Skip to main content

சீரமைத்த உதிரிவெடி 3485


இன்றைய வெடிக்கு விடைகள் அனுப்பியவர்களே மாலை ஏழு மணிவரை வெறும்  20 பேர்தான்.  அதில் கேசவன் ஒருவர் மட்டும்தான் சரியான விடையை அனுப்பியிருந்தார்.  ஏன் நிலைமை இப்படியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்ததில் நான் செய்தது சரியில்லை என்று தெரிகிறது.
நான் நீளமான வெடியாயிருந்தால் சுருக்க முடியுமா என்று யோசிப்பேன். இன்று அதைச் செய்யாததால் காலந்தாழ்த்திச் செய்கிறேன்.

புதிர் மிகவும் நீளமாக இருக்கிறது. எதை எங்கே போய் முட்டிப் பார்ப்பது என்றால் சிக்கலாகிக் குழப்பமாகிவிடுகிறது. ஒத்துக் கொள்கிறேன், இது போன்ற புதிரை நான் ரசிக்க மாட்டேன்.

பழைய வடிவம்: தைரியம், மன வலிமை உடையவன் இல்லாமல் போக மன நீக்கத்தால் இருக்கிறான் (3)  

இப்படி மனக் கலக்கத்தை உண்டு பண்ணிய புதிரிலிருந்து மனங்களை விரட்டிச் சீரமைத்த புதிய வடிவம்:
தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3) 

இப்போது இரவு 10 மணிவரை முயலுங்கள்.

Comments

Chittanandam said…
Right from morning I was struggling with the Puzzle. I could not 'read' it properly. The revised one not only gave me the right answer but also clarified the mystery behind the original.

Thank you.
Ramiah said…
தீரன்
Ramiah said…
could not understand the mystery behind the original , Please explain the method of arriving at answer for the original puzzle >
M k Bharathi said…

Not much difference between original and revised.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்