Skip to main content

விடை 3482

இன்று காலை வெளியான வெடி:
செறிந்து பூமியின் மேல் காணப்படுவது செடியின் பகுதி (3)
இதற்கான விடை: மண்டி = மண் + (செ) டி

உண்டுநாம் வாழ உழவர் உழைத்திடுவர் 

வண்டல் பரந்திருக்கும் வயல்வெளியில் நெற்பயிர்
மண்டிக் கிடந்து வளங்கொழிக்க வேண்டிடுவேன்
தண்டமிழில் பாவெழுதித் தந்து

இன்றைய புதிரை முயன்றவர்கள் 33 பேர். அதில் 16 பேர்
 விடைகள் சரியானவை:

  1)  6:18:09   முத்துசுப்ரமண்யம்
 2)  6:20:57    எஸ் பி சுரேஷ்
 3)  7:17:42    பாலு  மீ
 4)  7:31:14    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
 5)  8:00:06    மாலதி
 6)  8:08:01    பிரசாத் வேணுகோபால்
 7)  8:16:19    KB
 8)  8:23:48    மீ கண்ணன்
 9)  8:27:01    லட்சுமி சங்கர்
10)  9:25:06    மீனாக்ஷி
11)  10:02:37   லதா
12)  10:44:30   ராமராவ்
13)  11:48:16   இரா.செகு
14)  14:04:40   வி - ஜயா
15)  18:26:19   ஆர். பத்மா
16)  20:45:06   ஆர்.நாராயணன்

--------------

நாளைய தீபாவளிக்கு விசேஷமான வெடி இருக்கிறது.  நீதி மன்றத்துக்கு பயப்படாமல் பலமணி நேரங்கள் யோசித்து வெடிக்கலாம்!




 

Comments

Raghavan MK said…
கதிர் என்று
விடையளித்து
இன்று பெயில் !
😢

🌹🌹🌹🌹🌹🌹

_புதிரில் சதிராடும் ஆசிரியர்_
_இன்று நமக்களித்த_
_ஒளிக் *கதிர்*_
_செறிந்து புவிமீதுவீச_
_துளிர்த்தன செடிகளில்_
_*கதிர்* !_
🌾🌾🌾🌾🌾
புதிர் இப்படித்தான் இருக்கவேண்டும். பெயிலானாலும், "அட ! தோணாம போயிடுச்சே!!" ன்னு நெனைக்க வெக்கணும்
Raghavan MK said…


பூமியே மண் அல்லவா?

பின் பூமிக்கு மேல் செறிந்து காணப்படுவது என்பது எங்ஙனம்?

விளக்கம் தேவை!
Chittanandam said…
நல்ல புதிர். நாள் முழுக்க யோசித்தும் அகப்படவில்லை. பாராட்டுகள்.
Muthu said…
செறிந்து (3) = பூமி(2) {யின் மேல் காணப்படுவது} + செடியின் பகுதி (1)
பூமிக்கு வேறு சொல் வேண்டும்; செடி அப்படியே.
Muthu said…
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
*மண்டி*க் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
Muthu said…
செறிந்து (3) = பூமி(2) {யின் மேல் காணப்படுவது} + செடியின் பகுதி (1)
பூமிக்கு வேறு சொல் வேண்டும்; செடி அப்படியே.

'மேல்' என்பதை மேற்கொண்டு அல்லது பிறகு என்று பொருள் கொண்டால், மண்+டி.

'செறிந்து' என்பதன் அர்த்தம் சரியாகத் தெரியாததால் விடை அளிக்க இயலவில்லை.
Vanchinathan said…
மண்டி என்பதற்கு மண்டு என்ற வினைச் சொல் (முட்டாள் என்ற பெயர்ச்சொல் அல்ல) வேர். அதற்கு ஆங்கிலத்தில் abound என்பது பொருத்தமாக இருக்கும். பூமியின் மேல் இருப்பது மண். ஆங்கிலத்தில் earth = soilஎன்று பொருள் கொள்வது தமிழில் எப்போதாவதுதான். "பொன்விளையும் பூமி" என்று கூறும்போது பூ மி மண்ணைக் குறிக்கிறது.
Muthu said…
புதிர் கைக்குக் கிடைத்தது: 6:06 வெடித்தது: 6:18 செறிந்து என்றால் என்ன பொருள் என்று அகராதிகளைப் புரட்ட வேண்டியிருந்தது - புரட்டிய 6 அகராதிகளில் ஒன்றிலும் அந்தச் சொல் இல்லை! க்ரியா (வலைத்தளத்தில்) செறிந்து சொல்லைப் பயன் படுத்திச் சில வாக்கியங்கள் இருந்தன. அதிலிருந்து நிறைந்த, கொட்டிக் கிடந்து, மண்டிக் கிடந்து எல்லாம் தோன்றின.
பூமி என்றால் நிலம், புவி, பூவுலகு, உலகு (இதெல்லாம் அகராதிகளில்) இருந்தன; ஆனால் *மண்* மனதில் தோன்ற சில நேரம் எடுத்தது!
உஷா said…
மண்டி என்ற சரியான விடை அளித்திருந்தேன். என் பெயர் ஏனோ பட்டியலில் காணவில்லை

எப்பேர்பட்ட புதிரானாலும் 'மண்டி' போடமாட்டேன் என்ற சபதத்தால் நேற்று விடை அளிக்கவில்லை. மீசையிலும் 'மண்' ஒட்டவில்லை. 🙂
Ambika said…
இன்று காலை 6.27 மணிக்கு உங்கள் பெயர் மட்டும் தான் பதிவாகியுள்ளது. விடையே இல்லை....
Raghavan MK said…


விளக்கத்திற்கு நன்றி!
Vanchinathan said…
நன்றி. பாடல்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியதற்கு.
மண்டி என புதிரைப் பார்த்ததும் விடை கிடைத்து பதிலளித்தேன். ஆனாலும் எந்த இணையத் தேடலிலும் பதிலை ஊர்ஜிதப்படுத்த இயலாததால் பதில் வெளியாகும் வரை நெஞ்சில் திக் திக்...

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்