இன்று காலை வெளியான வெடி:
உதாரணமாக அண்டார்டிகா மீனிலிருந்து வெட்டிய பகுதி (4)
இதற்கான விடை: கண்டம்; மீனைத் துண்டு போட்டு உப்புக் கண்டம் செய்வது என்பது வழக்கம். மற்ற இறைச்சிக்கும் பயன்படுத்தும் சொல். கன்ட துண்டமாக வெட்டி என்று சொல்வதும் இதனால்தான்.
உதாரணமாக அண்டார்டிகா மீனிலிருந்து வெட்டிய பகுதி (4)
இதற்கான விடை: கண்டம்; மீனைத் துண்டு போட்டு உப்புக் கண்டம் செய்வது என்பது வழக்கம். மற்ற இறைச்சிக்கும் பயன்படுத்தும் சொல். கன்ட துண்டமாக வெட்டி என்று சொல்வதும் இதனால்தான்.
Comments
*************************
*_கடலுக்குள் மூழ்கிய தமிழனின் குமரிக்கண்டம்_* :
🌊🌊🌎🌏🌊🌊
மறைக்கப்பட்ட வரலாறு
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது.
ஆம், இதுதான் *_நாவலன் தீவு_* என்று அழைக்கப்பட்ட *_“குமரிப் பெருங்கண்டம்"._* கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் *தமிழ்க் கண்டம்!*
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் *_குமரிக்கண்டம்_* .
_பறுளி, குமரி என்ற_ _இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!_ _குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன!_ _தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன._
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் “ _இறையனார் அகப்பொருள்_ ” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.
🦈🐟🐟🐬🐠🐟🐟
_உதாரணமாக அண்டார்டிகா மீனிலிருந்து வெட்டிய பகுதி (4)_
_உதாரணமாக அண்டார்டிகா_
= *கண்டம்*
_மீனிலிருந்து வெட்டிய பகுதி_
= *கண்டம்*
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
_கண்டம்_ (பொருள்)
1. துண்டம்; இறைச்சி அல்லது *மீன் துண்டு*
பேச்சுவழக்கு : நம்மை *கண்டம்* துண்டமாக வெட்டிப் போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
2.நிலத்தின் பெரும்பிரிவு
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
இனிமேல் 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
💐🙏🏼💐
1) 6:08:15 ஹரி பாலகிருஷ்ணன்
2) 6:08:19 ரவி சுப்ரமணியன்
3) 6:08:45 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:01 முத்துசுப்ரமண்யம்
5) 6:10:55 லட்சுமி சங்கர்
6) 6:14:33 அம்பிகா
7) 6:14:39 பாலு மீ
8) 6:24:11 KB
9) 6:25:39 எஸ் பி சுரேஷ்
10) 6:29:07 திருமூர்த்தி
11) 6:46:37 சங்கரசுப்பிரமணியன்
12) 6:49:45 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
13) 6:50:51 மயிலை வெங்கு
14) 6:53:47 மீ கண்ணன்
15) 7:14:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16) 7:22:21 ரவி சுந்தரம்
17) 7:24:51 சுந்தர் வேதாந்தம்
18) 8:25:30 வி.- ஜயா
19) 8:38:35 மு க பாரதீ
20) 8:41:22 ஶ்ரீவிநா
21) 8:41:46 மீனாக்ஷி கணபதி
22) 8:51:12 மாலதி
23) 10:09:59 மு.க.இராகவன்.
24) 10:31:28 ருக்மணி கோபாலன்
25) 12:10:41 பத்மாசனி
26) 12:11:04 ஏ.டி.வேதாந்தம்
27) 13:56:29 சதீஷ்பாலமுருகன்
28) 14:44:12 வானதி
29) 14:44:37 ஆர். பத்மா
30) 15:02:16 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 16:05:18 கோவிந்தராஜன்
32) 16:17:26 லதா
33) 17:25:07 பார்த்திபன்
34) 18:46:59 உஷா
35) 19:05:27 பாலா
36) 20:47:24 ஸௌதாமினி
**********************