இன்று காலை வெளியான வெடி:
வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4)
இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4)
இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
********************
_வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4)_
_புலி விரட்டிய கருவியில்_
= *முறம்*
_நாற்று நடு_
= (நா) *_ற்_* (று)
_வீட்டுப் பகுதி_
= *முறம் <----ற்*
= *முற்றம்*
************************
*_Aside......_*
_செவி மறைப்பாய்பு முரண் செய்த புலி செத்து_ '
என்ற கலித்தொகைப் பாடலில், பெண் ஒருத்தி முறத்தைக் கொண்டு, புலியை விரட்டிய தகவல் கூறப்பட்டுள்ளது.
' _முறம் செவி யானை வேந்தர்_ '
என்ற புறநானூற்றுப் பாடலில், யானையின் காது முறம் போல் இருந்ததாக உவமை கூறப்பட்டுள்ளது.
பழைய முறத்துக்கு சாணி என்பது ஒரு பழமொழி.
' _பல்லரிசியாவும் மிகப் பழவரிசி தாமாகச்_
_சல்லவட்ட மெனுஞ்சுளகால்_ _தவிடுபடப் படையீரே'__
என்ற கலிங்கத்துப் பரணி பாடலில், எதிரி வீரர்கள், முறத்தில் புடைக்கப்பட்ட பதர்களைப் போல சிதறினார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில், முறம், சுளகு என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறம், அகன்ற வாய் கொண்டதாக இருக்கும். சுளகு, குறுகிய வாய் கொண்டதாக இருக்கும்.
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
புலியை முறத்தால் விரட்டிய சம்பவம் புறநானூற்றில் வருகிறது.
*_முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழ் மங்கை_*
*முறம்* (அல்லது சுளகு, சொலவு) என்பது தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க தமிழகத்தின் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி. இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும்.
பண்டைய தமிழ் சமூகத்தில் முறம்:
நெற்கலத்தில் முறத்தைக்கொண்டு நெல்லை ஒரு தமிழ்ப் பெண்மணி தூற்றிக்கொண்டிருந்த பொழுது, புலி ஒன்று தாக்க வந்ததாகவும், அந்த மங்கை புலிக்கு அஞ்சாமல் முறத்தைக் கொண்டே அதை விரட்டியதாகவும் ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. தமிழ்ப் பெண்களின் பயமின்மைக்கு எடுத்துக்காட்டாக இக்கதையை கூறுவர். இக்கதையின் நினைவாக புலியை முறம் கொண்டு ஒரு தமிழ் மங்கை விரட்டுவது போன்ற ஒரு சிற்பத்தை மாமல்லபுரத்தில் தமிழக அரசு நிறுவியுள்ளது.
பண்டைய பாடல்களில் ஒன்று:
_இருந்து முகம் திருத்தி_
_ஈரொடு பேன் வாங்கி_
_விருந்து வந்தது என்று விளம்ப_
_வருந்திமிக_
_ஆடினாள் பாடினாள்__
_ஆடிப் பழமுறத்தால்_
_சாடினாள் ஓடோடத் தான்_
(தமிழ் -கருத்துக்களம்...)
💐🙏🏼💐
1) 6:01:10 இரா.செகு
2) 6:01:17 முத்துசுப்ரமண்யம்
3) 6:01:54 ராஜா ரங்கராஜன்
4) 6:02:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 6:03:10 அம்பிகா
6) 6:03:18 திருமூர்த்தி
7) 6:03:44 வானதி
8) 6:03:57 மு.க.இராகவன்.
9) 6:04:59 Siddhan Subramanian
10) 6:05:00 ரவி சுப்ரமணியன்
11) 6:05:16 பாலா
12) 6:05:54 எஸ்.பார்த்தசாரதி
13) 6:06:11 வி ன் கிருஷ்ணன்
14) 6:08:00 மீ கண்ணன்
15) 6:10:13 லட்சுமி சங்கர்
16) 6:12:31 மயிலை வெங்கு
17) 6:13:41 சுந்தர் வேதாந்தம்
18) 6:14:32 ரவி சுந்தரம்
19) 6:16:17 லதா
20) 6:18:42 ராதா தேசிகன்
21) 6:22:04 நங்கநல்லூர் சித்தானந்தம்
22) 6:25:19 நாதன் நா தோ
23) 6:30:31 பானுபாலு
24) 6:35:12 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
25) 6:35:42 பானுமதி
26) 6:40:03 KB
27) 6:40:10 ரங்கராஜன் யமுனாச்சாரி
28) 6:46:20 ஆர் .பத்மா
29) 6:49:58 சாந்தி நாராயணன்
30) 6:51:24 பா. நடராஜன்
31) 7:01:24 தி. பொ. இராமநாதன்
32) 7:05:32 ஆர்.நாராயணன்.
33) 7:15:05 கேசவன்
34) 7:17:43 ராஜி ஹரிஹரன்
35) 7:19:13 மாலதி
36) 7:19:56 திருக்குமரன் தங்கராஜ்
37) 7:20:58 தேன்மொழி
38) 7:21:46 வி.ஜயா
39) 7:28:34 சதீஷ்பாலமுருகன்
40) 7:29:35 சங்கரசுப்பிரமணியன்
41) 7:32:15 மு.க.பாரதி
42) 7:35:14 ஹரி பாலகிருஷ்ணன்
43) 7:38:07 ஏ.டி.வேதாந்தம்
44) 7:38:24 பிரசாத் வேணுகோபால்
45) 7:38:31 பத்மாசனி
46) 7:44:32 கோவிந்தராஜன்
47) 7:45:28 விஜி ஶ்ரீனிவாசன்
48) 7:50:46 விஜயா ரவிஷங்கர்
49) 7:57:05 பார்த்தசாரதி வேதாந்தம்
50) 7:57:31 பினாத்தல் சுரேஷ்
51) 8:02:13 பாலு மீ
52) 8:10:12 S V Madhavan
53) 8:16:51 கலாராணி
54) 8:20:30 ஶ்ரீதரன்
55) 8:21:14 கு.கனகசபாபதி, மும்பை
56) 8:31:03 ஸௌதாமினி
57) 8:44:56 மீனாக்ஷி
58) 8:49:54 மீனாக்ஷி கணபதி
59) 9:11:55 மாதவ்
60) 9:29:43 ராஜி பக்தா
61) 9:41:31 எஸ் பி சுரேஷ்
62) 9:52:11 புவனா சிவராமன்
63) 10:23:51 ராமராவ்
64) 10:59:25 ரவிஷங்கர் ரா
65) 11:49:30 விஜி துரை
66) 14:01:25 உஷா
**********************