 7:24:59 மீனாக்ஷி
15) 7:39:02 ராதா தேசிகன்
16) 8:22:30 KB
17) 8:30:03 வி ன் கிருஷ்ணன்
18) 9:27:31 அம்பிகா
19) 9:31:01 Siddhan
20) 9:48:47 மாலதி
21) 9:49:49 கேசவன்
22) 11:33:19 மு.க.இராகவன்.
23) 12:39:00 Sandhya
24) 12:45:14 சுபா ஸ்ரீநிவாசன்
25) 13:19:50 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
26) 13:37:23 ஏ.டி.வேதாந்தம்
27) 13:37:54 பத்மாசனி
28) 17:28:01 மீ கண்ணன்
29) 18:24:20 பாலா
30) 19:43:40 ஆர். பத்மா
**********************
நிலம் - Land
வயல் - Field
சொல் நிலம்
அருஞ்சொற்பொருள் தரை ; மண் ; பூமி ; இடம் ; வயல் ; பதவி ; நிலத்திலுள்ளார் ; எழுத்து அசை சீர்களாகிய இசைப்பாட்டின் தானம் ; விடயம் ; மேன்மாடம் ; கள்ளிவகை .
நிர்மலம் பெயர்ச்சொல் (-ஆக, -ஆன) (அ.வ.)
தெளிவு; spotlessness. மழை பெய்து ஓய்ந்த பின் வானம் நிர்மலமாகக் காட்சி அளித்தது.