இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
*************************
_இளஞ்சிவப்பு சூரியன்_
_அழகாக ஒளிர_
_ஓயாமல் கரையைத் தொடும் அலை_ _*புரண்டோடும்* கடல் வியக்கிறேன் !_
_ரசிக்கிறேன்!_
**********************
_*வறண்டு* கிடக்கும் ஆற்றில் கரை_ _*புரண்டோடும்* வெயில் வெள்ளம்._
_மேலே பறந்து கொண்டிருக்கும்_ _தனித்தொரு பறவை வானில் ஒரு_ _குளிர்மேகம் தேடி!._
(கு.அழகர்சாமி)
🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
_கரைகளில்லாமல் வற்றும் ஒரு நதி புரண்டோடும் சந்துகளில் மக்களைச் சுமந்து (5)_
_கரைகளில்லாமல் வற்றும்_
= _[வ]ற்று[ம்]_
= *ற்று*
_ஒரு நதி_ = *சிந்து*
= *சி +ற்று+ந்து*
= *சிற்றுந்து*
_புரண்டோடும் சந்துகளில் மக்களைச் சுமந்து_
= _சந்துகளில் மக்களைச் சுமந்து புரண்டோடும்_
= *சிற்றுந்து*
🚌🚌🚌🚌🚌🚌🚌🚌
_சிற்றுந்து_
இருபத்தைந்து இருக்கைகள் கொண்ட வாகனம்.
சிற்றூர்க்கிடையே செல்லும் குறுந்தொலைவு வண்டி.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_தமிழ் இலக்கியம்_
_*சிந்து* பாடல்கள்_
சங்க இலக்கியம் இயல் இசை நாடகம் என மூன்று பிரிவில் அடக்கப் படுகிறது. *_அதில் இசை என்னும் பிரிவில் சிந்து பாடல்களும் உள்ளடங்குகின்றன._*
*சிந்து* என்பது நடைப்பாடல். பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது _காவடிச் சிந்து_ ! இவற்றுள் ஒரு பாடலை இங்கே பார்க்கலாம்.
*யசோதை* :
_மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்_
*கண்ணன்* :
_போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே_
_காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன் கை நிறைய_ _வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்_
_காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்_ _உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில்_ _திரும்பிடுவேன் போக வேணும் தாயே –_
_கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள்_ _உண்டு கரடி புலியைக் கண்டால்_ _கலங்கிடுவாய் கண்மணியே_
_போக வேண்டாம்_
_காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும் கூட்டங் கூட்டமாக_ _வந்தால்_ _வேட்டை ஆடி ஜெயித்திடுவேன் போக வேணும் தாயே –_ _தடை சொல்லாதே நீயே_
💐🙏🏼💐
**********************
1) 6:03:11 ராமராவ்
2) 6:05:03 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:06:39 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:49 ராஜா ரங்கராஜன்
5) 6:10:06 K.R.Santhanam
6) 6:13:21 ரவி சுந்தரம்
7) 6:14:04 ரவி சுப்ரமணியன்
8) 6:27:40 அம்பிகா
9) 6:35:01 இரா.செகு
10) 6:36:51 மீனாக்ஷி கணபதி
11) 6:55:02 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:57:56 உஷா
13) 6:58:22 நாதன் நா தோ
14) 7:52:08 வி ன் கிருஷ்ணன்
15) 8:16:17 Siddhan Subramanian
16) 9:06:40 பினாத்தல் சுரேஷ்
17) 9:51:36 மாலதி
18) 10:21:09 லதா
19) 10:55:52 மீ கண்ணன்
20) 11:58:03 KB
21) 12:15:34 பிரசாத் வேணுகோபால்
22) 14:22:54 மு.க.இராகவன்.
23) 14:31:32 மடிப்பாக்கம் தயானந்தன்
24) 17:20:21 பாலு மீ
25) 17:52:41 மு க பாரதி
26) 18:34:13 சுந்தர் வேதாந்தம்
27) 18:35:35 மாயா வேதாந்தம்
28) 19:07:51 கோவிந்தராஜன்
29) 19:32:45 சுபா ஸ்ரீநிவாசன்
**********************
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்து ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.
இப்புதிரின்அமைப்பு வழக்கமான சொற்சிக்கனத்தைக் கடைப்பிக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. 'எதிரும் புதிரும்' குழுவிலும் இது அலசப்பட்டது. Container construction என்பதால் 'புரண்டு'வின் நோக்கம் என்ன?
'சந்து' container indicatorஆ?
ஆசிரியரின் விளக்கத்தை அறிய விழைகிறேன்.