Skip to main content

விடை 3493


இன்று காலை வெளியான வெடி:
இன்று முதல் இயற்கையின் சீற்றம் தாண்டவமாடும் குணம் (4)

இதற்கான விடை: இயல்பு = இ + புயல்

(விடையளித்தவர்கள் பட்டியலை இன்று ராஜி ஹரிஹரன் வெளியிடுவார்).

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_*மனிதனுக்கு என்ன குணம்* !_

நாயின் குணம்
நாவிலே
நரியின் குணம் நினைவிலே
பாம்பின் குணம் பல்லிலே
பசுவின் குணம் பாலிலே

படைப்பின் பல குணங்களும் பாடம் ஏதும் கொள்ளாமல் பக்குவமாய் பற்றியது பாவம் இந்த மனுவிற்கு

பாதி மதி சூடிநி்ற்கும் பரம சிவன் குணமும் பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் குணமும்
பாழ்பட்ட மனிதனுக்கு பல நாளும் தெரியலே

எத்தனையோ இறைகுணங்கள் ஏராளமாய் இருந்தும் மனிதன் என்னும் மிருகத்துக்கு இவை அனைத்தும் இன்னமும் இருட்டில்தானே மறைந்திருக்கு

எடுத்தயிம்ப இறைவனும் இரக்கத்தோடு வந்தால்கூட இகழ்ந்து விரட்டும் இயல்புதான் இவன் கொண்ட இழிகுணம்

கூறிவந்த குற்றமெல்லாம் மிருகத்தின் குணங்களாம் மனிதனுக்கு என்ன குணம் மறந்தும் கூட தெரியலே

மறைந்திருக்கும்
மனிதகுணம் மறையோன் மட்டும் அறிவானோ எண்குணத்தான் என்பதெல்லாம் இறைவனுடைய இயற்பெயரே

இறைவனின் குணம் இன்னதென்று அறிந்துவிட்டால் இந்நிலத்தில் நீயே இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு கொற்றவனாய் வாழலாம்

( _சாலைஜெயராமன்_ )
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

_இன்று முதல் இயற்கையின் சீற்றம் தாண்டவமாடும் குணம் (4)_

_இன்று முதல்_ = *இ*

_இயற்கையின் சீற்றம்_ = *புயல்*

_தாண்டவமாடும்_ = Anagram of *இ+புயல்* = *இயல்பு* = _குணம்_
************************
*_இயல்பு_*
நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் நீங்களாகவே இருங்கள்​செயற்கையாகவோ பகட்டாகவோ இல்லாமல் சாதாரணமாக பேசுவதுபோல் பேசுங்கள். உங்களைப் பற்றியே அதிகம் நினைப்பதன் காரணமாக பயத்துடனோ விறைப்புடனோ தடுமாற்றத்துடனோ பேசினால், கேட்போரின் கவனம் சிதறிவிடும். நீங்கள் *_இயல்பாக_* பேசுவது மற்றவர்களுடைய நம்பிக்கையை சம்பாதிக்க உதவும். ஆகவே, பொய்த் தோற்றமளிப்பதற்குப் பதிலாக நீங்கள் நீங்களாகவே இருங்கள். _இயல்பாக_ பேசுவது என்றால் அலட்சியமாக பேசுவது என நினைத்துக்கொள்ளக் கூடாது. இலக்கண பிழை, தவறான உச்சரிப்பு, வாய்க்குள்ளாகவே முனகுதல் ஆகியவை பொருத்தமற்றவை. கொச்சை வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும். நம்முடைய பேச்சிலும் தோரணையிலும் எப்பொழுதும் தகுந்த கண்ணியத்தை காண்பிக்க வேண்டும்!
🌺🌺🌺🌺🌺🌺🌺
மனசு சரியில்லைன்னா பிடிச்சவங்க கூட பேசணும்னு நினைப்பது பெண்களின் _இயல்பு_
மனசு சரியில்லைன்னா யாரிடமும் பேசாமலிருப்பது ஆண்களின்
_இயல்பு_ .
🌺🌺🌺🌺
எத்தனை உரிமையுள்ள
நெருக்கமான உறவாக இருந்தாலும்
அன்பையும் அழுகையும்
வெளிப்படுத்த தயங்குவது
பெரும்பாலான
ஆண்களின் _இயல்பு_
🌺🌺🌺🌺🌺🌺
அடுத்தவரின் குறைகளை சொல்லும் போது முண்டியடித்து வருகிறோம்,ஆனால் பாராட்டும் போது மட்டும் நொண்டியடித்து வருகிறோம்.
மனித _இயல்பு_ 😀
💐🙏🏼💐
Chittanandam said…
விடையளித்தோர் பட்டியல் எப்போது வரும்? ஏதேனும் ஐடியா உள்ளதா?
Raji said…
புயல் போல அந்த இயல்பாக பதிலளித்தவர்கள் (65):
===============================================

1 6:01:21 எஸ்.பார்த்தசாரதி
2 6:01:24 சுந்தர் வேதாந்தம்
3 6:01:25 இரா.செகு
4 6:01:29 ராதா தேசிகன்
5 6:01:35 KB
6 6:03:20 SubaSrinivasan
7 6:03:21 ரவி சுப்ரமணியன்
8 6:03:48 லட்சுமி சங்கர்
9 6:05:25 ஶ்ரீவிநா
10 6:05:49 நங்கநல்லூர் சித்தானந்தம்
11 6:08:04 ரவி சுந்தரம்
12 6:08:15 கஜா :)
13 6:09:05 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14 6:10:11 மு.க.இராகவன்.
15 6:11:06 பாலா
16 6:12:21 K.R.Santhanam
17 6:14:11 ஆர்.நாராயணன்.
18 6:14:12 கேசவன்
19 6:20:36 ராஜி ஹரிஹரன்
20 6:22:36 சங்கரசுப்பிரமணியன்
21 6:23:39 ருக்மணி கோபாலன்
22 6:24:39 ரமணி பாலகிருஷ்ணன்
23 6:26:01 வி ன் கிருஷ்ணன்
24 6:26:09 வானதி
25 6:26:59 ஸௌதாமினி
26 6:28:16 பா நடராஜன்
27 6:30:24 மீனாக்ஷி கணபதி
28 6:31:07 நாதன் நா தோ
29 6:33:33 மும்பை ஹரிஹரன்
30 6:35:39 Sandhya
31 6:49:09 ராஜி பக்தா
32 6:51:29 ராமராவ்
33 6:51:43 கோவிந்தராஜன்
34 6:51:58 உஷா
35 6:54:35 Siddhan Subramanian
36 6:55:32 சதீஷ்பாலமுருகன்
37 6:56:01 கி மூ சுரேஷ்
38 6:58:07 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
39 6:58:50 கு.கனகசபாபதி, மும்பை
40 7:02:55 கலாராணி
41 7:09:36 முத்துசுப்ரமண்யம்
42 7:16:05 ஹரி பாலகிருஷ்ணன்
43 7:20:18 செந்தில் சௌரிராஜன்
44 7:21:41 தி. பொ. இராமநாதன்
45 7:22:53 மு க.பாரதி
46 7:23:03 ராஜா ரங்கராஜன்
47 7:32:04 மீ கண்ணன்
48 7:34:03 ரங்கராஜன் யமுனாச்சாரி
49 7:42:02 லதா
50 7:49:27 மடிப்பாக்கம் தயானந்தன்
51 7:51:07 பாலு மீ
52 7:52:17 அம்பிகா
53 7:57:27 பானுபாலு
54 8:23:41 பிரசாத் வேணுகோபால்
55 8:47:36 மீனாக்ஷி
56 8:50:30 பா நிரஞ்சன்
57 9:02:39 எஸ் பி சுரேஷ்
58 9:35:33 மாதவ்
59 10:11:45 ஆர். பத்மா
60 10:12:15 வி - ஜயா
61 12:58:36 சாந்தி நாராயணன்
62 12:59:27 தேன்மொழி
63 19:16:59 ஏ.டி.வேதாந்தம்
64 19:17:37 பத்மாசனி
65 20:07:59 மாலதி
Raghavan MK said…


காலை எட்டு மணிக்குள் புயல் வேகத்தில் 53 நபர்கள் விடை அனுப்பியுள்ளார்கள்.!! 👏🏼
கஜா வே வந்து விடையளித்துப்பது சிறப்பு.
Raghavan MK said…

Mk bharathy
நேற்று முதலே நிம்மதியிழந்தேன்
புயல் போல் புதிரொன்று
வருமென்று மிரண்டேன்
வந்தப்பின்தான் *இயல்பு* புரிந்தது
தாண்டவமாடிய தரமான புதிரென்று!
Raghavan MK said…


Dhayanandan

ஆம்.."இயற்கை சீற்றத்தின் தாண்டவம்" நல்லாசிரியரின் வார்த்தை ஜாலம் சொக்க வைக்கின்றது👌
Chittanandam said…
நாளைய புதிர் எப்படியோ!
Chittanandam said…
முன்பே தீர்மானித்து வைத்திருப்பாரே.
Ambika said…

நீங்க தானே இந்த கஜா?!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்