Skip to main content

விடை 3502

இன்று காலை வெளியான வெடி:
சாகும் மிருகம் இறுதியாக வரும் முன்பே மேலிருந்து கொண்டு வா (5)
இதற்கான விடை:  இறக்கும் = ம் முன்பு இறக்கு 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*_பாரதியார் “மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று சொன்னார்_ _என்று பலர் சொல்லித் திரிவார்கள்! எவ்வளவு தவறான வார்த்தை அவை!_ __மக்கள் எப்படித் தவறான_ _செய்தியைப் பரப்புகிறார்கள்_ _என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்._*

அவர் சொன்னது இது தான்:

‘மெல்லத் தமிழினிச் *சாகும்* ; மேற்கு மொழிகள் உலகில் ஓங்கும் ’ என்று மடையர்கள் அறிவற்றவர்கள் கூறித்திரிவர். அந்த சொல்லத் தகாத சொல்லைப் பொய்ப்பித்து எட்டுத் திசையெங்கும் சென்று கலைவளத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வாருங்கள். கடவுள் ஆசியாலும் புலவர் முயற்சியாலும் இந்தப் பெரும் பழி தீரும். தமிழன்னை உலகத்தில் என்றும்கோலோச்சி இருப்பாள் !

என்பதே பாரதியாரின் கருத்து!
*************************
_சாகும் மிருகம் இறுதியாக வரும் முன்பே மேலிருந்து கொண்டு வா (5)_

_மிருகம் இறுதியாக வரும்_
= _(மிருக)ம்_ = *ம்*

_மேலிருந்து கொண்டு வா_
= *இறக்கு*

_முன்பே_
= *ம்* முன்பு *இறக்கு*
= *இறக்கும்*
= _சாகும்_
*************************

*பாரதியார் எழுதிய முழுப்பாடல் இது தான்:*

_”“ கன்னிப் பருவத்திலே_ _அந்நாள்_ - _என்றன்_
_காதில் விழுந்த_ _திசைமொழி எல்லாம்_
_என்னென்னவோ பெயருண்டு_ - _பின்னர்_
_யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!_
_
_தந்தை அருள்_ _வலியாலும் - முன்பு_
_சான்ற புலவர் தவ வலியாலும்_
_இந்தக் கணமட்டும் காலன் -_ _என்னை_
_ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்_

_இன்றொரு சொல்லினைக் கேட்டேன் -_ _இனி_
_ஏது செய்வேன்?_ _எனதாருயிர் மக்காள்!_
_கொன்றிடல்_ _போலொரு__ _வார்த்தை - இங்கு_
*_கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!_*

_"புத்தம் புதிய கலைகள் -_ _பஞ்ச_
_பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்_
_மெத்த வளருது மேற்கே -_ _அந்த_
_மேன்மைக் கலைகள்_ _தமிழினில் இல்லை_

_சொல்லவும் கூடுவதில்லை_ _- அவை_
_சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை_
_மெல்லத் தமிழினிச் *சாகும்* -_ _அந்த_
_மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"_

_என்றந்தப் பேதை_ _யுரைத்தான் - ஆ!_
_இந்த வசை எனக்கெய்திடலாமோ?_
_சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்_
_செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!_

_தந்தை அருள்_ _வலியாலும்_ _- இன்று_
_சார்ந்த புலவர் தவ வலியாலும்_
_இந்தப் பெரும்பழி தீரும்_ _- புகழ்_
_ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."_
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (60):

1) 6:05:50 இரா.செகு
2) 6:08:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:08:18 KB
4) 6:08:35 அம்பிகா
5) 6:09:56 பா நடராஜன்
6) 6:12:34 ராமராவ்
7) 6:13:44 ரவி சுப்ரமணியன்
8) 6:15:09 Sandhya
9) 6:15:42 சுந்தர் வேதாந்தம்
10) 6:16:45 லதா
11) 6:21:44 S.Parthasarathy
12) 6:25:31 K.R.Santhanam
13) 6:29:05 ரவி சுந்தரம்
14) 6:29:38 பாலு மீ
15) 6:30:47 ராஜா ரங்கராஜன்
16) 6:35:59 முத்துசுப்ரமண்யம்
17) 6:40:19 சதீஷ்பாலமுருகன்
18) 6:43:30 எஸ் பி சுரேஷ்
19) 6:44:40 கேசவன்
20) 6:45:30 Siddhan Subramanian
21) 6:47:45 ஆர் .பத்மா
22) 6:52:06 மீ கண்ணன்
23) 6:54:02 நங்கநல்லூர் சித்தானந்தம்
24) 6:54:54 கு.கனகசபாபதி, மும்பை
25) 6:55:34 வி சீ சந்திரமௌலி
26) 6:55:43 ஶ்ரீவிநா
27) 6:59:32 மீனாக்ஷி கணபதி
28) 7:06:02 லக்ஷ்மி ஷங்கர்
29) 7:06:39 நாதன் நா தோ
30) 7:12:49 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 7:18:25 நங்கநல்லூர் சித்தானந்தம்
32) 7:18:55 உஷா
33) 7:20:17 ரமணி பாலகிருஷ்ணன்
34) 7:21:46 மு க பாரதி
35) 7:32:40 ஆர்.நாராயணன்.
36) 7:40:14 திருக்குமரன் தங்கராஜ்
37) 7:45:42 கலாராணி
38) 7:46:57 ராஜி ஹரிஹரன்
39) 8:07:41 மாலதி
40) 8:10:33 ஹரி பாலகிருஷ்ணன்
41) 8:12:43 கோவிந்தராஜன்
42) 8:16:12 தேன்மொழி
43) 8:35:55 KB
44) 8:47:31 மீனாக்ஷி
45) 8:47:35 வானதி
46) 8:55:04 பிரசாத் வேணுகோபால்
47) 9:35:04 ராஜூ பக்தா
48) 9:40:57 சங்கரசுப்பிரமணியன்
49) 9:55:49 வி ஜயா
50) 9:59:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
51) 10:33:01 மு.க.இராகவன்.
52) 10:43:49 மாதவ்
53) 11:41:55 பினாத்தல் சுரேஷ்
54) 11:58:20 வி ன் கிருஷ்ணன்
55) 13:39:37 ரங்கராஜன் யமுனாச்சாரி
56) 14:07:06 சாந்தி நாராயணன்
57) 15:26:41 ஸௌதாமினி
58) 20:12:52 பாலா
59) 20:35:47 ஏ.டி.வேதாந்தம்
60) 20:36:16 பத்மாசனி
**********************
Muthu said…
மகாகவியின் பாடலையும் அதன் பொருளையும் கூறி அவர் கூற்றைச் சரிவரப் புரிந்துகொள்ள எடுத்துக் கூறியமைக்கு நன்றி. இதைப் பலரும் படித்துப் புரிந்து கொள்வர் என்று எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்