Skip to main content

விடை 3478

இன்று காலை வெளியான வெடி:
துரோகி தலை சீவி புதரில் புதைத்த அய்யர் வீட்டுக்கு அய்யர் (5) 

இதற்கான விடை: புரோகிதர் = (து) ரோகி + புதர்.

ஒரு கல்யாணம், காட்சின்னா ஊரில் எல்லோரும் அய்யரை வெச்சு நடத்துவாங்க. ஆனால் இந்த அய்யர் வீட்டில் கல்யாணம் வந்துட்டா ஏதோ புரோகிதர்னு சொல்லி குழப்பிடுவாங்க.
 இது  ஏன்னு நான் தீவிரமா யோசிச்சு ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிச்சதை  சொல்றேன், பொறுமையா படிச்சுக்கோங்க.

இதுக்கு நான் என்னோடா பிஎச்டி படிப்பில் நடந்ததைச் சொல்லியாகணும்.
ஆரம்பத்தில் அதையும் இதையும் படி என்று ஒன்றரை வருடம் ஓடி விட்டது. பின்னர் என்னுடைய ஆராய்ச்சி நெறியாளர் "வாஞ்சி நீ அல்ஜீப்ராயிக் குரூப்ல ரிசர்ச் பண்ணுனா நல்லா இருக்கும். அதுக்கு சில பல புத்தகங்களைப் படிக்கணும்."

 சரி அப்படியே அவர் சொன்ன புத்தகத்தை மாசக் கணக்கா படிச்சு ஓரளவு புரிஞ்சுகிட்டு போய் நின்னேன்.  "நீ படிச்சா புத்தகமெல்லாம் 1960 வாக்கில் வரைக்கும் நடந்ததைச் சொல்லிருக்கும். இப்ப ஒரு கான்பரன்ஸ் வருது. அதை அட்டென்ட் பண்ணுனா யார் எதுல ரிசர்ச் பண்றாங்க எப்படி பண்றாங்கன்னு புரிஞ்சுக்குவே" அப்படின்னு சொல்லி அவர் போகிற கான்பரன்ஸுக்கு என்னையும் இழுத்துட்டு போயிட்டாரு அந்த வழிகாட்டி.

மாநாட்டு உரையெல்லாம் கண்ணைக் கட்டி காட்ல விட்ட மாதிரி இருந்தது. மூணாவது நாள் காலையில் இந்த தலைவலியெல்லாம் கேட்கணுமான்னு போகாமல் கொஞ்ச நேரம் காபி டேபிள்லயே ஒக்காந்துட்டேன். வேண்டாம் வம்பு  ரயிலுக்கு காசு கொடுத்து ஹோட்டலில் தங்க வெச்சு சாப்பாடு எல்லாம் இலவசமா கொடுத்து கணக்கைக் கத்துக்க அனுப்பியிருக்காங்க  இப்படி செஞ்சால் நல்லா இருக்காதுன்னு கொஞ்சம் லேட்டா போனேன். என்னோட
அதிர்ஷ்டம், அன்றைய பேச்சாளர் பேசிய கணிதம் பாதிக்கும் மேல் புரிந்தது. ஆனால் மேக்ஸீமல்  கனக்டட் சால்வபில் க்ளோஸ்டு ஸப்க்ரூப்னு (maximal connected solvable closed subgroup) நீட்டி முழக்கிட்டு நாலு அடைமொழியோட ஒரு க்ரூப்பைப் பத்தி சொல்லிட்டிருந்தார். ஆளுக்கு வயசு எழுபதுகிட்ட இருக்கும்.  கத்துக்குட்டியான எனக்கே தெரியும் அதுக்கு பெயர் போரல் ஸப்க்ரூப் (Borel subgroup). விஷயம் தெரியாத தாத்தாவை பேச வெச்சுட்டாங்க (அதான் அவர் பேசுறது  எனக்கே புரியுதே). எல்லா புத்தகத்திலையும் போரல் ஸப்க்ரூப்னு சொல்றது கூட  இவருக்குத் தெரியல.
 இடைவேளையில் என்னோட வழிகாட்டி என்னைப் பார்த்து கேட்டார்,"என்ன வாஞ்சி இந்த லெக்சர்லே சொன்ன விஷயம்லா புரிஞ்சுதா?"
"எல்லாம்  புரிஞ்சுது சார். ஏன் அவர் இந்த போரல் ஸப்க்ரூப்பை இப்படி  வேற ஏதொன்னு சொல்றாரே"

"அடப் பாவி,  அவர்தான் அர்மான்ட்  போரல் (Armand Borel) . அவர் கண்டு பிடிச்ச போரல் ஸப்க்ரூப் பத்திதான் நான் உனக்கு பிஎச்டிக்கான  ஆராய்ச்சிக் கேள்வியா மனசில வெச்சிருக்கேன்"

"அவர்தான் போரலா, தெரியாம போச்சே"

"நான்தான் ஆரம்பத்லேயே அவரை மேடைல அறிமுகப்படுத்தினேன். அப்ப என்ன பண்ணிட்டிருந்த நீ?"

ஒருமாதிரி வழிந்தேன். போரல் அதிகமாக அதைப் பற்றி ஆராய்ந்து கூறியதால் பின்னாளில் வந்த ஆய்வாளர்கள் அதற்கு போரல் ஸப்க்ரூப் என்று பேர் வெச்சுட்டாங்கங்றது எனக்கு அப்பறம்தான் புரிஞ்சது.

அதனால் ஊரெல்லாம் போரல் ஸப்க்ரூப்னு சொல்றதை அர்மான்ட் போரல் மட்டும் இப்படி மேக்ஸீமல்  கனக்டட் சால்வபில் க்ளோஸ்டு ஸப்க்ரூப்னு சொல்வார்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (65):

1) 6:08:37 இரா.செகு
2) 6:08:48 எஸ்.பார்த்தசாரதி
3) 6:09:39 கேசவன்
4) 6:09:45 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:10:25 முத்துசுப்ரமண்யம்
6) 6:10:52 ரவி சுப்ரமணியன்
7) 6:12:50 சங்கரசுப்பிரமணியன்
8) 6:13:11 கி மூ சுரேஷ்
9) 6:13:12 உஷா
10) 6:13:18 லதா
11) 6:13:44 சதீஷ்பாலமுருகன்
12) 6:14:10 சுந்தர் வேதாந்தம்
13) 6:14:48 மாலதி
14) 6:15:48 K.R. Santhanam
15) 6:16:00 மீ கண்ணன்
16) 6:17:33 மீனாக்ஷி
17) 6:18:23 சுபா ஸ்ரீநிவாசன்
18) 6:19:13 சாந்தி நாராயணன்
19) 6:19:50 கு. கனகசபாபதி, மும்பை
20) 6:20:45 ஸௌதாமினி
21) 6:20:56 பாலா
22) 6:20:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 6:25:50 தி. பொ. இராமநாதன்
24) 6:27:02 ராஜி ஹரிஹரன்
25) 6:28:05 ராஜா ரங்கராஜன்
26) 6:28:41 வானதி
27) 6:30:34 ஶ்ரீவிநா
28) 6:32:08 பா நடராஜன்
29) 6:33:50 ரமணி பாலகிருஷ்ணன்
30) 6:35:37 வி சீ சந்திரமௌலி
31) 6:38:12 நாதன் நா தோ
32) 6:41:11 ரவி சுந்தரம்
33) 6:43:02 லக்ஷ்மி ஷங்கர்
34) 6:48:28 ராஜி பக்தா
35) 6:48:45 எஸ் பி சுரேஷ்
36) 6:51:24 லக்ஷ்மி மணியன்
37) 6:55:11 வி ன் கிருஷ்ணன்
38) 7:00:31 ராதா தேசிகன்
39) 7:02:17 ஹரி பாலகிருஷ்ணன்
40) 7:03:19 பானுமதி
41) 7:03:49 மடிப்பாக்கம் தயானந்தன்
42) 7:04:35 Siddhan Subramanian
43) 7:06:37 ராமராவ்
44) 7:08:04 மீனாக்ஷி கணபதி
45) 7:13:21 மாதவ்
46) 7:15:48 ஆர்.நாராயணன்.
47) 7:25:33 அம்பிகா
48) 7:30:08 பாலு மீ
49) 7:33:07 ஆர். பத்மா
50) 7:35:38 வி.ஜயா
51) 7:35:46 செந்தில் சௌரிராஜன்
52) 7:41:13 கலாராணி
53) 7:51:42 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
54) 8:14:43 கோவிந்தராஜன்
55) 8:28:12 பிரசாத் வேணுகோபால்
56) 9:11:49 வி ன் கிருஷ்ணன்
57) 9:13:51 ஏ.டி.வேதாந்தம்
58) 9:14:13 பத்மாசனி
59) 9:50:04 அனுராதா
60) 11:41:02 Sandhya
61) 13:52:10 மு க பாரதி
62) 14:31:10 விஜி துரை
63) 16:26:05 மு.க.இராகவன்.
64) 16:48:41 ரங்கராஜன் யமுனாச்சாரி
65) 16:52:49 மாயா வேதாந்தம்
**********************
Raghavan MK said…
சில மாதங்களுக்கு முன் வெளியான வெடி 👇🏽

_கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த அய்யர் (5)_

இதற்கான விடை:

_கூட இருந்து குழி தோண்டுபவன்_
= *_துரோகி_*

_அடர்ந்த செடிகள்_ = *புதர்*

__கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி_
= *(து)ரோகி*

_அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த_
= _புதர் உள்ளே ரோகி_
= _புதர்+(து)ரோகி_
= *பு+ரோகி+ தர்*
= *புரோகிதர்*
= _அய்யர்_

இன்றைய வெடி 👇🏽

_துரோகி தலை சீவி புதரில் புதைத்த அய்யர் வீட்டுக்கு அய்யர் (5)_

*_இதற்கும் விடை புரோகிதர்!_*

_துரோகி தலை சீவி_ = *(து)* *ரோகி*
_புதரில் புதைத்த_ = _புதர் உள்ளே ரோகி_
= *பு+ரோகி+ தர்*
= *புரோகிதர்*
= _அய்யர்_

*" துரோகி தலை சீவி புதரில் புதைத்த அய்யர் "*

👆🏽The above part of the clue itself complete in sense to give the answer புரோகிதர்!

In that case the purpose of the additional words *_வீட்டுக்கு அய்யர்_* is not clear!
This needs to be explained! 🙏🏼
Chittanandam said…
Interesting anecdote by Dr. Vanchi.
Sundar said…
Really nice story Vanchi. :-)
I remember a counter example. While we were studying fluid dynamics in the 80's, used a text book by an author named Khurmi. Through his own text book, he tried pushing the idea that some simple measuring unit (like Kg/cm^2 used specifying pressure) is now referred to as Khurmi! (He was trying to get his name in the history books as Hertz is used for cycles/sec.) We used to smile and continue to define the unit as Kg/cm^2.

Universe has enough Khurmis to balance out the Borels of the world. :-)
Ambika said…
Very funny Khurmi! :)
Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
இன்னொருத்தர் எழுதிய பாடலைத் தன்னுடைய பாடல் என்று சொல்லிய தருமி தெரியும். ஆனால் இன்னொரு அளவு முறையைத் தன்னுடைய பெயரில் மாற்ற முயன்ற குருமி பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி, சுந்தர்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்