Skip to main content

விடை 3495

இன்றைய புதிர்:
நஷ்டத்தில் மனைவி போக எரிந்த விறகு திரட்டு (3)
இதற்கான விடை:  சேகரி = சே(தாரம்)  +  கரி


Comments

Raghavan MK said…


A peek into today's *_உதிரிவெடி_* !
*************************
_தங்க நகை : *சேதாரம்* என்னும் மர்மம்!_

அல்ஜிப்ரா கணக்கு என்ன, ஐன்ஸ்டீன் சொன்ன அணுப்பிளவு கொள்கையைக்கூட புரிந்துகொண்டுவிடலாம், ஆனால், தங்க நகைகளுக்குக் கடைக்காரர் சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது.😀

*சேதாரம்* என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும்.

ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான *சேதாரம்* அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் லேசில் புரிந்துகொள்ள முடிவதில்லை. 😩இதனால் அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. தங்கத்தின் தினசரி விலையை லண்டனில் ஐவர் கொண்ட குழு நிர்ணயிக்கிறது. அதனை அடிப்படையாக வைத்துதான் நகை வியாபாரிகள் சங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவிகிதத்தை லாபமாக கூடுதலாக வைத்து நகையின் விலையை அறிவிக்கிறது. இந்த லாபம் போகத்தான் இந்தச் *சேதாரத்தின்* மூலம் கிடைக்கும் லாபம்!😳
*************************
_நஷ்டத்தில் மனைவி போக எரிந்த விறகு திரட்டு (3)_

_நஷ்டத்தில் மனைவி போக_
= _சேதாரம் --தாரம்_
= *சே*

_எரிந்த விறகு_
= *கரி*

_திரட்டு_
= *சே+கரி*
= *சேகரி*
*************************
*_திரட்டு நூல்கள்_*
தமிழர் தமிழ் இலக்கியப் பாடல்களை ஏட்டில் எழுதிப் பாதுகாத்துவந்தனர். அவற்றின் எண்ணிக்கை பல்கிவிட்டமையால் பாராயணம் செய்ய அவ்வப்போது அவரவர் விருப்பத்துக்கேற்ப, சிலபல பாடல்களைத் திரட்டித் தொகுத்துத் தனி நூலாகச் செய்துகொண்டனர். இப்படித் தோன்றியவையே *_திரட்டு நூல்கள்._*
சங்ககாலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே புலவர்கள் பாடிய பாடல்கள் எட்டுத்தொகை என்னும் பெயரிலும், பத்துபாட்டு என்னும் பெயரிலும் ஏழாம் நூற்றாண்டில் திரட்டப்பட்டுள்ளன. பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்புப் பாடலும் 'நானாற்பது' என்னும் பெயரில் நான்கு நூல்களையும், 'ஐந்திணை' என்னும் பெயரில்
ஐந்து நூல்களையும் திரட்டிக் காட்டியுள்ளது. முத்தொள்ளாயிரம் நூலிலுள்ள பாடல்களும் திரட்டப்பட்டனவே. இவை மிகப் பழங்காலத் *திரட்டு* நூல்கள்.
💐🙏🏼💐
*************************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (60):

1) 6:08:07 எஸ்.பார்த்தசாரதி
2) 6:08:31 முத்துசுப்ரமண்யம்
3) 6:08:45 லதா
4) 6:09:31 லட்சுமி சங்கர்
5) 6:09:42 ராமராவ்
6) 6:09:51 சாந்தி நாராயணன்
7) 6:10:24 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 6:10:58 பாலு மீ
9) 6:10:58 ஆர்.நாராயணன்.
10) 6:11:41 Sandhya
11) 6:11:46 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:11:50 இரா.செகு
13) 6:12:43 ரவி சுப்ரமணியன்
14) 6:12:59 கோவிந்தராஜன்
15) 6:13:45 அம்பிகா
16) 6:16:18 உஷா
17) 6:17:40 மும்பை ஹரிஹரன்
18) 6:22:07 மு.க.இராகவன்.
19) 6:22:45 சங்கரசுப்பிரமணியன்
20) 6:23:53 கேசவன்
21) 6:24:50 வி ன் கிருஷ்ணன்
22) 6:25:34 KB
23) 6:25:36 K.R. Santhanam
24) 6:26:56 பா நடராஜன்
25) 6:32:16 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
26) 6:33:53 விஜயா ரவிஷங்கர்
27) 6:35:23 Siddhan Subramanian
28) 6:36:05 ஆர். பத்மா
29) 6:45:54 ஶ்ரீதரன்
30) 6:50:00 கு.கனகசபாபதி, மும்பை
31) 6:50:45 தி. பொ. இராமநாதன்
32) 6:53:40 Sucharithra
33) 7:08:23 ரவி சுந்தரம்
34) 7:14:47 பானுபாலு
35) 7:15:40 மீ கண்ணன்
36) 7:25:05 சதீஷ்பாலமுருகன்
37) 7:30:21 வானதி
38) 7:32:06 மாதவ்
39) 7:58:55 கலாராணி
40) 8:17:46 மு க பாரதி
41) 8:19:33 சுந்தர் வேதாந்தம்
42) 8:30:07 வி.ஜெயா
43) 8:30:27 மடிப்பாக்கம் தயானந்தன்
44) 8:48:17 மீனாக்ஷி
45) 8:48:58 பாலா
46) 9:11:35 ருக்மணி கோபாலன்
47) 9:16:42 ராஜி பக்தா
48) 9:42:00 பினாத்தல்
49) 10:08:24 மீனாக்ஷி கணபதி
50) 10:24:38 அனுராதா
51) 10:36:20 பிரசாத் வேணுகோபால்
52) 10:36:46 ராஜா ரங்கராஜன்
53) 10:57:05 கி மூ சுரேஷ்
54) 11:36:18 ராதா தேசிகன்
55) 12:42:33 ரவிஷங்கர் ரா...
56) 12:50:22 ஸௌதாமினி
57) 12:56:34 ராஜி ஹரிஹரன்
58) 13:40:52 ஏ.டி.வேதாந்தம்
59) 13:41:12 பத்மாசனி
60) 14:53:42 தேன்மொழி
**********************
Chittanandam said…
சுவாரஸ்யமான. புதிர்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்