இன்று காலை வெளியான வெடி:
பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது (5)
இதற்கான விடை: வெடிகுண்டு = வெகுண்டு + படித்து - பத்து
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:08:44 பா நடராஜன்
2) 6:09:02 திருமூர்த்தி
3) 6:09:26 ராஜா ரங்கராஜன்
4) 6:09:32 எஸ்.பார்த்தசாரதி
5) 6:10:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:10:57 பிரசாத் வேணுகோபால்
7) 6:11:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:11:55 முத்துசுப்ரமண்யம்
9) 6:13:24 KB
10) 6:13:33 கி மூ சுரேஷ்
11) 6:17:37 லக்ஷ்மி ஷங்கர்
12) 6:23:30 மீ கண்ணன்
13) 6:23:38 கேசவன்
14) 6:24:08 சதீஷ்பாலமுருகன்
15) 6:27:17 ஆர். பத்மா
16) 6:29:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
17) 6:30:30 உஷா
18) 6:31:44 வி ன் கிருஷ்ணன்
19) 6:33:31 சங்கரசுப்பிரமணியன்
20) 6:41:17 ராமராவ்
21) 6:43:57 கு.கனகசபாபதி, மும்பை
22) 6:44:30 ஹரி பாலகிருஷ்ணன்
23) 6:47:53 மடிப்பாக்கம் தயானந்தன்
24) 7:05:59 எஸ் பி சுரேஷ்
25) 7:17:16 கோவிந்தராஜன்
26) 7:24:38 ஆர்.நாராயணன்.
27) 7:25:53 பானுபாலு
28) 7:26:39 அம்பிகா
29) 7:37:57 Sandhya
30) 7:41:33 மாலதி
31) 7:42:32 மு க பாரதி
32) 7:48:08 மீனாக்ஷி
33) 7:51:54 திருக்குமரன் தங்கராஜ்
34) 7:55:28 பாலா
35) 8:05:04 Sandhya
36) 8:12:37 இன்னமுதம்
37) 8:13:34 ராஜி ஹரிஹரன்
38) 8:14:15 தி. பொ. இராமநாதன்
39) 8:16:01 ரவி சுந்தரம்
40) 8:17:57 சுந்தர் வேதாந்தம்
41) 8:19:40 Siddhan Subramanian
42) 8:20:19 பாலு மீ
43) 8:26:35 பினாத்தல் சுரேஷ்
44) 8:33:58 மாதவ்
45) 8:42:23 Suba Srinivasan
46) 8:49:41 தேன்மொழி
47) 9:49:39 லதா
48) 10:36:32 ருக்மணி கோபாலன்
49) 10:54:41 இரா.செகு
50) 11:30:20 வானதி
51) 12:35:16 மு.க.இராகவன்.
**********************
_செறுவா் நோக்கிய கண்டன்_
_சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே_
(புறம் 100, 10-11)
புறநானுாற்றில் இடம்பெறும் இவ்வாிகளில் ஒளவையாா் அருமையானதொரு காட்சியை காட்டி நிற்கின்றாா்.அதியமான் நெடுமானஞ்சிக்கு ஆண்மகவு பிறந்துள்ளது.பகைவரை *வெகுண்டு* பாா்த்த கண்கள் புதல்வரைக் கண்டும் சிவப்பு மாறாமல் இருந்ததென குறிப்பிட்டு சினத்தின் வெளிப்பாட்டை காட்சி படுத்தியுள்ளதை ஈண்டு காணமுடிகிறது.
பிறந்திருக்கும் மகனைப் போர்க்கோலத்துடன் வந்து பார்க்கிறான் அரசன் அஞ்சி. கையிலே வேல். காலிலே வீரக்கழல். உடலிலே வியர்வை. கழுத்திலே பகைவர் வெட்டிய புண். பித்தை என்னும் உச்சிச்சிண்டு போட்ட தலையிலே ஊசியால் கோத்து வளைத்துக் கட்டிய பனம்பூக் கண்ணி. இந்தப் பூவோடு வெட்சிப் பூவும், வேங்கைப் பூவும் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்தது. வரிப்புலி தாக்கிய வலிமை மிக்க களிறு (ஆண்யானை) போல மாறாத சினத்துடன் காணப்படுகிறான். பகைவரை *வெகுண்டு* பார்த்த அவன் கண்ணின் சிவப்பு இன்னும் மாறவில்லை. இவனைத் தாக்கியவர் பிழைத்தவராக மாறப்போவது இல்லை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது (5)_
_கற்றுக்கொண்டு_
= *படித்து*
_பத்து போக_
= *படித்து- பத்து*
= *டி*
_கோபமடைந்து_
= *வெகுண்டு*
_வன்முறையாளர்கள் வீசுவது_
= *வெகுண்டு+டி*
= *வெடிகுண்டு*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*_புறநானுாற்றுப் பாடல்_*
_கையது வேலே; காலன புனை கழல்;_
_மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;_
_வட்கர் போகிய வளர் இளம் போந்தை_
_உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,_
_வெட்சி மா மலர்,வேங்கையொடு விரைஇ_ ,
_சுரி இரும் பித்தை பொலியச் சூடி,_
_வரிவயம் பொருத வயக் களிறு போல,_
_இன்னும் மாறாது சினனே; அன்னோ!_
_உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே ;_
*_செறுவர் நோக்கிய கண், தன் சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே._*
(அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை *ஔவையார்* பாடியது.)
💐🙏🏼💐
***********************
வன்முறையின்
தொடக்கம்
நிலத்தில்
தவறி
விழுந்த
குழந்தையை....
சமாதனப்படுத்த
தரையை
அடிக்க
சொல்லி
கொடுப்பது
தான் !!!
(தேன்மொழி)
***********************
கற்று கொண்டு = படித்து என்று பிரித்தால், கொள்ளும் குறியீடு (containment indicator) மறைந்து விடும்.
பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது
கற்று = படித்து, ஆகவே
பத்து போக படித்து கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது
பத்து போக படித்து = டி, ஆகவே
டி கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது
கோபமடைந்து = வெகுண்டு ஆகவே
டி கொண்டு வெகுண்டு வன்முறையாளர்கள் வீசுவது
டி கொண்டு வெகுண்டு = வெடிகுண்டு ஆகவே
வெடிகுண்டு வன்முறையாளர்கள் வீசுவது ஆகவே
வெடிகுண்டு = வெடிகுண்டு LHS = RHS, QED.