** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா? இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லோரும் உடந்தையா? இது புதிருங்க. படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான சூத்திரம். சுற்றமும், நட்பும் சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள் சுற்ற : வட்டமிட ம் : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள் = வட்டமிட ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "=" குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...
Comments
இன்பத்தைத் தருவது நலந்தனா
அல்லது
நலந்தானா ?
இவ்விடம் உறையும் நாம்
உதிரி வெடிகளை
தினம்தினம் வெடித்து
உவகை ஈட்டும் தருணம்
தீபவளியே!
தினம் ஒரு வெடித்தந்து
மகிழும் ஆசிரியர்க்கும்,
படித்து பின் வெடித்து
மகிழும், குழுவினர்க்கும்
மனம் கனிந்த தீபாவளி
*வாழ்த்துக்கள்*🌷🌷
பாரதி.
உற்சாகமும் பொங்க இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
எட்டு மணி சரவெடி காணோமே?
உதிரிவெடி நண்பரகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்