Skip to main content

விடை 3497

இன்று காலை வெளியான வெடி:
கோயில் காளைக்கு எதிரிலிருக்கும் ஒரு மிருகம் உள்ளே இழு (6)

இதற்கான விடை:  சிவலிங்கம் = சிங்கம் + வலி (படகை ஓட்ட துடுப்பை வலிக்க வேண்டும். கயிற்றை வலித்து பட்டத்தை வானில் உயரே பறக்கவிட்டான்).

திருநாளைப்போவாருக்கு சிவலிங்கத்தை மறைத்துப் பின்னர் விலகிய கோயில் காளை நினைவிருக்கிறதா?

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (25):

1) 6:03:31 ரங்கராஜன் யமுனாச்சாரி
2) 6:04:24 நாதன் நா தோ
3) 6:11:21 லட்சுமி சங்கர்
4) 6:22:00 ரவி சுப்ரமணியன்
5) 6:26:22 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6) 6:34:09 கேசவன்
7) 7:06:37 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 7:16:26 KB
9) 7:18:06 Siddhan Subramanian
10) 7:46:50 மீ கண்ணன்
11) 7:50:58 சுந்தர் வேதாந்தம்
12) 8:04:38 ரவி சுந்தரம்
13) 8:09:40 ராஜா ரங்கராஜன்
14) 8:26:53 ஹரி பாலகிருஷ்ணன்
15) 8:54:54 மீனாக்ஷி கணபதி
16) 9:02:34 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 9:18:08 முத்துசுப்ரமண்யம்
18) 9:27:43 மீனாக்ஷி
19) 9:44:15 மாலதி
20) 9:59:06 வி.- ஜயா
21) 11:35:42 அம்பிகா
22) 12:11:32 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 15:53:32 மு.க.இராகவன்.
24) 18:07:40 மு க பாரதி
25) 20:31:19 ருக்மணி கோபாலன்
**********************
Raghavan MK said…
A peek into today's *உதிரிவெடி!*
*******************
*கோயில் காளையும்* ஜல்லிக்கட்டுக் காளையும் ஒன்றுதான்.  இதை சாமி காளை யென்றும் பாய்ச்சல் காளை என்றும் அழைப்பார்கள். கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக விடுபவர்களும் உண்டு. எவர் பராமரிப்பும் பெரிதாக இல்லாமல், கோயிலில் வளர்ந்தால் கோயில் காளை. வீட்டில் வைத்து வளர்த்தால் ஜல்லிக்கட்டுக் காளை.

சைவர்கள் திரிசூலத்தையும், வைணவர்கள் நாமத்தையும்  அடையாளமாகப் போட்டு விடுவார்கள்.
அந்த அடையாளம் எப்போதும் அழியாமல் இருப்பதால், மாட்டைப் பார்த்ததும் ஊர்மக்கள் ஒதுங்கி வணங்கிச் செல்வார்கள். இதன் பிறகு இதற்கு தலைக்கயிறு, தாம்புக்கயிறு, மூக்கணாங்கயிறு இவற்றையெல்லாம் போட்டு கட்ட மாட்டார்கள்.   கோயில் காளைக்கு ஊரில் எப்போதும் சுதந்திரமும் மரியாதையும் உண்டு.
🐂🐂🐂🐂🐂🐂🐂🐂
_கோயில் காளைக்கு எதிரிலிருக்கும் ஒரு மிருகம் உள்ளே இழு (6)_
_ஒரு மிருகம்_
= *சிங்கம்*
_இழு_ = *வலி*
_ஒரு மிருகம் உள்ளே இழு_
= *சிங்கம்<---வலி*
= *சிவலிங்கம்*
_கோயில் காளைக்கு எதிரிலிருக்கும்_
= *_நந்திக்கு_* _எதிரிலிருக்கும்_
= *சிவலிங்கம்*
*************************
*_ஓம் நமசிவாய_*

லிங்கம் எனும் வடமொழிச்சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்.
தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு தரும் விளக்கம். தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். இதுகாறும் கூறியவற்றால் _லிங்கம்_ என்பது வடமொழிச் சொல். _இலிங்கம்_ என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.

உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது. _“காணாத_ _அருவினுக்கும்_ _உருவினுக்கும்_ _காரணமாய் நீணாகம் பூண்டார்க்கு_ _நிகழ்குறியாம் சிவலிங்கம்”_
என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் *சிவலிங்கத்திற்கு* கொடுக்கும் விளக்கம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் . நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது . லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும். இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும். நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும் .கடைசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும். _படைத்தல்,காத்தல் , அழித்தல் ,ஆகிய முத்தொழிலும் இறைவன்_ _ஒருவனிடத்தில் இருந்தே_ _நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம் ._
அருவ உருவ வழிபாட்டு முறை தான் --சிவலிங்க வழிபாட்டின் கோட்பாடு. அருவம் --என்றால் "உருவம் இல்லாத"--என்று பொருள் ,
--லிங்கம் குறிப்பிட்ட வரைமுறை இல்லாத வடிவம் ,
உருவம் ----ஏதோ ஒரு வடிவம் உள்ளது அல்லவா ??அதைக்குறிக்கின்றது.   எனவே உருவம் உள்ளதும் ,உருவம் அற்றதும் --கலந்ததுவே --- *சிவலிங்கம்*
(மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.இது 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. )
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்